Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree59Likes

Beauty Tips


Discussions on "Beauty Tips" in "Beauty Tips" forum.


  1. #71
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Beauty Tips

    முகத்தில் மங்கு நீங்க:


    பசும்பால் - 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் இவற்றை ஒன்றாகக் கலந்தால் திரிந்துவிடும். அப்போது மேலே மிதக்கும் ஏடுகளை குழைத்து எடுத்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவி வந்தால் முகத்தில் தோன்றும் கருமை நிறம் மாறி முகம்பொலிவுபெறும்.


    Sponsored Links

  2. #72
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Beauty Tips

    முகத்தில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்க:


    பெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க குப்பைமேனி இலை, வேப்பங் கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் அரைத்து இரவில் படுக்கைக்கு செல்லும்முன் முகத்தில் தடவி வந்தால் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்துவிடும்.


  3. #73
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Beauty Tips

    முகப் பருக்களைப் போக்க சில யோசனைகள்:



    • உணவில் கீரை மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
    • முகத்தில் தோன்றும் பருக்களை ஒரு போதும் கிள்ளாதீர்கள். இது முகத்தில் வடுக்களை ஏற்படுத்துவதோடு பருக்களை மேலும் அதிகரிக்க வழி செய்கிறது.
    • பருக்களைப் போக்குகிறோம் என்று கடையில் கிடைக்கும் கண்ட கண்ட மருந்துகளை வாங்கிப் பூசாதீர்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து வாங்கி மட்டுமே பூச வேண்டும்.
    • கொழுப்பு அதிகம் உள்ள பொருள்கள், அசைவம், எண்ணெய் பொருள்கள் போன்றவற்றை முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும்.
    • சோப்புக்குப் பதிலாகப் பச்சைப் பயிறு மாவைத் தேய்த்துக் குளிக்கலாம்.
    • குளிக்கும் நீரில் வேப்பிலைகளைப் போட்டுக் குளித்தாலும் கிருமிகளைத் தவிர்க்கலாம்.
    • வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்வது நல்லது. உங்கள் தோலுக்கு உகந்த பேஷியல் கிரீம் எதுவென்று டாக்டரிடம் விசாரித்து அதைப் பயன்படுத்தலாம்.
    • எண்ணெய் வடியும் முகம் உள்ளவர்களுக்கே முகப்பரு வரும். அடிக்கடி குளிர்ந்த நீரால் முகத்தைத் துடைத்துக்கொள்வது நல்லது.
    • மலச்சிக்கல் இருந்தாலும் பருக்கள் வரும். அதனால் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
    • தூசு நிறைந்த பகுதியில் வாகனத்தில் செல்ல நேர்ந்தால் முகத்தை மெல்லிய பருத்தித் துணியால் மூடிக்கொள்ளுங்கள்.
    • கஸ்தூரி மஞ்சள், நன்னாரி வேர், எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல், பயத்தம் மாவு, கடலை மாவு, சீயக்காய் ஆகியவற்றைக் கலந்து அரைத்து வைத்துக் கொண்டு சோப்புக்குப் பதிலாகப் பயன்படுத்துவது நல்ல பலனை அளிக்கும்.



  4. #74
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Beauty Tips

    மினுமினுப்பான கழுத்துக்கு


    கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு - இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.


    பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் - இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்க்கலாம்.


    முட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.


    பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் - இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் மறையும்.


    சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். கடலை மாவு தயிர் கலந்தும் தடவலாம்.


  5. #75
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Beauty Tips

    மாசு மருவற்ற முகம் பெற சில குறிப்புகள்:



    1. பால் பவுடர் - 1 டீஸ்பூன்
    2. தேன் - 1 டீஸ்பூன்
    3. எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    4. பாதாம் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்



    இவைகளை நன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு முகத்தை நன்றாக கழுவி பருத்தியினாலான துணியால் மென்மையாகத் துடைத்து பின் கலந்து வைத்துள்ள கலவையை முகத்தில் பூசி 10 அல்லது 15 நிமிடங்கள் வைத்திருந்து பின் முகத்தைக் கழுவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இரு வாரங்கள் செய்துவந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகச்சுருக்கம் மாறி முகம்பொலிவு பெறும்.


  6. #76
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Beauty Tips

    வாழைப்பழத்துடன் பால் சேர்த்து நன்றாக பிசைந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளக்கும்.


    மஞ்சள் தூள் - 10 கிராம் எடுத்து, அதனுடன் ஆரஞ்சு சாறு 100 மில்லி கலந்து முகம் மற்றும் சூரிய ஒளி படும் பகுதிகளில் பூசி, 20 நிமிடங்களுக்கு ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் மற்றும், வெயிலால் கருத்துப்போன பகுதிகள் நிறம் மாறும்.


    கேரட் சாறு - 50 மி.லி., அன்னாசிப்பழச் சாறு - 50 மி.லி. எடுத்து ஒன்றாகக் கலந்து கருத்தப் பகுதிகள் மேல் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு 1 வாரம் தொடர்ந்து செய்து வந்தால் கருமை மாறி முகம் பளிச்சிடும்.


    ஒரு கப் தயிருடன் வெள்ளரிச்சாறு கலந்து முகத்தில் தடவினால் முகம் பளபளக்கும்.


    சந்தனத்தூள் - 10 கிராம், எடுத்து அதில் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் குளிப்பதற்கு முன் உடலில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் சருமம் பளபளப்பாகும்.


  7. #77
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Beauty Tips

    முகத்தில் காணப்படும் ரோமங்கள் நீங்க:


    பச்சை பயிறை நன்றாக அரைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், சிலருக்கு முகத்தில் காணப்படும் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்து விடும். தினசரி மஞ்சள் தேய்த்து குளித்து வருவதாலும், முகத்தில் ரோமங்கள் வளராது.

    vijivedachalam likes this.

  8. #78
    Durga mani's Avatar
    Durga mani is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Mangalore
    Posts
    119

    Re: Beauty Tips

    good tips adhidhi


  9. #79
    indumathy.s's Avatar
    indumathy.s is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    bangalore
    Posts
    142

    Re: Beauty Tips

    முகம் நல்ல கலராக இருக்க :

    அ . அரிசி மாவு - ஒரு ஸ்பூன்
    ஆ கடலை மாவு - "
    இ. தயிர் - "
    ஈ . தேன் - "
    உ . சக்கரை - "
    ஊ . முல்தானி முட்டி - "
    எ . உப்பு - சிறிதளவு
    ஏ. ரோஸ் வாட்டர் - "


    மேலே சொன்ன எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து முகம்,கழுத்து,கை முட்டி தடவவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் மென்மையாக கழுவவும். இது எல்லா வகை ஸ்கின்களுக்கும் பொருந்தும். வாரத்தில் இரு முறை செய்யவும். நல்ல நிறம் கிடைக்கும்.

    vijivedachalam likes this.

  10. #80
    srathi's Avatar
    srathi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    singapore
    Posts
    1,441
    Blog Entries
    18

    Re: Beauty Tips

    HI ADHIDHI,

    NIC THREAD.
    I SHARED SOME MORE BEAUTY TIPS FOR LIPS

    Apply coirander leave juice on lips to reduce the balck marks in lips.…






    Puthina juice apply 5 minutes on ur lips for pinky lips


    Apply weekly onces Beetroot+butter Paste on ur lips. It increase the LIP COLOR.


    Apply fresh coriander juice together with lemon juice on lips and leave it for about 15 minutes and then wash.within 1 week u will feel the difference that ur lips will become so very red.


    before going to bed wash ur lips with rose water then apply butter on lips.within a week the wil become pink,soft & supple






    if there are cracks on your lips just apply cheese before going to bed.

    Last edited by Parasakthi; 9th Aug 2012 at 05:42 PM. Reason: Formatting
    vijivedachalam likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter