Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By vijigermany

தர்பூசணி ஒரு அழகு அமுதசுரபி


Discussions on "தர்பூசணி ஒரு அழகு அமுதசுரபி" in "Beauty Tips" forum.


  1. #1
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,280

    தர்பூசணி ஒரு அழகு அமுதசுரபி

    முகம் ஜொலிக்க

    தோல், கொட்டை நீக்கிய தர்பூசணி துண்டுகள் - ஒரு கப், சோற்றுக் கற்றாழை ஜெல் - 2 டேபிள்ஸ்பூன் எடுத்து, கலந்து, முகத்தில் பூசி, 2 நிமிடம் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். முகம் மெருகேறி ஜொலிஜொலிக்கும்.

    முகத் தொய்வை சீர் செய்கிறது

    ஒரு கப்பில் தர்பூசணி ஜூஸை எடுத்து, அதில் பஞ்சை நனைத்து, பஞ்சால் முகத்தை ஒற்றி எடுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். தினமும் இப்படிச் செய்து வர.. சருமத்தின் சுருக்கம் நீங்கும். இளமை திரும்பும். எண்ணெய்ப் பசை சருமத்தினர் அனைவருக்குமே ஏற்ற சிகிச்சை இது!

    வறண்ட சருமத்தினருக்கு

    வாழைப் பழத் துண்டுகள் இரண்டுடன், 2 டேபிள்ஸ்பூன் தர்பூசணி விழுது கலந்து நன்றாகப் பூசுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால், சருமம் மிருதுவாகி மினுமினுக்கும்.

    எண்ணெய்ப் பசை சருமத்தினர்

    2 டேபிள்ஸ்பூன் தர்பூசணி விழுது, ஒரு டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி வர, அதிகப்படியான எண்ணெய்ப் பசை ஓடியே போகும்.

    கூந்தல் பளபளக்கும்.

    அரை கிலோ நல்லெண்ணெயில் வெந்தய பவுடர் - 50 கிராம், தர்பூசணி விதை பவுடர் - 50 கிராம் கலந்து காய்ச்சுங்கள். இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து, சீயக்காய் போட்டு, வாரம் இருமுறை குளித்து வர, கண்டிஷனிங் செய்ததுபோல கூந்தல் பளபளக்கும்.

    தர்பூசணி விதை எண்ணெயும் அற்புதமான மருந்துதான் (இது கடைகளில் கிடைக்கிறது) பிறந்த குழந்தையை இந்த எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி வர, சருமம் மெருகேறி ஜொலிக்கத் துவங்கும்.

    மங்குகள் மறைய

    ஒரு டீஸ்பூன் கடுகு பொடியுடன், ஒரு டீஸ்பூன் தர்பூசணி ஜூஸைக் கலந்து பூசினால்.. மங்குகள் உள்ள பகுதியில் தர்பூசணியின் சாறு ஊடுருவிச் சென்று, செயல்பட்டு மங்குகளை மறையச் செய்யும்.

    2 டீஸ்பூன் கடலை மாவு (அ) பயத்தமாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தர்பூசணி விழுதைக் கலந்து, முகம் மற்றும் உடலில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வெயிலால் ஏற்படும் வேனல் கட்டிகள், கைகளின் கருமை, பருக்களைப் போக்கும் இந்த சிகிச்சை.

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by Parasakthi; 10th Dec 2011 at 09:49 AM. Reason: Alignment
    yuvan_nan@yahoo and gomee like this.

  2. #2
    GeethaSKG is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Chennai
    Posts
    12

    Re: தர்பூசணி ஒரு அழகு அமுதசுரபி

    inthu ellam pudhusa irukku nan hairkku ullathu mattum try pannalamnu irukken mudi rembo koditidathey madam


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter