Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree46Likes

பாட்டி வைத்தியம் - Paati Vaithiyam


Discussions on "பாட்டி வைத்தியம் - Paati Vaithiyam" in "Alternative Medicines" forum.


 1. #51
  a_hat's Avatar
  a_hat is offline Registered User
  Blogger
  Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2011
  Location
  சிங்கார சென்னை
  Posts
  2,047
  Blog Entries
  29

  re: பாட்டி வைத்தியம் - Paati Vaithiyam

  Thanks Kousi akka,

  Nice information. Thanks for sharing


  Sponsored Links
  Everything is "Pre-Written " .Nothing Can "Re-Written "
  Live The Best & Leave The Rest To God

 2. #52
  shaalam's Avatar
  shaalam is offline Registered User
  Blogger
  Citizen's of Penmai
  Gender
  Male
  Join Date
  Oct 2011
  Location
  Bahrain
  Posts
  850
  Blog Entries
  18

  re: பாட்டி வைத்தியம் - Paati Vaithiyam

  மிக்க நன்றி சகோதரி. உடல் பருமனால் அவதிப்படும் என் போன்றவர்களுக்கு இந்த பதிவு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.


 3. #53
  Ganga's Avatar
  Ganga is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Chennai
  Posts
  3,271
  Blog Entries
  4

  re: பாட்டி வைத்தியம் - Paati Vaithiyam

  வேப்பிலைக் கொழுந்தும், உப்பும் வைத்து அரைத்த விழுதை, தயிருடன் சேர்த்து, காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள் போய் விடும்.குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

  கங்கா
  விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை!!


 4. #54
  Kousalya bala's Avatar
  Kousalya bala is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2011
  Location
  USA
  Posts
  1,050

  re: பாட்டி வைத்தியம் - Paati Vaithiyam

  சுவாசத்தை எளிதாக்கும் குங்குமப்பூ!

  பாட்டி வைத்தியம் - Paati Vaithiyam-saffron-710.jpg  தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும். குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்*ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும். குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும். அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்.


  குங்குமப் பூவில் போலி நிறைய உண்டு. தேங்காய் துருவலில் வண்ணச்சாயத்தை ஏற்றி, காய வைத்து சிறிது 'saffron' essence கலந்து விற்கிறார்கள். அவை மலிவாக கிடைக்கும். தரமான குங்குமப்பூ ஒரு கிராம் விலை சுமார் ரூ. 500 இருக்கும். உண்மையான குங்குமப்பூவைத் தேர்வு செய்து வாங்கிப் பயனடையுங்கள்!
  நோய் எதிர்ப்பு சக்திக்கு......
  கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் 'ஏ' அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், இந்த கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.
  முதுமை தோற்றத்தைக் கட்டுப்படுத்தும். கண்பார்வை கூர்மையடையும். பல் நோய்கள் வராமல் தடுக்கும். கீரையுடன் பருப்பு மட்டும் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. பல கொடிய வியாதிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங்கண்ணிக் கீரையாகும்.
  உடற்சூட்டுக்கு.........
  வெந்தயம் சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. ஆனால் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ உடற் சூடு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். மோரில் வெந்தயத்தை போட்டு 10 நிமிடம் விட்டு சாப்பிட்டு வந்தால் உடற்சூடு தணிந்து விடும். ஒவ்வொரு நாளும் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தூளாக்கியோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள சர்க்கரையினளவு கட்டுப்படுத்தப்படும்.
  குறிப்பாக நீரிழிவு நோயுள்ளவர்கள் வெறும் வயிற்றில் இந்த வெந்தயத்தை தண்ணீ*ரில் ஊறவைத்து காலையில் பருகி வர நல்ல மாற்றம் கிட்டும். பொதுவாக பாலூட்டும் தாய்மாருக்கு பால் நன்றாக சுரக்க வறுத்த வெந்தயத்தை இடித்துக் கொடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் வயிற்றுப் போக்கு இருப்பின் அதற்கும் வெந்தயம் சிறந்த மருந்து. பெண்களுக்கு மாதவிடாயின் போது வெந்தயம் கொடுத்தால் நன்மை பயக்கும். இவற்றோடு காய்ச்சல், சிறுநீர்ப் பிரச்சினைகளுக்கும் நிவாரணியாகக் காணப்படுகின்றது இந்த வெந்தயம். மேலும் தலைக்கு வைக்கும் எண்ணெய்க்குள் வறுத்தோ அல்லது சாதாரணமாகவோ வெந்தயத்தை போட்டுவைத்துக் கொண்டால் அது நல்ல குளிர்ச்சியைத் தரும். மொத்தத்தில் வெந்தயம் என்பது நன்மை தரும் பொருளாகக் காணப்படுகின்றது.
  பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது. தலை முடி கொட்டுவதை நிறுத்த, வெந்தயத்தை தண்*ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போல அரைத்து, தலையில் தேய்த்து, அரைமணி நேரம ஊற வைத்து குளிக்க வேண்டும்.

  gowrymohan likes this.

 5. #55
  Kousalya bala's Avatar
  Kousalya bala is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2011
  Location
  USA
  Posts
  1,050

  re: பாட்டி வைத்தியம் - Paati Vaithiyam

  தோல் நோய் குணமாக...

  ஆரோக்கியமாக வாழ பழகிக்கொள்ளுங்கள். கொண்டைக் கடலை சுண்டல் ஒரு கப் மற்றும் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டு வந்தால் துத்தநாக உப்பு பெற முடியும். இது நமது கை நகங்களையும், தோலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்று கூறப்படுகிறது.
  அதேபோல் பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஏ புற்று நோய் வராமல் 70 சதவீதம் பாதுகாப்பளிக்கிறது. சிறநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கும் வல்லமையும் பூசணிக்காய்க்கு உண்டு.
  வாழைப்பழத்தின் மருத்துவ குணம்...
  எளிதில் கிடைக்கும் பழ வகைகளில் ஒன்று வாழைப்பழம். மருத்துவ குணம் நிறைந்த பழமாக வாழைப்பழம் திகழ்கிறது. ஆப்பிளில் உள்ளதை விட 4 மடங்கு கார்போ ஹைடிரேட்டும், 3 மடங்கு பாஸ்பரசும், 5 மடங்கு வைட்டமின் ஏ வும் மற்றும் இரும்புச் சத்தும் இதில் நிறைந்துள்ளன. ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் உப்பான பொட்டாஷியம் வாழைப்பழத்தில் ஏராளமாக அடங்கி உள்ளது. உடனடி உற்சாகத்தையும் பயனையும் தரக்கூடியது இப்பழம்.
  உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்தி தொடர்ச்சியாக காய்ச்சலில் படுப்பதை தடுக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உண்டு. வாழைப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகையையும், பொட்டாசியம் ஸ்ட்ரோக்கையும் தவிர்க்கும் வல்லமை பெற்றுள்ளது.
  வாழைப்பழம் ஞாபக சக்தி, மூளையின் சக்தி அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

  gowrymohan likes this.

 6. #56
  Kousalya bala's Avatar
  Kousalya bala is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2011
  Location
  USA
  Posts
  1,050

  re: பாட்டி வைத்தியம் - Paati Vaithiyam

  பித்தத்திலிருந்து விடுதலை பெற....!

  விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றைப் பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா எதுக்கிக்கெண்டே இருக்குமா இதுபேன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம். இந்த பித்தம் தெடர்பான பிரச்சினைகளையும், அதனை பேக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் இப்போது பார்ப்பேம்... [/b]

  * இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.
  * இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
  * பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
  * எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.
  * ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
  * பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
  * விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.
  * அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.
  * பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.
  * கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
  * நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.
  * எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
  * அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

  gowrymohan likes this.

 7. #57
  Kousalya bala's Avatar
  Kousalya bala is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2011
  Location
  USA
  Posts
  1,050

  re: பாட்டி வைத்தியம் - Paati Vaithiyam

  தங்கச்சத்தைப் பெற....

  பொன்னாங்காணிக்கீரை

  தங்கச்சத்தைச் சிறப்பாகக் கொண்டது. பொன்னாங்காணிக்கீரையில் தங்கச்சத்தும், இரும்புச் சத்தும் அதிகமாக இருப்பதாலும், சுண்ணாம்புச்சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் மிகச் சிறப்பாக இருப்பதாலும் இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது.
  பொன்னாங்காணிக்கீரை சமைத்துச் சாப்பிடுவதால், உடல் பலம் கூடும். தோல் நோய்கள் வராது. கண் நோய்கள் அனைத்தும் நீங்கிவிடும். பார்வை தெளிவடையும். நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கும். மண்ணீரல் பாதிப்பு உள்ளவர்களும் மூலநோய் உள்ளவர்களும் தொடர்ந்து சாப்பிட்டால், குணம் பெறலாம்.
  பொன்னாங்காணிக்கீரையை உப்பு சேர்க்காமல் வேகவைத்து வெண்ணெய் சேர்த்துக் கடைந்து தினசரி சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும். காட்டராக்ட் நோய் வராமல் பாதுகாக்கும். கண் சம்பந்தமான இதரப் பிணிகள் அனைத்தும் நீங்கி பார்வை தெளிவடையும். தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிடவேண்டும்.
  பொன்னாங்காணிக்கீரையை துவரம் பருப்பு சேர்த்துக் கடைந்து, நெய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மூன்று மாதங்களில் உடம்பு பெருக்கும். பொன்னாங்காணிக் கீரையில் துவரம் பருப்பு சேர்த்துச் சமைத்து நெய் சேர்க்காமல் சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டு வந்தால், மூன்று மாதங்களில் தேவையற்ற உடல் பருமன் குறையும்.
  இக்கீரையில் பூண்டும் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் மூல வியாதி முற்றிலும் குணமாகும். மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிடவேண்டும்.
  பொன்னாங்காணிச்சாறு 30 மில்லியளவு தயாரித்து, பசும்பாலில் கலக்கிச் சாப்பிட்டால் உடல் சூடு தணியும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். பொன்னாங்காணிச்சாற்றைக் காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

  gowrymohan likes this.

 8. #58
  Kousalya bala's Avatar
  Kousalya bala is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2011
  Location
  USA
  Posts
  1,050

  re: பாட்டி வைத்தியம் - Paati Vaithiyam

  தங்கச்சத்தைப் பெற....

  பொற்றிலைக்கரிப்பான் பொற்றிலைக்கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச்சத்து அதிகம் உள்ளது. இக்கீரையைச் சாப்பிட்டால் உடல் பொன் நிறமாகும். உடலை எந்த நோயும் தாக்காது. கண்கள் ஒளி பெறும். பார்வை கூர்மை பெறும். புத்தி தெளிவடையும். குன்மக் கட்டிகள் நீங்கிவிடும். பொற்றிலைக் கரிசலாங்கண்ணிக் கீரையை பச்சையாகத் தின்றால் மிகுந்த நன்மை கிடைக்கும். பச்சடியாகவும், கூட்டுக்கறியாகவும் தயாரித்துச் சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூளைக் கோளாறுகள் நிவர்த்தியாகும்.
  சித்தப்பிரமைக்கு மிக நல்ல மருந்து. கண்கள் சம்பந்தமான அனைத்து நோய்களும் நிவர்த்தியாகும். கபம் தொடர்பான சளி, இருமல் நீங்கும். ரத்த சோகை நோய் நிவர்த்தியாகி, நல்ல உடல் ஆரோக்கியம் ஏற்படும். மஞ்சள்காமாலை நோயை முழுமையாக நீக்கிவிடும் மிக அற்புதமான மருந்தாகும். கல்லீரல், மண்ணீரல் நோய் வந்தால் இம்மூலிகை மூலம் நிவர்த்தி செய்துகொள்ளலாம். ரத்த விருத்திக்குச் சிறப்பான மூலிகையாகும்.
  பொற்றிலைக் கரிசலாங்கண்ணிக் கீரையைச் சுத்தம் செய்து, நிழலில் நன்றாகக் காய வைத்துப் பொடி செய்துகொண்டு பொடியின் எடைக்குப் பாதி எடை, சீனி சேர்த்துக் கலந்து வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை ஆகாரத்துக்கு முன்னதாக ஒரு தேக்கரண்டி பொடியை சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சோகை, காமாலை, பாண்டு, வீக்கம், மூலம், மேகரோகங்கள் நிவர்த்தியாகும்.
  பொற்றிலைக் கரிசலாங்கண்ணிக் கீரை இலையைச் சுத்தம் செய்து, நிழலில் சிறிது உலர்த்தி மெழுகுபதமாக அரைத்து சுண்டைக்காய் அளவில் மாத்திரை செய்து, சுத்தமான களிம்பு ஏறாத பாத்திரத்தில் போட்டு, மாத்திரை மூழ்கும் அளவிற்கு விளக்கெண்ணெய் ஊற்றி ஐந்து தினங்கள் சூரிய வெப்பத்தில் வைத்து எடுத்துக்கொண்டு, சிறியோர் முதல் முதியவர்கள் வரை காலை, மாலை ஒரு மாத்திரை சாப்பிட்டு வந்தால், சோகை, காமாலை, பாண்டு வீக்கம், குன்மக்கட்டி, கண், சீதபேதி, அதிசாரம், மாந்தக்கழிச்சல் குணமாகும். ரத்தவிருத்தி ஏற்பட்டு, உடல் தங்கநிறம் அடையும்.
  ஹிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் மூர்ச்சை, மயக்கம், நரம்பின் அதிர்ச்சிகள், தூக்கமின்மை, புலம்புதல் போன்ற நிலையில் காலை, மாலை வெறும் வயிற்றில் இரண்டு மாத்திரை வீதம் தினசரி சாப்பிட்டு வந்தால், ஹிஸ்டீரியாவின் தொடர்புடைய அனைத்து நோய்க்குறிகளும் குணமாகும்.
  கரிசலாங்கண்ணி நெய்
  பொற்றிலைக் கரிசலாங்கண்ணி இலைச் சாறு இரண்டு பங்கும், பசு நெய் ஒரு பங்கும் சேர்த்துக் காய்ச்சி வண்டல் மெழுகுபதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தேவைக்கு ஏற்ப கற்கண்டு சேர்த்து காலை ஆகாரத்துக்கு முன்பும், இரவு படுக்கும்போதும் ஒரு தேக்கரண்டி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது. மூலரோகம், கண் ரோகங்கள், உஷ்ண ரோகங்கள், இருமல் அனைத்தும் நிவர்த்தியாகும்.

  gowrymohan likes this.

 9. #59
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,592

  Re: பாட்டி வைத்தியம் - Paati Vaithiyam

  1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

  2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

  3. தொண்டை கரகரப்புக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

  4. தொடர் விக்கல்லுக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

  5. சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

  6. உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

  7. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

  8. குடல் புண்ணுக்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

  9. வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

  10. வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

  11. மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

  12. சீதபேதி மலைவாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

  13. பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

  14. மூச்சுப்பிடிப்புக்கு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

  15. சரும நோய்க்கு கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

  16. தேமல் வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

  17. மூலம் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

  18. தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

  19. மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

  20. வரட்டு இருமலுக்கு எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.


  Last edited by sumathisrini; 22nd Jul 2013 at 02:38 PM.
  gowrymohan likes this.

 10. #60
  priyasarangapan's Avatar
  priyasarangapan is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Oct 2011
  Location
  bangalore
  Posts
  7,825

  Re: பாட்டி வைத்தியம் - Paati Vaithiyam

  பாரம்பரிய இயற்கை மருத்துவம்..!

  1.மாதுளம்பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன் ரத்தம் வருவது நிற்கும்.

  2.ஆஸ்துமா குணமாக வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடுநீர் பருகி வர நீங்கும்.

  3.வாழைபட்டையை தீயில் காட்டி சூடேற்றி பிழிந்து ஓரிரு துளிகள் விட காதுவலி குணமாகும்.

  4.கடற்சங்கை பசும்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது தடவி வர இரண்டு நாளில் பருக்கள் மறையும்.

  5.வண்டு,பூச்சி கடிக்கு வெள்ளைபூண்டை அரைத்து கடிவாயில் கட்ட விஷம் முறியும்.

  6.புதிய ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.

  7.சப்பாத்தி பூ இலையை கட்டிகள் மீது கட்டி வந்தால் உடைந்த கட்டிகள் குணமாகும்.

  8.தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு வலி குணமாகும்.

  9.அகத்தி கீரை சாறு,அகத்தி கீரை பூ சாறு இரண்டையும் தேனில் கலந்து சாப்பிட்டு வர தொடர் தும்மல் நீங்கும்.

  10.மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல்புண் குணமாகும்.

  தகவல்கள்@
  தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.

  With Love,
  Priya

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter