* உதடுகள் அழகாக சிவப்பு நிறமாக வேண்டுமானால், கிளிசரின் மற்றும் எலுமிச்சம் பழச்சாறை சம அளவு எடுத்து தூங்கப் போகும்போது உதடுகளில் தடவி வர வேண்டும். காலையில் எழுந்ததும் கழுவி விடுங்கள். இதை தினமும் செய்து வர பலன் கிடைக்கும்.

* முகம் பளிச்சென்ற வசீகரமாக இருக்க வேண்டுமானால், ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் துளசிச்சாறு கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடியுங்கள் வர வேண்டும் இதை தொடர்ந்து செய்து வந்தால் 2 முதல் 3 மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

* பல்லில் இருக்கும் மஞ்சள் நிறத்தைப் போக்க எலுமிச்சம் பழச்சாறும் உப்பும் கலந்து பற்களை தேயுங்கள். ஆனால் இதை தினமும் செய்ய கூடாது.

* கஸ்தூரி மஞ்சளையும் சந்தனத்தையும் அரைத்து உடலில் பூசுங்கள். 20 நிமிடம் கழித்து எலுமிச்சம் பழச்சாறு கலந்த நீரில் குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தோலுக்கு நல்ல நிறமும்,அழகும்,தோற்றமும் கிடைக்கும்.

* கடுக்காய், செம்பருத்திப்பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தினமும் கூந்தலில் தடவி வந்தால் முடி நன்றாக கறுப்பாக வளரும்.

* தினமும் கேரட் சாப்பிடுவது உடல் மற்றும் தோல் அழகுக்கு மிகவும் நல்லது.

* தினமும் படுக்க செல்லும் முன் ஆமணக்கு எண்ணெயை இமையில் தடவி வந்தால் இமை நன்றாக வளரும்.

* தேன், கேரட்சாறு, வெள்ளிக்காய்ச்சாறு ஆகியவைகளை சம அளவு சேர்த்து சாப்பிட்டால் முக அழகு அதிகமாகும். இதை முகத்திலும் தேய்க்கலாம்.

* முகத்தில் பால் அல்லது தயிர் ஆடையை தேய்த்து அது காயும்போது லேசான சுடான நீரில் முகத்தை கழுவினால் முக அழகு பொலிவு பெறும்

Similar Threads: