Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes

Beauty Tips in Tamil


Discussions on "Beauty Tips in Tamil" in "Beauty Tips" forum.


  1. #1
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Beauty Tips in Tamil

    Here are some Beauty Tips in Tamil:

    • தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் 'ப்ரெஸ்' ஆக காணப்படுவீர்கள்.
    • தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.
    • தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.
    • தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.
    • கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.
    • தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது.
    • 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும்.
    • 2 டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு 4 சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.
    • பப்பாளி வயிற்றுக்கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.
    • பப்பாளி தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை நீக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
    • பப்பாளி இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.



    Similar Threads:

    Sponsored Links
    Nishahameetha likes this.

  2. #2
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Beauty Tips in Tamil

    Coconut to get Bright Face

    வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல் போய்விடும்.


    வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கருப்பாவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்*ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.


    Nishahameetha likes this.

  3. #3
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Beauty Tips in Tamil

    Beauty Tips for Oily Face:

    • சிலருக்கு எவ்வளவுதான் சோப்பு போட்டு முகம் கழுவினாலும் முகத்தில் எண்ணெய் பசை மாறாது. மேலும் மேக்கப் செய்த சிறிது நேரத்தில் முகத்தில் எண்ணெய் வழியும். கெமிக்கல் கலந்த முகப் பூச்சுகளால் அலர்ஜி உண்டாகுமே தவிர முழுமையான பலன் கிடைக்காது.
    • இவர்கள் கடைந்த மோரை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி சிறிது நேரம் அதாவது 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம்சூடான நீரில் கழுவி வந்தால் எண்ணெய் வழியும் சருமம் மாறும்.
    • மேலும் தினமும் உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். அதுபோல் வாயுவை அதிகரிக்கக் கூடிய உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக கெமிக்கல் அல்லாத மூலிகை சோப்புகளை பயன்படுத்துவது நல்லது.



    Nishahameetha likes this.

  4. #4
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Beauty Tips in Tamil

    Tips to get rid of Pimples

    • வெந்தயக் கீரை - 1 கைப்பிடி
    • துளசி இலை - சிறிதளவு
    • கொத்துமல்லி இலை - சிறிதளவு

    எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் உள்ள பருக்கள் மீது தடவினால் முகப்பரு மாறும். கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் பருக்கள் குறையும்.


    • வெள்ளரி - 2 துண்டு
    • தக்காளி - 2 துண்டு
    • கேரட் - 2 துண்டு

    எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடங்கள் ஊறியபின் கழுவினால் பருக்கள் மறையும்.


    Nishahameetha likes this.

  5. #5
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Beauty Tips in Tamil

    மனசு நன்றாக இருந்தால் புன்னகை முகமாக... எல்லோரையும் வசீகரிக்கும் முகமாக... அழகாக மாறிவிடும். அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டுமே... மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.

    எப்போதுமே மனதும், உடலும் குளிர்ச்சியாகும் விதத்தில் நன்றாக குளிப்பது நல்லது.
    உடம்பில் எண்ணை தேய்த்து குளித்தாலும் உடலும், மனதும் குளிர்ச்சியடையும். தினமும் எண்ணை தேய்த்து குளிப்பது இளநரையை தடுக்கும். மேலும் வாத நோய்களை போக்கும். உடம்புக்கும் புத்துணர்வு கிடைக்கும். சருமத்துக்கும் மெருகு கூடும். உடலுக்கு ஆரோக்கியமும் ஏற்படும்.

    அதுமட்டுமின்றி நமது உடம்பில் சேரும் விஷத் தன்மைகளையும் நீக்கும். ஒவ்வொருவரின் உடல்வாகுக்கு தகுந்தாற்போல் எந்த எண்ணையை தேய்த்து குளிக்கலாம் என்பதை ஆயுர்வேதம் கூறுகிறது. அதை அறிந்து உங்களுக்கேற்ற எண்ணையை தேய்த்துக் குளிக்கலாம்.


    Nishahameetha likes this.

  6. #6
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Beauty Tips in Tamil

    Some more Beauty Tips in Tamil:

    தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

    ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாக
    வு
    ம், இளமையுடனும் இருக்கும்.

    முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

    பருமனாக இருப்பவர்க ள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெது
    வெதுப் பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டா ல் எடை குறையும்.

    நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு , சிறிது நேரம் கழித்து நகத்தை
    வெட்டினால் , விரும்பும் வடிவத்திலு ம், அழகாகவும் வெட்ட இயலும்.


    Last edited by Parasakthi; 5th May 2012 at 11:01 AM.
    Nishahameetha likes this.

  7. #7
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Beauty Tips in Tamil

    மரு நீக்குவதற்கு மருந்து உண்டா? முடி கட்டுவது தவிர..அது ரொம்ப கஷ்டமான method . வேறு எதாவது..?


  8. #8
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Beauty Tips in Tamil

    Quote Originally Posted by suganthiramesh View Post
    மரு நீக்குவதற்கு மருந்து உண்டா? முடி கட்டுவது தவிர..அது ரொம்ப கஷ்டமான method . வேறு எதாவது..?
    Here are Some Tips for your Problem Suganthi...

    • எழுமிச்சை பழத்தை நன்றாக மரு உள்ள இடத்தி தேய்க்கவும்
    • கோதுமை மாவு சிறிதளவு எடுத்து அதில் பாலும் தேங்காய் எண்ணெயும் சேர்த்து குழைத்து மரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் பலன் கிடைக்கும
    • கட்டிப் பெருங்காயத்தைக் கல்லில் துளி நீர் சேர்த்து உரைத்துப்போட நாளடைவில் மருக்கள் உதிரும்.
    • வெங்காயச் சாற்றுடன் இஞ்சி சாறு கலந்து பூசினால் சிறிய மருக்கள் உதிரும்




  9. #9
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Beauty Tips in Tamil

    மரு தொல்லை நீங்க இயற்கை மருத்துவம்:

    1. எருக்கஞ்செடி இலையின் பாலை தோலின் மேல் படாமல் மருவின் மேல் மட்டும் படும்படி தடவணும்.

    2. அம்மான் பச்சரிசி இலையின் தண்டுப்பாலை தோலின் மேல் படாமல் மருவின் மேல் மட்டும் படும்படி தடவணும்.

    3. இரணக்கள்ளிச் சாற்றை தோலின் மேல் படாமல், மருவின் மேல் மட்டும் படும்படி இரவில் தடவி, மறுநாள் காலையில் வெந்நீர் விட்டு கழுவிவிடவேண்டும்.

    4. துணிதுவைக்கும் சோப், சுண்ணாம்பு இவ்விரண்டையும் சம அளவு எடுத்து கடுகளவு சோடா உப்பைக் கலந்து குழைத்து தோலின்மேல் படாமல் மருவின் மேல் மட்டும் படும்படி தடவவேண்டும்.

    5. சநதனம், மிளகு, ஜாதிக்காய் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து மைய அரைத்து தோலின் மேல் படாமல், மருவின் மேல் மட்டும் படும்படி தடவனும்.

    6. கொட்டாங்குச்சியை நெருப்பில் வாட்டி அதிலிருந்து வரும் எண்ணெயைக் குழைத்து தடவணும்.

    7. இரண்டு அல்லது மூன்று பூண்டு பற்களை மைய அரைத்து இரவில் தூங்கச் செல்வதற்கு முன் மருவின்மீது வைத்து ‘ பேண்ட் எய்ட் ‘ பட்டையால், மூடி ஒட்டிவிடணும்.

    மேற்கூறப்பட்ட இயற்கை வைத்திய முறைகளை முறையாக செய்து வந்தால் ஒரிரு நாட்களிலேயே பலன் தெரியும்.


    nithyakarthigan likes this.

  10. #10
    nithyakarthigan's Avatar
    nithyakarthigan is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Chicago
    Posts
    421

    Re: Beauty Tips in Tamil

    Thank you so much Parasakthi...

    Parasakthi likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter