நான் பேசிய வார்த்தைகளுக்கு நான் பொறுப்பாளி

நான் பேசிய வார்த்தைகளுக்கு நான் பொறுப்பாளி; ஆனால் நீ புரிந்து கொண்டதற்கு எல்லாம் நான் பொறுப்பல்ல.

நம் கால்களில் நிற்கவேண்டும் என்பது மிக அவசியம்

“நம் கால்களில் நிற்கவேண்டும் என்பது மிக அவசியம். அடுத்தவர் கால்களை வாரிவிடாமல் வாழ்வது என்பது அதைவிட முக்கியம்.”  

ஒரு வருட பலனுக்கு நெல்லை நடுங்கள்

“ஒரு வருட பலனுக்கு நெல்லை நடுங்கள்… முப்பது வருட பலனுக்கு மரங்களை நடுங்கள்… நூற்றாண்டு பலனுக்கு கல்வியைக் கொடுங்கள்!!!    

சோகம் எனும் பறவைகள் உங்கள்

“சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதை தடுக்க முடியாது. ஆனால் அவை உங்கள் தலையிலே கூடு கட்டி வாழ்வதை தவிர்க்கலாம்.”

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில்

“ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் இனிமையான வேளைகள் சிலவேதான். எஞ்சிய வாழ்க்கை எல்லாம் அந்த நினைவின் பிரதிபலிப்பு மட்டும்தான்.”

எத்தனை படிகள் என்று மலைக்காதீர்கள்

“எத்தனை படிகள் என்று மலைக்காதீர்கள் எல்லாப்படிகளும் கடக்கக்கூடியவையே. உள்ளத்தில் உள்ள நம்பிக்கையே செயலில் வெற்றியைத் தருகிறது.”

செல்வத்தை அடக்கி ஆளும் வரையில்தான் நாம் முதலாளிகள்.

செல்வத்தை அடக்கி ஆளும் வரையில்தான் நாம் முதலாளிகள். என்று செல்வம் நம்மை அடக்கி ஆளத் தொடங்குகிறதோ, அன்றே நாம் அதற்க்கு அடிமைகளாகி விடுகிறோம்.