Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Simple Remedies to Get Rid of Blackheads - பிளாக்ஹெட்ஸை பிளாக் செய்ய..!


Discussions on "Simple Remedies to Get Rid of Blackheads - பிளாக்ஹெட்ஸை பிளாக் செய்ய..!" in "Beauty Tips" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Simple Remedies to Get Rid of Blackheads - பிளாக்ஹெட்ஸை பிளாக் செய்ய..!

    பிளாக்ஹெட்ஸை பிளாக் செய்ய..!

    தூரத்தில் இருந்து பார்க்கும்போது ‘காது மா’ என செல்லமாக அழைக்கும் அளவுக்கு க்யூட்டாக இருக்கும் கேர்ள்ஸை, கொஞ்சம் நெருங்கி வந்து க்ளோஸப்பில் பார்த்ததும், ‘ப்பா... யாருடா


    இந்தப் பொண்ணு...’ என்று கலாய்க்கும் அளவுக்கு இமேஜ் டேமேஜ் செய்யும்... பிளாக்ஹெட்ஸ்! மேக்கப்பை மீறி ‘உள்ளேன் அய்யா’ சொல்லும் இந்த பிளாக்ஹெட்ஸை பார்லரில் வலியைத் தாங்கிக்கொண்டு ரிமூவ் செய்தாலும் மீண்டும் வந்துகொண்டேதான் இருக்கும். ‘இதுக்குத் தீர்வே இல்லையா?’ என்று பொங்கி எழும் பெண்களுக்கு, பிளாக்ஹெட்ஸ் ரிமூவல் டிப்ஸ் தருகிறார், கடலூரைச் சேர்ந்த பியூட்டிஷியன் சித்ரா தமிழழகன்.

    “பிளாக் ஹெட்ஸ், குறிப்பாக ஆய்லி ஸ்கின் உள்ள பெண்களுக்குத் தீராதொல்லையாக இருக்கும். அதற்காக அதிகமாக கெமிக்கல் ஸ்கிரப் பயன்படுத்தாமல், முடிந்தவரை இயற்கை வழிகளை நாடுவது நல்லது. தினமும் குளித்து முடித்ததும், ஈரப்பதம் இருக்கும்போதே மூக்கின் மேல் ஒரு டர்கி டவல் கொண்டு மேல்நோக்கி நன்றாக அழுத்தித் தேய்க்க பிளாக்ஹெட்ஸ் வந்துவிடும். இது போக, ஃப்ரீ டைம் கிடைக்கும் போது கீழ் வரும் வழிமுறைகளை செய்துகொள்ளலாம்.


    * ரஞ்சுத் தோலை நன்றாகக் காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். அதில் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் ஆக்கி, மூக்கின் மேல் தடவி ஊறவைத்து பின்னர் அழுத்தித் தேய்த்துக் கழுவவும்.

    * உருளைக்கிழங்கு ஜூஸோடு கொஞ்சம் தயிர் சேர்த்துக் கலந்து, மூக்கின் மேல் தடவி பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் சொரசொரப்பான துணிகொண்டு அழுத்தித் தேய்த்து எடுக்கவும்.

    * கற்றாழை ஜெல்லோடு கொஞ்சம் பார்லி பவுடர் அல்லது ஓட்ஸ் பவுடர் (பொடித்த ஓட்ஸ்) சேர்த்துக் கலந்து பேஸ்டாக்கவும். அதை மூக்கின் மேல் தடவி ஊறவைத்து, பஞ்சு அல்லது பருத்தித் துணி கொண்டு அழுந்தத் துடைத்தெடுக்கவும்.

    * மஞ்சள்... பிளாக்ஹெட்ஸ் தொல்லைக்கு மிகச்சிறந்த நிவாரணி. சிறிது கற்றாழை ஜெல்லோடு பயத்தம்மாவு, மஞ்சள்பொடி சேர்த்து, மூக்கின் மேல் இந்தப் பேஸ்ட்டை தடவி ஊறவைத்து ஸ்கிரப் செய்யவும்.
    * சிறிது ஓட்ஸ் பவுடரை ஒரு ஸ்பூன் தேனோடு கலந்து, அதே அளவு தக்காளிப் பழச்சாறு கலந்து, அந்தப் பேஸ்ட்டை மூக்கின் மேல் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்த பின் தேய்த்துத் துடைக்கவும்.

    * எலுமிச்சைச் சாறும் பிளாக்ஹெட்ஸுக்கு ‘பை பை’ சொல்ல வைக்கும். ஒரு மூடி எலுமிச்சை பழத்தின் மேலே மூன்று சொட்டுகள் தேன் விட்டு, அப்படியே மூக்கின் மேல் தடவவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு முதலில் வெதுவெதுப்பான நீரிலும், பின்னர் குளிர்ந்த நீரிலும் கழுவவும்.
    பியூட்டி பார்லரில் செய்வதுபோல, முகத்துக்கு ஸ்டீம் கொடுத்து, சருமத் துவாரங்கள் திறந்ததும், காட்டன் துணி கொண்டு துடைத்து எடுக்கலாம்.’’
    கேர்ள்ஸ்... இனி பிளாக்ஹெட்ஸை ‘பிளாக்’ செய்துவிடலாம்தானே?! .

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 26th Jan 2016 at 02:57 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter