விட்டிலேயே செய்ய கூடிய எளிய அழகு குறிப்புக்கள் ?

*தக்காளி பழத்தை நன்கு முகத்தில் தேய்த்து வர முகம் பளபளப்பாகும்.நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை சூடு ஆறியதும் கைகளில் எடுத்து கண்களை கழுகி வர கண் அழகாகும்

*சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.

*கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.

*ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.

*பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

Similar Threads: