Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

மூலிகை மருத்துவம்: மு(பு)திய குழந்தைகள்


Discussions on "மூலிகை மருத்துவம்: மு(பு)திய குழந்தைகள்" in "Alternative Medicines" forum.


 1. #1
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,556

  மூலிகை மருத்துவம்: மு(பு)திய குழந்தைகள்

  மூலிகை மருத்துவம்: மு(பு)திய குழந்தைகள்-e_1322332053.jpeg

  வயோதிகம் பெரும்பாலான முதியவர்களை குழந்தைகளாக மாற்றிவிடுகிறது. வயது அதிகரிப்பதால் முதியவர்களுக்கு மூளையின் ஆற்றல் குறைகிறது. எழுபது வயதிற்கு மேல் மூளையின் புறணியானது சுருங்கத் தொடங்குவதால், முதியவர்கள் தங்களது ஞாபக சக்தியையும் சிந்திக்கும் திறனையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கின்றனர். இளமைக்காலத்தில் தங்களது மனதில் பதிந்த நினைவுகள், மற்றவர்களைப்பற்றி கற்பனை செய்து வைத்திருந்த முடிவுகள், தங்களது நம்பிக்கைகள், அசைக்க முடியாத சில கருத்துக்கள் ஆகிய அனைத்தும் வயதான காலத்தில் ஒன்றன்பின் ஒன்றாக தோன்றி மூளையில் குழப்பத்தை ஏற்படுத்துவதால் முதியவர்கள் தங்களது சிந்தனைத்திறனை இழந்து, பேசியதையே திரும்ப திரும்ப பேசுவதும் நடக்காத விஷயங்களை நடந்ததுபோல பேசியும் தாங்களும் குழம்பி பிறரையும் குழப்புவர். அல்சீமர் என்ற நோய், மூளைச்சுருக்கம் போன்ற காரணங்களால் முதுமையில் ஐம்புலன்களும் குன்றுகிறது. மூளையின் எட்டாவது நரம்பான கேள்வி நரம்பும் பாதிக்கப்படுவதால் கேட்கும் திறனை இழப்பதுடன் சில உடல் உபாதைகளுக்கும் ஆளாகின்றனர். வெஸ்டிபில் என்னும் நரம்பின் ஒரு பாகமானது காதின் உட்புறம் இருந்து தலை மற்றும் உடல் சமநிலையை பாதுகாக்கிறது. இந்த நரம்பின் பாதிப்பால் காதின் உட்புறம் உள்ள நத்தைக்கூடு போன்ற பகுதியில் திரவ சமநிலையானது மாறுபட்டு, நரம்புகளுக்கு போதுமான மின்னோட்டம் கிடைக்காததால் மூளை தண்டுவடம் மற்றும் மூளை முன்புறத்தில் குழப்பம் உண்டாகி தலைசுற்றல் ஏற் படுகிறது.
  இளமையில் எப்போதாவது வரும் தலைசுற்றல் முதுமையில் அடிக்கடி வருவது முதியவர்களுக்கு மனதளவில் பயத்தையும் உடலளவில் சோர்வையும் ஏற்படுத்தி விடுகிறது. நிற்கும்பொழுது தடுமாற்றம், நிலைகுத்திய பார்வை, குமட்டல், வாந்தி, இல்பொருள் காட்சி, சுற்றியுள்ள பொருட்கள் சுழல்வது போல் உணருதல், திடீர் வியர்வை, படபடப்பு, இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் குறைதல் போன்ற உணர்வுகளுடன் தலைசுற்றல் உண்டாவதை வெர்டிகோ என்று அழைக்கிறோம்.

  தனக்குத்தானே சுற்றுவது போல் உணருதல் அல்லது தன்னைச் சுற்றியுள்ள பொருட்கள் சுற்றுவதுபோல் உணருதல் ஆகிய இரண்டு வகைகள் வெர்டிகோவில் காணப்புடுகின்றன. வெர்டிகோ தொல்லையினால் காதின் கேட்கும் திறனும் குறைகிறது. முதுமையில் ஏற்படும் இந்த தலைசுற்றல் பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரிக்கிறது. தலைசுற்றலினால் பாதிக்கப்படும் முதியவர்கள் நடப்பதற்கே பயப்படுவதுடன் தடுமாறவும் செய்கின்றனர். ஆகவே முதியவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அன்பும் அரவணைப்பும் காட்டவேண்டியது அவசியமாகும்.


  வயோதிகத்தின் பயனாய் குழந்தைகள் போல் தடுமாறும் முதியவர்களை வெறுக்கக்கூடாது. அவர்களது வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டு கோபப்படாமல் குழந்தையின் போக்காக நினைத்து அவர்களை புரிந்துகொள்ள வேண்டும். வயதான காலத்தில் புதிய குழந்தைகளாய் அவதாரமெடுக்கும் முதியவர்களின் வெர்டிகோ என்னும் தலைசுற்றலை கட்டுப்படுத்தும் மூலிகை மருந்துப் பொருள்தான் அரக்கு. சபின்டஸ் லாரிபோலியஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட சபின்டேசியே குடும்பத்தைச் சார்ந்த பெரிய மரங்களில் வளரும் ஒருவித பூச்சிகள் உற்பத்தி செய்யும் லாக்கோயர் என்னும் பொருளே அரக்கு என்ற பெயரில் சித்த மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது. அரக்கு மரங்களின் கட்டை மற்றும் பூக்களில் உள்ள சப்போனின்கள் மூளையின் சமநிலையை நிலைநிறுத்தி காதின் உட்புறத்தில் ஏற்படும் நிலையின்மையை குணப்படுத்துகின்றன. அரக்குப்பூச்சிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருளாக இருந்தபோதிலும், அரக்கு மரங்களில் கூடு கட்டக்கூடிய பூச்சியிலிருந்து கிடைக்கக்கூடிய அரக்கே மருத்துவ குணம் வாய்ந்ததாகும். நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் கொம்பரக்கை ஒரு துணியில் முடிந்து, நீரில் போட்டு கொதிக்கவைத்து, நன்கு கரைந்ததும் வடிகட்டி, அத்துடன் நல்லெண்ணெய் அரைபங்கு சேர்த்து கொதிக்கவைத்து, பதத்தில் வடிகட்டி, சூடுஆறிய பின் வாரம் இருமுறை தலையில் தேய்த்து இளவெந்நீரில் குளித்துவர வெர்டிகோ என்னும் தலைசுற்றல் நீங்கும். சித்த மருந்துக்கடைகளில் கிடைக்கும் அரக்குத் தைலத்தை வாங்கி, வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தலைமுழுகி வர முதுமையில் தோன்றும் தலைசுற்றல், சைனஸ் பிரச்னையால் தோன்றும் தலைசுற்றல் ஆகியன நீங்கும்.


  -டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்,

  Similar Threads:

  Sponsored Links

 2. #2
  Mals's Avatar
  Mals is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2013
  Location
  Navi Mumbai
  Posts
  5,286

  Re: மூலிகை மருத்துவம்: மு(பு)திய குழந்தைகள்

  Thanks for sharing


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter