Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree10Likes

Natural Remedies - இயற்கை வைத்தியம்


Discussions on "Natural Remedies - இயற்கை வைத்தியம்" in "Alternative Medicines" forum.


  1. #11
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Natural Remedies - இயற்கை வைத்தியம்

    சித்த மருத்துவ குறிப்புகள்

    அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிட மாதவிடாய் பிரச்சனை வயிற்று வலி குறையும்.

    ஊமத்தன் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காதுவலி குணமாகும்.

    விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட பித்தம் குறையும்.

    எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் சரியாகும்.


    கறிவேப்பிலை மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து சுடுநீர் ஊற்றி அரைத்து குழந்தைகளை குளிப்பாட்டிய உடன் கொடுக்க மாந்தம் குறையும். பசி எடுக்கும்.

    துளசி சாறு கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும்.

    அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்று கடுப்பு குணமாகும்.

    அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் சரியாகும்.

    கோவைப்பழம் தினசரி ஒன்று சாப்பிட சர்க்கரை நோய் கட்டுப்படும்.



    Sponsored Links

  2. #12
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Natural Remedies - இயற்கை வைத்தியம்

    சித்த மருத்துவ குறிப்புகள்


    நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடிநீரில் ஊற வைத்து காலையில் வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் சரியாகும்.

    வெங்காயத்தை நசுக்கி அதன் சாற்றை ஒரு சொட்டு கண்ணில் விட தூக்கம் வரும்.

    வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்று கடுப்பு நீங்கும்.

    வேப்பம் கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது பூச புண் ஆறும்.

    மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.


    அரசமரத்து பாலை பித்த வெடிப்பு மீது தடவி வர குணம் கிடைக்கும்.

    வாழைப்பழம், ஏலக்காய் பொடி செய்து பிசைந்து சாப்பிட வயிற்று வலி சரியாகும். முருங்கை பூவை பாலில் காய்ச்சி சாப்பிட மோகம் ஏற்படும்.

    துத்து இலை அதன் வேரையும் கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர பல்வலி, பல் கூச்சம், பல் ஆட்டம் சரியாகும்.

    இலந்தை பழம் தினசரி சாப்பிட்டால் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு உண்டாகும். பசி ஏற்படும்.



  3. #13
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Natural Remedies - இயற்கை வைத்தியம்

    முருங்கை இலை ஒருபிடி, 10 கிராம் கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து நீரை குடித்து வந்தால் கர்ப்பிணிகளுகஙகு பேறுகால வலி குறையும்.

    தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர நரை மாறும்

    ஆல மரத்தின் இளம் கொழுந்தை மை போல் அரைத்து பசும்பாலில் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர விந்து கெட்டிப்படும்.

    அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவ தலைவலி குறையும்.

    எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனை பூக்கள் விழுங்குகிறோமோ அத்தனை வருடம் கண்வலி ஏற்படாது.


    அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் சாப்பிட ஆண்மை பெருகும்.

    காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.

    தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட நரம்புத் தளர்ச்சி சரியாகும்.

    அத்திப்பாலை பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும்.



  4. #14
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Natural Remedies - இயற்கை வைத்தியம்

    மாவிலையை பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் சுத்தமாகவும், உறுதியாகவும் இருக்கும்.

    கர்ப்பிணிகள் மாம்பழம் சாப்பிட்டு வர பிறக்கும் குழந்தை ஊட்டச்சத்துடன் இருக்கும்.

    நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தம் உறைவதை தடுக்கலாம்.

    குழந்தைகளுக்கு நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுக்க கண் சூடு குணமாகும்.

    இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட ரத்தம் சுத்தமாகும்.

    தினசரி இரவு ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வர தொற்று நோய் நம்மை அணுகாது.

    பீர்க்கன்காய் வேர் கஷாயம் சாப்பிட்டு வர ரத்தசோகை நீங்கும்.



  5. #15
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Natural Remedies - இயற்கை வைத்தியம்

    மருத்துவ பொக்கிஷமாம் முருங்கைகீரை


    கிராமங்களில் முருங்கை தின்னா முன்னூறு வராது என்று சொல்வார்கள். முருங்கை இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் 300 நோய்களுக்கு மேல் வராமல் பாதுகாக்கப்படுவார்கள் என்கிறது பழமொழி.

    முருங்கை இலை, பூக்கள், காய் என அனைத்தும் மிகச்சிறந்த உணவுப்பொருளாகப் பயன்படுகிறது.


    முருங்கை இலையை உருவி எடுத்துவிட்டு அதன் காம்புகளை நறுக்கி மிளகு ரசம் செய்து சாப்பாட்டுடன் சாப்பிடலாம்..

    முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும்.





  6. #16
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Natural Remedies - இயற்கை வைத்தியம்

    முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் இருக்கிறது.

    ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சி நிறைந்திருக்கிறது-.

    வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாசியம் இருக்கிறது

    . கேரட்டைவிட 4மடங்கு வைட்டமின் ஏ உள்ளது.

    பாலைவிட 4 மடங்கு கால்சியம் உள்ளது.

    உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் முருங்கையிலை கொண்டுள்ளது என பட்டியலிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.


    ஏழைக்குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படுகிறார்கள் என அனைவரிடமும் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் நடுத்தரக் குடும்பத்தில் உள்ள குழந்தைகள்கூட ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கருத்து கணிப்பு சொல்கிறது. ஏனெனில் நாம் எடுத்துக்கொள்ளும் அன்றாட உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்து இருப்பதில்லை.

    எனவே முருங்கை கீரையை அடிக்கடி சமையலில் சேர்த்து சாப்பிடவேண்டும்.

    முருங்கை கீரை சாப்பிடாதவர்கள் முருங்கை இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் சாம்பார் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.

    தினமும் 8 முதல் 24 கிராம் முருங்கைப்பொடி உணவில் சேர்த்துக்கொள்ளும் போது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும்.



  7. #17
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Natural Remedies - இயற்கை வைத்தியம்

    100 கிராம் முருங்கை இலையில் 92 கலோரி உள்ளது.
    ஈரப்பதம்-75.9%
    புரதம்-6.7%
    கொழுப்பு-1.7%
    தாதுக்கள்-2.3%
    கார்போஹைட்ரேட்கள்-12.5%
    கால்சியம்-400மி.கி
    பாஸ்பரஸ்-70மி.கி



  8. #18
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Natural Remedies - இயற்கை வைத்தியம்

    சாதாரண வீடுகளில் காணப்படும் முருங்கை மரத்தை மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் முருங்கை பல வியாதிகளை குணப்படுத்தும் சக்திகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

    உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.


    பச்சை கீரைகளில் எண்ணிலடங்கா பயன்கள் இருக்கிறது நாம் தான் அதனை முறையாக பயன்படுத்த மறந்துவிட்டோம்.

    கீரை உணவுகளை சும்மாவா சேர்க்க சொல்லி சொன்னார்கள் நம் முன்னோர்கள். மருத்துவ பொக்கிஷம் நிறைந்த முருங்கைகீரையை இனிமேல் மிஸ் பண்ணாதீர்கள்.



  9. #19
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Natural Remedies - இயற்கை வைத்தியம்

    Quote Originally Posted by vimalmeganath View Post
    Will be very useful. thanks for sharing
    Thank u and Welcome Vimalmeganath.


  10. #20
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Natural Remedies - இயற்கை வைத்தியம்

    Quote Originally Posted by srirenga View Post
    useful tips.
    Thank U and Welcome Srirenga.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter