Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போடும்போது கவனி&#


Discussions on "உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போடும்போது கவனி&#" in "Beauty Tips" forum.


  1. #1
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போடும்போது கவனி&#

    உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போடும்போது கவனிக்க வேண்டியவை

    முதலில் பவுண்டேஷன் தடவிவிட்டுப் பிறகு லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.


    லிப்ஸ்டிக் உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் லிப் சால்வ் உபயோகிக்கலாம்.

    லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல்தான் லிப் கிளாஸ் தடவப்பட வேண்டும்.

    லிப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும் லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

    லிப்ஸ்டிக் போடும் போது லிப்ஸ்டிக்களின் நிறத்திற்கு ஏற்றதாக லிப் லைனரின் நிறம் இருக்க வேண்டும். இல்லையென்றால் உதட்டின் அழகு கெட்டுவிடும். அதற்காக ஒவ்வொரு லிப்ஸ்டிக் வாங்கும் போதும் அதற்கேற்ற லிப்லைனர் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. லிப்ஸ்டிக்கின் நிறத்தைச் சார்ந்த நிறமாக இருந்தாலும் போதுமானது.

    தேவைப்பட்டால் லிப் லைனரைக் கூட லிப்ஸ்டிக்காக பயன்படுத்தலாம்.

    மாய்ஸ்சுரைசர் இல்லாத லிப்லைனரை லிப்ஸ்டிக்காக பயன்படுத்தினால், மறக்காமல் சிறிதளவு க்ரீம் தடவ வேண்டும். இது உதடுகள் காய்ந்து வெடிக்காமல் இருக்க உதவும்.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    Ganga's Avatar
    Ganga is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Chennai
    Posts
    3,271
    Blog Entries
    4

    Re: உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போடும்போது கவனĬ

    உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போடும்போது கவனி&#-lipstick.jpegஉதடுகளுக்கு லிப்ஸ்டிக் போடும்போது கவனி&#-lip.jpegஉதடுகளுக்கு லிப்ஸ்டிக் போடும்போது கவனி&#-lips.jpeg

    * சிவப்பு நிற பெண்கள் ஆரஞ்சு, சிவப்பு, பிங்க் நிற லிப்ஸ்டிக் பூச வேண்டும்.
    * மாநிறப் பெண்கள் லைட் பிரவுன், லைட் செர்ரி நிற லிப்ஸ்டிக் பூச வேண்டும்.

    *உதடு பெரிதானவர்கள், சின்ன உதடாக உள்பக்கம் வரைந்து, அதில் லிப்ஸ்டிக் பூச வேண்டும்.

    * இதழ்கள் ஈரமாக இருந்தால், முகப்பவுடரை தடவி, அதன் பிறகு லிப்ஸ்டிக் போட வேண்டும்.

    * லிப்ஸ்டிக் பூசும் போது, இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக பூச வேண்டும்; மேலும், கீழும் போட்டு இழுக்கக் கூடாது.

    *அதிகமாக லிப்ஸ்டிக் பூசி விட்டால், டிஷ்யூ பேப்பரால் ஒற்றி எடுத்து, சரி செய்யுங்கள்.

    * பகல் நேரத்தில் இள நிறத்திலும், மாலை நேரத்தில் அடர் நிறத்திலும் பூசுங்கள்.

    * லிப்ஸ்டிக் பூசிய பிறகு, உதட்டால் ஈரப்படுத்துவதோ, பானங்கள் அருந்துவதோ கூடாது.

    * முதலில் லிப் லைனரால் உதடுகளை அவுட் லைன் செய்து, பிறகு, அதன் மூலமே உதடுகளை நிரப்பவும். முதலில் லிப்ஸ்டிக்கை தடவி, பிறகு லிப் லைனரால் அவுட் லைனும் செய்யலாம். இம்முறை உதடுகளை மென்மையானதாக, கவர்ச்சியானதாக காட்டும்.

    * இரவு படுக்கச் செல்வதற்கு முன், உதடுகளில் வாசலைன் தடவிக் கொள்ளலாம். லிப்ஸ்டிக் தடவுவதற்கு முன், வாசலைன் உபயோகித்தாலும், உதடுகள் பளபளக்கும்.

    * முதலில் லிப் பென்சிலால், லிப்ஸ்டிக் போட வேண்டிய பகுதியில், அவுட் லைன் போட வேண்டும். மெலிதான
    உதடுகளைக் கொண்டவர்கள், உதடுகளின் வெளிப்பகுதியில் அவுட் லைன் வரைய வேண்டும். பருமனான உதடு கொண்டவர்கள், உதடுகளின் உள் பகுதியிலேயே அவுட் லைனை போட வேண்டும்.
    மேல் உதடு தடிமனாக இருப்பவர்கள், மேல் உதட்டின் உள் பகுதியிலுமாக அவுட் லைன் போட வேண்டும். அவுட் லைன் போட்ட பகுதிகளில் லிப் பிரஷ் மூலம் லிப்ஸ்டிக்கை போடவும்.

    * அதிக குளிரும் சரி, அதிக வெயிலும் சரி, இரண்டுமே லிப்ஸ்டிக்குக்கு எதிரிகள்; காரணம், உதடுகள் வறண்டு விடும். பொதுவாக லிப்ஸ்டிக் போடுவதற்கு முன், தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவி, 10 நிமிடம் கழித்து வெது, வெதுப்பான வெந்நீரில் ஒரு துணியை நனைத்து, உதடுகளை துடைக்கவும். அதன் பிறகு, லிப்ஸ்டிக் போடுவது நல்லது.

    * லிப்ஸ்டிக் போட்டவர்கள் அதிக நேரம் வெயிலில் அலைவதோ, ஒரு லிப்ஸ்டிக்கை ஆறு மாதத்துக்கு மேல் பயன்படுத்துவதோ கூடாது.

    நன்றி : மங்கையர் மலர்
    தினமலர்

    Last edited by Ganga; 11th Jan 2012 at 03:30 PM.
    கங்கா
    விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை!!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter