Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

அழகு குறிப்புகள்: புடவையில் ஜொலிக்க....


Discussions on "அழகு குறிப்புகள்: புடவையில் ஜொலிக்க...." in "Beauty Tips" forum.


  1. #1
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    அழகு குறிப்புகள்: புடவையில் ஜொலிக்க....

    அழகு குறிப்புகள்: புடவையில் ஜொலிக்க....-saree.jpg

    நம் அழகை வெளிப்படுத்துவதில் ஆடைக்கு முக்கியப் பங்கு உண்டு. ஒல்லியாக இருக்கும் பெண்கள் இறுக்கமாக ஆடை அணியக் கூடாது. ரவிக்கையும் இறுக்கமாக இல்லாமல் சற்றுத் தொளதொளவென்று அணிய வேண்டும். பருமனான உடல்வாகு கொண்டவர்கள் இறுக்கமாக உடை அணிவது பருமனைக் குறைத்துக் காட்டும்.
    * புடவை இளவண்ணமுடையதாக இருந்தால் ரவிக்கை சற்று அடர் வண்ணம் உடையதாக இருப்பது நல்லது. புடவையின் வண்ணம் அடர்த்தியானதாக இருந்தால், ரவிக்கை மெல்லிய வண்ணத்தில் இருப்பது நல்லது. ஒரே நிறத்தில் புடவை, ரவிக்கை என்று பார்த்து வாங்குவதை விட, இவ்வாறு அணிவது அழகை மேம்படுத்திக் காட்டும்.
    * 'ஷாப்பிங்' போகும்போது சிறிய பூக்கள் போட்ட இளம் வண்ண 'நைலான்' புடவைகளையே பயன்படுத்துங்கள். கோவில், கடற்கரை போன்ற பொது இடங்களுக்குச் செல்லும்போது அடர்வண்ணம் கொண்ட 'காட்டன்' புடவைகளை ஏற்றவை.
    * உயரமாக உள்ள பெண்கள், தங்கள் உயரத்தைக் குறைத்துக் காட்ட குறுக்குக் கோடு போட்ட புடவைகளைத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். குள்ளமான பெண்கள், உயரத்தைச் சற்று அதிகரித்துக் காட்ட நேர்வாக்கில் கோடு போட்ட புடவைகளை அணிய வேண்டும்.

    Similar Threads:

    Sponsored Links
    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

  2. #2
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    Re: அழகு குறிப்புகள்: புடவையில் ஜொலிக்க....

    பெண்களின் இளமை கண்களில் தெரியும்!

    அழகு குறிப்புகள்: புடவையில் ஜொலிக்க....-eyes.jpg

    கண்களில் இருந்தே ஒரு பெண் எவ்வளவு இளமையானவள், எவ்வளவு நலம் மிக்கவள் என்பதை சொல்லி விடலாம்.
    அத்தகைய அற்புதமான கண்கள் சரியான முறையில் பேணப்படாமல் போகின்ற போது நேருகின்ற கேடுகள் அநேகம். கண்கள் கவனிக்கப்படாமல் விடப்படுகின்ற போது கண்களைச் சுற்றிலும் சிலந்தி வலைகளும், கோழிக்கால்களும் தோன்றத் தொடங்கும். இவ்வாறு தோன்றும் கோடுகளும் கருவளையங்களும் கண்களை ஒளிகுன்றச் செய்து காலத்திற்கு முந்தியே கண்களுக்குச் சோர்வையும், களைப்பையும் உண்டு பண்ணி மூப்படைந்த தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன. சத்துமிக்க, ஆரோக்கியமான உணவு, போதிய உடற்பயிற்சி, மிதமான நிம்மதியான உறக்கம் இவைகளைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் கண்பாதிப்புகளை ஓரளவு தவிர்க்கலாம்.
    இதோடு மட்டுமின்றி, வாரம் ஒரு முறை கண்களுக்கான மாஸ்க்கினைக் கொண்டு சுமார் 15 நிமிடங்கள் கண்களில் வைத்துப் பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி வரப் புத்துணர்வைப் பெற்றிடலாம். கண்களை மூடி மூச்சை நன்றாக ஐந்தாறு முறை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் கண்களுக்குச் செல்லும் ரத்தம் மிகுதியாகிறது. முகத்தில் ஏற்பட்டிருக்கும் இறுக்கம் தளர்வுறும் வரையில் மறுபடி மறுபடி மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். நெற்றி, கன்னம் மற்றும் தாடை போன்ற பகுதிகளுக்கும் கண்களுக்குச் செலுத்தப்படும் அதே அளவு அக்கறையையும், பாதுகாப்பினையும் தர வேண்டும்.
    கருவளையங்களை தவிர்க்கும் வழி:
    கண்ணின் கீழ் ஏற்படும் கருவளையங்களுக்கு, ரெட்டீன் - A (Retin - A) எனப்படும் ரெட்டினாயிக் அமிலம் கொண்ட புதிய மருந்து நல்ல பலன் தருகிறது. இது சூரிய ஒளியால் உண்டாகும் பாதிப்பை நீக்கி, சருமத்தின் மேற்புறமுள்ள பகுதிகளுக்கு இரத்தவோட்டத்தையும் அதிகரிக்கின்றது.
    தினசரி இரவு தூங்கச் செல்லும் முன் கண்களுக்கு கீழ்புறம் சிறிதளவு ரெட்டீன் -ஏ க்ரீம் தடவி வந்தால் போதும். க்ரீமின் அளவு அதிகமானால் முகத்தில் வீக்கத்தினையும், வறட்சியையும் ஏற்படுத்தக்கூடிய பண்பு இதற்கு உள்ளது. கூடிய வரைக்கும் வெயிலில் செல்லும் போது சருமத்தைப் பாதுகாக்கக் கூடிய (Sunscreen Ointment) க்ரீம்களைப் பயன்படுத்த வேண்டும். ரெட்டீன் -ஏ ஒரு சில மாதங்கள் சென்ற பின்னரே நல்ல பலனளிக்கிறது.
    கொலாஜென் சிகிச்சை (Collagen Treatment):
    சருமத்தை வழு வழுவென்று வைக்கக் கூடிய பண்பு கொலாஜென்னிற்கு உண்டு. இயற்கையில் கிடைக்கக் கூடிய இப்புரதமானது எல்லா உடல் திசுக்களிலும் காணப்படுகிறது. இச் சிகிச்சையில் கொலாஜென் ஊசி மூலமாக சுருக்கங்கள் தோன்றியுள்ள பகுதிகளில் செலுத்தப்பட்டு குழிவு ஏற்பட்டுள்ள இடங்களில் வைத்து நிரப்பப்படுகிறது.
    இச்சிகிச்சைக்கான செலவு சிறிது அதிகமானாலும், அடிக்கடி தேவைப்படுவதில்லை. குறுகிய கால சிகிச்சையே நல்ல பலனைத் தருகிறது.
    வேதிச் சிகிச்சை:
    வயதாக ஆக, கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மெல்லிய கோடுகள் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட இடங்களின் மேற்புறங்களில் ரெட்டினாயிக் அமிலக் கரைசலைத் தடவி வர கண்களைச் சுற்றிலும் ஏற்படும் கருவளையங்கள் காய்ந்து புண்கள் உரிவதைப் போன்று உதிர்ந்து விடுகின்றன. அப்பகுதியை நன்று ஆறியவுடன் பார்த்தால் மென்மையாகவும், வெண்மையாகவும் இருக்கும்.
    வெயிலிலிருந்து பாதுகாப்பு:
    சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா வயலெட் கதிரினால் சருமம் எளிதாக பாதிக்கப்பட்டு விடுகிறது. அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றிலும் உள்ள பகுதி மிகுதியான தாக்குதலுக்கு ஆட்படுகிறது. சருமத்தின் வெளிப்புறம், சூரிய ஒளியினால் அதிகமாக பாதிக்கப்பட்டால் சில நேரங்களில் தோல் புற்றினைக் (Skin Cancer)கூட ஏற்படுத்துகிறது. சூரிய ஒளி கண்களின் கீழேயுள்ள தசைகளில் இறுக்கத்தையும் கருமையையும் படரச் செய்கிறது.
    இம்மாதிரியான பின் விளைவுகளையும், காட்ராக்ட், கருவளையம் போன்ற சீர் கேடுகளையும் தவிர்த்து விட, நல்ல தரமான குளுமைக்கண்ணாடி (Cooling Glasses)களை அணிந்து கொள்ளலாம். கண்களில் வெளிச்சம் படாதவாறு பாதுகாக்கக் கூடிய வகையில் குடை மற்றும் கிரிக்கெட் குல்லா போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
    தொங்கு சதைக்கு அறுவை சிகிச்சை:
    கண்களுக்குக் கீழே உள்ள பகுதி மிக மிருதுவாகவும் லேசாகவும் இருப்பதால் வெகு விரைவில் அழற்சிக்கு ஆட்பட்டு விடுகின்றது. சத்தற்ற உணவும், வேலைப்பளு மற்றும் மன இறுக்கம் போன்றவை இவ்வழற்சியை மேலும் தீவிரமாக்குகிறது. சில பெண்களுக்கு மரபியல் தன்மை காரணமாகவும் இந்நிலை ஏற்படச் சாத்தியமுள்ளது. வயதாகும் பொழுது, இத்தகைய தொங்கு தசைகள் முகத்தில் பெருங் குறையை உண்டாக்கி, தோற்றத்தையே சிதைத்து விடுகின்றன.
    இவ்வாறாக ஏற்படும் கொழுப்பு சதையை பிளிபிரோம் பிளாஸ்டி (Blepheroplasty) எனப்படும் கண் அறுவை சிகிச்சை மூலம் உறிஞ்சி வெளியே எடுத்து சீர் செய்து விடலாம். ப்ரோ லிப்ட் (Brow Lift) என்னும் முறைப்படி ஒழுங்கற்று இருக்கும் புருவங்களை அழகாகத் தீட்டி கண்களை இளமையோடும் புதுப் பொலிவுடனும் இருக்கச் செய்யலாம். பிளாஸ்டிக் சர்ஜரி (Plastic Surgery) செய்து வரும் மருத்துவர்களின் உதவியால் இக் குறைபாட்டை அகற்றிடலாம்.

    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

  3. #3
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    Re: அழகு குறிப்புகள்: புடவையில் ஜொலிக்க....

    சிவந்த உதடுகளுக்கு.....!


    அழகு குறிப்புகள்: புடவையில் ஜொலிக்க....-lips.jpg

    மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோலதான் உதடுகளும். இவை அன்பை முத்தமாக வெளிப்படுத்துகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உதடுகள் அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். அவர்களுக்காகவே இந்த டிப்ஸ்.
    வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும். சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம் பளிச்சென இருக்கும்.
    வைட்டமின் சத்துள்ள உணவுகள்:
    உடலில் வைட்டமின் சத்து குறைபாடு ஏற்பட்டால் உதடுகளின் ஓரத்தில் புண்கள் ஏற்படுகிறது. இந்த குறைபாட்டினை போக்க உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்துகொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்*ணீரும் குடிக்க வேண்டும். வைட்டமின், 'இ' சத்துகள் நிறைந்த, 'சன்ஸ்கிரீன் லோஷனை' தடவினாலும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறையும்.
    கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், 'வாசலின்' தடவிக்கொள்ளலாம்.
    உதடு வெடிப்புகள் குணமடைய:
    அதிக குளிரோ, அதிகவெப்பமோ எதுவானாலும் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளும் ஏற்படும். அவர்கள் பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.
    வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.
    லிப்ஸ்டிக் போடும் கலை:
    கண்ணிற்கு மை இடுவது போல உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது என்பது இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது. நமது உதட்டிற்கு ஏற்ற லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்து போடுவது என்பது தனி கலை.
    சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால் மாநிறமாகவோ, கறுப்பாகவோ இருப்பவர்கள் சரியான கலர் லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்ய வேண்டும்.
    கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட்டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.
    மாநிறமாக இருப்பவர்கள் இயற்கையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.
    வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும்.
    லிப் லைனர் உபயோகிக்கவும்:
    லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.
    லிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும்.
    உதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும்.
    பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.
    உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும். தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும். மேலும் உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வதால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.
    இந்த முறைகளை பின்பற்றி உதடுகளை பராமரித்தால் அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன் நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.

    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

  4. #4
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    Re: அழகு குறிப்புகள்: புடவையில் ஜொலிக்க....


    அழகை தக்க வைத்துக்கொள்ள எளிமையான வழிமுறைகள்!
    அழகை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. அதற்காக அடிக்கடி பியூட்டி பார்லர்களுக்கு செல்வது எல்லாம் காஸ்ட்லியான செலவு. ஆனால், தினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் ஒரு பத்து, இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது.

    கண்கள்:
    முகத்திற்கு பொலிவும், வசீகரமும் சேர்ப்பவை கண்கள். சிலருக்கு அந்த கண்களின் புருவத்தில் தேவையான அளவிற்கு முடி இருக்காது. இதற்கு சுத்தமான விளக்கெண்ணெயை கொஞ்சமாக எடுத்து புருவ முடிகளிலும், கண்முடிகளிலும் தேய்த்து வந்தால், முடி அடர்த்தியாக வளரும். சோர்வான கண்களுக்கு, ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேட், வட்டமாக வெட்டிய வெள்ளரித் துண்டு போன்றவற்றை கண்களின் மேல் வைத்துக்கொள்ளலாம். நன்றாகப் பொடியாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகளையோ அல்லது அதனுடன் கேரட் ஜூஸைக் கலந்தோ கண்களுக்கு அடியில் தடவி வந்தால், கரு வளையங்கள் மறையும்.
    உதடுகள்:
    தினமும் சிறிதளவு 'வேசலின்' எடுத்து உங்கள் உதடுகளில் தடவி வந்தால், மென்மையாகவும், வெடிப்புகள் இல்லாமலும் இருக்கும்.
    பாதம்:
    நாள்தோறும் வேலை முடிஞ்சு வீட்டுக்கு சோர்வா வருவீங்க இல்லையா? வந்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் நல்ல நறுமணமுள்ள குளியல் உப்பை வெதுவெதுப்பான தண்ணீ*ரில் கலந்து, உங்கள் பாதங்களை அதில் ஒரு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். சும்மா இருப்பது போரடித்தால், நல்ல ஸ்க்ரப்பர் கொண்டு குதிகாலைத் தேய்க்கலாம். ஆரஞ்சு ஸ்டிக் கொண்டு கால் நகங்களில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றலாம். பின்னர், கால்களை தண்ணீ*ர் அல்லது சோப்பால் நன்கு கழுவிவிட்டு, 'கோல்ட் க்ரீம்' அல்லது 'மாய்சரைசர்' போட வேண்டும். இதனால் உங்கள் பாதங்கள் மிருதுவாகவும் பளிச்சென்றும் இருக்கும்.
    முகம்:
    இரவு உறங்கச் செல்லும்முன் நாள் முழுதும் முகத்தில் படிந்துள்ள அழுக்கை அகற்றுவது முக்கியமான வேலையாக இருக்க வேண்டும். எண்ணெய் பசையுள்ள சருமத்தை 'வால்நட் ஸ்க்ரப்' கொண்டும், உலர்ந்த மற்றும் சென்ஸிடிவ் சருமத்தை மிருதுவான 'பேபி ஆயில்' கொண்டும் துடைக்கலாம். அவ்வாறு துடைக்கும்போது உங்கள் கைகளின் அசைவு வட்ட வாக்கில் இருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட்டு தரமான 'நைட் க்ரீம்'களை உபயோகப்படுத்த வேண்டும். எளிதான மாய்சரைசரும் உபயோகப்படுத்தலாம். இது, உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. இந்த மாய்சரைசரை முகம், கைகள், கழுத்து மற்றும் கண்களுக்கு கீழேயும் உபயோகிக்கலாம்.
    தலைமுடி:
    இரவில் எண்ணைய் தேய்த்துவிட்டுக் காலையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால் முடிக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் தண்*ணீரைக் கொதிக்க வைத்து அந்தப் பாத்திரத்தின் உள்ளே ஒரு சிறிய அளவிலான பாத்திரத்தில் எண்ணெயை (ஆலிவ் ஆயில், ஆல்மண்ட் ஆயில் அல்லது சாதாரண தேங்காய் எண்ணெய்) எடுத்துக் கொண்டு சூடு படுத்த வேண்டும். லேசான சூடு போதுமானது. அவ்வாறு சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். கால்களைப் பராமரிக்க அமரும் அந்த நேரத்தில் இதையும் செய்து முடித்தால் உங்கள் நேரம் மிச்சமாகும்.
    - இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்!

    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

  5. #5
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    Re: அழகு குறிப்புகள்: புடவையில் ஜொலிக்க....

    'கரு கரு' கூந்தலுக்கு காய்கறி வைத்தியம்!
    அழகு குறிப்புகள்: புடவையில் ஜொலிக்க....-long-black-hair.jpg

    கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?! கூந்தல் நீளமா... அடர்த்தியா... கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்...
    * வைட்டமின் 'பி' காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்த குறைபாட்டை நீக்கும்.
    * நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.
    * முடி எல்லோருக்கும் அடர்த்தியாக வளரும் என்று சொல்லமுடியாது. இது பரம்பரையாக வருகின்ற சொத்து என்பதுதான் உண்மை. அதேபோல்தான் வழுக்கை விழுவதும், அதைப் புரிந்து கொண்டால் கவலைப்படுவதனால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம்.
    * அழுகின தேங்காயைத் தூக்கி எறியாமல் சிறிது சுடு நீருடன் அரைத்துத் தலையில் தடவி ஊறவைக்கவும். பிறகு நன்றாக 'மசாஜ்' செய்யவும். மயிர்க்கால்கள் வலுப்பெற சரியான வழி இது.
    * இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போயே போச்சு.
    * நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூவுடன் சில துளிகள் கிளிசரின் சேர்த்துக் கொண்டால் முடி அறுந்து போகாது.
    * சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும்.
    * தேங்காயைத் தண்ணீ*ர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.
    * நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.
    * விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.
    * கூந்தல் வறண்டு இருந்தால ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.
    * அங்கங்கே தலையில் சிறு பொட்டல் இருந்தால் சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால் மீண்டும் முடி வளரும்.
    * தலை முடிக்குப் போஷாக்குத் தரும் ஷாம்பூ பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப்பங்கு, புங்கங்காய் கைப் பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். ரசாயனப் பொருள்கள் இல்லாத பொடி, எந்த விதத் தீங்கும் ஏற்படுத்தாது. முடியும் வளரும்.
    * நேரமில்லை என்பவர்கள் சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக்கொள்ளலாம்.
    * பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.
    * தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்தத் தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி கறுப்பாக வளரும்.
    * ஓடி ஆடி வெயிலில் அலைந்து திரிந்து வாழ்க்கையை ஓட்டுகின்ற காலத்தில் நாம் இருக்கிறோம். தினமும் உச்சந்தலையில் ஒரு விரல் சுத்தமானவிளக்கெண்ணெயைத் தடவி வந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி, முடியும் உதிராது.
    * தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீ*ருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.
    இதோ, முடி பளபளப்பாக காய்கறி வைத்தியம்:
    * வெங்காயத்தையும், முட்டைக் கோசையும் பொடிப் பொடியாக நறுக்கி (ஒரு கப்) அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். காலையில் சிறிது யூடிகோலன் சேர்த்தால் வெங்காய வாசனை போய்விடும். இந்தச் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து மயிர்க் கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்யவும். சீயக்காய்ப் பொடி போட்டுக் குளித்தால் முடி பளபளப்பாக மென்மையாக மாறும்.

    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

  6. #6
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    Re: அழகு குறிப்புகள்: புடவையில் ஜொலிக்க....

    நீங்கள் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையுடன் இருக்க, கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும்.
    கொலாஜன் ஃபேஷியல்:
    நமது சருமம் கொலாஜன் (Collagen) என்ற புரோட்டீன் ஃபைபர்ஸ்-ஆல் ஆனது. வயதாகும் பொழுது நீர், கொழுப்புச்சத்து உடலில் இல்லாததால் இந்த கொலாஜன் சுருங்கும். வயது முதிரும் போது இந்தச் சுருக்கம் அதிகரிக்கும். இந்தச் சமயத்தில் உள்ளே சாப்பிடுவதற்கும் நல்ல சத்துணவு வேண்டும். அத்துடன் முகத்தில் பூசுவதற்குக்கூட கொலாஜன் தேவையாக இருக்கிறது. இது கடைகளில் கொலாஜன் என்றே கிடைக்கிறது. ஜெல் டைப்பில் கிடைக்கும் கொலாஜனை முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உபயோகிக்கலாம். வயதானவர்கள் அனைவருமே கொலாஜனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் முகச்சுருக்கம் போய் இளமை திரும்புவது நிச்சயம்.
    கொலாஜன் மாஸ்க் என்றுகூடக் கடைகளில் கிடைக்கிறது. அதை அப்படியே முகத்தில் போட்டு அரைமணி நேரம் ஊறவைத்துக் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
    மேலும் உண்மையான ஆரஞ்சை வட்டவடிவத்தில் 'கட்' செய்த தோற்றத்துடன், ஆரஞ்சு ப்ளேவருடன் கூடிய கொலாஜன் மாஸ்க்கும் வந்திருக்கிறது. இதை முகத்தில் போடும்பொழுது 'ப்ரெஷ்ஷான லுக்' கிடைக்கும். இதை ஒரு பாக்கெட் வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது உபயோகிக்கலாம்.
    தற்பொழுது heat mask-ம் புதிதாக வந்திருக்கிறது. இது வயதானவர்களுக்கு மிகவும் உகந்தது. கொலாஜன் ஃபேஷியலுக்கு முன் இந்த ஹீட் மாஸ்க்கைப் போடலாம். இது சின்னச் சின்ன ட்யூப் வடிவத்தில் பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. இதை ஒரு நிமிடம் மசாஜ் செய்தாற்போல் தடவி ஒரு நிமிடம் விட்டுவிட வேண்டும். இது லேசான சூடாக இருக்கும். ஆனால் உடனடி எஃபக்ட் கிடைக்கும். இது துவாரங்களின் உள்ளே போய் அழுக்கு வெளியே வந்துவிடும். தோல் நல்ல பளிச்சென்று இருப்பதை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள். சில நிமிடங்களிலேயே ஃபேஷியல் செய்த பலன் கிடைத்துவிடும்.
    கொலாஜன் ஃபேஷியல் தசையை இறுகச் செய்து தோலுக்கு ஊட்டச்சத்தைக் கொடுக்கக் கூடியது. முக்கியமாக குறிப்பிட வேண்டுமென்றால் இந்த முறையைக் கடைப்பிடித்தால் சீக்கிரமே வயதான தோற்றத்தை அடையாமல் தடுக்கப்படுவீர்கள். அப்புறம் உங்களைப் பார்த்து நாலு பேராவது, 'எக்ஸ்க்யூஸ் மீ! எந்தக் காலேஜில் படிக்கிறீங்க?' என்று கேட்கப் போகிறார்கள்!
    ஆஹா ஃபேஷியல்:
    ஒரு சிலருக்குத் தாங்கள் கறுப்பாக இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை எப்போதும் உண்டு. இந்தத் தாழ்வு மனப்பான்மையினாலேயே வேறு எதிலும் முழுக்கவனம் செலுத்தி வெற்றிபெற முடியாமலும் போகிறார்கள். இறைவன் படைப்பில் அனைவருமே அழகுதான். ஒவ்வொருவரிடமும் அழகு ஒளிந்து கொண்டிருக்கிறது. அதை வெளியே கொணர்வதில்தான் உங்கள் கைவண்ணம் இருக்கிறது. பொதுவாகவே நிறம் அதிகமாக வேண்டும் என்ற நினைப்பில் உள்ளவர்கள் முதலில் கெமிக்கல் கலந்த சோப், க்ரீம்களை விட்டுவிட வேண்டும். சாதாரணமாக நிறத்தை மேம்படுத்த நீங்கள் உபயோகிக்கும் ஃபேர்னஸ் க்ரீமில் கூட கெமிக்கல்ஸ் உண்டு. இதை அடிக்கடி உபயோகிக்கும்பொழுது தோல் வறண்டு, உலர்ந்துவிடும். இதைத் தவிர்க்க ஊட்டச்சத்துகள் அடங்கிய க்ரீம் உபயோகிக்கலாம். முத்திலிருந்து எடுக்கப்பட்ட க்ரீம் அல்லது வைட்டமின் 'ஈ' கலந்த க்ரீம் உபயோகிக்கலாம்.
    இதைத் தவிர, அழகு நிலையங்களில் மூலிகைகளைக் கொண்டு நிறத்தை இம்ப்ரூவ் செய்வதற்காக மூலிகை ஃபேஷியல் செய்யப்படுகிறது. இதை நாங்கள் எங்கள் பாஷையில் 'ஆஹா... ஃபேஷியல், என்கிறோம். பழச்சாறு... உலர் பழங்கள், ஆல்ஃபா ஹைட்ராக்ஸி ஆசிட் இந்த மூன்றும் சேர்ந்தது தான் இந்த 'ஆஹா... பேஷியல். இதைச் செய்யும்போது இரட்டிப்புப் பலன் கிடைக்கும். மேல்தோலை எடுத்து புதிதான தோல் உருவாகும். தோலுக்கு அதிக ஊட்டச்சத்து கொடுக்கக்கூடியது.

    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter