Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 2 Post By Subhasreemurali
  • 2 Post By sumitra
  • 2 Post By jv_66

Remedies for insects & animal bites - பாம்பு, தேள், பூரான், நாய் கடி விஷம்


Discussions on "Remedies for insects & animal bites - பாம்பு, தேள், பூரான், நாய் கடி விஷம்" in "Alternative Medicines" forum.


  1. #1
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Remedies for insects & animal bites - பாம்பு, தேள், பூரான், நாய் கடி விஷம்

    பெரும்பாலும் மனிதர்களுக்கு விரும்பியோ, விரும்பாமலோ விசா வாங்காமலே மரணத்தை வாங்கித்தரும் பாம்பு, நாய் போன்ற நச்சு விஷங்களை நீக்குவது பற்றி நாம் பார்ப்போம்.

    பொரும்பாலும் இந்த நச்சு விஷங்களினால் உயிருக்கே கேட்டை தந்து விடுவது உண்டு, பல எலி போன்ற விஷங்கள் நாட்பட்ட நிலையில் அதன் குணத்தைக் காட்டும்.
    எலிக்கடியினால் பின்னாளில் மூச்சிறைப்பு என்ற நோய் தாக்குவதாக கண்டறியப்பட்டு உள்ளது. எனவே எந்த விஷமானாலும். அவற்றை முறைப்படி நீக்கி கொள்ள வேண்டும்.


    நாய்க்கடி

    நாய் கடித்த உடனே ஊமைத்தைவேர் 10 கிராம் எடுத்து ஊமத்தன் விதை 10 கிராம் சேர்த்து பசுவின் பால்விட்டு அரைத்து நாள்தோறும் மூன்று நாள் கொடுக்கவும். (அ) சிறியாநங்கை இலை 5 (அ) 10 எடுத்து உடனே மென்று தின்னவும் விஷம் நீங்கும்.
    இரண்டு மூன்று நாட்களுக்கு கண்டதை எல்லாம் தின்னாமல் வெறுமனே கஞ்சி மட்டுமே உண்டுவர விஷம் நீங்கும்.





    வண்டுகடி

    ஆடு தீண்டாப்பாளை வேர் நூறு கிராம் பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டுவேளை எட்டுநாள் உண்ண விஷம் நீங்கும்.

    செய்யான் (பெரிய பூரான்) விஷம்


    தேங்காய் துருவி சாறு எடுத்து நூறு மில்லி அருந்த விஷம் நீங்கும். எட்டி கொட்டை எடுத்து பால்விட்டரைத்து பாலில் அருந்த விஷம் முறியும்.

    பூரான்

    இது கடித்தால் தோலில் அரிப்பு எடுக்கும். பூரான்போல் தடிப்பு உண்டாகும். குப்பை மேனி சாறு பத்து மில்லி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க விஷம் நீங்கும்.
    சிரியாநங்கை மூலிகையின் சாறு அருந்தலாம். அரைத்து ஐந்து கிராம் எடுக்கலாம். விஷம் முறியும்.


    விரியன் பாம்பு கடித்தால்

    இதில் பல வகை உண்டு கருவிரியபாம்பு கடித்தால் சிவப்பு நிறமாக பொன்னிறமாக நீர் வடியும். கடுப்பு உண்டாகும். இதற்கு பழைய வரகு அரிசி இருநூறு கிராம் கொண்டுவந்து பிராய் மரப்பட்டை இருநூறு கிராம் தனித்தனியே இடித்து வெள்ளாட்டுப்பால் கலந்து மூன்று நாள் உப்பு புலி தள்ளி உண்ண விஷம் நீங்கும்.






    நல்ல பாம்பு கடித்தால்

    நேர்வாளம் பருப்பை சுண்ணம் செய்து வெற்றிலை பாக்கு போல் மென்று விழுங்க கக்கல் (வாந்தி)கழிச்சல் உண்டாகி விடம் வெளியேறும். தும்பை சாறு 25 மில்லி எடுத்து மிளகு பத்து கிராம் அரைத்து கொடுக்க விடம் நீங்கும் வெள்ளருகு கொண்டுவந்து மென்று தின்ன விஷம் முறியும்.

    தேள் கடித்தால்

    தேள் கொட்டியவுடன் தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மில்லி அருந்த விஷம் முறியும். நிலாவரை தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேளை அருந்த விஷம் முறியும்.





    எலிக்கடிகள்

    அமுக்ரா தூள் அரைத்தேக்கரண்டி இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க விஷம் முறியும். அவுரி மூலிகை பத்துகிராம் வெந்நீரில் கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த விஷம் முறியும்.







    மனிதன் கடித்தால் (அருள் கூர்ந்து சிரிக்க வேண்டாம் மனிதர்கள் மனிதனையே கடிக்கிறார்கள்)

    சிருகுரிஞ்சன் ஒருகிராம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும். சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்
    சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்.

    பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின்னர் ஒருவேளை வேதம் மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்.
    இப்படி முறைப்படி மருந்துகளை எடுத்துகொண்டு எதிர் காலத்தில் தோன்றும் நோய்களை வென்று வாழ்வோம்.


    Similar Threads:

    Sponsored Links
    jv_66 and sumitra like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Remedies for insects & animal bites - பாம்பு, தேள், பூரான், நாய் கடி விஷம்

    Quote Originally Posted by Subhasreemurali View Post
    பெரும்பாலும் மனிதர்களுக்கு விரும்பியோ, விரும்பாமலோ விசா வாங்காமலே மரணத்தை வாங்கித்தரும் பாம்பு, நாய் போன்ற நச்சு விஷங்களை நீக்குவது பற்றி நாம் பார்ப்போம்.

    பொரும்பாலும் இந்த நச்சு விஷங்களினால் உயிருக்கே கேட்டை தந்து விடுவது உண்டு, பல எலி போன்ற விஷங்கள் நாட்பட்ட நிலையில் அதன் குணத்தைக் காட்டும்.
    எலிக்கடியினால் பின்னாளில் மூச்சிறைப்பு என்ற நோய் தாக்குவதாக கண்டறியப்பட்டு உள்ளது. எனவே எந்த விஷமானாலும். அவற்றை முறைப்படி நீக்கி கொள்ள வேண்டும்.


    நாய்க்கடி

    நாய் கடித்த உடனே ஊமைத்தைவேர் 10 கிராம் எடுத்து ஊமத்தன் விதை 10 கிராம் சேர்த்து பசுவின் பால்விட்டு அரைத்து நாள்தோறும் மூன்று நாள் கொடுக்கவும். (அ) சிறியாநங்கை இலை 5 (அ) 10 எடுத்து உடனே மென்று தின்னவும் விஷம் நீங்கும்.
    இரண்டு மூன்று நாட்களுக்கு கண்டதை எல்லாம் தின்னாமல் வெறுமனே கஞ்சி மட்டுமே உண்டுவர விஷம் நீங்கும்.





    வண்டுகடி

    ஆடு தீண்டாப்பாளை வேர் நூறு கிராம் பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டுவேளை எட்டுநாள் உண்ண விஷம் நீங்கும்.

    செய்யான் (பெரிய பூரான்) விஷம்


    தேங்காய் துருவி சாறு எடுத்து நூறு மில்லி அருந்த விஷம் நீங்கும். எட்டி கொட்டை எடுத்து பால்விட்டரைத்து பாலில் அருந்த விஷம் முறியும்.

    பூரான்

    இது கடித்தால் தோலில் அரிப்பு எடுக்கும். பூரான்போல் தடிப்பு உண்டாகும். குப்பை மேனி சாறு பத்து மில்லி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க விஷம் நீங்கும்.
    சிரியாநங்கை மூலிகையின் சாறு அருந்தலாம். அரைத்து ஐந்து கிராம் எடுக்கலாம். விஷம் முறியும்.


    விரியன் பாம்பு கடித்தால்

    இதில் பல வகை உண்டு கருவிரியபாம்பு கடித்தால் சிவப்பு நிறமாக பொன்னிறமாக நீர் வடியும். கடுப்பு உண்டாகும். இதற்கு பழைய வரகு அரிசி இருநூறு கிராம் கொண்டுவந்து பிராய் மரப்பட்டை இருநூறு கிராம் தனித்தனியே இடித்து வெள்ளாட்டுப்பால் கலந்து மூன்று நாள் உப்பு புலி தள்ளி உண்ண விஷம் நீங்கும்.






    நல்ல பாம்பு கடித்தால்

    நேர்வாளம் பருப்பை சுண்ணம் செய்து வெற்றிலை பாக்கு போல் மென்று விழுங்க கக்கல் (வாந்தி)கழிச்சல் உண்டாகி விடம் வெளியேறும். தும்பை சாறு 25 மில்லி எடுத்து மிளகு பத்து கிராம் அரைத்து கொடுக்க விடம் நீங்கும் வெள்ளருகு கொண்டுவந்து மென்று தின்ன விஷம் முறியும்.

    தேள் கடித்தால்

    தேள் கொட்டியவுடன் தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மில்லி அருந்த விஷம் முறியும். நிலாவரை தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேளை அருந்த விஷம் முறியும்.





    எலிக்கடிகள்

    அமுக்ரா தூள் அரைத்தேக்கரண்டி இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க விஷம் முறியும். அவுரி மூலிகை பத்துகிராம் வெந்நீரில் கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த விஷம் முறியும்.







    மனிதன் கடித்தால் (அருள் கூர்ந்து சிரிக்க வேண்டாம் மனிதர்கள் மனிதனையே கடிக்கிறார்கள்)

    சிருகுரிஞ்சன் ஒருகிராம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும். சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்
    சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்.

    பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின்னர் ஒருவேளை வேதம் மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்.
    இப்படி முறைப்படி மருந்துகளை எடுத்துகொண்டு எதிர் காலத்தில் தோன்றும் நோய்களை வென்று வாழ்வோம்.
    Hi Subhasreemurali, wonderful details you have given for rescue remedy during the insects, poisonous snake, scorpion, rat, dog bite. Very useful. Don't think otherwise. This is my personal opinion. Where to find these herbal medicinal plants. Is it possible to search for these medicinal plants during that critical moments? Is there any time left during that critical juncture? For example for dog bite, Where you will get ஊமைத்தைவேர், ஊமத்தன் விதை? Where you will get pure பசுவின் பால்? Where you will get சிறியாநங்கை இலை? For வண்டுகடி, where you will get ஆடு தீண்டாப்பாளை வேர்? Hence it is my sincere request that people who are affected may be taken to nearby health centres or hospitals for immediate recovery. This is my personal opinion. don't mistake me. thank you

    jv_66 and Subhasreemurali like this.

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Remedies for insects & animal bites - பாம்பு, தேள், பூரான், நாய் கடி விஷம்

    உபயோகமான பகிர்வு சுபா

    sumitra and Subhasreemurali like this.
    Jayanthy





  4. #4
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: Remedies for insects & animal bites - பாம்பு, தேள், பூரான், நாய் கடி விஷம்

    Wonderful share of info, appreciate your efforts in bringing such rich topics to Penmai


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter