உதடுகள் கருப்பாக இருக்கிறதென்ற கவலையா உங்களுக்கு வெண்ணெயுடன் ஆரஞ்சுப் பழச்சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் லிப்ஸ்டிக் போடாமலே உங்கள் உதடு அழகாகும்.

கண்களின் மீது வெள்ளரித்துண்டு வைத்து 10 நிமிடங்கள் படுங்கள் கண்கள் அழகாகும்,குளிர்ச்சியுடன் காணப்படும் . தினம் 6 மணி நேரமாவது நன்றாகத் தூங்குங்கள். மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

தாராளமாக தண்ணீர் குடியுங்கள். உங்கள் கண்ணைச் சுற்றி கருவளையம் ஏற்படாமல் இருக்க இதுவே வழிகேரட் சாறுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் பளிச் முகம் உங்களுடையதுதான்

வேகவைத்த உருளைக்கிழங்கு, மசித்த ஆப்பிள், ஆரஞ்சு பழச்சாறு, கொஞ்சம் சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து உடலெங்கும் பூசி, குளித்து வந்தால் மென்மையான, பொலிவான சருமத்தை பெறலாம்.

கடுகு எண்ணெயை சூடாக்கி பாதங்களில் தடவி பின்னர் இளஞ்சூடான நீரில் கால்களை வைத்திருக்கவும். தொடர்ச்சியாக செய்தால் பாத வெடிப்புகள் மறையும்.

- Dhinakaran

Similar Threads: