Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 3 Post By smahi
  • 1 Post By sumitra
  • 1 Post By naliniselva
  • 1 Post By smahi

Scrubs get rid facial hair - முகத்தில் உள்ள முடியை போக்க வேண்டும


Discussions on "Scrubs get rid facial hair - முகத்தில் உள்ள முடியை போக்க வேண்டும" in "Beauty Tips" forum.


  1. #1
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    Scrubs get rid facial hair - முகத்தில் உள்ள முடியை போக்க வேண்டும


    முகத்தில் உள்ள முடியை போக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க...




    Scrubs get rid facial hair  - முகத்தில் உள்ள முடியை போக்க வேண்டும-images.jpg



    பெண்களின் அழகைக் கெடுப்பதில் முகத்தில் தோன்றும் முடிகளும் ஒன்று. இதனைப் போக்குவதற்கு நிறைய பராமரிப்புகளை பெண்கள் பின்பற்றி வருகின்றனர். இருப்பினும், அவை வளர்ந்து, முகத்தை அசுத்தமாகவும், கருப்பாகவும், அழுக்குடன் இருப்பது போன்றும் வெளிப்படுத்துகிறது. இத்தகைய முடிகளைப் போக்குவதற்கு ப்ளீச்சிங் தான் சிறந்தது. ஆனால் அவை சருமத்திற்கு மிகவும் நல்லதல்ல. ஏனெனில் கெமிக்கல் கலந்த ப்ளீச்சிங்கை பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள ஈரப்பை அனைத்தும் நீங்கி, முகம் வறட்சியுடன், பருக்கள் தோன்ற ஆரம்பிக்கும்.

    எனவே அத்தகைய கெமிக்கல் முறையைப் பயன்படுத்துவதற்கு இயற்கை முறைகளில் செய்யப்படும் ஸ்கரப்களைப் பயன்படுத்தினால், முகத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறுவதோடு, முகத்தில் முடிகளையும் நீக்கலாம்.



    மஞ்சள் மற்றும் கடலை மாவு:ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, அதில் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, ஸ்கரப் செய்ய வேண்டும். குறிப்பாக முடி உள்ள இடத்தில் நன்கு தேய்த்து, கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைபடும்.

    மஞ்சள் மற்றும் உப்பு: ஸ்கரப் செய்வதற்கு உப்பு மற்றொரு சிறந்த அழகுப் பொருள். இதனை வைத்து ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, முகத்தில் இருக்கும் முடியும் உதிர்ந்து, அதன் வளர்ச்சி தடைபடும். அதற்கு மஞ்சள் தூளுடன், உப்பு சேர்த்து, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் பால் விட்டு கலந்து, முகத்தில் தடவி, 5 நிமிடம் மசாஜ் செய்து நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்தால், முகம் பளபளப்புடன் இருப்பதோடு, முகத்தில் இருக்கும் முடியும் இயற்கையாக நீங்கிவிடும்.

    எலுமிச்சை மற்றும் தேன்: இந்த ஸ்கரப்பை செய்தால், முகம் நன்கு வெள்ளையாவதோடு, முடியில்லாத பட்டுப் போன்ற சருமத்தைப் பெறலாம். இந்த முறைக்கு எலுமிச்சை சாற்றுடன், தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    சர்க்கரை ஸ்கரப்: இந்த ஸ்கரப்பில் முகத்தை கழுவி, பின் சர்க்கரையை கொண்டு, ஸ்கரப் செய்ய வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம். பருக்கள் உள்ளவர்களும் இந்த முறையை பின்பற்றினால், பருக்களை போக்கலாம்.

    சோள மாவு, சர்க்கரை மற்றும் முட்டை:ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக் கருவை உடைத்து ஊற்றி, சோள மாவு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து, பின் 5 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு மூன்று முறை செய்ய வேண்டும்.

    தயிர், கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள்: கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் பாலால் முகத்தை கழுவி, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், முகத்தில் வளரும் முடியை தடுக்கலாம்.

    Similar Threads:

    Sponsored Links





    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Scrubs get rid facial hair - முகத்தில் உள்ள முடியை போக்க வேண்டு&a

    Dear Maheshwari, you have given so many ways to remove the facial problem faced by most of women today. definitely these home remedies will not have any side effects and also these remedies will render 100% sure positive results. thank you very much

    smahi likes this.

  3. #3
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Scrubs get rid facial hair - முகத்தில் உள்ள முடியை போக்க வேண்டு&a

    mahi...super....


    sumitra likes this.


    நளினி



  4. #4
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    Re: Scrubs get rid facial hair - முகத்தில் உள்ள முடியை போக்க வேண்டு&a

    Quote Originally Posted by sumitra View Post
    Dear Maheshwari, you have given so many ways to remove the facial problem faced by most of women today. definitely these home remedies will not have any side effects and also these remedies will render 100% sure positive results. thank you very much
    You are welcome Sumitra.


    sumitra likes this.





    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter