Summer Beauty Tips in Tamil

எங்கும் தகிக்கிறது வெப்பம். கோடை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான். சிறிது நேரம் வெளியே சென்று வந்தாலே முகம் வாடிப்போய்விடும். இந்த காலத்தில்தான் சருமத்தையும் கூந்தலையும் அதிகம் பாதுகாக்க வேண்டியிருக்கும். எனவே சருமத்தை பாதுகாக்க சில எளிய ஆலோசனைகள் உங்களுக்காக…

Orange-Pack

  • இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து சருமத்தை பாதுகாக்க பழச்சாறு, காய்கறிச் சாறு, சூப் மற்றும் தண்ணீர் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • Oily Skin கொண்டவர்கள் ஒரு நாளுக்கு குறைந்தது நான்கு முறையாவது முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது.
  • வெளியில் கிளம்பும் முன் தயிரை சிறிதளவு முகம், கைகளில் தேய்த்து சுத்தப்படுத்துங்கள். தயிர் தோல் வறட்சி தடுப்பதோடு வெயிலின் தாக்கத்திலிருந்து சருமத்தை காக்கும்.

Carmencitta-Some-Must-to-Know-DIY-Hair-Masks6

  • கோடை காலத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளி பழச்சாறை முகத்தில் தடவவும்.
  • எப்போதும் சோப்புக்கு பதிலாக பாசிப் பருப்பு, கடலைப்பருப்பு, பூலான்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள்,வெள்ளரி விதை, வெட்டிவேர் ஆகியவற்றை கலந்து அரைத்த பொடியை பூசி முகம் கழுவலாம்.
  • Ice Cubes கொண்டு முகத்தில் தேய்த்தபின் Sunscreen உபயோகிப்பது நல்லது.
  • பாலாடையை இரவின் படுக்க போகும்முன், உதட்டில் தடவிக் கொள்ளுங்கள்.. இது வெடிப்பைத் தடுக்கும்.
  • வாரம் இருமுறை, எலுமிச்சைசாறு , தேங்காய்ப் பால் சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மறைந்து நிறம் கூடும்.

milk-cream-1484831

  • தேங்காய்ப் பாலை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்த பின், குளிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால், கூந்தலில் பளபளப்பு ஏற்பட்டு நல்ல பலன் கிடைக்கும்.
  • தலை சுத்தமாக இருந்தால் தான் சருமத்தில் கருமை படராது. இதற்கு சிகைக்காய், பாசிப்பயறு, வெந்தயம், பூலாங்கிழங்கு, புங்கங்கொட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.
  • வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
  • கீரை, பச்சைகாய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மோர், இளநீர், பழச்சாறு இவற்றை அருந்தி வந்தால், உடம்பிற்கு நல்லது. முடிந்த அளவு உணவில் காரத்தைக் குறைத்து கொள்வதும் நல்லது.