பழங்களின் தோலில் இத்தனை மகத்துவங்களாபொதுவாக பழங்களின் உட்பகுதியை சாப்பிட்டு, அதன் தோலை தூக்கி எரிந்துவிடுவோம்.

ஆனால் பழங்களின் தோல்களில், அதன் உட்பகுதிக்கு இணையான சத்துக்கள் அடங்கியுள்ளது.
ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு பழத்தின் தோல் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

மேலும் இது சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேறி, முகத்தை பிரகாசமாக வெளிக்காட்டும்.

முக்கியமாக புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

வாழைப்பழ தோல்
வாழைப்பழத்தின் தோல் பற்களை வெள்ளையாக்க உதவும்.

மேலும் சூரியக்கதிர்களால் பாதிக்கப்பட்ட சருமத்தில் ஏற்படும் எரிச்சல்களை சரிசெய்யவும் வாழைப்பழத்தின் தோல் உதவும்.

குதிகால் வெடிப்பு உள்ளவர்கள், வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு குதிகாலை மசாஜ் செய்து வந்தால், ஒரே வாரத்தில் குதிகால் வெடிப்பு மறைந்துவிடும்.

மாதுளை தோல்
மாதுளையின் தோலில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன.

அதில் பருக்கள், சரும அரிப்புகள், முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் நீங்கி அழகு பாதுகாக்கப்படும்.

மேலும் இதய நோய், தொண்டைப் புண் போன்றவை தடுக்கப்பட்டு, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

தர்பூசணி
தர்பூசணியில் இருக்கும் வெள்ளைப் பகுதியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

குறிப்பாக இந்த வெள்ளைப் பகுதியானது உடல் எடையைக் குறைக்க உதவி புரியும்.

மேலும் இந்த வெள்ளைப்பகுதியை சருமத்தில் தேய்த்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.

இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால், உடல் எடையைக் குறைக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும்.

மேலும் வெள்ளரிக்காயின் தோலில் உள்ள பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே ஆகியவை எலும்புகளின் ஆரோக்கியம், இரத்தம் உறைதல் மற்றும் பார்வையை மேம்படுத்தும்.Similar Threads: