Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes

Recovered Posts


Discussions on "Recovered Posts" in "Announcements" forum.


  1. #221
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Useful Sakthi.


    Sponsored Links

  2. #222
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    This is just simply superb!!! It is high time for the society to change their thinking about women and their freedom. I hope everyone reads this...


  3. #223
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Originally Posted by krishnaveni mur
    nice starting ... realy good opening. joint family concept also nice
    thanks sis.....


  4. #224
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    pl send me also prema's new novel to my pm


  5. #225
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    amma ponnu rendu perum azhagu.


  6. #226
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?

    பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும்.

    இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.

    100 கிராம் முளை கட்டிய பயறில்,
    30 கலோரிகள்
    3 கிராம் புரதச்சத்து
    6 கிராம் கார்போஹைட்ரேட்
    2 கிராம் நார்ச்சத்து உள்ளது.

    அதிக உடல் உழைப்பும், உடல் பலமும் தேவைப்படுபவர்கள் இந்த முளை கட்டியப் பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு குளுமையைக் கொடுப்பதால் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்.


  7. #227
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.

    இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
    இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

    ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது
    தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம்
    ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

    அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல்
    சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.

    சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம்.
    அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.

    பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை
    தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம்
    சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.
    contd..



  8. #228
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    தொடர்ச்சி
    எனவேஎலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட்
    தெரபி என்று பெயர்.

    தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டுலிட்டர் தண்ணீரில்
    கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான்இந்த லெமனேட்
    தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.

    இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13
    விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாகநிரூபிக்கப்பட்டுள்ளது.

    சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும்தவிர்க்கச் சொல்கிறார்
    ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்துஅதிகம் இருக்கும்.
    சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.

    பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள்இருந்து கொண்டுதான்
    உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.

    சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?

    சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள்மூலம் உணரலாம்.
    இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், “கால்சியம் வகைக் கற்கள்
    சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு
    வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும்.
    அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சைஎடுத்துக் கொள்ள வேண்டும்.

    contd..




  9. #229
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    தொடர்ச்சி
    யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில்
    வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில்
    சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக
    உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி
    கற்கள் உருவாகுமாம்.

    இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர்
    வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள்
    இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில்
    உருவாகின்றன.

    ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் – ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால்,
    அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும்.
    காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும்
    வாய்ப்பு உள்ளது.

    கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச்
    சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ்
    நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர்
    லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser
    lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.

    இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே
    எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள்
    பருக வேண்டும்.

    “திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல்
    நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட
    கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம்.
    இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது.


  10. #230
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    இருமலில் இருந்து உடனடி தீர்வு பெற 10 எளிய டிப்ஸ்...

    குளிர்காலம் என வந்துவிட்டாலே சளி, காய்ச்சல் என நாம் அவதிப்படுவது சகஜம் தான். காய்ச்சல் வருவதற்கான பொதுவான அறிகுறிகளே சளியும் இருமலும். இருமல் வந்துவிட்டால், குளிர்காலத்தில் நீங்கள் போட்டு வைத்திருந்த திட்டங்களை எல்லாம் குலைத்து விடும்.

    தொடர்ச்சியாக இருமல் வந்தால், உங்கள் நெஞ்சில் வலி ஏற்பட்டு உடலும் சோர்வடைந்து விடும். இருமல் வருவதற்கு காய்ச்சலைத் தவிர அலர்ஜிகள், ஆஸ்துமா, வறண்ட காற்று மற்றும் புகையையும் கூட காரணமாக சொல்லலாம்.

    இருமலில் இருந்து உடனடி நிவாரணத்தை பெறுவதற்கு பலரும் அல்லோபதி சிகிச்சைகளை நாடி செல்கின்றனர். அது தான் மிகச்சிறந்த தேர்வு எனவும் நினைக்கின்றனர். ஆனால் அதை விட சிறந்த இயற்கை சிகிச்சைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? அவைகளை பயன்படுத்தினால் இருமலில் இருந்து உடனடி தீர்வை காணலாம்.

    எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் இருமலை குணப்படுத்த சில பொருட்கள் உள்ளது. அவைகளை உங்கள் சமயலறையில் இருந்தே நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். கடுமையான மற்றும் தீவிரமான இருமலை கட்டுப்படுத்த வாழ்வு முறையில் சில மாற்றங்களை செய்தாலே போதும்.

    இதோ இருமலை உடனடியாக போக்குவதற்கான சில வீட்டு சிகிச்சைகள்.
    contd..





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter