Kasthuri Manjal Beauty Tips in Tamil

கஸ்தூரி மஞ்சள் மற்றவைகளைவிட சற்று மணம் அதிகமுள்ளது. மேலும் கஸ்தூரி மஞ்சள் வலுவான கிருமி நாசினிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதனாலே தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது.

தேவையற்ற முடியை நீக்கி முகத்தில் பொலிவைக் கொடுக்க வல்லது.. இது மட்டுமல்ல, தோல் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு, கஸ்தூரி மஞ்சள் சிறந்த நிவாரணி. அழகு தரும் கஸ்தூரி மஞ்சளின் பயன்களை இங்கு காண்போம்.

kasturi-haldiமுகம் பளபளக்க
தினமும் சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, கஸ்தூரி மஞ்சளை முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும்.

  • Sensitive சருமம் கொண்டவர்கள், வெறும் மஞ்சளை பூசாமல், இதனுடன் பால்/தயிர் கலந்து பூசி வந்தால் நல்ல பலன் தரும்..
  • Oily Skin உள்ளவர்கள், கஸ்தூரி மஞ்சளோடு பன்னீர் கலந்து உபயோகித்தால் நல்லது.

கஸ்தூரிமஞ்சள் + பூலாங்கிழங்கு
இந்த இரண்டையும் அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.

கஸ்தூரிமஞ்சள் + பயித்தமாவு + தயிர்
இதனை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகப் பளபளக்க இது ஒரு சிறந்த Pack.

கஸ்தூரிமஞ்சள் + கடலை மாவு + பச்சைப்பயறு மாவு + பாலாடை
முகத்தில் இயற்கை அழகு பேண, மேலே சொன்ன நான்கையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவலாம்.

turmeric1தேவையற்ற முடி நீங்க
கஸ்தூரி மஞ்சள் மற்றும் பச்சைப் பயறு சேர்த்து, நன்றாகக் கழுவி வெயிலில் உலர்த்தி அரைத்து வைத்துக்கொண்டு தினமும் தேய்த்துக் குளிக்கவேண்டும். இது உடனடியாக முடியைப் போக்கி விடாது. ஆனால், புதிதாக முடிகளை வளரவிடாது.

கஸ்தூரி மஞ்சள் + பாசிப்பயறு + கோரைக் கிழங்கு + ரோஜா இதழ், + வெட்டிவேர் + சந்தனம்
இவைகளை நன்றாகக் கழுவி வெயிலில் உலர்த்தி அரைத்து வைத்துக்கொண்டு, தினமும் தேய்த்துக் குளித்துவந்தால், தேமல் மற்றும் தேவையற்ற முடிகள் போன்றவை நீங்கும்.

haldi1முகப்பரு மற்றும் சருமப் பிரச்சனைகள் தீர
கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் கலந்து பூசினால், பருக்கள் உடையும்.

மேலும் அடிபட்டு காயம் வந்தால், கஸ்தூரி மஞ்சளை அரைத்து சூடுபடுத்தி, அடிபட்ட இடத்தில் தடவினால், வீக்கமும் வலியும் குறையும்.

கஸ்தூரி மஞ்சள் + பன்னீர் கலந்து வெயிலில் வைத்து சூடாக்கி, அதை முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மாயமாகிவிடும்

வேப்பங்கொழுந்து + ஆரஞ்சு தோல் + கஸ்தூரி மஞ்சள் சம அளவு எடுத்து அரைத்து, கருமை படர்ந்த இடங்களில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இருமுறை செய்து வர கருமை ஓடிவிடும்.

கஸ்தூரி மஞ்சள் + துளசி இரண்டையும் மையாக அரைத்து, Acne & Acne Scars இருக்கும் இடங்களில் பூசி வந்தால் நல்ல பலன் இருக்கும்.

குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு
கஸ்தூரி மஞ்சளை நலங்கு மாவில் கலந்து, பெண் குழந்தைகளுக்கு தினமும் பூசி குளிக்க வைத்து வந்தால், தேவையில்லா முடி உதிர்வதொடு சருமம் மென்மையாகும்.

Stretch marks மறைய பெண்கள், வாரம் ஒரு முறை கஸ்தூரி மஞ்சளில் தயிர் மற்றும் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து தடவி வந்தால் தழும்பு மறையும்.

Nalangu Mavuகுளியல் பொடி/நலங்கு மாவு
கஸ்தூரி மஞ்சள் + கோரை கிழங்கு + ரோஜா இதழ் + பாதம் பருப்பு + பாசிப்பயறு + பச்சரிசி + சம்பா கோதுமை + கசகசா + புதினா இலை

இவைகளை வெயிலில் காயவைத்து அரைத்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும்.சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் சருமம் பளபளக்கும்.

இங்கு சொல்லப்பட்ட குறிப்புகளில் உங்களுக்கு தேவையான ஒன்றை செய்து வந்தால், பளபளவென்று ​உங்கள் சருமம் பிரகாசிக்கும்.