Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes

Recovered Posts


Discussions on "Recovered Posts" in "Announcements" forum.


  1. #231
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    தொடர்ச்சி
    நீர்ச்சத்துடன் இருங்கள் குளிர்காலம் என்றாலே வறண்ட காலமாகும். அதனால் இருமலை நீக்க வேண்டுமென்றால், அதிகமான அளவில் வெந்நீரையும், இதர பானங்களையும் குடித்து நீர்ச்சத்துடன் இருங்கள்.

    தேன் தேன் என்பது தொண்டை வலியை குணப்படுத்தும் என ஆய்வுகள் கூறுகிறது. இதனால் இருமலில் இருந்து இது உடனடி நிவாரணத்தை பெற உதவிடும்.

    வெந்நீர் குளியல் இருமலுக்கான உடனடி வீட்டி சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகும். வெந்நீரில் குளியல் போட்டால் உடல் கழிவுகள் வெளியேறுவது சுலபமாகும். இதனால் சலிக்கு மட்டுமல்லாது அலர்ஜிகள் மற்றும் ஆஸ்துமாவால் ஏற்படும் இருமலுக்கும் அது நிவாரணத்தை அளிக்கும்.

    உப்பு தண்ணீரை கொப்பளித்தல் இருமலை போக்க இதுவும் ஒரு வழியாகும். வெதுவெதுவன இருக்கும் உப்பு தண்ணீரில் வாயை கொப்பளித்து உடனடி நிவாரணத்தை பெற்றிடுங்கள்.

    மசாலா டீ இந்த டீயில் பாலும் மஞ்சளும் கலக்கப்பட்டிருக்கும். இருமலை குறைக்க இது சிறந்த வழியாகும். இது இயற்கையான சிகிச்சை என்பதால், இதனை பெரியவர்களும் குழந்தைகளும் பயன்படுத்தலாம்.

    எலுமிச்சை, லவங்கப்பட்டை மற்றும் தேன் கொதிக்க வைத்த தேனுடன் லவங்கப்பட்டை மற்றும் எலுமிச்சையை சேர்த்துக் கொள்ளவும். இருமலை போக்க இந்த சாறு மிகவும் உதவிடும். சளியை குணப்படுத்தவும் கூட இதை பயன்படுத்தலாம்.

    உப்பு தண்ணீர் மற்றும் பூண்டு இருமலுக்கான மிக பழமையான வைத்தியம் இது. பூண்டுகளை நசுக்கி உப்பு தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளவும். மஞ்சள் என்பது தொற்றுக்களுக்கு கிருமி நாசினிகளாக விளங்குவதால் அதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    தேனும் பிராந்தியும் உடலின் வெப்பநிலை அதிகரிப்பதற்காக பிராந்தியை பயன்படுத்தலாம். சளியை எதிர்த்து போராட தேனை பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் போதும் இந்த மாயத்தை நிகழ்த்திட.

    நெல்லிக்காய் பொதுவாக ஏற்படும் சளியை போக்க சிறந்த வழிகளில் ஒன்று தான் நெல்லிக்காய். வரும் முன் காப்பது தானே சிறந்தது. நெல்லிக்காய் என்பது நம் உடலை பாதுகாக்கும் கடுமையான நோய் எதிர்ப்பு பண்பேற்றியாக விளங்கும்.

    மூலிகை டீ தீவிரமான இருமலை எதிர்த்து போராட சிறந்த பொருட்களாக விளங்குகிறது துளசி, இஞ்சி மற்றும் கருப்பு மிளகு. இவைகளை பயன்படுத்தி டீ தயார் செய்து அதனை சூடாக பருகிடுங்கள்.


    Sponsored Links

  2. #232
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    பீட்ரூட் மருத்துவக் குணங்கள் !!!
    பீட்ரூட்யில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். இரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. வயிற்று பிரச்சனைகள் தீரும். பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்பஸ மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும். மற்ற கீரைகளைப் போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும். மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும். தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தியும் இதுக்கு இருக்கு. கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும். அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்கின்றனர். *பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது. கிட்னி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும். தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்; தலையில் அதிக முடி முளைக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்
    contd.



  3. #233
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    தொடர்ச்சி
    மலச்சிக்கலை நீக்கும். புற்று நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. இரத்த சோகை, உடல் எடை சரியாகும். முகப்பொலிவு கூடும். சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது. தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும். பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும். பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும். பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும். பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும். பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும். பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. தகவல்


  4. #234
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    Danke da Caps..


  5. #235
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    கை மருத்துவத்தில் சிறந்தது சுக்கு
    கை மருத்துவத்தில் சிறந்தது சுக்கு சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
    சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
    சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
    சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
    சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
    சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
    சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
    சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.


  6. #236
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    தொடர்ச்சி
    சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
    சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.
    சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
    சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும்.
    குரல் இயல்பு நிலைபெறும். சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.
    சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும். சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.
    சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும். தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.
    சுக்கு , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.


  7. #237
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    ஆவலை உண்டாக்க..
    தினத்தந்தி நாளிதழைப் பற்றி ஆதித்தனாரிடம் ஒரு அரசியல் பிரமுகர், ""பத்திரிக்கை எளிமையாகவும், பாமரத்தனமாகவும் இருக்கிறதே'' என்று கேட்டாராம்.
    அதற்கு ஆதித்தனார், ""நான் படித்தவர்களுக்காக மட்டும் பத்திரிக்கை தொடங்கவில்லை. படிக்காதவர்களுக்கும் சேர்த்துத்தான்'' என்றாராம்.
    அந்தப் பிரமுகர் விடாமல் ""அது எப்படி படிக்காதவர் படிக்கமுடியும்?'' என்று கேட்டாராம்.
    ""படிக்காதவர்களுக்கு இந்த பத்திரிக்கையை படிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டாக்குவது...அப்படி ஆர்வம் வந்தவுடன் அந்த நபர்...எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பிப்பார். நாளடைவில் அந்த படிக்காதவரே முழுப் பத்திரிக்கையையும் ஒன்று விடாமல் வாசிக்கிறவராக மாறி விடுவார்...அதுதான் என் நோக்கம்'' என்று ஆதித்தனார் கூற, பிரமுகர் வாயடைத்துப் போனார்.


  8. #238
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    இரக்கம்!

    ஸ்டீன் மெட்ஸ் என்னும் புகழ்பெற்ற அறிவியல் அறிஞரின் வீட்டுக்கு அவருடைய நண்பர் சென்றிருந்தார். அன்றைக்கு கடும் குளிர் நிலவியது. அறிவியல் அறிஞர் தம் உடலை நன்றாகக் கம்பளியால் போர்த்தியிருந்தார். எனினும், குளிர் தாங்காமல் நடுங்கிக்கொண்டே ஏதோ ஒரு சோதனையில் முழுமூச்சாய் ஈடுபட்டிருந்தார். அருகிலேயே கணப்பு (சூட்டடுப்பு)இருந்தும் அவர் அதனை எரிய விடவில்லை. நண்பர் அவரிடம், ""ஏன் கணப்பை எரிய விடாமல் இப்படிக் குளிரில் நடுங்குகிறீர்கள்?'' என்று கேட்டார்.
    அதற்கு அந்த அறிவியல் அறிஞர் எழுந்து சென்று,""அருகில் இருந்த கணப்பைச் சுட்டிக்காட்டினார். அங்கு சுண்டெலியொன்று தன் குட்டிகளுடன் இருந்தது.
    ""இந்த கடுமையான குளிரில் நாமே நடுங்கும்போது இவை என்ன செய்யும்? அதனால்தான், அவற்றை விரட்ட எனக்கு மனம் வரவில்லை'' என்றார்.


  9. #239
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    தந்தி!


    சர்தார் வல்லபாய் பட்டேல் நீதிமன்றத்தில் வாதாடிக்கொணடிருந்தார். அப்போது அவருக்கு ஒரு தந்தி வந்தது. அதை வாங்கி படித்துவிட்டு தன் கோட் பைக்குள் திணித்துவிட்டு தன் வாதத்தைத் தொடர்ந்தார். நீதி மன்றம் கலைந்தபின் அவரை தனியே அழைத்த நீதிபதி, "" என்ன செய்தி?'' என்று கேட்டார். படேல் சிறிதும் பதட்டப்படாமல்,""எனது மனைவி ஜவேரிபாய் இறந்து விட்டாள்'' என்றார். நீதிபதி அதிர்ந்து விட்டார்!
    படேல் உண்மையிலேயே இரும்பு மனிதர்தான்!


  10. #240
    Penmai Support Team's Avatar
    Penmai Support Team is offline Super Moderator Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Posts
    485

    Re: Recovered Posts

    அரைஞாண் கொடியின் மகத்துவம்
    ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாகமாறியது.

    இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன . இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.

    இப்போது வெள்ளி , தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விடயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத் தான் செய்கிறார்கள்.

    இந்த அரைஞாண் கொடியின் மகத்துவம் தெரியாமல் அதில் கண்ட கண்ட தாயத்துகளை கட்டி தொங்க விடுவதும், அது திருஷ்டி காக என்று புறம்பு கூறுவதும் தவறு....

    நம் முன்னோர்கள் நம் பெருமைகளை நமக்கு சொல்ல மறந்ததை போல அல்லாமல் இனி நாமாவது நம் பிள்ளைகளுக்கு இது போன்ற நம் பாரம்பரியத்தை விட்டுகொடுகாமல்சிறு சிறு விடயங்கலளையும் அவர்களுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்....




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter