Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


 1. #151
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  அழகான கூந்தலுக்கு biotin உணவுகள்

  biotin என்பது வைட்டமின் H. தினமும் உணவில் வைட்டமின் H எடுத்து கொண்டால் முடி மற்றும் நகம் உறுதியாகவும், அழகாகவும் இருக்கும்.

  புரத சத்து அதிகம் நிறைந்த உணவுகளில் biotin உள்ளது. அதாவது மரக்கறிகள், இறைச்சி வகைகள் மற்றும் சீஸ், பால் வகைகள் என்பன.

  biotin நிறைந்த உணவு பொருட்கள் கீழே,

  முட்டை, பால், சீஸ், பசளி, ஆனக்கொய்யா, கச்சான், பட்டர், திராட்சை மற்றும் தானிய வகைகள் தினமும் ஏதாவது ஒன்றை உணவில் சேர்த்து வந்தால் கூந்தல் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
  Sponsored Links
  Attached Thumbnails Attached Thumbnails அழகுக் குறிப்புகள் - Beauty Tips!-14a6f5a31796d9055bdaec9665beaca6.jpg  

 2. #152
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  குளிர் காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க...

  குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்... முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள்.

  • ஆரஞ்சு பழத்தில் சாத்துக்குடி ஒருவகையென்றால், சுளை சுளையாக காணப்படும் கமலா ஆரஞ்சு இந்த குளிர் சீசனில் அதிகமாகவே சந்தைகளில் கிடைக்கும். வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளப்படையும்.

  • பொதுவாக சருமம் வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் சாப்பிட்டால் அதிக பலன்களை அடையலாம்.

  • ஆரஞ்சு பழ தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமத்திற்கு நல்ல பலன் அளிக்கும்.

  • அரை மூடி எலுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், சருமத்தில் மினுமினுப்பும் உடம்பில் உள்ள தேவையற்ற சதைகளும் குறையும்.

  • எண்ணெய் சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து தடவ, சருமம் பளபளப்பாகும்.

  • தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும்.

  • மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் பொலிவுறும்.

  • வெளியில் செல்லும்போது வெயில் படாமல் இருக்க கையில் குடை எடுத்து சென்றால் சூரிய கதிர்களின் வெப்பத்தினால் சருமம் வறண்டு போவதை தடுக்க முடியும்.


 3. #153
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  நெற்றியில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதற்கான 6 எளிய வழிகள்!!!

  கவலை இல்லாத மனிதனே இருக்க முடியாது. இன்பம் என்ற ஒன்று இருந்தால் கண்டிப்பாக துன்பமும் இருக்கவே செய்யும். உலகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் கவலைகள் இருக்கும். பலருக்கு பண கஷ்டம் என்றால், இன்னும் பலருக்கு உடல் ரீதியான கஷ்டங்கள்.

  இன்னும் சிலருக்கு மன ரீதியான கஷ்டங்கள். இந்த ஒவ்வொரு வகையிலும் பல வகையான கஷ்டங்களை மேலும் வகை பிரிக்கலாம். மனிதனுக்கு அவ்வளவு கஷ்டங்கள் உள்ளது. இப்படி அவன் சந்திக்கும் பல கஷ்டங்களில் ஒன்று தான் தனக்கு வயதாகும் கஷ்டம்.

  ஆம், இளவட்டமாக இருக்கும் மனிதனுக்கு, எப்போது உடல்ரீதியான மாற்றங்களால் வயது அதிகரிப்பது தெரிய ஆரம்பிக்கிறதோ, அப்போதே பலருக்கும் உளவியல் ரீதியான கவலைகள் ஆட்கொள்ளும். தன் வயதை மறைத்து இளமையாக காட்சியளிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்வார்கள்.

  அப்படி ஒரு அறிகுறி தான் நம் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள். வயதாவதால் மட்டும் இது ஏற்படுவதில்லை. அதிக மன அழுத்தம் மற்றும் வேலைப்பளுவினாலும் இது ஏற்படுகிறது. இதனை பயன்படுத்தி சந்தையில் இன்று பல நிறுவனங்கள் இந்த க்ரீம், அந்த க்ரீம் என அடுக்கிக் கொண்டே போகிறது.

  நாமும் ஒன்றின் மாற்றி ஒன்றாக வாங்கிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் சீக்கிரமே ஏற்படும் முதிர்ச்சியை போக்க நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கிறோமா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

  அதேப்போல் இப்படி சந்தையில் உள்ள பொருட்களை நாடுவதை விட வீட்டிலேயே அதற்கான தீர்வை நாம் பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? இயற்கையான வழிகளில் வீட்டிலேயே உங்கள் சரும சுருக்கங்களை போக்க சில எளிய டிப்ஸ்களைப் பார்க்கலாமா?

  கடுமையான வாழ்க்கை முறை நீங்கள் சரியான வாழ்க்கை முறையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா? நீங்கள் ஆரோக்கியமாக உண்ணுகிறீர்களா? நீங்கள் சரியான நேரத்தில் தூங்குகிறீர்களா? நாள் முழுவதும் வேலை பார்த்த பின்பு மிகவும் சோர்வடைந்து விடுகிறீர்களா? உங்களைச் சுற்றி நடக்கும் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட எரிச்சல் ஏற்படுகிறதா? இதற்கெல்லாம் சேர்த்து பார்த்தால் கிடைக்கும் பதில் ஒன்று தான் - நீங்கள் சரியான வாழ்க்கை முறையை பின்பற்றாமல் இருக்கிறீர்கள்.

  40 வயது தொடங்கிய பிறகு, உங்கள் உணவுப்பழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இதை எப்படி சாத்தியமாக்குவது என குழப்பமாக உள்ளதா? உங்கள் உணவுகளில் அளவுக்கு அதிகமான பச்சை காய்கறிகளையும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் அல்லது அரை மணிநேரமாவது நடை கொடுங்கள். இதனை தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு செய்யுங்கள். உங்கள் முகத்தில் கண்டிப்பாக உங்களால் மாற்றத்தை உணர முடியும்.
  contd.. 4. #154
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  தொடர்ச்சி
  ஆலிவ் எண்ணெய் மசாஜ் சரி, இனி நெற்றியில் காணப்படும் சுருக்கங்களைப் போக்குவதற்கான சில தீர்வுகளை பார்க்கலாம். இதற்காக எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய்யை கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்.

  சிறு துளிகள் இருந்தாலே போதுமானது. சுருக்கங்கள் இருக்கும் பகுதிகளில் வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணெய்யை கொண்டு, கீழிருந்து மேல் நோக்கி, ஒரு 10 நிமிடங்களுக்கு மென்மையாக மசாஜ் செய்யவும்.

  சிறந்த பலனைப் பெற, கொஞ்சம் தேங்காய் எண்ணெயையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆலிவ் எண்ணெயுடன் சேரும் தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசராக விளங்கும். இது சருமத்திற்கு சிறந்த முறையில் நீர்ச்சத்தை அளிக்கும்.

  சிட்ரஸ் பழ மசாஜ் வைட்டமின் சி மற்றும் ஈ வளமையாக உள்ள ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள், உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.

  சருமம் மென்மையாக இருப்பதற்கு சிட்ரஸ் பழங்கள் பெரிதும் உதவி செய்கிறது. இதுப்போக, இப்பழங்களின் தோல்களும் அதே அளவிலான நன்மையை அளிக்கிறது. சுருக்கங்கள் நிறைந்திருக்கும் பகுதிகளில் மற்றும் நீண்ட காலமாக இருக்கும் கரும்புள்ளிகள் இருக்கும் பகுதிகளில் இந்த சிட்ரஸ் மசாஜை முயற்சி செய்து பார்க்கலாம்.

  வீட்டு ஃபேஷியல் மசாஜ் நெற்றியில் உள்ள சுருக்கங்களைப் போக்க ரசாயனம் இல்லாத வீட்டு ஃபேஷியல் மசாஜ்கள் பெரிதும் உதவும். உங்கள் ஃபேஸ் பேக்கை நீங்கள் தயாரிக்கும் போது, சருமத்திற்கு நீரச்சத்தை அளித்து புத்துணர்வோடு வைத்திருக்க உதவும் பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவிய பிறகு, முகத்தின் தசைகளை அசைக்காதீர்கள். ஃபேஸ் பேக் தடவப்பட்டிருக்கும் போது, முகத்தின் தசைகளை அசைத்தீர்கள் என்றால், அது நெற்றி சுருக்கங்களுக்கு ஆபத்தாய் விளையும்.

  ஆளிவிதை எண்ணெய் நெற்றியில் உள்ள சுருக்கங்களை தற்காலிகமாக நீக்க ஆளிவிதை எண்ணெய்யை பயன்படுத்தலாம். இரண்டு வாரத்திற்கு, 2-3 டீஸ்பூன் ஆளிவிதை எண்ணெய்யை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், இந்த சுருக்கங்கள் மாயமாவதை கண்டு நீங்கள் வியந்து போவீர்கள். இதற்கு மாற்றாக, நீங்கள் விளக்கெண்ணெயையும் பயன்படுத்தலாம். இதுவும் உடனடி பலனை அளிக்கும்.

  முட்டை வெள்ளைக்கருவுடன் கற்றாழை ஜெல் கற்றாழை மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு என இரண்டிலுமே வைட்டமின் ஈ வளமையாக நிறைந்துள்ளது. இதனை இளமைக்கான வைட்டமின் என்றும் கூறலாம்.

  இந்த இரண்டையும் கலந்து ஒரு பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். அதனை நெற்றியில் மெதுவாக தடவுங்கள். அதை அப்படியே ஒரு 15 நிமிடங்களுக்கு விட்டு விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.


 5. #155
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  கரட் தேன் மற்றும் லெமன்

  அவித்து மசுக்கிய காரட் 2

  லெமன் ஜூஸ் tsp

  தேன் 2tsp

  ஒலிவ் எண்ணெய் 1tsp

  அனைத்து பொருட்களையும் சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு இலேசாக பிசைந்து பின் முகத்தில் 30 நிமிடம் வரை பூசி பின் கொதித்தாறிய நீரில் கழுவவும்.

  இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் பொலிவாகவும் சிவப்பாகவும் இருக்கும்


 6. #156
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  முக சுருக்கங்களை போக்கும்ஃ பேஸ் பேக்

  தண்ணீரை அடிப்படை பொருளாக உபயோகித்து தயாரிக்கும் முக பேக்குகள் இந்த வகை பேஸ் பேக்குகள் முக சருமத்தை உறுதிப்படுத்தும். முக சுருக்கங்களை போக்கும்.

  ஆரஞ்ச் முக பேக் :

  தேன் 1 மேஜைக்கரண்டி, ஆரஞ்சு ஜுஸ் 1 தேக்கரண்டி, முல்தானி மட்டி பொடி 1 தேக்கரண்டி, ரோஜா பன்னீர் 2 தேக்கரண்டி. முல்தானி மட்டியை பன்னீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

  பிறகு இதர பொருள்களை கலந்து களிம்பாக்கி கொள்ளவும். முகத்தில் தடவி உலர்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் கலந்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும்.
  contd.. 7. #157
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  தேன் பேக் :

  தேன் 1/2 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி, முல்தானி மட்டி பொடி 2 தேக்கரண்டி, தண்ணீர் 2 தேக்கரண்டி. முல்தானி மட்டியை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

  இத்துடன் தேனையும் எலுமிச்சையும் சேர்த்து முகத்தில் தடவிக் கொள்ளலாம். கால் மணி நேரம் கழித்து கழுவி விடவும்.


 8. #158
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  ஆலிவ் ஆயில் பேக் :

  பாதாம் எண்ணெய் 1 மேஜைக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி, தண்ணீர் 2 மேஜைக்கரண்டி கார்ன்ஃபிளேக்ஸ் 1 மேஜைக்கரண்டி. இரண்டு எண்ணெய்களையும் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  தனியாக கார்ன்ஃபிளேக்ஸ்ஸை கலந்து கொள்ள வேண்டும். இதில் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் கலவை சேர்க்கவும். நன்றாக கலக்கவும். இதை முகத்தில் தடவிக் கொண்டு உலர்ந்த பின் கழுவி விடவும்


 9. #159
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  தோல் சுருக்கம் குறைய*

  தேவையான பொருள்கள்:
  தயிர்.
  தேன்.
  எலுமிச்சை பழச்சாறு.


  செய்முறை:
  2 தேக்கரண்டி தயிர் எடுத்து அதில் அரை தேக்கரண்டி தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறு கலந்து முகம், கழுத்து போன்ற இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் தோல் சுருக்கம் குறைந்து பளபளப்பாகும்.


 10. #160
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  உதட்டு வறட்சியை போக்கும் தேங்காய் எண்ணெய்

  தேங்காய் எண்ணெயில் பல்வேறு வகையான உடல்நல பயன்கள் உள்ளது. தலைமுடியில் ஆரம்பித்து பாதம் வரை அதை பயன்படுத்தலாம்.

  அது நமக்கு அளித்திடும் பல பயன்களில் ஒன்று தான் உதடு வெடிப்பிற்கான தீர்வு. இப்போது உதடு வறண்டு போகாமல் தடுக்க தேங்காய் எண்ணெயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

  • உதட்டில் வெடிப்புகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. முக்கியமான காரணமாக அமைவது வெப்பநிலை மாற்றங்கள் அல்லது உதட்டை அதிகமாக நக்குவதே.

  உங்கள் உதட்டிற்கு ஈரப்பதத்தை உண்டாக்க இயற்கையான வழியில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள். இந்த இனிப்பான எண்ணெயில் பல விதமான கனிமங்கள் அடங்கியுள்ளது. உதட்டிற்கு ஈரப்பதத்தை அளித்திட இது உதவுகிறது.
  contd..loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter