அழகுக் குறிப்பு-- தயிரும் பாலும்

தயிர் போன்ற நல்ல இயற்கை ப்ளீச் வேறொன்றும் இல்லை. தயிருடன் சிறிது பச்சரிசி மாவைக் கலந்து பேஸ்ட் போல செய்து மாஸ்க் போட்டு, நன்கு காய்ந்த பிறகு எதிர்பக்கமாக விரல்களால் தேய்த்து விட்டால் முகத்தில் இருக்கும் உயிரற்ற செல்கள் உதிர்ந்து `பளிச்' முகம் உங்கள் சொந்தமாகும்.

புளித்த தயிரை கீழே கொட்ட வேண்டாம். தலையில் தேய்த்துக் குளித்தால் பட்டு போன்ற கேசம் கிடைக்கும்.

ஒரு தேக்கரண்டி பச்சை பாலுடன் அரை தேக்கரண்டி தேன் கலந்து நன்கு குழைத்து பசை போல் வரும் போது அதை முகம், கழுத்து மற்றும் கைகள் மீது தடவி அரை மணி நேரம் கழித்து சோப் போடாமல் வெதுவெதுப்பான நீரினால் அலம்பி டர்க்கி டவலால் துடைக்கவும். நேச்சுரல் ப்ளீச் மற்றும் தோலை மிருதுவாக்கும் இயற்கை அழகு வழி இது.

Similar Threads: