Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
 • 2 Post By chan

இடுப்பு வலி, கழுத்துவலி, முதுகுவலி


Discussions on "இடுப்பு வலி, கழுத்துவலி, முதுகுவலி" in "Alternative Medicines" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  இடுப்பு வலி, கழுத்துவலி, முதுகுவலி

  இடுப்பு வலி, கழுத்துவலி, முதுகுவலி

  பொதுவாக நாம் அனைவரும் அன்றாடம் தலைவலி, இடுப்பு வலி, கழுத்துவலி, முதுகுவலி போன்ற ஏதாவது ஒரு வலியால் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கிறோம்.

  இதற்கு தனிப்பட்ட பல காரணங்கள் இருப்பினும் இந்த வலிகளுக்கு காரணம் வாதம் பித்தம் கபம் ஆகியவற்றின் சீர்கேடுஆகும். இதில் இருந்து யாரும் தப்ப
  முடியாது என்பதுதான் உண்மை.

  இரண்டு எலும்புகள் சேர்ந்து ஒரு மூட்டை உருவாக்குகின்றன. அந்த மூட்டுக்குள் நரம்புகள், ரத்தக் குழாய்கள், திரவங்கள் என்று பல மாதிரியான அமைப்புகள் உடலில் இடத்திற்கு இடம் மாறுபட்டு அமைந்துள்ளது.

  பெரும்பாலானோர் அன்றாடம் பாதிக்கப்படுவது முதுகு வலியால்தான்.

  நாம் நேராக நிமிர்ந்து நடக்க, நிற்க உதவுபவை முதுகுத் தண்டும் அது சார்ந்த எலும்புகளும்தான். அதனூடேதான் மூளை தொடர்பான தண்டுவடம் சென்று அத்தனை உறுப்புகளிலிருந்து வரும் தகவல்களை மூளைக்கு கொண்டு செல்ல பயன்படுகிறது.

  இந்த தண்டுவடத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கும் எலும்புகள் மொத்தம் 32. இந்த எலும்புகளுக்கு இடையே மூட்டுகளும் அதில் ஈரத்தன்மையுடனான சவ்வுகளும் இருப்பதால், நாம் அசையும்போதும், குதிக்கும்போதும், இரு சக்கரவாகனத்தில் பயணம் செய் யும் போதும், ஆட்டோவில் செல்லும்போதும் என குதிகாலில் அதிர்வுகள் ஏற்படாது இருக்க உதவுகிறது.

  குண்டு குழியான பாதையில் இரு சக்கர வாகனத்தில் அடிக்கடி வெகுதூரம் பயணிப்பது, இருக்கையில் நேராக சரியான நிலையில் உட்காராமல் இருப்பது, முறையற்ற உடற்பயிற்சி, அல்லது உடற்பயிற்சியே இல்லாமை, எலும்புகளில் ஏற்படும் calcium (சுண்ணாம்புச்சத்து) குறைவு, சரியாக குணப்படுத்தப்படாத வாயுக் கோளாறு, மலச்சிக்கல், முதுமை ஆகியவை காரணமாக இந்த மூட்டுக்கள் பாதிக்கப்பட்டு கழுத்து, இடுப்பில் வலி ஏற்படும். இடுப்பு, கழுத்து தலைப்பகுதிகளில் தீவிர வலி, தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு இவற்றுடன் எலும்புத் தேய்வு, காரணமாக அவ்விடத்தில் வெற்றிடம் ஏற்படும்.

  வெற்றிடத்தில் வாதம் (வாயு) தங்கி இடுப்பு பிட்டம்,வபின்னங்கால் தொடைப் பகுதிகளில் வலி ஏற்படக் கூடும். காலை உயர்த்தும்போது வலி கூடும். கழுத்துஎலும்பு தேய்மானம் அடையும் நிலையில் கைகளில் வலியும், உள்ளங்கையில் மரத்துப்போன உணர்வும், சில நேரங்களில் எறும்பு ஊறுவது போன்றும், எரிச்சல் போன்றும் வலி ஏற்படும்.

  மூட்டுகள் நகர்வின் அளவு திசை மற்றும் எந்தப் பகுதி மூட்டுக்கள் பாதித்துள்ளன? என்பதைப் பொருத்து வலியும் வேதனையும் மாறுபடும். நோயாளியை "நாடி" பார்த்து பரிசோதனை செய்வது, எக்ஸ்ரே படம் ஆகியவை மூலம் பாதிப்பைத் துல்லியமாகக் கணிக்கமுடியும்.

  உணவு, உடற்பயிற்சி, உள் மருந்து, புற மருந்து என சித்தா மற்றும் ஆயுர்வேதமருத்துவத்தில் கூட்டு சிகிச்சை மூலம் இடுப்பு, கழுத்து வலி,மூட்டு பிறழ்தல் போன்ற பிரச்சினையை நிரந்தரமாக குணப்படுத்த முடியும்.

  வாழைக்காய், உருளைக் கிழங்கு, கருணைக்கிழங்கு, போன்ற கிழங்கு வகைகள், பட்டாணி, காராமணி, மொச்சை போன்ற பயறுவகைகள், அதிக புளிப்பு, தயிர் மற்றும் குளிர் பானங்கள் & (NEGATIVE FOOD) மாறுபட்ட உணவு வகைகள் ஆகியவற்றை இந்த நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும். குறிப்பாக வாயு பிரச்சினையை ஏற் படுத்தக் கூடிய உணவுப் பொருட்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.

  உணவில் முடக்கறுத்தான் கீரை, இஞ்சி, புதினா, சுக்கு, மிளகு, பூண்டு போன்ற வாயு நீக்கும் உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். மூட்டுக்களின் மேற்புறம் (மருந்து எண்ணை) தைலம் பூசுதல் நல்ல பலன் தரும்.

  மருத்துவரின் ஆலோசனையுடன் கூடிய சரியான உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்கள் ஆகியவை சில நேரங்களில் கழுத்து, இடுப்பு வலி பிரச்சினையை உள் மருந்துகள் இல்லாமலே குணப்படுத்தும் ஆற்றல் பெற்றவை. அதனால் இவற்றை செய்யலாம்.

  (யோகாசனம் குருவிடம் முறையாக கற்று செய்யவும்.)
  சூரிய நமஸ்காரம், திரிகோணாசனம், வஜ்ராசனம், யோக முத்ரா, மகாமுத்ரா,சலபாசனம், தனுராசனம், புஜங்காசனம், போன்ற ஆசனப் பயிற்சிகள் மருந்துகளுடன் சேர்ந்து நோயை விரைவில் குணப்படுத்த உதவும்.


  கழுத்து, இடுப்பு, முதுகு எலும்பு வலி பிரச்சினை வந்து விட்டால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆயுர்வேத மருத்துவம் & சித்த மருத்துவம் அதன் பிரிவான தொக்கண மருத்துவம், வர்ம மருத்துவம் ஆகியவை மூலம் வலியை குறைத்து முழுநிவாரணத்தைப் பெறலாம்.

  வலி நிவாரண மாத்திரைகள் வயிற்றைக் கெடுத்து அல்சரை உண்டாக்கும். அதனால் எச்சரிக்கை தேவை. சித்த மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருந்துகள் முழுமையான பலனைத் தரும். வலிகளைக் குறைப்பதோடு தசைகளை இலகுவாக்கி நிரந்தரமாக குணப்படுத்தும். ஆங்கில மருந்துகளும் உடனடி பலனை அளிக்கும். மேற்குறிப்பிட்ட நோய்களுக்கு மருத்துவம் நிரந்தர நிவாரணம் அளிக்கும் என்பது நிச்சயம். எனவே அச்சம் தேவையில்லை.

  தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  Similar Threads:

  Sponsored Links
  shrimathivenkat and Dangu like this.

 2. #2
  Dangu's Avatar
  Dangu is offline Ruler's of Penmai
  Gender
  Male
  Join Date
  Oct 2014
  Location
  CHROMEPET
  Posts
  10,950

  Re: இடுப்பு வலி, கழுத்துவலி, முதுகுவலி

  Very useful info.


 3. #3
  shrimathivenkat's Avatar
  shrimathivenkat is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  chennai
  Posts
  8,456

  Re: இடுப்பு வலி, கழுத்துவலி, முதுகுவலி

  thanks for sharing.


 4. #4
  Mals's Avatar
  Mals is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2013
  Location
  Navi Mumbai
  Posts
  5,286

  Re: இடுப்பு வலி, கழுத்துவலி, முதுகுவலி

  Thanks for sharing


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter