Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


  1. #141
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கரும்புள்ளிகள் மறைய:

    1.எலுமிச்சை சாற்றுடன் 4 சொட்டு தேன் கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ கருபுள்ளிகள் மறையும்

    2. தினமும் குளிக்கும் போது முகத்திற்கு சோப்பு-க்கு பதில் பாசிப்பயறு மாவை தேய்த்து குளித்து வர முகம் பொலிவு பெரும், கரும்புள்ளிகள் மறையும் .

    3. தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெரும், கரும்புள்ளிகள் மறையும் .


    Sponsored Links

  2. #142
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    இளநரைக்கு எளிய முறையில் வீட்டில் இருந்தபடியே தீர்வு காணலாம். இளநரை உள்ளவர்கள் மருதாணி பொடி, தயிர், திக்கான டீ டிகாஷன், நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

    (கருவேப்பிலை, வேப்பிலை சிறிது கரிசலாங்கண்ணி கீரை,பாசி பயிறு) இதெல்லாம் காயவைத்து திரித்து வைத்து கொள்ளுங்கள். இதை மேலே குறிப்பிட்டுள்ள மெகந்தி கலவையில் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள். இப்போது அனைத்தையும் நல்ல இட்லி மாவு பதத்திற்கு கரைத்து ஒரு இரும்பு வானலியில் வைத்து இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் தலையில் தேய்த்து 1 மணிநேரம் ஊறவைத்து குளிக்கவும்.

    இந்த கலவையை தொடர்ந்து வாரம் ஒருமுறை போட்டு வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். வாரம் இருமுறை நல்லெண்ணை தேய்த்து எண்ணெய் குளியல் போட்டாலும் நரை முடி வருவதை தவிர்க்கலாம். இது உடல் சூட்டையும் தணிக்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் நல்லெண்ணை தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் கூட இளநரை வராமல் இருக்கும்.

    செடிக்கு எப்படி தண்ணீர் ஊற்றி வளர்க்கிறோமோ அப்படி தான் முடிக்கும். நிறைய எண்ணெய் தலையில் தேய்த்து மசாஜ் செய்து வாரம் இருமுறை குளித்தால் முடியும் வளரும். நல்ல ஷைனிங்கும் கிடைக்கும். முடி செம்பட்டையாகாமல் இருக்கும் கருவேப்பிலை பொடி, கறிவேப்பிலையை உணவு அதிக அளவில் சேர்த்து கொண்டால் தலை முடி கருகருவென வளரும். நரைமுடி வருவதையும் தவிர்க்கலாம்.


  3. #143
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்

    கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

    * பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.

    * ஆண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசக் கூடாது. முடி வளருவது அங்கங்கு தடைப்படும்.

    * கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

    கஸ்தூரி மஞ்சள் 50 கிராம்
    பூவரசன் வேர் 30 கிராம்
    வெள்ளெருக்கன் வேர் 25 கிராம்
    சிறுநாகப் பூ 15 கிராம்
    வெடியுப்பு 10 கிராம்
    புனுகு 10 கிராம்

    இவற்றை நீர் தெளித்து மை போல அரைக்க வேண்டும். சுத்தமான வெள்ளைத் துணியை எடுத்து, அதில் அரைத்து வைத்ததைப் பரவலாகப் பூச வேண்டும். இத் துணியை நன்றாய்க் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    தேவைப்படும் போது சுருட்டு சுற்றும் அளவுக்குத் துணியைக் கிழித்து எடுக்க வேண்டும். கிழித்த துணியைச் சுருட்டுப் போல் சுருட்டி நெருப்பில் காட்டினால் புகை வரும். அப்புகையை மூக்கினால் சுவாசிக்க வேண்டும். இதைக் காலை, மாலை இரு வேளைகளும் சுவாசித்தால் மூக்கு சம்பந்தமான எல்லா நோய்களும் குணமாகும்.

    * கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.

    * கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.

    * கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும்.

    * சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாரா.


  4. #144
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    முகபரு மறைய 10 டிப்ஸ்:

    1. தேனுடன் சிறிது லவங்க பட்டையின் தூளை சேர்த்து முகத்தில் தடவலாம்.

    2. கடுகை அதனுடன் சிறிது தேனை கலந்து முகத்தில் தடவ முகபரு நீங்கும்.

    3. தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும்.

    4. முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும்.

    5. முகபரு வராம்ல் இருக்க மாலை 1 கைபிடி வேப்பிலையை 1கப் தண்ணீரில் போட்டு காலையில் முகம் கழுவினால் முகத்தில் பரு வராது,முகம் பளிச்சிடும்.

    6. பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.
    முகபரு மறைய 10 டிப்ஸ்:

    1. தேனுடன் சிறிது லவங்க பட்டையின் தூளை சேர்த்து முகத்தில் தடவலாம்.

    2. கடுகை அதனுடன் சிறிது தேனை கலந்து முகத்தில் தடவ முகபரு நீங்கும்.

    3. தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும்.

    4. முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும்.

    5. முகபரு வராம்ல் இருக்க மாலை 1 கைபிடி வேப்பிலையை 1கப் தண்ணீரில் போட்டு காலையில் முகம் கழுவினால் முகத்தில் பரு வராது,முகம் பளிச்சிடும்.

    6. பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.
    contd....



  5. #145
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    7. பூண்டினை நசுக்கி சாற்றினை பயன்படுத்தினால் முகபரு நீங்கும்

    8. 3 மணி நேரத்திற்கு 1 முறை முகத்தை குளிர்த நீரால் கழுவுங்கள் முகம் கழுவ soap அதிகமாக பயன் படுததிர்கள்,

    9. சோற்று கற்றாழை-யில் உள்ள gel-இ முகத்தில் தடவி வர பருக்கள் மறையும் . அல்லது இவற்றை போன்ற gel பயன்படுத்தலாம்.

    10. காய்ச்சாத பாலினை முகத்தில் தடவிவர முகபரு நீங்கும்.


  6. #146
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பருக்களை நீக்க... மஞ்சள் பொடியுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் நீரை விட்டுக் கலக்கி, அந்தக் கலவையை முகத்தில் தோன்றியுள்ள பரு(க்கள்) மீது தடவுங்கள். சுமார் 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். அதேப்போல், பன்னீருடன் முல்தானி மெட்டியைக் கலந்து அதை முகம் முழுவதும் சீராகத் தடவி, அது உலர்ந்த பின்னர் முகத்தைக் கழுவினால், பருக்கள் மட்டுமில்லாமல் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் எண்ணெயும் நீங்கி விடும்.

    Last edited by chan; 4th Dec 2014 at 07:22 PM.

  7. #147
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    சருமத்தை ஒளிரச் செய்ய... கடலை மாவு, மஞ்சள், எலுமிச்சை சாறு மற்றும் பால் க்ரீம் ஆகியவற்றைக் கலந்து ஒரு பேக் செய்து உங்கள் முகத்தில் தடவ, உங்கள் முகம் நன்றாக ஒளிரும். ஆரஞ்சுத் தோலுடன் மைசூர் பருப்பு பொடி, சிறிதளவு தேன் அல்லது பால் ஆகியவற்றைக் கலந்து தடவினாலும், உங்கள் சருமம் பளபளக்கும்.


  8. #148
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பொடுகுத் தொல்லை தீர... வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, அதை பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்தப் பேஸ்ட்டை தலைமுடி வேரில் தடவி, சில மணிநேரம் கழித்து சீகைக்காய் அல்லது ஷாம்பு கொண்டு முடியைக் கழுவினால் பொடுகுத் தொல்லை குறையும். தயிருடன் வெள்ளை மிளகுப் பொடியைக் கலந்து முடி வேரில் தடவினாலும் நல்ல பலன் கிடைக்கும். சருமப் பிரச்சனையையும் இது தீர்க்கும்.


  9. #149
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    மெல்லிய கூந்தலுக்கு... தேனுடன் ஆலிவ் எண்ணெயைக் கலந்து, அதை முடியில் தடவி மசாஜ் செய்து, அரைமணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு முடியைக் கழுவ வேண்டும். முட்டைக் கருவுடன் தயிரைக் கலந்து, அக்கலவையை சிக்கலான முடியில் தடவலாம். முடியில் சிக்கு விழுந்தால், சீகக்காய் தடவினாலும் சிக்கல் விலகும்.


  10. #150
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    வளவளப்பான கை, கால்களுக்கு... உங்கள் உள்ளங்கைகள் மற்றும் பாதங்கள் சொரசொரப்பாக அல்லது வெடிப்புடன் உள்ளதா? தேன் மெழுகைத் தடவுவதன் மூலம் இதைச் சரிசெய்ய முடியும். உறங்கப் போகும் முன் பெட்ரோலியம் ஜெல்லியைக் கால்களில் தடவி, சாக்ஸுகளை அணிந்து கொள்ளவும். பின், காலையில் கால்களைக் கழுவ நல்ல ரிசல்ட் கிடைக்கும். சர்க்கரையுடன் தேனைக் கலந்து, முழங்கை, முழங்கால் உள்ளிட்ட பகுதிகளில் தடவினாலும் பலன் உண்டு.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter