101.பொன்னாங்காணி – Alternanthera sessillis – AMARANTHACEAE

ஒரு பிடி பொன்னாங்காணி இலையை அதிகாலையில் மென்று தின்று பால் அருந்தி வர உடல் குளிர்ச்சியுற்று கண் நோய் பலவும் நீங்கும்.
இலைகளைக் கீரையாகப் பாகபடுத்து உணவுடன் நீண்ட நாள் சாப்பிட்டு வர உடற்சூடு, மூலம் முதலியவை குணமாகி உடல் வனப்பும் கண்ணொளியும் மிகும்.

102.மணத்தக்காளி – Solanum nigrum – SOLANACEAE
இலையை அரைத்துப் பற்று போட அழுகும் புண்கள், அடிவயிற்றுவலி, புரையோடிய புண்கள், தீப்புண், அக்கி, மூட்டுவலி, கணுச்சூலை ஆகியவை தீரும்.
இலையை வதக்கிக் கட்ட விரைவீக்கம்வலி ஆகியவை குணமாகும்.

103.மருதோன்றி – Lowsonia inermis – LYTHRACEAE
இலையை அரைத்து நீரில் கரைத்து வாய் கொப்பளிக்கச் சிறுகாயம், சிராய்ப்பு, அடி, வாய்ப்புண் ஆகியவை தீரும்.
இலையை அரைத்துத் தேங்காய் எண்ணெயில் கலக்கிப் பச்சைநிறம் மாறாமல் காய்ச்சித் தடவி வர முடி செழித்து வளரும்.

104.வில்வம் – Aegle marmelos – RUTACEAE
இலை விழுது 10 கிராம் கொடுத்து குளிர் நீரில் முழுகி வர பெரும்பாடு தீரும்.
ஒரு பிடி இலையுடன் சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம் இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு 100 மி.லி ஆகக் காய்ச்சிக் கொடுக்க எவ்விதக் காய்ச்சலும் தீரும்.

105.வாத நாராயணன் – Delonix elata – CASEALPINIOIDEAE
இலையைப் போட்டு கொதிக்க வைத்துக் குளிக்க உடம்பு வலி தீரும்.
இலையை உலர்த்திப் பொடித்து 3 கிராம் நாள்தோறும் 1 முறை வெந்நீரில் சாப்பிட மேகம், வாயு தீரும்.

106.வேலிப்பருத்தி – Pergularia daemia – ASCLEPIADACEAE
காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்கு இலைச்சாறு தடவலாம்.
இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கீல் வாதம், முடக்கு வாதம், வாதக் குடைச்சல், இடுப்பு வலி முதலியன குணமாகும்.
வேலிபருத்திச்சாறு 30 மி.லி உள்ளுக்கு குடிக்க எல்லா வித வர்மப் பிடிப்புகளும் நீங்கும்.

107.மாதுளை – Punica granatum – PUNICACEAE
பழச்சாறு 15 மி.லி. கற்கண்டு அளவுடன் கலந்து காலை, மாலை பருக வாந்தி, மயக்கம், வெப்பம், மூலக்கடுப்பு, அடிக்கடி மலம் கழிக்கும் உணர்ச்சி, இரத்த மூலம் தீரும்.
மாதுளம் பிஞ்சை அரைத்து நெல்லிக் காயளவு சாப்பிடப் பேதி தீரும்.
கர்பிணி பெண்களுக்கு ஏற்படும் மசக்கைக்கு மாதுளங்கா இரசாயணம் சிறந்தது.

108.முசுமுசுக்கை – Mukia maderaspatana – CUCURBITACEAE
சாற்றுடன் சம நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் ஒருமுறை தலை முழுக இரைப்பிருமல் (ஆஸ்துமா) என்புருக்கி தீர்வதுடன் கண் எரிச்சல், உடம்பு எரிச்சல் தீரும்.
20 கிராம் வேருடன் 10 கிராம் முட்காவேளை வேரை சிதைத்து 150 மி.லி. பாலில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை பருகி வர மிகையான சளி, தொண்டைக் கம்மல் ஆகியவை குணமாகும்.