Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


  1. #101
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கிளிசரின், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் தினமும் இரவில் படுக்கும் முன் கிளிசரின், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டரை சரிசமமாக எடுத்து கலந்து, முகத்தில் தடவி வர வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமத்திற்கு தேவையான சத்துக்களானது கிடைத்து சரும சுருக்கங்களானது மறையும்.

    அன்னாசி அன்னாசிப் பழத்தைக் கொண்டு முகத்தை தேய்த்து, 10-15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சரும சுருக்கங்களானது நீங்கிவிடும்.


    Sponsored Links

  2. #102
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    இந்தப் பண்டிகைக் காலங்களில் முகத்தைக் கனக் கச்சிதமாக வைத்திருக்க இதோ சில எளிய குறிப்புகள்…
    பருத் தழும்புகளை நீக்க

    சந்தனம், பாதாம், தேன் மற்றும் தயிர் ஆகியவற்றைக் கலந்து, அந்தப் பேஸ்ட்டை தினமும் முகத்திலும் கழுத்திலும் தேய்த்து, சுமார் 10 நிமிடங்கள் கழித்து நன்றாகக் கழுவ வேண்டும்.
    பளிச் முகத்திற்கு

    தயிர் மற்றும் தேனுடன் ஒரு சொட்டு எலுமிச்சைச் சாற்றைக் கலந்து முகத்தில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள். கழுவும் போது வட்ட வடிவில் தேய்த்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

    முகத்தை மிருதுவாக்க

    பாதாம் மற்றும் பழுத்த பப்பாளி கலந்த பேஸ்ட்டை முகத்தில் நன்றாகத் தடவி, சுமார் 20 நிமிடங்கள் வரை ரிலாக்ஸாகப் படுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர், முகத்தை நன்றாகக் குழாய் நீரில் கழுவினால், முகம் மிருதுவாகும்.


  3. #103
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    மென்மையான உதடுகளுக்கு

    ஃப்ரெஷ்ஷான பால் க்ரீமை உதடுகளில் ஒரு சாஃப்ட் பிரஷ்ஷின் உதவியுடன் வட்ட வடிவில் பூசித் தடவ வேண்டும். பின், ஒரு நிமிடம் கழித்து, பன்னீர் கொண்டு கழுவ வேண்டும்.

    முகத்தில் முடிகளைக் குறைக்க

    கடலை மாவு, சிறிது மஞ்சள் மற்றும் தயிர் ஆகியவை கலந்த பேஸ்ட்டை தடவி, அது நன்றாகக் காய்ந்ததும், வட்ட வடிவில் கழுவ வேண்டும். தினமும் இதைச் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

    முகத் துளைகள் குறைய

    முட்டையின் வெள்ளைக் கரு, தக்காளி மற்றும் பாதாம் ஆகியவற்றின் கலவையை முகத்தில் தடவுங்கள். சுமார் 10 நிமிடங்களுக்குப் பின், நீரில் நன்றாகக் கழுவ வேண்டும்.


  4. #104
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    மூக்கு பளபளக்க

    மைசூர் பருப்பை ஒரு மணிநேரம் நன்றாக ஊற வைத்து, பின் அதைப் பேஸ்ட்டாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பேஸ்ட்டை மூக்கில் தடவி, அப்படியே 10 நிமிடங்கள் வரை விட்டுவிட வேண்டும். பின் ஒரு நிமிடத்திற்கு அதை நன்றாகத் தேய்த்து, பின் நீரில் கழுவ வேண்டும்.

    பளபளப்பான முடிக்கு

    தலை முடிக்கு டை அடிக்கும் முன், முடியில் பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவ வேண்டும். இதனால் உங்கள் நெற்றியில் தேவையில்லாமல் டையினால் ஏற்படும் கறைகளைத் தவிர்க்கலாம்


  5. #105
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பளபளக்கும் சருமத்திற்கு பப்பாளி

    முகத்தில் எப்போது பார்த்தாலும் எண்ணெய் வழிந்து டல்லாக இருக்கிறோமே என்று கவலைப் படுகிறவர்களுக்காகவே இந்த பப்பாளி கூழ் மசாஜ்... பப்பாளி பழ தோலை சீவி கூழாக்குங்கள்.

    இந்த கூழ் - ஒரு டீஸ்பூனுடன்,
    முல்தானி மட்டி - அரை டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள்.

    இதை முகத்தில் பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும். அதோடு, மேனியை சிவப்பாக்கும் மந்திரமும் இருக்கிறது. இந்த மசாஜில்! ஆண்களின் முகம் போல் சொரசொரப்பாக இருக்கும் சிலரின் முகம், அவர்களுக்கான சிறப்பு மருந்து இருக்கிறது பப்பாளியின் தோலில்.

    பப்பாளி தோலை வேகவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கூழை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்து வந்தால், தொடத் தொட மிருதுவான சருமம் கிடைக்கும். கண்ணுக்குக்கீழ் கருவளையம், கருமை படர்தல், கன்னத்தில் கருந்திட்டு என்று கருமை ஆக்கிரமித்த பகுதிகளை நார்மல் நிறத்துக்குக் கொண்டு வருவதில் பப்பாளி ஒரு நிபுணர்.

    சோற்றுக் கற்றாழை இலை ஒன்றின் ஜெல்லுடன் பப்பாளி கூழ் - 1 டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இதை கழுத்திலிருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் நன்றாகத் தேய்த்து, அது நன்றகாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள். வாரம் இருமுறை இந்த சிகிச்சை செய்தாலே கருப்பெல்லாம் காணாமல் போய்விடும். (நார்மல் சருமம் கொண்டவர்களும் இதை ஒரு பேஸ் பேக் ஆக உபயோகிக்கலாம்!


  6. #106
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    அதிகமாக வறண்டு போகும் தன்மை கொண்ட சருமம் உடையவர்கள், குளிக்கும் நீரில் சில சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டுக் குளிக்கலாம். சாதாரணமாக நாம் சாப்பிடும் மஞ்சள் வாழைப்பழத்தை நன்றாகக் கூழாக்க வேண்டும். இதில் பொட்டாசியம் சத்து அதிகம் இருக்கிறது. இத்துடன் தேன் கலந்து முகத்திலும், கழுத்திலும் பேக் போடவேண்டும். வெறும் அரை வாழைப்பழத்திற்கு 2 டீ ஸ்பூன் தேன் சேர்ப்பது போதுமானது. இந்த பேக்கை 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைத்துப் பின் முகம் கழுவினால் சருமத்திற்கு நல்ல நரிஷ்மெண்ட் கிடைக்கும்.

    Last edited by chan; 20th Nov 2014 at 11:39 AM.

  7. #107
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    'அவகாடோ' என்று ஒரு பழம் இருக்கிறது. இதை பட்டர் ஃப்ரூட் என்போம். இதன் விலையும் மலிவுதான். வெளியில் பச்சை நிறமாகவும் உள்ளே வெண்ணெய் போலவும் இருக்கும். இந்த வெண்ணெய் மாதிரி இருக்கும் கூழை எடுத்து முகத்தில் தேய்த்துக் கழுவவும். இந்தப் பழதை உபயோகித்துத்தான் அழகு நிலையங்களில் ஸ்பெஷல் ஃபேஷியல் செய்யப்படுகிறது. இது உலர் சருமத்திற்கு மிகவும் உகந்தது.


  8. #108
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பேரீச்சம்பழம், பாதாம் பருப்பு இவைகளைக்கூட முகத்தில் தடவ உபயோகிக்கலாம். இவற்றை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும். உடனடியாக முகத்திற்குப் போட வேண்டுமென நினைத்தால் வெந்நீரில் ஊறவைக்க வேண்டும். இவற்றை நன்றாக அரைத்துப் பால் அல்லது பால் பவுடர் கலந்து முகத்தில் ஊறவைக்கவும். 15 நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை ஊற வைத்துக் கழுவலாம்.


  9. #109
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    ஒரு முட்டையை உடைத்துப் பால் சிறிதளவு, ரோஜா ஆயில், அல்லது லாவண்டர் ஆயில் (கடைகளில் கிடைக்கும்) இரண்டு அல்லது மூன்று சொட்டுக்கள் சேர்த்து முகத்தில் தடவவும். பத்து நிமிடம் கழித்து முகத்தைக் குளிர்ந்த நீரில் கழுவினால் உலர் சருமத்திற்கான ஊட்டச்சத்து முட்டையின் மூலம் கிடைக்கும். முட்டை உபயோகிக்க முடியாதவர்கள் புரொட்டீன் கலந்த பொடியை உபயோகிக்கலாம்.


  10. #110
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    லெஸிதின் பவுடர் என்று புரொட்டீன் பவுடர் மருந்துக் கடைகளில் கிடைக்கும். அவற்றில் இரண்டு ஸ்பூன் எடுத்துப் பால் கலந்து முகத்தில் தடவிக் கழுவினால் வறண்ட சருமம் நார்மலாகும். இதை ஒரு நாள்விட்டு ஒரு நாள் செய்து வந்தால் இயற்கையிலேயே அழகாகி விடுவீர்கள். இவற்றில் ரசாயனக்கலவை எதுவும் இல்லாததால் துணிந்து பயன்படுத்தலாம். பொதுவாக உலர் சருமம் உடையவர்கள் குளிர்ந்த நீரில், சாதாரண நீரில் முகம் கழுவுதல் நல்லது. முகத்துக்குப் பேக் போட, காய்ச்சிய பாலைப் பயன்படுத்த வேண்டும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter