Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

உருளை ஸ்டார்ச் பவுடர் அழகுக் கலை


Discussions on "உருளை ஸ்டார்ச் பவுடர் அழகுக் கலை" in "Beauty Tips" forum.


  1. #1
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,201

    உருளை ஸ்டார்ச் பவுடர் அழகுக் கலை

    உருளை ஸ்டார்ச் பவுடர்
    உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச், தோலை மிருது-வாக்கி, கூந்தலை பளபளப்பாக்கும்.

    உருளைக்கிழங்கின் தோலை நீக்கி, பொடியாக நறுக்கி வெயிலில் மொறுமொறுப்பாகக் காய வைத்து, பவுடராக்கிக் கொள்ளுங்கள்.

    கண்களுக்குக் கீழ் இருக்கும் கருமையைப் போக்க
    50 கிராம் உருளை ஸ்டார்ச் பவுடருடன், 10 கிராம் பார்லி பவுடரை கலந்து கொள்ளுங்கள். இதிலிருந்து ஒரு டீஸ்பூன் எடுத்து, மசித்த வாழைப்பழம் ஒரு டீஸ்பூன் கலந்து கண்களைச் சுற்றிப் பூசுங்கள். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் கண்களுக்குக் கீழ் இருக்கும் கருமை மறையும்.

    முகத்தை 'ப்ளீச் ஆக்க
    ஸ்டார்ச் பவுடர் 50 கிராமுடன், 200 கிராம் பார்லி பவுடரைக் கலந்து கொள்ளுங்கள். இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, பால் கலந்து முகத்தில் 'பேக்'ஆகப் போட்டுக் கழுவுங்கள். முகம், அன்று மலர்ந்த தாமரையாக ஜொலிஜொலிக்கும்.

    பாதம், நகங்களில் வெடிப்பு,கழுத்து, முழங்கை, மூட்டுப் பகுதிகள் கருத்து, தோலும் மறைய
    ஒரு டீஸ்பூன் உருளை ஸ்டார்ச் பவுடர், அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் கலந்து, அது பேஸ்ட் ஆகும் அளவுக்கு எலுமிச்சைச் சாறு சேர்த்து, பாத வெடிப்பு, கருமை படர்ந்த இடங்களில் பூசுங்கள். வெடிப்பு மறையும். கருமையும் காணாமல் போகும்.

    நான்கு சீயக்காய்களை முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊற வையுங்கள். மறுநாள், இந்த சீயக்காய்களுடன் 4 செம்பருத்தி இலை, 2 டீஸ்பூன் உருளை ஸ்டார்ச் பவுடரை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதைத் தலையில் தேய்த்துக் குளியுங்கள். உடல் சூடு தணிவதுடன் தலையும் சூப்பர் சுத்தமாகி விடும்.

    கூந்தல் பளபளவென மின்ன
    பூந்திக்-கொட்டை, காய்ந்த செம்பருத்தி இலை, வெந்த-யம், பயத்தம்பருப்பு, உருளை ஸ்டார்ச் பவுடர்.. இவற்றை தலா கால் கிலோ எடுத்து மெஷினில் கொடுத்து பவுடராக்குங்கள். வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து இந்த பவுடரைப் போட்டு அலசுங்-கள். கூந்தல் பட்டுப் போல மின்னும்.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    GeethaSKG is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Chennai
    Posts
    12

    Re: உருளை ஸ்டார்ச் பவுடர் அழகுக் கலை

    rembo nalla irukku madam


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter