உடலுக்கு குளிர்ச்சி, மலர்ச்சி தந்து... அயற்சி போக்கும் ஜாதிப் பூ தைலம்!

கால் கிலோ நல்லெண்ணெயைக் காய்ச்சவும். ஒரு கப் உலர்ந்த ஜாதி மல்லிப்பூவை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி, காய்ச்சிய எண்ணெயில் போடுங்கள். மறுநாள் மூட்டையை நன்றாகப் பிழிந்து எடுத்து விடுங்கள். இந்த எண்ணெயைத் தலை முதல் பாதம் வரை தேய்த்து சீயக்காய் போட்டு அலசுங்கள். வாரம் ஒரு முறை இப்படிக் குளித்து வந்தால்... உடம்பும் மனசும் உற்சாக வெள்ளத்தில் மிதக்கும்.

நகங்கள் கறுத்து, உடைந்து, நிறம் மாறியிருந்தால்...
முல்லை, ஜாதி, இருவாச்சி மலர்களை சம அளவு எடுத்து அரைத்து வடிகட்டுங்கள். இந்த எசென்ஸை ஒரு பாட்டிலில் வைத்து, அவ்வப்போது பஞ்சினால் தோய்த்து நகங்களில் பூசுங்கள். உடைந்த நகம் வளரும். நகம் சிப்பியைப் போல் பளபளக்கும்.


தலையில் பேன், பொடுகு தொல்லை தீர...
லா ஒரு டீஸ்பூன் கடுகு எண்ணெய், விளக்கெண்ணெயுடன் இருவாச்சி மல்லியின் வேரைப் பொடித்து சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியை வெந்நீரில் குழைத்து தலையில் தேய்த்து, சீயக்காய் போட்டு அலசுங்கள். பேன், பொடுகு ஓடிவிடும்.


வாசனையான ஹென்னா!
ருதாணி பவுடர் - ஒரு கப், ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, டீ டிகாஷன் - ஒரு கப், ஒரு எலுமிச்சம்பழத்தின் சாறு... இவற்றுடன் மொட்டு முல்லை, ஜாதி, இருவாச்சி மல்லி மூன்றையும் அரைத்த விழுது ஒரு கப் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். இந்த ஹென்னாவை தலைக்குப் போடுவதால் முட்டை வாசனை மறைந்து, பூக்களால் கூந்தல் வாசம் வீசும்.

Similar Threads: