Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

கடுமையான இதய வலியையும் தீர்க்கலாம்


Discussions on "கடுமையான இதய வலியையும் தீர்க்கலாம்" in "Alternative Medicines" forum.


 1. #1
  silentsounds's Avatar
  silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
  Gender
  Male
  Join Date
  Feb 2011
  Location
  chennai
  Posts
  6,312
  Blog Entries
  31

  கடுமையான இதய வலியையும் தீர்க்கலாம்

  காலை 10.30 மணிக்கு அவருக்கு சிகிச்சை துவங்கியது. இதய நோய்க்குச் சிறந்த மருந்துகள் கொடுக்கப்பட்டன. அவரது இதய நோய், வாதம், பித்தம் ஆகிய இரண்டு தோஷங்கள் சேர்ந்ததாக இருந்தது. மருந்து துவங்கி, ஒரு மணி நேரத்திற்குப் பின், வலி அடங்கியது. வழக்கமாக மக்களிடையே ஆயுர்வேத சிகிச்சை முறைகளைப் பற்றிய சில கருத்துக்கள் வேரூன்றியுள்ளன. அதில் ஒன்று, ஆயுர்வேதம் நீண்டகாலம் தொடர்ந்து இருக்கும் நோய்களின் (Chronic Diseases) சிகிச்சையோடு மட்டுமே தொடர்பு கொண்டதாக கருத்து உண்டு.


  அதிலும், இதய நோய் என்றாலே, மக்கள் மனதில் ஓர் அச்சம் தோன்றுகிறது. ஆனால், மிக அபாயகரமான நிலையிலும் கூட, ஆயுர்வேதம் அதிவேகமாகப் பயனளிக்கிறது. உதாரணமாக, யாருக்காவது இதயத் தாக்குதல் ((Heart Attack) ஏற்பட்டால், அவரை விரைவாக ஒரு அலோபதி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது தான் வழக்கம். ஆனால், இதோ கீழ்காணும் இந்த நோயாளி, இதயத் தாக்குதலுக்குப் பின், ஆயுர்வேத மருத்துவமனைக்கு உடனடி யாக அழைத்து வரப்பட்டு, சிறந்த சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார். நோயாளிக்கு வயது 34. அவர் ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி. வாரத்தில், மூன்று அல்லது நான்கு நாட்கள், கோழிக்கறி, ஆட்டுக்கறி, மீன், மாட்டுக்கறி எல்லாம் காரசாரமாகவும், புளிப்பாகவும் சமைத்து உண்பார். உடம்பும் அதற்கு ஏற்றார் போல், வளர்ந்து அதிக எடை உடையதாக இருந்தது. குடும்ப மருத்துவ சரித்திரம்: எந்த ஒரு வியாதியும், குடும்பத்தில் இருந்தால், அது பரம்பரை சொத்தாகத் தொடரும். அவரது குடும்பத்தில், இதய நோய் தொடர்ந்து இருந்து வந்தது. அவரது தந்தை, 48 வயதில் இதய நோயால் திடீரென்று கீழே விழுந்து, உயிரிழந்தார். அப்பாவின் இளைய சகோதரர், 35 வயதிலேயே இதயத் தாக்குதல் ஏற்பட்டு இறந்தார். இப்போது, இந்த நோய் இவரையும் தாக்கியது. கடந்த, ஜனவரி 27, பஸ்சில் பயணம் செய்யும் போது, மிகக் கடுமையான மார்பு வலியும், தோள்பட்டை வலியும் முதன் முதலாக அவரைத் தாக்கியது. அதிகமாக வியர்த்துக் கொட்டி, மார்பில் நெருப்புப் போன்று, எரிச்சல் உண்டானது. அதனோடேயே, வேலைக்குச் சென்று விட்டார். அங்கு, சாம்பார் சாதம் உண்ட பின், உடனே வாந்தி எடுத்தார். மார்வலி மீண்டும் அவரைத் தாக்கியது. உடல் வெலவெலத்துப் போய், தரையிலேயே படுத்துக் கிடந்தார். அவர் ஆயுர்வேத மருத்துவமனைக்கு வந்த போது, மார்பில் இரு கையுடன், கடுமையான வலியில் துடித்துக் கொண்டிருந்தார்.
  காலை 10.30 மணிக்கு அவருக்கு சிகிச்சை துவங்கியது. இதய நோய்க்குச் சிறந்த மருந்துகள் கொடுக்கப்பட்டன. அவரது இதய நோய், வாதம், பித்தம் ஆகிய இரண்டு தோஷங்கள் சேர்ந்ததாக இருந்தது. மருந்து துவங்கி, ஒரு மணி நேரத்திற்குப் பின், வலி அடங்கியது. மீண்டும் மதியம், 12 மணி அளவில் கடுமையான வலி, அவரது இதயத்தைத் தாக்கியது. அவருக்கு இருதயார்ணவரச, அர்ஜுனாப்ரா, வாயுகுடிகா, நவாயாசா மற்றும் சில மருந்துகள் அளிக்கப்பட்டன. மதியம் ஒரு மணி அளவில், வலி முழுமையாக அடங்கியது. மார்புப் பகுதியில், வெகு லேசான ஒரு குத்து வலி மட்டுமே இருந்தது. மாலையில் அவருக்கு எந்த வலியும் இல்லை. அன்று, மூன்று முறை அவருக்கு மருந்துகள் அளிக்கப்பட்டன. அவருக்கு சுக்கு, தனியாவுடன் கூடிய புழுங்கல் அரிசி கஞ்சி கொடுக்கப்பட்டது. அன்று இரவு மருத்துவமனையில், டாக்டர்களின் கண்காணிப்பில் நோயாளி தங்கி இருந்தார். மறுநாள் மாலை வரை, மருத்துவமனையில் இதய வலியின்றி ஓய்வெடுத்தார்.  அவருடைய மருந்துகள் அனைத்தையும் எப்படி சாப்பிட வேண்டும் என்று விளக்கிக் கூறி, அன்றிரவு அவர், வீட்டுக்கு அனுப்பப்பட்டார். முக்கியமாக இதய வியாதிக்குத் தகுந்த உணவுகளை அவருக்கு விளக்கமாக எடுத்துக் கூறி, ஐந்து நாட்கள் கழித்து மருத்துவமனைக்கு வருமாறு கூறி, அனுப்பப்பட்டார். ஐந்து நாட்கள் கழித்து, அவர் மருத்துவமனைக்குத் திரும்பிய போது, தான் நன்றாக இருப்பதாகவும், மூன்று மாடி ஏறினால் மட்டுமே, சிறிது இதய வலி இருப்பதாகவும் கூறினார். மாடிப்படி ஏற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டார். மீண்டும் இரண்டு வாரத்திற்குப் பின், வருமாறு கூறப்பட்டது.இம்முறை அவர், மிக நன்றாக இருப்பதாகவும், மாடி ஏறினாலும், எந்தவித வலியுமில்லை என்றும் கூறினார். இரண்டு வாரத்துக்குப் பின் அவர், அரை நாள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார். ஒரு சில வாரங்களில் நோயாளி தன் முழுநாள் வேலையில், வெகு சீக்கிரமே ஈடுபட்டார். எல்லா வியாதிகளைப் போலவே, இதய வியாதிகளிலும் பத்தியமான உணவும், இதய வியாதிக்கு தகுந்த ஆயுர்வேத மருந்துகளையும் மேற்கொண்டால், இதய நோயிலிருந்து முழுமையான விமோசனம் பெறலாம்.


  டாக்டர் பி.எல்.டி., கிரிஜா,
  சஞ்சீவனி ஆயுர்வேத யோகா மையம்
  sanjeevanifoundation@gmail.com


  -senthilvayal

  Similar Threads:

  Sponsored Links
  Guna (குணா)

  நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
  மிகவும் அவசியமானவை
 2. #2
  Mals's Avatar
  Mals is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2013
  Location
  Navi Mumbai
  Posts
  5,286

  Re: கடுமையான இதய வலியையும் தீர்க்கலாம்

  Thanks for sharing


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter