Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes

Easy Beauty Tips - எளிய அழகுக்குறிப்புகள்


Discussions on "Easy Beauty Tips - எளிய அழகுக்குறிப்புகள்" in "Beauty Tips" forum.


  1. #1
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,165

    Easy Beauty Tips - எளிய அழகுக்குறிப்புகள்

    மகிழம் பூவை பெண்கள் மார்பகங்கள் மீது வைத்துக் கட்டிக் கொண்டால் மார்புகள் இறுகி எடுப்பாகத் தோன்றும்.


    வாழை இலையை சமைத்து சாப்பிட்டால் தோல் பளபளக்கும்

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,165

    Re: Easy Beauty Tips - எளிய அழகுக்குறிப்புகள்

    1. தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்க்கு முன்பாக,தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி, நன்கு மசாஜ் செய்யவும்.பின்பு சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர முடி உதிர்வது நிற்கும்.

    2.முட்டையின் வெள்ளையை மட்டும் தனியாக எடுத்து அதனுடன் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு தடவி பின் 30 நிமிடம் கழித்து சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.

    3.ஒவ்வொரு வாரமும்,தலைக்கு குளிக்கும் முதல் நாள் இரவே தலையில் தேங்காய் எண்ணையையும்,ஆலிவ் எண்ணையையும் தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

    மேலே சொன்னவைகளை கண்டிப்பாக ஒரு மாதமாவது தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.

    * கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.

    * ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.


  3. #3
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,165

    Re: Easy Beauty Tips - எளிய அழகுக்குறிப்புகள்

    கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் 1, உலர்ந்த திராட்சை பழம் 10, இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை நன்கு அரைத்து இந்த கலவையுடன்,அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடவும்.

    தினமும் இரவு கண் இமைகளிலும்,புருவதிலும் விளக்கெண்ணை தடவி வந்தால் கண்கள் அழகு பெரும்.உடல் சூடும் படிப்படியாக குறையும்.இமைகள் அடர்தியாக வளர ஆரம்பிக்கும்.

    வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது முகத்தை பளபளப்பாக மாற்றி விடும்

    * பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

    * 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்.* தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்

    * பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.

    * பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.

    * புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

    * முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.


  4. #4
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,165

    Re: Easy Beauty Tips - எளிய அழகுக்குறிப்புகள்

    முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து,முகம் பொலிவுடன் இருக்கும்.


    * தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும்.* தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வ தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்

    * வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான சுடுநீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப் புள்ளி மறையும்.

    * உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.

    * முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால் , பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.


  5. #5
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,165

    Re: Easy Beauty Tips - எளிய அழகுக்குறிப்புகள்

    * கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவ வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.*

    கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி கூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.

    * வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

    * ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு நீங்கும்.


  6. #6
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,165

    Re: Easy Beauty Tips - எளிய அழகுக்குறிப்புகள்

    பொடுகை விரட்ட வேப்பம்பூ
    காய்ந்த வேப்பம்பூவில் [உப்பு கலக்காத வேப்பம்பூ] 50 கிராம் - அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

    அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.


  7. #7
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,165

    Re: Easy Beauty Tips - எளிய அழகுக்குறிப்புகள்

    கரு வளையம் மறைய
    வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும்

    *ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.
    *கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

    சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும்.தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.

    *அல்லது, வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால், கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.

    கழுத்து பராமரிப்பு

    சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதைப்போக்க


    *கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றிப் பூசி வர வேண்டும்.. பின் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தொடர்ந்துதினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும்.

    *சிறிது சூடாக்கப்பட்ட நல்லெண்ணெய்யினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்து பகுதியில் உள்ள சுருக்கம், கறுப்பு வளையம் படிப்படியாக நீங்கி விடும்.


  8. #8
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,165

    Re: Easy Beauty Tips - எளிய அழகுக்குறிப்புகள்

    *பழுத்த வாழைப்பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசுங்கள். முகம் பளப்பளக்கும்.

    *பப்பாளிப்பழம், எலுமிஸ்சை சாறு கலந்து தடவவும். முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

    * ஆரஞ்சு சாறை குளிர்சாதன பெட்டியில் வைத்து கட்டியாகி ஒரு வெள்ளை துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஒத்தி எடுக்கவும். கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

    * வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி, பால் சேர்த்து முகத்தில் பூசி பிறகு கழுவி விடவும். வெய்யிலில் கருத்த முகம் பொலிவு பெரும்.

    * தர்பூசினி பழ்ச்சாறு, பயத்தம்மாவு கலந்து முகத்தில் பூசினால், முகம் புதுப்பொலிவு பெறும்.

    * தக்காளிப்பழத்தை முகத்தில், கைகளில் தடவி வரவும். கைகள் மிருதுவாக இருக்கும்.

    இப்படி தினமும் 10 அல்லது 15 நிமிடங்கள் நம் அழகுக்காக ஒதிக்கிவைத்தால், வயதனாலும் இளமையாக இருக்கலாம்.


  9. #9
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,165

    Re: Easy Beauty Tips - எளிய அழகுக்குறிப்புகள்

    *சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும்.இது முக அழகை கெடுத்து விடும்.அந்தக் கருமையை விரட்டியடிக்க ஒரு டிப்ஸ்...

    *வேப்பங்கொழுந்து சிறிதளவு, ஆரஞ்சு தோல் விழுது, கஸ்தூரி மஞ்சள் சம அளவு எடுத்து கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து உள்ளதோ அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.இவ்வாறு வாரம் இருமுறை செய்து வர கருமை ஓடிவிடும்.

    *மென்மையான, ரோஜா நிற இதழ்களைப் பெற கொத்தமல்லிச் சாறால் உங்கள் உதடுகளை அவ்வப்போது `மசாஜ்' செய்யுங்கள்

    *பார்லி பவுடரையும் மஞ்சள் தூளையும் 4:1 என்ற விகிதத்தில் நல்லெண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் பூசி பின் குளித்து வந்தால் தோல் மென்மை பளபளப்பு கூடும்.

    *கழுத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க முட்டையின் வெள்ளைக் கரு, கிளிசரீன், ரோஸ்வாட்டர் கலந்து பேஸ்ட்டாக்கி கழுத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவுங்கள்.

    *ஆப்பிள் பழத்தை சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும்.


  10. #10
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,165

    Re: Easy Beauty Tips - எளிய அழகுக்குறிப்புகள்

    கரு வளையம் போக: கண்களைச் சுற்றி பாதாம் ஆயில் தேய்த்தால் கரு வளையம் படிப்படியாக மறையும்.

    வெதுவெதுப்பான நீரில் கால்களை பதினைந்து நிமிடம் வைக்கவும். இவ்வாறு செய்து வந்தால் பாதங்கள் பொலிவு பெறும்.

    * முள்ளங்கி சாறும், தயிரும் கலந்து தேய்த்து ஊறியதும் கழுவி வர முகம் பளபளப்பாகும்.

    * எலுமிச்சைப்பழத் தோலை வைத்து பொடித்து பன்னீர் அல்லது இளநீர் கலந்து தேய்த்து வர முகம் பொலிவாகும். சுருக்கம் மறையும்.

    * நான்கு கரண்டி தேங்காய்ப்பாலில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து, வாரம் ஒரிரு முறை தலையில் தேய்த்து குளித்து வர கூந்தல் அடர்த்தியாக வளரும்.

    * பப்பாளிப்பழத்தை பிசைந்து சிறிதளவு தேன், பாலேடு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊறிய பின் கழுவி வர பளிச் சென மாறும்.

    * பாசிப் பருப்பு மாவை உடம்பில் போட்டுக் குளித்து வந்தால் வியர்வை வாடை வராது.

    * பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

    * பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.

    Dheeba likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter