Aloe Vera Beauty Tips in Tamil

நம் வீட்டிலே இருக்கும் கற்றாழையில் இந்த கோடை காலத்திற்கேற்ற நன்மைகள் நிறைய அடங்கியுள்ளன. சருமத்திற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் கற்றாழை பெரிதும் உதவும்.

இந்த கற்றாழையை வைத்து, வீட்டிலேயே நம் சருமத்தையும் கூந்தலையும் பாதுகாக்கலாம். இதனை எப்படி உபயோகிக்கக்கலாமென்று இப்போது பார்ப்போம்..

Benefits-of-Aloe-Vera-for-Skin-and-Hairமுகப்பருவைப் போக்க – வறட்சியான சருமம் நீங்க

  • தினமும் கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி வந்தால், பருக்களை குறைக்க முடியும். மேலும் இது சருமத்தை ஈரப்பசையுடன் வைப்பதோடு, மென்மையாக்கும்.
  • இது மட்டுமல்லாது, Stretch Marks இருக்கும் இடத்தில கற்றாழையை வைத்து, தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.
  • கற்றாழையை தொடர்ந்து தடவி வந்தால் கரும்புள்ளிகள் மறையும். நாம் உபயோகிக்கும் Moisturizerக்கு பதில் கற்றாழை ஜெல் மிகவும் சிறப்பானது.
  • கற்றாழை ஜெல்லுடன் வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக அரைத்து கருவளையத்தின் மீது தடவினால் கருவளையம் குறையும். இதனை Face Pack போலும் பயன்படுத்தலாம்.

face aloe

கற்றாழை Face Pack :

மஞ்சள் + தேன் + பால் + பன்னீர் + கற்றாழை ஜெல்
இவை அனைத்தையும் வேண்டிய அளவு ஒன்றாகக் கலந்து, சுமார் 20 நிமிடங்கள் முகம், கழுத்தில் தேய்த்து, பின்னர் குளிர்ந்த தண்ணீரில் கழுவவும். வெயிலினால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கு இந்த Pack நல்லது.

கற்றாலை ஜெல் + எலுமிச்சை சாறு
இந்த இரண்டையும் கலந்து, கருமை படர்ந்த இடங்களில் தடவி 10 நிமிடங்களுக்கு பின்னர் கழுவ வேண்டும்.

aloe gelகூந்தலுக்கு கற்றாழை:
கற்றாழை ஜெல் + தேங்காய் எண்ணெய்

  • இரண்டையும் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
  • வெறும் கற்றாழையை தலையில் தேய்த்து குளித்தால், முடிப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீங்கும்.