Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


  1. #111
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    ‘‘தழும்புகளில் பல வகை உண்டு. குழந்தை தவழும் போது ஏற்படும் தழும்பு, கால்களை மடக்கி ஒரே பொசிஷனில் உட்கார்வதால் உண்டாகும் தழும்பு மற்றும் நிற மாற்றம், பரு வந்து போன இடத்துத் தழும்பு, அம்மைத் தழும்பு, பிரசவத்துக்குப் பிறகான தழும்பு என அடுக்கிக்கொண்டே போகலாம். எதையுமே ஆரம்பத்திலேயே கவனித்து, சிகிச்சை அளித்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்’’ என்கிறார் அழகுக்கலை ஆலோசகரும், அழகு சாதனத் தயாரிப்பாளருமான ராஜம் முரளி. எந்தெந்தத் தழும்புகளை எப்படிப் போக்கலாம் என டிப்ஸ் தருகிறார் அவர்.


    Sponsored Links

  2. #112
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பருத் தழும்பு

    பருக்களைக் கிள்ளவோ, தொடவோ கூடாது. ஃபேஷியல் செய்யக் கூடாது. சாதாரணமாக வரும் பருவானது, தானாகவே சரியாகி விடும். அதைக் கிள்ளி, அழுத்தித் தொந்தரவு செய்தால்தான் பிரச்னையே! சூடான எதையும் சாப்பிட வேண்டாம். கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்க வைத்து, ஆறிய தண்ணீரைக் குடிக்கவும்.

    நான்கு பல் பூண்டை அரைத்து, வலியுள்ள பழுத்த பருவின் மேல் வைக்கவும். அதற்கு மேல் கீழே குறிப்பிட்டுள்ள பேக் போடவும். சிறிது வேப்பந்தளிர் எடுத்துக் கையால் கசக்கி, சாறு எடுக்கவும். கஸ்தூரி மஞ்சள் அல்லது கடலை மாவில் விரலைத் தொட்டு, வேப்பம் சாற்றையும் தொட்டு, பரு மேல் பொட்டுப் போல வைக்கவும். பருக்கள் பரவலாக இருந்தால், இதையே முகம் முழுக்கத் தடவவும்.


  3. #113
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    அம்மைத் தழும்பு

    பருக்கள் வந்து மறைந்த பிறகோ, அம்மை வந்து போன பிறகோ, சிலருக்கு முகமெல்லாம் பள்ளம் பள்ளமாக இருக்கும். வேப்பந்தளிர், புதினா, துளசி - மூன்றையும் சம அளவு எடுத்து சாறு எடுக்கவும். அதில் கடலை மாவு அல்லது பார்லி பொடி கலந்து, பள்ளமான தழும்புகளின் மேல் ஆழமாக வைத்து, 2 விரல்களால் அழுத்தி, மேல் பக்கமாக இழுத்து விடவும். தொடர்ந்து இப்படிச் செய்து வர, பள்ளங்கள் சமனாகும். அதன் பிறகு பாதாம் ஆயில் தடவி வர, சருமம் ஒரே நிறத்துக்கு மாறும்.


  4. #114
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பொட்டு வைத்த தழும்பு

    சிலருக்கு குங்குமம், சாந்து, ஸ்டிக்கர் பொட்டு என எதுவுமே ஒத்துக் கொள்ளாமல், அலர்ஜியாகி, அந்த இடம் நிறம் மாறி, தழும்பாகும். வெள்ளை எள்ளுடன், கசகசா, பயத்தம் பருப்பு சேர்த்து ரவை மாதிரி பொடித்து, பொட்டு வைக்கிற மாதிரியே ‘திக்’காக வைத்துக் கொண்டு இரவு தூங்கி, காலையில் கழுவவும்.


  5. #115
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    டீன் ஏஜ் தழும்பு

    டீன் ஏஜில் தோள் பட்டையிலும், முதுகிலும் திடீரென வரி, வரியாகத் தெரிய ஆரம்பிக்கும். கருப்பாக இருப்பவர்களுக்கு வெள்ளையாகவும், வெள்ளையாக இருப்போருக்கு கருப்பாகவும் இந்தக் கோடுகள் தெரியும். இதற்கெல்லாம் எந்த சிகிச்சையும் தேவையில்லை. சமதளத் தரையில் படுத்துக் கொண்டு, மூச்சை இழுத்து, வெளியே விடுகிற பயிற்சியை செய்தாலே போதும். கைகளை கடிகாரச் சுற்றிலும், பிறகு அதற்கு எதிர் திசையிலும் சுழற்றுகிற பயிற்சியை செய்தால், கைகளில் உள்ள தழும்பு வரிகள் சரியாகும்


  6. #116
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பிரசவத் தழும்பு

    கர்ப்பம் தரித்த 6வது மாதத்தில் இருந்து, அதாவது வயிறு பெரிதாகத் தொடங்கியதும், சருமத்தில் லேசான மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். தினமும் குளிக்கும் போது, வயிற்றுப் பகுதியில் நல்லெண்ணெய் தடவி, பொறுக்கும் அளவு சூடான தண்ணீரை அதன் மேல் ஸ்பிரே செய்ய வேண்டும். இது பிரசவத்துக்குப் பிறகு தழும்புகள் வராமலிருக்க உதவும்


  7. #117
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பேசியல் பழக்கூழ்:

    கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை பழம் இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்கவேண்டும். அதன் பிறகு அரைத்து இந்த கலவையுடன் அரை ஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளவும். இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டு 25 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும். நாளடைவில் வெயிலினால் இழந்த நிறத்தை திரும்பவும் பெற்றுவிடலாம்.


  8. #118
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    ஆப்பிள்:

    ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சமநிலையில் எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசம் அடைந்து குளுமையாகவும் இருக்கும்.


  9. #119
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    ப்ளீச் பவுடர்:

    முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு திட்டுகள் தோன்றும். கண்ணுக்கு கீழே அடர்த்தியாக கருவளையும் தோன்றும். இது போன்று உள்ள பெண்கள் பாசி பருப்பு மாவுடன் கசகசா, பாதாம், பிஸ்தா, துளசி, ரோஜா மொட்டு இவற்றை நன்கு காயவைத்து பவுடர் போன்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த பவுடரை தினமும் பாலுடன் சேர்த்து குழைத்து முகத்தில் பூசுங்கள் 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவி வந்தால் முகத்தின் கருமை காணமால் போகும்.


  10. #120
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    ரோஸ் வாட்டர் கடலைமாவு:

    இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன், 4 ஸ்பூன் பால், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும் பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும் பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகவும், இளமையாகவும் காட்சிதரும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter