உடல் அமைப்பில் ஒவ்வொரு பகுதியும் அழகு நிறைந்தது தான். அவற்றை சரியான முறையில் பேணிக் காக்கும் போது, அழகு இன்னும் கூடுதலாகிறது. அவ்வகையில், கண்களின் கவர்ச்சியில் புருவங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

சிலருக்கு அடர்த்தியான புருவங்களும், சிலருக்கு அடர்த்தி குறைவான புருவங்களும் இருக்கும். அளவுக்கு அதிகமான புருவம் உடையவர்கள் அதை, "திரெட்' செய்து கொள்ள வேண்டும். அடர்த்தி குறைவான புருவம் உடையவர்கள், புருவத்தில் விளக்கெண்ணெயை தடவி வந்தால், நாளடைவில் முடி வளரத் தொடங்கி விடும். ஒவ்வொருவரும் புருவ அமைப்பை, அவர்களின் முக அமைப்பிற்கு தகுந்தாற்போல் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். வட்டமான முக அமைப்பை கொண்டவர்கள், புருவத்தின் ஆரம்பத்திலிருந்து நேராக, "திரெட்' செய்து நுனியில் செல்லும் போது, சற்று வளைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தங்களின் வட்டமான முகம், மேலும் வட்டமாக தெரியாமல், வசீகரிக்கும் முகமாக காட்சியளிக்கும்.

நீளமான வட்ட முகத்தைக் கொண்டவர்கள், புருவத்தின் கடைசியில் சிறிது வளைத்து, "திரெட்' செய்து கொள்ளலாம். இதனால், அவர்களின் நீளமான முகம் மேலும் நீளமாகத் தெரியாமல், சற்று வட்ட வடிவமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி தரும். சதுரமான முக அமைப்பை உடையவர்கள், புருவங்களின் நடுவில் வளைவாக, "திரெட்' செய்து கொண்டால் வட்ட வடிவமான முக அமைப்புடன் வசீகரமாக காட்சியளிக்கலாம்.

Similar Threads: