Amla Benefits for Hair – Tips in Tamil

நெல்லிக்காய் நம் முடியை வலிமையடையச் செய்வதோடு, தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கூந்தலின் வளர்ச்சியை மேம்படுத்தும். இப்படி பயனுள்ள நெல்லிக்காயை, நாம் எவ்வாறு உபயோகிக்கலாமென்று இங்கு பார்ப்போம்..

நெல்லிக்காய் + முட்டை
நெல்லிக்காய் சாறில் முட்டையைக் கலந்து தலையில் நன்கு தடவி அரை மணி நேரம் ஊற வைத்து, பின் கூந்தலை அலசி வந்தால் முடி வலுபெறும். வாரம் ஒரு முறை இப்படி செய்து வாருங்கள்.

amla-2

நெல்லிக்காய் பொடி
நெல்லிக்காயை சின்ன சின்ன துண்டுகளாய் வெட்டி, அதனை வெயிலில் நன்கு காய வைத்து, பின் பொடி செய்து கொள்ளுங்கள்.
நெல்லிக்காய் பொடியுடன் எழுமிச்சை சாறு, தயிர், பால் இவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்து வாரம் ஒரு முறை பேக் போட்டால், முடி நன்கு வளரும்.

நெல்லிக்காய் பொடி + தேங்காய் எண்ணெய்
இரண்டையும் ஒன்றாக கலந்து தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து பின் ஊற வைத்து, குளித்து வந்தால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

Amla-oil
நெல்லிக்காய் பொடி + வெந்தயப் பொடி
இவற்றோடு சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து, முடியில் நன்கு தடவி மசாஜ் செய்து, பின் ஊற வைத்து, அலசி வந்தால் உங்கள் கூந்தல் மினுமினுக்கும்.

நெல்லிக்காய் எண்ணெய்
நெல்லிக்காயை சின்ன சின்ன துண்டுகளாய் வெட்டி, அதனை வெயிலில் நன்கு காய வைத்து, பின் தேங்காய் எண்ணெயில் போட்டு, இதனுடன் சிறிது வெந்தயப் பொடி சேர்த்து மிதமான தீயில், எண்ணெய் Brown நிறத்தில் மாறும் வரை கொதிக்க வைத்து இறக்கவும். பின் அதனை குளிர வைத்து தினமும் தேய்த்து வாருங்கள்.

  • வாரம் ஒருமுறை இந்த எண்ணெயை தலைக்கு தடவி நன்கு மசாஜ் செய்து வந்தால்,முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
  • இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் காலையில் அலசி வந்தாலும் நல்லது.

amla1

நெல்லிக்காய் பொடி + பூந்திக்கொட்டை பொடி + சீகைக்காய் தூள் + முட்டை
இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து, கூந்தலில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசி வந்தால் நல்லது.

இங்கு கூறியுள்ள குறிப்புகளில் உங்களுக்கு எளிதாயுள்ள ஒன்றை எடுத்து, வாரம் ஒரு முறை செய்து வாருங்கள். உங்கள் முடி உதிர்வு குறைவதோடு, பளபளக்கும்.