Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


  1. #91
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    முகத்திற்கு வீட்டில் செய்யக்கூடிய மசாஜ்

    ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கவும் மசாஜ் உதவும். முகத்தை மசாஜ் செய்ய நீங்கள் பார்லருக்குத் தான் போக வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.

    முகத்திலிருக்கும் உயிரற்றுப்போன அணுக்களை நீக்கவும், முகத்தில் கண், மூக்கு, உதடு போன்ற மிருதுவான பகுதிகள் இருப்பதால் முகத்துகு மசாஜ் செய்ய கூடுதல் கவனம் தேவை. கண்கள் தவிர பிற பகுதிகளுக்கு கீழிருந்து மேல்புறமாகத்தான் மசாஜ் செய்யவேண்டும். கண்களுக்கு மட்டும் அதை சுற்றியுள்ள பகுதியில் வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும்.

    முகம் மொத்தமாக சேர்த்து 20 நிமிடம் வரை மசாஜ் செய்யலாம். மாதத்துக்கு ஒருமுறையாவது மசாஜ் செய்யுங்கள். பஞ்சில் கிலென்சிஸ் மிக் அல்லது தயிர் தோய்த்து தடவி முகத்தை சுத்தப்படுத்துங்கள் பேன்ஸி கடைகளில் பல்வேறு பிரண்ட்களில் (Brand) நரிஸிங் க்ரீம் கிடைக்கிறது. உங்களுக்கு பொருந்தும் க்ரீமை தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.

    பால், ஏடு, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றையும் உபயோகித்து மசாஜ் செய்யலாம். நரிஷிங் க்ரீமை முகம் முழுக்க பரவவிட்டு தடவிக்கொள்ளுங்கள். கழுத்தில் தொடங்கி கன்னம், தாடை, கண், மூக்கு என்று ஒவ்வொரு பகுதிக்கும் நேரம் ஒதுக்கி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
    contd..



    Sponsored Links

  2. #92
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    ஒவ்வொரு பகுதியையும் நான்கிலிருந்து ஆறு தடவை செய்யலாம். மசாஜ் செய்து முடித்ததும் ஒரு கைகளாலும் கன்னத்தை லேசாக தட்டுங்கள். (சதை மேல் நோக்கி அழுத்துபடி தட்ட வேண்டும்.) பிறகு இரு கைகளால் முகத்தை சிறிது நேரம் மூடிக் கொள்ளுங்கள். நம் தோலுக்கு ஊட்டங்களை உறிஞ்சிக் கொள்ளுங்கள்.

    நம் தோலுக்கு ஊட்டங்களை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையிருப்பதால் நரிஷிங் க்ரீம், பாலேடு போன்றவற்றிலிருக்கும் ஊட்டங்களை எளிதில் உறிஞ்சிக் கொள்ளும். எல்லாம் செய்த பிறகு வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டால் முகத்தை துடையுங்கள். பிறகு பேஸ் ஸ்கிரப் அல்லது அரிசிமாவை பால் கலந்து பேஸ்டாக்கி முகத்தில் ஐந்து நிமிடங்கள் வரை தேய்க்க வேண்டும்.

    பின் மூக்கின் ஓரங்களில் இருக்கும் பிளாக் ஹெட்களை அதற்கான உபகரணம் பயன்படுத்தி நீக்க வேண்டும். ஆழமாக இருக்கும் பிளாக் ஹெட்களை நீக்கும் முயற்சி வேண்டாம் வேறுவிதமான பாதிப்புகளை உருவாக்கிவிடும். அதற்கு அழகுக் கலை நிபுணரைத்தான் அணுக வேண்டும்.

    மேற்சொன்ன மசாஜ் முறைகள் உலர்ந்த மற்றும் சாதாரண சருமத்தினருக்கு மட்டும்தான் பொருந்தும். முகத்தில் பரு இருக்கும் பெண்கள் சுயமாக மசாஜ் செய்யக்கூடாது. எல்லாம் முடிந்த பிறகு முகத்தில் முல்தானி மெட்டியில் சிறிது பால் குழைத்து பேஸ்பேக் தடவி உலர விடுங்கள்.

    பத்து நிமிடம் போன பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிவிடவும். சருமம் மினுமினுப்பதைக் கண்டு பூரித்துப் போவீர்கள்.


  3. #93
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கரும்புள்ளிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேங்காய் பால்

    முகத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் கலக்கல் சாறு ட்ரீட்மெண்ட்...

    கேரட் சாறு-1 டீஸ்பூன்,
    தேங்காய் பால்-1 டீஸ்பூன்...

    இரண்டையும் கலந்து முகத்துக்கு போடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து அலம்புங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படி செய்து வரவேண்டும்.

    உங்கள் முகத்தை மெருகூட்ட ஒரு `பளிச்' பேக் இருக்கிறது.

    முல்தானிமட்டி-1 டீஸ்பூன்,
    தேங்காய் பால்-1 டீஸ்பூன்...

    இரண்டையும் கலந்து முகத்துக்கு `பேக்' போடுங்கள். வாரம் ஒருமுறை இந்த `பேக்' போட்டு வாருங்கள். விரைவிலேயே அழகு மாற்றங்கள் பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணையை முல்தானிமட்டி ஈர்த்து விட, சருமத்தை தேங்காய் பால் மிருதுவாக்கிவிடும்.
    contd..



  4. #94
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    முகத்தில் தோன்றும் கரும்புள்ளிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு அசத்தல் `பேக்' இருக்கிறது.

    உருளைக்கிழங்கு ஜுஸ்-1 டீஸ்பூன்,
    தேங்காய் பால்-1 டீஸ்பூன்,
    பயத்த மாவு-1 டீஸ்பூன்...

    மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முக்தது `பேக்' போடுங்கள். காய்ந்ததும் அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த `பேக்' போட்டால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும்.


  5. #95
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கடலை பருப்பு ஃபேஸ் பேக்

    தோலுடன் இருக்கும் கடலை பருப்பு அரை கிலோ,
    துளசி இலை 50 கிராம்,
    வேப்பங்கொழுந்து 5 கிராம்...

    இவற்றை நிழலில் உலர்த்தி, நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு பேக் போட்டு 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள்.

    வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.

    எண்ணை வடிகிற முகம் என்றாலே, பருக்களின் தொந்தரவும் இருக்கும். பல தொல்லையால் அவதிப்படுகிறவர்களுக்கு கடலைபருப்பில் அட்டகாசமான சிகிச்சை இருக்கிறது.

    கடலைபருப்பு 1 ஸ்பூன்,
    மிளகு நான்கு- இவற்றை ஏடெடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுத்து அரைத்து கொள்ளுங்கள். இதனுடன், கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள்.

    பிறகு, இதை முகத்தில் பேக் ஆக போட்டு, உலர்ந்ததும் அலசுங்கள். பருக்கள் இருக்கும் இடத்தில் மட்டும் அவற்றை மூடுவது போல் கொஞ்சம் அதிகமாகப் பூச வேண்டும். தொடர்ந்து இப்படிச் செய்து வாருங்கள்... பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.


  6. #96
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    குளிர்காலத்தில் பொடுகுத் தொல்லையைத் தடுக்கும் ஹேர் மாஸ்க்குகள்!

    குளிர்காலத்தில் சருமம் வறட்சி அடைவதைப் போல் ஸ்காப்பும் அதிகம் வறட்சி அடையும். இதற்கு காரணம், குளிர்காலத்தில் வீசும் வறட்சியான காற்று தான். இப்படி ஸ்கால்ப் வறட்சியானால், பொடுகுத் தொல்லை ஆரம்பமாகிவிடும்.

    ஆகவே குளிர்காலத்தில் பொடுகுத் தொல்லையைத் தடுக்க சருமத்தைப் பராமரிப்பது போன்றே கூந்தலையும் சரியாக பராமரிக்க வேண்டும். அதிலும் கூந்தலுக்கு வாரம் ஒருமுறையாவது மாஸ்க் போட்டு வந்தால், பொடுகு பிரச்சனை நீங்குவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.

    சரி, இப்போது பொடுகுத் தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் சில ஹேர் மாஸ்க்குகளைப் பார்ப்போமா!!!

    எலுமிச்சை மற்றும் முட்டை பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு பௌல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் பாதி எலுமிச்சையை பிழிந்து நன்கு கலந்து, தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து ஷாம்பு போட்டு அலசினால், தலையில் உள்ள பொடுகானது விரைவில் போய்விடும்.
    contd..



  7. #97
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தயிர், எலுமிச்சை மற்றும் கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன் தயிருடன், 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு கலந்து, ஸ்கால்ப் மற்றும் கூந்தலில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும்.

    ஓட்ஸ் மற்றும் பால் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன் தேவையான அளவு பால் சேர்த்து ஓரளவு நீர்மமாக செய்து, தலையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

    வாழைப்பழம், எலுமிச்சை மற்றும் எண்ணெய் நன்கு கனிந்த வாழைப்பழத்தை நன்கு மசித்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிசச் சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலைக்கு மாஸ்க் போட்டால், பொடுகு நீங்குவதுடன், கூந்தல் வறட்சி நீங்கி முடியானது பளபளப்புடன் இருக்கும்.

    எலுமிச்சை மற்றும் தயிர் தயிரில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.


  8. #98
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    முகத்திற்கு பவுடர் போட போறீங்களா?

    சிலர் எவ்வளவுதான் நன்றாக மேக்கப் போட்டிருந்தாலும் சிறிது நேரத்தில் அவர்களது முகத்தில் மேக்கப் மங்கத் தொடங்கும். இதற்குக் காரணம் அவர்கள் பயன்படுத்தும் பவுடர்தான். சில வாசனைக்காக மட்டுமே பவுடரை பயன்படுத்தப்படுகின்றனர்.

    சிலருக்கு பவுடர் தோலில் திட்டுத் திட்டாக ஒட்டிக் கொண்டு முகத்தையேக் கெடுத்து விடும். மேலும் சிலருக்கு பவுடர் போடவேத் தெரியாது. முகத்தை கழுவி நன்கு துடைத்து விட்டு பின்னர்தான் பவுடர் போட வேண்டும். இல்லை என்றால் உங்கள் முகம் பவுடராலேயே கெடுவது நிச்சயம்.

    மேலும் சருமத்திற்கு ஏற்ற பவுடரைப் பயன்படுத்த வேண்டும். முதலில் ஒரு க்ரீமை போட்டுவிட்டு அதன் மேல் லேசாக பவுடர் போடுவது நல்லது. வெறும் முகத்தில் பவுடர் போட்டால் வெகு நேரம் நிக்காது. அதற்காகத்தான் முதலில் க்ரீம் போடச் சொல்கிறார்கள். முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிவிட்டு பின்னர் மேக்கப் போட ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்.

    Last edited by chan; 18th Nov 2014 at 12:58 PM.

  9. #99
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    முகத்தில் உள்ள சுருக்கத்தைப் போக்க சில இயற்கை வழிகள்!!!

    வயதாகிவிட்டால் தான் சருமமானது சுருக்கத்துடன் காணப்படும். ஆனால் தற்போது 20 வயதிலேயே சருமம் சுருக்கமடைந்து முதுமைத் தோற்றத்தைத் தருகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், சரியான சரும பராமரிப்பு இல்லாதது, முகத்தை அழுத்தியவாறு தூங்குவது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்றவைகள் முக்கியமானவையாகும்.

    மேலும் சருமத்தை அதிக அளவில் வறட்சி அடைய வைத்தாலும், சருமத்தில் சுருக்கங்களானது ஏற்படும். எனவே சருமத்தை வறட்சியடையாமல் பர்த்துக் கொள்ள வேண்டும்.

    அதுமட்டுமல்லாமல், வாரம் ஒருமுறை அல்லது அன்றாடம் சருமத்தை வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்கள் கொண்டு பராமரித்து வந்தால், சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, சருமம் சுருக்கமடைவதைத் தடுக்கலாம். சரி, இப்போது சரும சுருக்கத்தைத் தடுக்கும் அத்தகைய இயற்கை வழிகளைப் பார்ப்போமா!!!


  10. #100
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தேங்காய் பால் தேங்காயை பால் எடுத்து, அதனை தினமும் முகத் தில் தடவி ஊற வைத்து, கழுவி வந்தால், சருமத்திற்கு தேவையான ஈரப்பசையானது கிடைத்து, முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.

    அவகேடோ அவகேடோவில் கொழுப்புக்கள் நிறைந்திருப்பதால், அதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும். அதற்கு அவகேடோவை மசித்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

    எலுமிச்சை எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.

    குறிப்பாக எலுமிச்சையை முகத்திற்குப் பயன்படுத்திய பின் வெளியே வெயிலில் செல்லக் கூடாது. மேலும் எலுமிச்சை சாற்றினைப் பயன்படுத்திய பின் ஏதேனும் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.

    உருளைக்கிழங்கு தினமும் உருளைக்கிழங்கைக் கொண்டு சருமத்தை துடைத்து எடுத்து வந்தால், முதுமைத் தோற்றத்தைத் தரும் முகத்தில் உள்ள பிம்பிள் மற்றும் கரும்புள்ளிகளானது நீங்கும்.
    contd..



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter