Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree105Likes

Beauty Tips!!! - அழகு குறிப்புகள் !!!!!!!!!!!!


Discussions on "Beauty Tips!!! - அழகு குறிப்புகள் !!!!!!!!!!!!" in "Beauty Tips" forum.


  1. #41
    vishnusree's Avatar
    vishnusree is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    9,821
    Blog Entries
    183

    Re: Beauty Tips!!! - அழகு குறிப்புகள் !!!!!!!!!!!!

    கன்னத்தின் அழகு அதிகரிக்க......




    கன்னங்கள் அழகாக இருந்தால் முகத்துக்கே தனி அழகுதான். ஒருசிலருக்கு கன்னங்கள் மிகவும் ஒட்டிப்போய் இருக்கும். பெரும்பாலும் நிறைய பெண்களுக்கு கன்னத்தில் பருக்கள் தொல்லை இருக்கும். இவர்கள் இந்த குறிப்புகளை பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்!


    * முதலில் அதிகாலையில் எழுந்து பழகும் பெண்களுக்கு இயற்கையாக சுத்தமான காற்று கிடைக்கிறது. இதனால் முகத்தில் ஒருவித பொலிவு கிடைக்கும்.


    * மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து பத்து நிமிடம் வாய்க்குள் வைத்து பின் கொப்பளிப்பது நல்லது. இப்படி தொடர்ந்து செய்வதால் கன்னத்தின் அழகு அதிகரிக்கும்.


    * சந்தனம், மஞ்சள் போன்றவற்றை பொடியாக்கி முகத்தில், கை, கால்களில் தடவலாம். வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் பால், வெண்ணை கலந்து குழைத்துப் பூச வேண்டும்.


    * எண்ணைத் தன்மை கொண்ட சருமத்தை உடையவர்கள் வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, தக்காளிச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கலந்து சிறிதளவு தேனும் சேர்த்து உடலில் பூசலாம்.


    * முகப்பரு இருப்பவர்கள் வேப்பமரப் பட்டையை வெண்ணையில் அரைத்துத் தடவுவது நல்லது. மஞ்சளை, கறி வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவினால் முகப்பரு மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் மறையும். அதேபோல் துளசி சாற்றை தினமும் முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்துக் கழுவி விட்டால் முகப் பரு தொல்லை ஏற்படாது.


    * சில பெண்களுக்கு முகத்தில் மற்றும் தேவையில்லாத இடத்தில் ரோமம் முளைக்கும். சிறிது மஞ்சளைக் குழைத்து முகத்தில் தடவி, ஒரு மணி நேரம் கழித்துக் கழுவி விட வேண்டும். இவ்வாறு ஒரு மாதம் செய்து வந்தால் ரோமம் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.


    Sponsored Links
    ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,

    ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே!கண்ணம்மா


  2. #42
    vishnusree's Avatar
    vishnusree is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    9,821
    Blog Entries
    183

    Re: Beauty Tips!!! - அழகு குறிப்புகள் !!!!!!!!!!!!

    சம்மரிலும் பளிச்சென்று இருக்க.....


    அக்னி வெயில் சுட்டெரிக்கையில் உடலை பேணி பாதுகாப்பது என்பது சற்று சவாலான காரியம்தான். சரியான வழிமுறைகளைக் கைக்கொண்டால் கோடையிலும் குளுமையை உணரலாம். கோடையில் கடைபிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள்.......


    * கோடை நாட்களில் கூட குளிக்கும் தண்*ணீரில் பாடி டெம்பரேச்சரில் இருப்பது நன்று. தண்ணீ*ரில் பாத் சால்ட், புதினா, வெள்ளரி வில்லைகள், எலுமிச்சை ரசம்.... என போட்டுக் குளித்தீர்களானால் நறுமணமும் புத்துணர்ச்சியும் கிட்டும்.


    * உங்கள் ஹேண்ட்பாகில் டிஷ்யூ பேப்பர் எப்போதுமே வைத்திருங்கள். வியர்வை வழிந்தால் அழகாக பேப்பரால் ஒற்றி எடுக்கவும். தூசி, அழுக்கு, வியர்வை... என சகலமும் வைப் அவுட் ஆகிவிடும்.


    * வெயிலில் டூவீலரில் போகும் பெண்கள் தலையில் ஸ்கார்ஃப் அணிவது வெயிலிலிருந்தும் காப்பாற்றும்.


    * வெளியில் போவதற்கு முன்னால் முகத்தில் சன்ஸ்க்ரீன் ஞாபகமாகத் தடவவும். மாய்சரைஸர் தடவிய பிறகே சன்ஸ்க்ரீன் போடவும்.


    * காட்டன் உடைகளையே அணியவும். சின்தடிக் ஆடைகள் கோடையைக் கடுமையாக்கும்.


    * வாட்டர் சும்மா பாட்டில் பாட்டிலா குடிக்கவும்.


    * காபி, டீ, மசாலா, எண்ணெய் உணவு வகைகளுக்கு டூ விடவும். பழங்கள், சாலட் வகைகள், சர்பத், நீர்மோர், லஸ்ஸிக்கு சேத்தி சொல்லவும். காலையில் முதலில் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கவும்.


    * உங்கள் வார்ட் ரோபில் கண்டிப்பாக இடம் பிடிக்க வேண்டியல் பட்டியல் இதோ: ஏ-லைன் ஸ்கர்ட், கேப்ரீ பான்ட், காதி காட்டன் குர்தீஸ், வொயிட் டாப்ஸ்.


    * வியர்வை வழிந்துகொட்டும் என்பதால் மேக்கப்பில் கவனம் தேவை. லிக்விட் ஐ-லைனருக்குப் பதில் வாட்டர் ப்ரூஃப் மஸ்காரா அல்லது ஐபென்சில் உபயோகிக்கவும்.


    * வெயிலினால் கருமை படிந்தால் தயிரில் வெள்ளரி ஜூஸ், மஞ்சள் பொடி கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவினால் முகம் பளிச்சென்று ஷைனாகும்.


    * கைகள் கறுப்பாகிவிட்டதே என ஓலமிடாமல் சன்ஃபிளவர் ஆயில் கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ், கொஞ்சம் சர்க்கரை சேர்த்துத் தடவி சிறிது நேரம் கழித்து வாஷ் பண்ணினால் கைகள் பளபளக்கும்.

    ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,

    ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே!கண்ணம்மா


  3. #43
    vishnusree's Avatar
    vishnusree is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    9,821
    Blog Entries
    183

    Re: Beauty Tips!!! - அழகு குறிப்புகள் !!!!!!!!!!!!

    சரும பிரச்சினைகளுக்கு மருத்துவம் மூலம் தீர்வு காணுங்கள்!



    அழகாகத் தோன்ற எல்லோருக்கும் ஆசை தான். அந்த ஆர்வத்தில் அலங்கரித்துக் கொள்ளும்போது சில தவறுகளை அடிக்கடி செய்வதுண்டு. அவை எவை, அதை எப்படித் தவிர்ப்பது என்று தெரிந்துகொள்ளலாம்...


    முகத்தில் கிரீம், பவுடர்களை திட்டுத்திட்டாகப் போட்டுக்கொள்வதுதான் பெரும்பாலானவர்கள் செய்யும் முக்கியத் தவறு. கிரீம் மற்றும் பவுடர் திட்டாகப் படிந்திருந்தால் சருமத்தின் அழகை கெடுத்துவிடும். அத்துடன் அவை வியர்வை துளைகளையும் அடைப்பதால் நாளடைவில் சரும பாதிப்புகள் ஏற்படக்கூடும்.


    பலர் செய்யும் தவறுகளில் குறிப்பிடத்தக்கது இரட்டை அலங்காரம். இவர்கள் முதலில் அலங்காரம் செய்துவிட்டு கண்ணாடியைப் பார்ப்பார்கள். திருப்தி இல்லாமல் அலங்காரத்தை கலைப்பார்கள். பிறகு மீண்டும் அலங்காரம் செய்வார்கள். இப்படி இரண்டு அல்லது மூன்று முறை அலங்காரம் செய்துவிட்டு திருப்தியே இல்லாமல் வெளியே செல்வார்கள். இவர்கள் அலங்கார நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு சருமத்திற்கேற்ற அலங்காரத்தைச் செய்துகொள்ள வேண்டும்.


    மாறுபட்ட தோற்றத்திற்காக அலங்கரிக்கும் 'கான்ட்ராஸ்ட் மேட்சிங்' அலங்காரமும் சில நேரங்களில் கேலிக்கூத்தாகிவிடும். சிலர், சருமத்திற்கு எதிரான நிறத்தில் ஆடை, அணிகலன்கள் அணிந்துகொண்டால் அழகாக இருக்கும். இப்படி கான்ட்ராஸ்ட் மேட்சிங் செய்வதாக நினைத்துக் கொண்டு தாறுமாறான வண்ணங்களை தேர்வு செய்து அலங்கரித்தால் அழகு அலங்கோலமாகி விடலாம். சரியாக அலங்காரம் செய்து கொண்டால் மட்டுமே ஜொலிக்க முடியும்.


    முகத்தில் சிறு பருக்கள் அல்லது கருவளையங்கள் இருந்தால் அதை மறைப்பதற்கு பலரும் பெருமுயற்சி எடுத்துக்கொள்வதுண்டு. அவற்றின் மீது அழகு கிரீம்களை அதிகமாக பூசுவது, கருவளையம் மறையும் அளவுக்கு கிரீம், பவுடர் பூசுவது என்று தீவிர முயற்சியில் இறங்குவார்கள். இது அவர்களது சருமக் குறைகளை இயல்பை விட மோசமாக காட்டிவிடும். எனவே சரும பிரச்சினைகளுக்கு மருத்துவம் மூலம் தீர்வு காணுங்கள். அலங்காரம் மூலம் மறைத்துக்கொள்வதால் பயனில்லை.


    அலங்கார கிரீம், பவுடர்களை பூசும் முறையில் தவறு செய்வதாலும் அழகு பாழ்படும். பவுடர், கிரீம் எதுவாக இருந்தாலும் விரல்களில் தொட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் விரல்களை முகத்தில் வைத்து வட்ட வாக்கில் கைகளை இயக்கி பூச வேண்டும். பக்கவாட்டிலோ, மேலும் கீழுமோ இழுத்துப் பூசிக் கொண்டால் திட்டுத்திட்டாகப் படியும். திரவ வடிவிலான லோஷன்களை உள்ளங்கையில் எடுத்து மேற்சொன்னதுபோல் பூசிக்கொள்ள வேண்டும். அலங்காரத்திற்கு கைகளே போதும். பிரஷ்களை பயன்படுத்துவதாக இருந்தால் அனுபவம் அவசியம்.


    அளவு அதிகமாகிவிடுவதே பலநேரங்களில் அழகைக் கெடுக்கும். லிப்ஸ்டிக், பவுடர், புருவ மை என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு அளவு இருக்கிறது. அது ஒவ்வொருவரின் முக அமைப்புக்கு ஏற்ப மாறும். நீங்கள் இயல்பிலேயே நல்ல நிறமுடைய மேனியைப் பெற்றிருந்தால் அதிக பவுடர் தேவையிருக்காது. அழகான உதடுகள் பெற்றிருந்தால் லிப்ஸ்டிக்கே தேவையில்லை.


    உதடு சிறிதாய் இருந்தால் உதட்டிற்கு சற்று வெளியில் லிப்ஸ்டிக் போட்டால் தான் அழகாகத் தெரியும். பெரிய உதடு இருந்தால் உதடுகளை சிறிதாக காட்டும் அளவுக்கு லிப்ஸ்டிக் போட வேண்டும். புருவ மை தீட்டுவதிலும் இப்படி அளவுகள் வேறுபடும். இப்படி அதனதன் அளவுகள் உங்கள் அழகிற்கு ஏற்ப மாறுபடும்.

    ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,

    ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே!கண்ணம்மா


  4. #44
    vishnusree's Avatar
    vishnusree is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    9,821
    Blog Entries
    183

    Re: Beauty Tips!!! - அழகு குறிப்புகள் !!!!!!!!!!!!

    கோடைக்கால அழகுப் பராமரிப்பு!

    அழகுக்கலை நிபுணர் வசுந்தரா




    நமது நாட்டுத் சீதோஷ்ண நிலை பெரும்பாலும் வெப்பமாகவே இருக்கும். கடும் கோடைக் காலத்தில் இந்த நாள்களை எப்படிக் கழிக்கப் போகிறோம் என்ற பயம் ஒவ்வொருவருக்கும் எழுவது இயற்கை. நமது முன் ஜாக்கிரதையாலும், அழகு, ஆரோக்கியம் குறித்த அடிப்படை விழிப்புணர்ச்சியாலும் கோடை காலத்தைப் பிரச்சினையில்லாது சுலபமாகச் சமாளித்து விடலாம்.


    நமது சருமத்தில் நிறத்தைத் தீர்மானிக்கும் நிறமிகள் (Melanin pigments) உள்ளது. அதிக நிறத்தை உடையவர்களுக்கு இது குறைவாகவும் தோலின் அடிப்பகுதியிலும் இருக்கிறது. அதனாலேயே அவர்கள் வெயிலில் சென்றவுடனேயே சருமம் சீக்கிரம் சிவந்து விடுகிறது. அதிகமாகவும் அவர்கள் சருமப் பாதிப்பை அடைகிறார்கள். ஆனால் நிறம் குறைந்தவர்களுக்கு இந்த நிறத்தைத் தீர்மானிக்கும் நிறமிகள் அதிகமாக இருக்கின்றன. மேலும் தோலுக்கு மிக அருகில் இருப்பதால் சூரிய ஒளியினால் அதிக பாதிப்பை அடைவதில்லை. வெயிலினால் சருமப் பாதிப்பை அடைபவர்கள் அவ்வப்போது அழகு நிலையம் சென்று ஃபேஷியல், ப்ளீச் செய்யும்போது முகம் பளிச்சென இருக்கும்.


    கோடைக்காலத்தில் சருமம் அதிகமாக வியர்க்கும். வியர்வை அதிகமாகும் பொழுது நாற்றம் எடுக்கும். இதைப் போக்க இருவேளை குளித்து உடைமாற்ற வேண்டும். இறுக்கமான ஆடை அணியக் கூடாது. மெல்லிய பருத்தி ஆடையும், இள நிறமான ஆடையும் அணிவது நல்லது.


    வெயில் காலத்தில் நமது தலைமுடிக்கும், குறிப்பாக சருமத்திற்கும் பாதுகாப்பு ரொம்பவே அவசியம்.


    வியர்வையினால் தலையில் அதிகமாக அரிப்பு எடுக்கும். பேன் தொல்லை அதிகமாகும்; முடி உதிரும். ஒருவித பாக்டீரியா சருமத்தை அரிக்க ஆரம்பிப்பதால் பொடுகுத் தொல்லையும் அதிகமாகும். பொடுகுத் தொல்லையைப் போக்க தற்பொழுது பொடுகு நீக்கி ஷாம்புகள் (Anti bacterial shampoo) வந்துள்ளன. அவற்றையோ அல்லது மூலிகைகள் கலந்த ஷாம்புவையோ உபயோகப்படுத்தலாம்.


    சிகைக்காயிலுள்ள காரத்தன்மையினால், அதை உபயோகப்படுத்தினாலும், பொடுகுத் தொல்லை இராது. முட்டையின் வெண் கருவைத் தலையில் தேய்த்து, சிறிது நேரத்தில் அலசலாம். எதை உபயோகப்படுத்தினாலும் தலையை நீர் கொண்டு சரியாக அலசவில்லையெனில் பொடுகு அதிகரித்துவிடும்.


    வால் மிளகைப் பாலில் ஊறவைத்து அரைக்கவும். தலையில் எண்ணெய் தடவி லேசாக மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தலையை ஒரு ஒரு பாகமாகப் பிரித்து அந்த இடத்தில் அரைத்த கலவையைத் தடவி பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். (லேசாக எரிச்சல் கொடுக்கும்) பின்பு தரமான சிகைக்காய்ப் பொடி, அல்லது ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.


    சிகைக்காயை அரைக்கும் பொழுது அத்துடன் வேப்பிலை, வெள்ளை மிளகு, வசம்பு போன்றவைகளைச் சேர்த்து அரைத்தால், பொடுகுத் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். (வசம்பிற்கு தொற்றைத் தடுக்கும் ஆற்றல் உண்டு)


    கண்களுக்கு!


    உடல் அதிக உஷ்ணமாவதால், கண் எரிச்சல் அதிகமாகும். வெள்ளரிக்காயை வட்டமாகத் துண்டுகள் செய்து, கண் மேலே வைத்துச் சிறிது நேரம் படுத்தால் கண்களுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். கண்களுக்கு அடியிலுள்ள கரு வளையமும் நீங்கும்.


    சருமப் பராமரிப்பு


    எண்ணெய் சருமம் உடையவர்களுக்கு தலைமுடிக்கு அருகிலேயே எண்ணெய் சுரப்பி உள்ளது. எண்ணெய் சுரப்பிகளிலிருந்து அதிகம் எண்ணெய் வெளிவரும். வியர்வைச் சுரப்பிகளிலிருந்தும் வியர்வை அதிகமாக வரும். இது குறிப்பாக டீன் ஏஜில் உள்ளவர்களை அதிகமாகப் பாதிக்கும். பருத்தொல்லை கோடைக்காலத்தில் எண்ணெய் சருமத்தில் அதிகமாகிவிடும். அவர்கள் சாதாரண சோப்பை உபயோகப்படுத்தினால் அதிலுள்ள கொழுப்பு அமிலம் (fatty acid) எண்ணெய் சருமத்தில் சேரும் பொழுது பிரச்சினையாகி விடும். அவர்கள் எண்ணெய் விலக்கப்பட்ட சோப் வகைகளைப் (Oil free soap) பயன்படுத்த வேண்டும். இதேபோல் Soap free face wash உண்டு. அதைப் பயன்படுத்தினால் ஃப்ரெஷ் ஆக உணரலாம். எண்ணெய் சருமம் உடையவர்களுக்கென்றே பிரத்யேகமாக எண்ணெய் விலக்கப்பட்ட க்ளன்சர், டோனர், மாய்சரைசர் உண்டு. அவற்றை உபயோகப்படுத்தி எண்ணெய் சருமத்தை உடையவர்கள் நல்லவிதமாகப் பாதுகாக்கலாம்.


    சருமப் பாதுகாப்பிற்கான டிப்ஸ்:


    வெள்ளரிக்காய், தர்பூசணி சாற்றைச் சம அளவு எடுத்துக் கொண்டு (1 டீ ஸ்பூன் சாறு) அதனுடன் ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.


    இரண்டு டீ ஸ்பூன் இளநீருடன் தேன் கலந்து முகம், கழுத்து, கைகள் என எங்கெல்லாம் சூரியஒளி அதிகமாகப்படுகிறதோ, அந்த இடத்தில் 10 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கழுவ வேண்டும். இதனால் கருமை நீங்கி சருமம் பளிச்சென்று இருக்கும்.


    டீ வடிகட்டிய டிகாஷனை எடுத்துக்கொள்ளவும். (இரண்டாம் முறை உபயோகப்படுத்தியதாக இருக்கலாம். அல்லது லைட்டான டிகாஷனாக இருக்கலாம்.) முல்தானி மெட்டி பவுடர் ஒரு ஸ்பூனுடன் இரண்டு டீ ஸ்பூன் டீ டிகாஷன் கலந்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கழுவலாம். இந்தக் கலவையை வெயிலில் செல்வதற்கு முன்னும், சென்றுவந்த பிறகும் உபயோகிக்கலாம்.


    குளிக்கும் பொழுது:


    வியர்வை நாற்றம் போக, குளிக்கும்பொழுது வெதுவெதுப்பான நீரில் சிறிது வேப்பிலையைப் போடவும். அதன் சாறு இறங்கிய பிறகு அதை எடுத்துவிட்டுக் குளிக்கும் நீரில் கலந்து குளிக்கலாம்.


    ஒரு வாளி தண்*ணீரில் 2 சிட்டிகை கற்பூரத்தூளைப் போட்டுக் குளித்தால் வியர்வை நாற்றம் அகலும்.


    முகத்திற்கு கோடைக்காலத்திற்கென்று பிரத்யேகமாக பழவகை ஃபேஷியல் செய்வது நல்லது. ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, தக்காளி, வெள்ளரிக்காய், இளநீர் இவைகளைக் கொண்டு முகத்திற்குப் பூசலாம். (சைனஸ் தொந்தரவு உள்ளவர்களைத் தவிர அனைவரும் இந்த முறையைப் பின்பற்றலாம்).


    கோடைக்காலங்களில் வெளியில் அலைய நேரிடும்பொழுது இளநீர், ஆரஞ்சு, எலுமிச்சைப் பழ ஜூஸ் அருந்துவது நல்லது. சன் ஸ்ட்ரோக் (Sun Stroke) வராமல் தடுக்க ஒரு வெங்காயத்தைக் கையிலோ, உடலிலோ வைத்திருந்தால் சன் ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பிக்கலாம்.

    ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,

    ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே!கண்ணம்மா


  5. #45
    vishnusree's Avatar
    vishnusree is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    9,821
    Blog Entries
    183

    Re: Beauty Tips!!! - அழகு குறிப்புகள் !!!!!!!!!!!!

    வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?


    வெயிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாத்து, புதுப்பொலிவு பெறச் செய்ய எளிய ஹோம் ஃபேஷியல்ஸ்...


    * சூரியனில் இருக்கும் யூ.வி. ரேஸ் முகத்தில் படுவதால் தான் தோல் பாதிக்கப்பட்டு கருமை நிறமாகிறது. இதைத் தடுக்க கடல்பாசி, சந்தன எண்ணெய், பன்னீர் மூன்றையும் சில துளிகள் கலந்து தடவினால் தோல் அழகு பெறும். ஜாதிக்காயும், சந்தன பவுடரும் கூடக் கலந்து போடலாம். அல்லது கசகசாவில் லெமன் ஜூஸ் கலந்து போடலாம்.

    * பாலுடன் எலுமிச்சை சாறு கலந்து, அதனுடன் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து, முகத்தில் பூசவும். அரைமணி நேரம் கழித்து, வெந்நீரில் கழுவினால் முகம் பளபளக்கும்.


    * கசகசாவை ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம்.


    * பப்பாளிச் சாற்றை முகத்தில் தடவினால், வியர்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும்.


    * கொத்துமல்லி இலையை அரைத்து பூசினால் முகம் வசீகரமாக மாறும்.


    * எல்லா வித பழங்களும் முகத்திற்கு நல்லது. அவற்றை மசித்து முகத்தில் பூசினால் முகம் உடனுக்குடன் சுத்தமடைந்து பளபளப்பாய் காட்சி தரும்.


    * தக்காளி சாறு தடவி வந்தால் சருமத்தை மிருதுவாக்கி ஒளிரச் செய்யும்.


    * கசகசாவை மூன்று அல்லது நான்கு ஸ்பூன் எடுத்து அரைத்து வடித்த கஞ்சி அல்லது தயிரில் போட்டுக் கலக்கி உடம்பில் தேய்த்துக் குளித்துவர, சரும அரிப்பு, உடல் வெப்பம் போன்ற தொல்லைகள் தீரும்.

    Vimalthegreat likes this.
    ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,

    ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே!கண்ணம்மா


  6. #46
    vishnusree's Avatar
    vishnusree is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    9,821
    Blog Entries
    183

    Re: Beauty Tips!!! - அழகு குறிப்புகள் !!!!!!!!!!!!

    கோடையிலும் ஜொலிக்க....



    கொளுத்தும் கோடையை எதிர்கொண்டு, தங்களின் மேனியை ஜொலிக்கச் செய்ய கூல் டிப்ஸ்...


    * காலையில் நீராகாரம் நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் எட்டு தம்ளர் நீர் பருக வேண்டும். இளநீர், பசுமோர், பழரசங்கள், மூலிகைப் பானங்கள் போன்றவைகளை அருந்தவும்.


    * செம்பருத்திப்பூ, இலை, கறி வேப்பிலை, வெந்தயக்கீரை, கரிசலாங்கண்ணி இவை எல்லாம் குளிர்ச்சி தரும் பொருட்கள். இவைகளைக் கொண்டு மூலிகை எண்ணெய் தயாரித்து தலையில் பூசி வந்தால் உடம்பு சூடு குறையும். கண்ணுக்கும் குளிர்ச்சி தரும்.


    * வெந்தயக்கீரை, கொத்தமல்லி இரண்டையும் மையாக அரைத்துத் தலையில் பூசி குளித்தால் கோடையில் தலைமுடி பட்டுப்போல் மின்னும். வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியிலிட்டு கூழாக்கவும். இந்தக் கூழை ஃப்ரிஜ்ஜில் வைத்து குளிர்வித்து அதன்பின் கண் இமை, முகம், கழுத்து, தோள் பகுதிகளில் பூசிக்கொள்ளுங்கள். இயற்கையான பொலிவு கிடைக்கும்.


    * கோடையில் வெயிலில் அலைவதால் உஷ்ணக் கட்டி ஏற்படும். அதைப் போக்க ஒரு கிண்ணத்தில் மோர் ஊற்றி அதில் வேக வைத்த உருளைக் கிழங்கை மசித்துப் போட்டு கலக்கி கட்டி மீது பூசினால் கட்டி தானாகவே மறையும்.


    * நன்றாக கடைந்தெடுத்த மோரில், அரை மூடி எலுமிச்சை சாறும், வெங்காயச் சாறும் கலந்து பெருங்காயம் சேர்த்து குடித்தால் கோடை வெப்பத்தில் உடல் சோர்ந்து போகாது; களைப்பும் தெரியாது.


    * குளித்து முடித்ததும் நன்றாக துடைத்துவிட்டு, ஏதாவது பாடி டால்கம் பவுடர் அல்லது டியோடரண்ட் ஸ்பிரே உபயோகிக்கவும். இது கோடைக் காலத்தில் நாள் முழுக்க உங்களை நறுமணத்தோடும், புத்துணர்சியுடனும் வைக்கும்.


    * சாத்துக்குடி, எலுமிச்சை, தர்பூசணி, நன்னாரி போன்ற சாறுகளில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் கோடையில் சருமம் வறண்டு போகாமல் இருக்கும்.


    * அதிகமாக வேர்க்கும் கோடைக் காலத்தில் படை, வேர்க்குரு போன்றவை ஏற்பட்டு அரிப்பும், எரிச்சலுமாக அவதிப்படுவீர்கள். கான்டிட்டஸ்டிஸ் பவுடரை பூசிக் கொண்டால் இந்தத் தொல்லை இருக்காது.

    * எண்ணெய், மசாலா, காரம் சேர்த்த உணவு வகைகளை கோடையில் தவிர்ப்பது நல்லது.


    * இரவில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெந்தயத்தை மென்று திங்க உடம்பு உஷ்ணம் குறையும்.


    * நுங்கு சாற்றையும், வெள்ளரிச் சாற்றையும் உடல் முழுவதும் பூசி குளித்தால் கோடையில் வறண்ட சருமம் மிருதுவாகும்.

    ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,

    ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே!கண்ணம்மா


  7. #47
    vishnusree's Avatar
    vishnusree is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    9,821
    Blog Entries
    183

    Re: Beauty Tips!!! - அழகு குறிப்புகள் !!!!!!!!!!!!

    ஸ்லிம்மான இடைக்கு......



    ஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக்கொள்ளவே டீன்-ஏஜ் பெண்கள் விரும்புகிறார்கள். குச்சி போல் இருப்பதற்காக டயட் என்ற பெயரில் நிறையப் பேர் பட்டினி கிடப்பார்கள். நம் உடலுக்கு கலோரி, புரதம், இரும்பு மற்றும் கால்சியம் மிகவும் அவசியம். ஒவ்வொரு சத்தும் நம் உடலுக்கு என்னென்ன வேலைகள் செய்கிறது மற்றும் அதனை எவ்வாறு உட்கொள்ளலாம் என்று ஒவ்வொரு பூவையரும் தெரிந்துகொள்வது அவசியம்.


    கலோரி:


    பெண் வயதுக்கு வந்தவுடன் அதிகமான கலோரி சத்துக்கள் தேவைப்படும். 13-18 வயதுள்ள பெண்களுக்கு 2,200 கலோரிகள் தேவை. கலோரிகளை தினசரி டயட்டில் எப்படி சேர்ப்பது?


    பருப்பு மற்றும் கடலை வகை உணவு வகைகளை சாப்பாட்டுடன் சேர்த்துக்கொள்ளலாம்.


    பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்புகள் சாப்பிடலாம். தினமும் மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா போன்ற பழங்களை சாப்பிடலாம்.


    புரதம்:


    பருவ வயதில் புரதச் சத்து மிகவும் அவசியம். புரதம் அளவு குறைந்தால் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் உபாதைகள் ஏற்படும். மேலும் உடலில் உள்ள ஹார்மோன், என்சைம் மற்றும் ஜீரண சக்தி குறைந்து போகும். டீன் ஏஜ் பெண்கள் தினமும் 50 கிராம் புரதச் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.


    தினமும் ஒரு கப் கொண்டைக் கடலை அல்லது காராமணி போன்றவற்றை வேக வைத்து சாப்பிடவும்.


    தினமும் ஒரு டம்ளர் பால் குடிக்கலாம். பால் பிடிக்காதவர்கள் தயிர் அல்லது பாயசம் சாப்பிடவும்.


    சோயா உணவுகள், கடலை மற்றும் பருப்பு (பாதாம், முந்திரி) வகைகளை சாப்பிடலாம்.


    இரும்புச் சத்து:


    தினமும் ஏதேனும் ஒரு கீரை வகையை 100 கிராம் சாப்பிடலாம்.


    சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து டீ, காபி பால் குடிக்கலாம்.


    உலர்ந்த திராட்சை மற்றும் பேரீச்சம் பழங்கள் தினமும் சாப்பிடுவதால் உடலில் இரும்பு சத்து அதிகமாகும்.


    முளை கட்டிய பயறு மற்றும் வைட்டமின் 'சி' அதிகமுள்ள நெல்லிக்காய், கொய்யா, எலுமிச்சை போன்ற பழங்களை சாப்பிடலாம்.


    கால்சியம்:


    கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. கால்சியம் சத்துக் குறைவதால் எலும்பு மற்றும் பற்கள் வலுவிழந்து சீக்கிரமே தேய்ந்து விடும்.


    தினமும் ஒரு லிட்டர் பால் குடிப்பது அவசியம்.


    வாரத்தில் மூன்று நாட்கள் ஏதேனும் ஒரு வகைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.


    ராகி, எள் போன்றவற்றில் கால்சியம் நிறைய இருக்கிறது.


    அதிகக் கொழுப்புச் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதால் உடலில் உள்ள கால்சியம் குறையும். அதனால் முடிந்த வரை எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ளலாம்.

    ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,

    ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே!கண்ணம்மா


  8. #48
    vishnusree's Avatar
    vishnusree is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    9,821
    Blog Entries
    183

    Re: Beauty Tips!!! - அழகு குறிப்புகள் !!!!!!!!!!!!

    கறுப்பு சருமம் தான் ஆரோக்கியமானதா?!




    செக்கச்சிவந்த மேனியைத்தான் இன்றைய தலைமுறையினர் பெரிதும் விரும்புகிறார்கள். கறுப்பாக இருப்பவர்கள், 'ஏம்மா என்னை மட்டும் கறுப்பா பெத்த?' என்று தங்களது அம்மாவிடம் கோபித்துக் கொள்கிறார்கள். இப்படி, கறுப்பு நிற தேகத்தை வெறுப்பவர்கள் மத்தியில் ஒருவித தாழ்வு மனப்பான்மையே ஏற்பட்டு விடுகிறது. சிவப்பாக இருப்பவர்கள் மட்டும்தான் அழகு என்ற கருத்து அவர்களது ஆழ்மனதில் பதிந்து போய்விடுகிறது. ஆனால், கறுப்பானவர்கள் அதற்காக கவலைப்பட வேண்டாம் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.


    * கறுப்பாக இருந்தாலும் 'களை'யாக இருப்பவர்கள் பலர் உண்டு. ஒருவருக்கு வெறும் வெள்ளை தோல் மட்டும் இருந்துவிட்டால் போதாது. முகம் களையாக இருப்பதும் அவசியம். அப்படி முகமும், உடல் அமைப்பும் களையாக-வசீகரமாக இருந்தால் தான் ஒரிஜினல் அழகு. அந்தவகையில், விதவித அலங்காரங்களும், நகைகளும் களையான கறுப்பு தேகம் கொண்டவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும்.


    * பொதுவாக கறுப்பு நிறம் கொண்டவர்களுக்கு அதிகமாக முகப்பரு வருவதில்லை. சிவப்பாக இருப்பவர்கள் பலரும், முகம் முழுவதும் முகப்பரு வந்து அவதிப்படுவதை நீங்களே கண்கூடாக பார்க்கலாம்.


    * கறுப்பாக இருப்பவர்கள், அவர்களது நிறத்திற்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய, உடல்வாகுக்கு பொருந்தும் ஆடைகளையும், அலங்காரத்தையும் செய்து கொண்டால் அவர்களை விட அழகானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.


    * வெளிர் நிறத்திலான ஆடைகள், எளிய அலங்காரம் போன்றவை கறுப்பானவர்களை மேலும் அழகாகக் காட்டும். அத்துடன், புன்சிரிப்பும், பொன் நகையும் கூட அவர்களுக்குத்தான் இன்னும் அழகாகத் தோன்றும். வெள்ளைக்கல் பதித்த நகைகள், தங்க நகைகள் போன்றவை சிவப்பானவர்களை விட, கறுப்பானவர்களுக்குத்தான் எடுப்பாகத் தோன்றும்.


    * வெள்ளையானவர்களின் முகத்தில் சிறு மருவோ, கட்டியோ எது வந்தாலும் அப்பட்டமாக வெளியே தெரியும். ஆனால் கறுப்பானவர்களுக்கு அந்த பிரச்சினை இருப்பதில்லை.


    * சில பெண்கள், அடுத்த மாதம் எனக்குத் திருமணம், நான் கறுப்பாக இருக்கிறேன், ஏதாவது செய்து என்னை வெள்ளையாக்குங்கள் என்று கூறுவார்கள். இப்படிப்பட்டவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். பிறக்கும்போதே கறுப்பானவர்கள் ஒரு சில முறைகளால் லேசாக சிவப்பாக ஆகலாம். ஆனால் அதுவும் அதிகம் எதிர்பார்க்க முடியாது. முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டுமானால் பல சிகிச்சைகள் உள்ளன. திடீரென சிவப்பாக்க எந்த முறையும் இல்லை. எனவே, உடனடியாக சிவப்பாக்க வேண்டும் என்று எந்த அழகுக் கலை நிபுணரையும் நிர்ப்பந்திக்க வேண்டாம்.


    * சருமத்திற்கும் உணவு தேவைப்படுகிறது. அது ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும். அதாவது, வாரத்தில் ஒரு நாளாவது சருமத்திற்கு முல்தானி மெட்டி, சந்தனம், தயிர், மஞ்சள், அரிசி மாவு, தக்காளிச் சாறு, எலுமிச்சை சாறு போன்ற எதையாவது ஒன்றை தடவி ஊற விட்டு கழுவி வந்தால் இயற்கையான முறையில் - அதேசமயம் எளிய முறையில் உங்கள் அழகைப் பேணலாம்.


    * கறுப்பான சருமம் என்று கவலைப்படாமல், ஆரோக்கியமான சருமம் என்று சந்தோஷப்படுங்கள். அதுதான் உண்மை.


    நீங்களும் கறுப்பான தேகம் கொண்டவர் என்றால் - உங்களிடம் அதுபற்றிய தாழ்வு மனப்பான்மை இருந்தால் இன்றே மறந்துவிடுங்கள். கறுப்பே சிறந்த அழகு!

    Vimalthegreat likes this.
    ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,

    ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே!கண்ணம்மா


  9. #49
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    Re: Beauty Tips!!! - அழகு குறிப்புகள் !!!!!!!!!!!!

    முகத்திற்கு அழகு தரும்கடுகு ஸ்கரப்
    வீட்டில்சமையலில் பயன்படும் கடுகு, சருமத்திற்கு மிகவும்ஆரோக்கியமானது. இந்த கடுகை வைத்து முகத்திற்கு ஸ்கரப் செய்தால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும்.

    * ஒரு டேபிள் ஸ்பூன் கடுகில் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ்அல்லது லாவண்டர் எண்ணெயை விட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனைமுகத்திற்கு தடவி, நன்கு மென்மையாக 3-4 நிமிடம் தேய்க்க வேண்டும். பின் அதனை கழுவிட வேண்டும். இதனால் சருமத்தில்உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

    * ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் தேன்மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து,முகத்தில் தடவி, சற்று நேரம் மசாஜ் போல் செய்யவேண்டும். பின் அதனை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில்உள்ள இறந்த செல்களும் நீங்கிவிடும்.

    * 1 டேபிள் ஸ்பூன் கடுகு மற்றும் 2டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து, முகத்திற்குஸ்கரப் செய்ய வேண்டும். இந்த முறையால், கடுகுநிச்சயம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிடும். கடுகு உடன் கற்றாழையைகலந்து செய்வதால் சருமத்திற்கு தேவையான ஈரப்பசை கிடைப்பதோடு, முகத்தில் உள்ள பிம்பிள், சரும துளைகளில் உள்ளதூசிகள் போன்றவை போய்விடும்.

    * ஒரு டேபிள் ஸ்பூன் மில்க் கிரீம் மற்றும் 1 டேபிள்ஸ்பூன் கடுகு சேர்த்து, முகத்திற்கு தடவி, 3-4 நிமிடம் தொடர்ந்து தேய்த்து, பின் கழுவ வேண்டும்.இதனால் முகத்தில் பொலிவோடு காணப்படுவதோடு, ஸ்கரப்பிற்குப்பின் சருமத்தின் நிறம் சற்று கூடும்.

    With Love,
    Priya

  10. #50
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    Re: Beauty Tips!!! - அழகு குறிப்புகள் !!!!!!!!!!!!

    அம்மான் பச்சரிசி (Euphorbia hirta)

    அம்மான் பச்சரிசிச் செடியை நன்கு கழுவி நீர் விட்டு அரைத்து 20 கிராம் பாலில் கலக்கி, தினம் இருவேளை பருகி வர தாய்மார்களுக்குப் பால் சுரக்கும்.

    முகத்தில் பூசி வர, முகப்பரு, எண்ணெய்ப்பசை ஆகியவை மாறும்.

    காலில் பூசி வரக் காலாணி, பித்த வெடிப்பு ஆகியன தீரும்.

    மருக்கள் மீது பூச அவை உதிரும்.

    (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து).


    With Love,
    Priya

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter