Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree59Likes

Beauty Tips


Discussions on "Beauty Tips" in "Beauty Tips" forum.


  1. #91
    cuteynila is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    chennai
    Posts
    133

    Re: Beauty Tips

    Very good collection of tips


    Sponsored Links

  2. #92
    cuteynila is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    chennai
    Posts
    133

    Re: Beauty Tips

    Is there any other remedy to remove dark eyes friends ?

    Parasakthi and gkarti like this.

  3. #93
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,098

    Re: Beauty Tips

    Hi Nila!
    For removing Dark circles you have to follow these suggestions from my side:


    • First of all take proper 8 hours night sleep and drink lots of water.
    • Apply a paste of turmeric powder with pineapple juice for dark circles under the eyes.
    • Make the pastes of cucumber and mint by grinding and apply it on the affected areas.
    • Let almonds soak water for the whole night long. Grind it in the morning. Drop some lemon drops over the almond paste and apply it around the affected parts.
    • Make a paste of raw potato by pulverizing and grinding it finely and apply it on the affected areas. This also is a very good and effective method of treating the dark circles around the eyes.


    Quote Originally Posted by cuteynila View Post
    Is there any other remedy to remove dark eyes friends ?



  4. #94
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    Re: Beauty Tips

    எளிமையான அழகுக்கு சில டிப்ஸ்


    சந்தனம், முல்தானிமட்டி கலந்த, “பேஸ் பாக்’ உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.


    * கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.


    * ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.


    * பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.


    * 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி,ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரிசெய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும். தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்.


    * பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.


    * பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.


    * புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.


    * முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.


    * தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும். தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வ தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.


    * முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும்கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து,முகம் பொலிவுடன் இருக்கும்.


    * வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் தக்காளிசாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான சுடுநீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப் புள்ளி மறையும்.


    * உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.


    * முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால் , பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.


    * கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவவேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள்மறையும்.


    கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளிகூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.


    * வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்துமுகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாகஇருக்கும்.


    * ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி,தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி,வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில்
    வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின்வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில்,தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடிகருமையாகும், பொடுகு நீங்கும்

    With Love,
    Priya

  5. #95
    porkodit's Avatar
    porkodit is offline Minister's of Penmai
    Real Name
    Porkodi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Tiruvannamalai
    Posts
    3,162

    Re: Beauty Tips

    super tips priya...............

    என்றும் அன்புடன் ,
    பொற்கொடி

  6. #96
    Shahida's Avatar
    Shahida is offline Commander's of Penmai
    Real Name
    Shahida Shahul
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    chennai
    Posts
    2,229

    Re: Beauty Tips

    ராஜம் முரளியின் அறிவிக்கப்படாத அஞ்சறைப் பெட்டி வாரிசு நீங்க தான் பிரியா.


    Love
    Shahida.

  7. #97
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    Re: Beauty Tips

    குளிப்பதற்கு முன்


    குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும். கண்ட கண்ட ஷாம்போக்களை உபயோகித்துப் பார்க்கும் ஆய்வுக்கூடமல்ல உங்கள் தலை. எனவே, உங்களுடைய தலைமுடிக்கு ஏற்ற ஷாம்போக்களையே பயன்படுத்துங்கள். அதிக அளவில் ஷாம்பூ பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். அதேபோல் ஷாம்பூ தடவிய முடியை நன்றாக அலசவும்.


    தலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று. கண்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிப்பாகத்தில் தடவுவது நல்லது. கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலச வேண்டும். தலைமுடியை ஷாம்பூ போட்டுக் கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலக்கி தலைமுடியைக் கழுவுங்கள்.
    உங்கள் தலைடி மிருதுவாகவும், பட்டு போன்று பளபளப்பாகவும் இருக்கும்.


    மருதாணியை தலையில் தேய்த்து ஊற வைத்த பின் ஷாம்பூ போடுவது தவறு.


    மருதாணி மிகச்சிறந்த கண்டிஷனர். எனவே மருதாணிக்குப் பிறகு ஷாம்பூ பயன்படுத்துவது நல்லதல்ல. ஆகவே, முதல்நாளே ஷாம்பூ போட்டு குளித்து முடியை நன்கு காயவைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் மருதாணி தேய்த்து ஊறவைத்து வெறுமனே அலசி விடலாம். குளித்த பிறகு ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம்.


    ஈரமான கூந்தலை வேகமாகத் துவட்டுவதை தவிருங்கள்.


    அதற்குப் பதிலாக உங்கள் கூந்தலை 5 நிமிடம் டவலில் சுற்றி வையுங்கள். ஹேர் ட்ரையரை முடி நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக்கூடும்.
    ஹேர் ட்ரையரை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். அப்படி பயன்படுத்தும்போது ஹேர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்கவும். அதேபோன்று ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டுவதையும் தவிர்க்கவும்.
    உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்.


    குளிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:


    1.காலை,மாலை இருவேளைகளும் குளிக்க ஏற்ற நேரங்கள். இடைப்பட்ட நேரங்களில் குளிப்பது நல்ல தல்ல.
    2. உணவு உண்ட பின்னரும், நன்றாக வியர்த்திருக்கும் போதும் குளிக்கக்கூடாது.
    3. அஜீரணக்கோளாறு, கண் நோய், காய்ச்சல் ஆகிவற்றால் அவதிப்படும் நேரங்களில் குளிக்கக்கூடாது.
    4. எண்ணெய் தேய்த்து விட்டு சிறிதுநேரம் கழித்து பின்னர் குளிப்பது உடலுக்கு நல்லது. இவ்வாறு குளிப்பதுதான் உடல்நலத்தைத் தரும்.
    5. வாசனைப்பொடி, கடலைமாவு போன்றவற்றைத் தேய்த்து கழுவினால் அழுக்கும், எண்ணெய் பசையும் அகன்று போகும்.
    6. சோப்பு உபயோகிக்கும்போது கழுத்து, கழுத்தின் பின்புறம், காது, கால்களின் இடுக்குப்பகுதிகள் போன்ற அழுக்கு படியக்கூடிய பகுதிகள் சோப்பை ஒருமுறைக்கு இருமுறை அழுத்தி தேய்த்து குளிக்க வேண்டும்.
    7. சோப்பை அதிகமாக பயன்படுத்துவது உடலின் மேற்புறதோலுக்கு நல்லதல்ல. தோலில் இருக்கும் எண்ணெய்த்தன்மை மாறி வறண்டுவிடும்.
    8. குளிக்கும் நீரில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாற்றை பிழிந்து குளிக்கலாம். இது நல்ல புத்துணர்ச்சியைத் தரும்.

    Subhasreemurali likes this.
    With Love,
    Priya

  8. #98
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Beauty Tips

    romba romba useful tips priya........thx


    Quote Originally Posted by priyasarangapan View Post
    குளிப்பதற்கு முன்


    குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும். கண்ட கண்ட ஷாம்போக்களை உபயோகித்துப் பார்க்கும் ஆய்வுக்கூடமல்ல உங்கள் தலை. எனவே, உங்களுடைய தலைமுடிக்கு ஏற்ற ஷாம்போக்களையே பயன்படுத்துங்கள். அதிக அளவில் ஷாம்பூ பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். அதேபோல் ஷாம்பூ தடவிய முடியை நன்றாக அலசவும்.


    தலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று. கண்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிப்பாகத்தில் தடவுவது நல்லது. கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலச வேண்டும். தலைமுடியை ஷாம்பூ போட்டுக் கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலக்கி தலைமுடியைக் கழுவுங்கள்.
    உங்கள் தலைடி மிருதுவாகவும், பட்டு போன்று பளபளப்பாகவும் இருக்கும்.


    மருதாணியை தலையில் தேய்த்து ஊற வைத்த பின் ஷாம்பூ போடுவது தவறு.


    மருதாணி மிகச்சிறந்த கண்டிஷனர். எனவே மருதாணிக்குப் பிறகு ஷாம்பூ பயன்படுத்துவது நல்லதல்ல. ஆகவே, முதல்நாளே ஷாம்பூ போட்டு குளித்து முடியை நன்கு காயவைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் மருதாணி தேய்த்து ஊறவைத்து வெறுமனே அலசி விடலாம். குளித்த பிறகு ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம்.


    ஈரமான கூந்தலை வேகமாகத் துவட்டுவதை தவிருங்கள்.


    அதற்குப் பதிலாக உங்கள் கூந்தலை 5 நிமிடம் டவலில் சுற்றி வையுங்கள். ஹேர் ட்ரையரை முடி நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக்கூடும்.
    ஹேர் ட்ரையரை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். அப்படி பயன்படுத்தும்போது ஹேர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்கவும். அதேபோன்று ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டுவதையும் தவிர்க்கவும்.
    உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்.


    குளிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:


    1.காலை,மாலை இருவேளைகளும் குளிக்க ஏற்ற நேரங்கள். இடைப்பட்ட நேரங்களில் குளிப்பது நல்ல தல்ல.
    2. உணவு உண்ட பின்னரும், நன்றாக வியர்த்திருக்கும் போதும் குளிக்கக்கூடாது.
    3. அஜீரணக்கோளாறு, கண் நோய், காய்ச்சல் ஆகிவற்றால் அவதிப்படும் நேரங்களில் குளிக்கக்கூடாது.
    4. எண்ணெய் தேய்த்து விட்டு சிறிதுநேரம் கழித்து பின்னர் குளிப்பது உடலுக்கு நல்லது. இவ்வாறு குளிப்பதுதான் உடல்நலத்தைத் தரும்.
    5. வாசனைப்பொடி, கடலைமாவு போன்றவற்றைத் தேய்த்து கழுவினால் அழுக்கும், எண்ணெய் பசையும் அகன்று போகும்.
    6. சோப்பு உபயோகிக்கும்போது கழுத்து, கழுத்தின் பின்புறம், காது, கால்களின் இடுக்குப்பகுதிகள் போன்ற அழுக்கு படியக்கூடிய பகுதிகள் சோப்பை ஒருமுறைக்கு இருமுறை அழுத்தி தேய்த்து குளிக்க வேண்டும்.
    7. சோப்பை அதிகமாக பயன்படுத்துவது உடலின் மேற்புறதோலுக்கு நல்லதல்ல. தோலில் இருக்கும் எண்ணெய்த்தன்மை மாறி வறண்டுவிடும்.
    8. குளிக்கும் நீரில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாற்றை பிழிந்து குளிக்கலாம். இது நல்ல புத்துணர்ச்சியைத் தரும்.


    Arise ! awake ! and stop not till the goal is reached

  9. #99
    Avni Mehra is offline Newbie
    Real Name
    Avni Mehra
    Gender
    Female
    Join Date
    Nov 2015
    Location
    Chennai
    Posts
    23

    Re: Beauty Tips

    Tips for your dry skin:

    Olive oil contains many antioxidants which help dry skin to become shiny. Also, you can use milk cream, yogurt, honey and coconut oil for your dry skin. Each of them has individual useful content for dry skin.

    “Life is not measured by the number of breaths we take, but by the moments that take our breath away.”



  10. #100
    JesusOliver is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Jan 2016
    Location
    USA
    Posts
    4

    Re: Beauty Tips

    thanks for sharing...


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter