முடி உதிர்வதை தடுக்க

நல்ல முற்றிய தேங்காயின் துருவல் ஒரு கப் எடுத்து, அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் காய்ச்சுங்கள். எண்ணெய் தனியாக பிரிந்து வரும். இதுதான் கலப்படமில்லாத சுத்தமான தேங்காய் எண்ணெய். இதைத் தினமும் தலைக்கு தேய்த்து வந் தால், முடி உதிர்வது நின்று, வளர்ச்சியும் துரிதப்படும்.

முடி கொட்டுதல், வழுக்கை, நரை
100 மில்லி தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் ஒரு கப் மருதாணி இலையைப் போட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள். 2 நெல்லிக்காய், 2 பூந்திக் கொட்டையை அரைத்து, மருதாணி தண்ணீரில் கலந்து, வாரம் ஒரு முறை தலைக்கு பேக் போட்டு பதினைந்து நிமிடங்கள் கழித்து ஷாம்பூ (அ) சீயக்காயினால் அலசுங்கள்.

வாரத்துக்கு இரண்டு முறை சின்ன வெங்காயம் இரண்டுடன், தேங்காய் துண்டு இரண்டு சேர்த்து அரைத்து வழுக்கயின் மீது பூசுங்கள். பிறகு, கடலை மாவைத் தேய்த்து அலசினால், மீண்டும் முடி முளைக்க ஆரம்பிக்கும்.

ஏ.சி-யிலேயே இருப்பவர்களுக்கு கூந்தல் வறட்சி, நுனி முடி பிளவு போன்றவை ஏற்படும். ஓமம், சீரகம், உடைத்த கடுக்காய் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து விழுதாக அரைத்து அதனுடன் கடலைமாவு, பயத்த மாவு கலந்து தலைக்கு தேய்த்து அலசும் போது, இந்தப் பிரச்னைகள் தீரும்.

Similar Threads: