Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


  1. #161
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தொடர்ச்சி
    • 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 1 டீஸ்பூன் உப்பை கலந்து ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டு இந்த ஸ்க்ரப்பை தயாரிக்கலாம். பஞ்சுருண்டையை கொண்டு இந்த கலவையை உங்கள் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். பின் உதட்டின் மீது விரல்களை கொண்டு வட்ட வடிவில் ஒரு நிமிடத்திற்கு மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

    சிறிது நேரம் கழித்து, உங்கள் உதடு மென்மையாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இறுதியில் ஒரு துணியை கொண்டு உதட்டை துடைத்து விட்டு அதனை காய வையுங்கள்.

    • தேங்காய் எண்ணெய்யை உங்கள் உதட்டின் மீது கொஞ்சமாக தடவவுங்கள். பின் மெதுவாக மசாஜ் செய்யவும். ஒரு நாளில் இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். அல்லது உதடு வறண்டு போகும் போதெல்லாம் இதை செய்யலாம்.

    • 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயையும் ľ டீஸ்பூன் தேனையும் கலந்து கொள்ளவும். இந்த கலவையை மூடி போட்ட ஜாடியில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

    உங்கள் உதட்டிற்கு எப்போதெல்லாம் நீர்ச்சத்து தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் இதனை பயன்படுத்தலாம்.


    Sponsored Links

  2. #162
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    சரும பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும் விளக்கெண்ணெய்!!!

    என்ன தான் க்ரீம்கள், ஜெல், லோஷன்களைப் பயன்படுத்தினாலும், சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதில்லை. ஆனால் கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களை விட, இயற்கைப் பொருட்களைக் கொண்டு சரும பிரச்சனைகளுக்கு தீர்வை கண்டால், உடனடி நிவாரணத்தைப் பெறலாம்.

    அதிலும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சமையலறையில் உள்ள விளக்கெண்ணெய் மிகவும் சிறப்பான பொருள்.

    முகப்பரு, வறட்சியான சருமம், ஸ்ட்ரெட்ச் மார்க் மற்றும் சூரியக்கதிர்களால் சருமத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு விளக்கெண்ணெய் நல்ல தீர்வை வழங்கும்.

    ஏனெனில் அதில் ஆன்டி-செப்டிக் மற்றும் கிளின்சிங் தன்மை நிறைந்திருப்பதால், இது சருமத்தில் ஏற்படும் அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் தீர்வைத் தரும். சரி, இப்போது விளக்கெண்ணெய் கொண்டு எந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வைக் காணலாம் என்று பார்ப்போம்.
    contd..



  3. #163
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தொடர்ச்சி

    முகப்பரு முகப்பரு வந்தால் சருமத்தில் அரிப்புகள் மற்றும் காயங்கள் ஏற்படும். இதனாலேயே பருக்கள் முகத்தில் பரவிவிடும். பருக்கள் அதிகமாகாமல் இருக்கவும், அவற்றால் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கவும் விளக்கெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும்.

    அதற்கு விளக்கெண்ணெயை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து, 1 மணிநேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள், பாக்டீரியாக்கள் மற்றும் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி, பருக்கள் வருவது தடுக்கப்படும்.

    சிறந்த கிளின்சர் விளக்கெண்ணெயை சோப்பு தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இதற்கு அதில் உள்ள கிளின்சிங் தன்மை தான். ஆகவே தினமும் விளக்கெண்ணெய் கொண்டு சருமத்தை துடைத்து எடுத்தால், முகம் பொலிவோடு பளிசென்று மின்னும்.

    மென்மையான சருமம் விளக்கெண்ணெய் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன் விளக்கெண்ணெய் கொண்டு முகத்தை துடைக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமம் மென்மையாவதை நன்கு காணலாம்.

    டாக்ஸின்களை வெளியேற்றும் உடலில் டாக்ஸின்கள் அதிக அளவில் இருந்தால் தான் சருமமானது பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும். ஆகவே சமையலில் விளக்கெண்ணெயை பயன்படுத்துவதோடு, வாரம் மூன்று முறை அதனைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், முகம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் காணப்படும்.

    குதிகால் சிலருக்கு குதிகால் வெடிப்பு அதிகமாக இருக்கும். அத்தகையவர்கள், வெதுவெதுப்பான நீரில் எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அதில் சிறிது விளக்கெண்ணெய் ஊற்றி, அதனுள் பாதங்களை ஊற வைத்து பின் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் பாதங்கள் நன்கு மென்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும்


  4. #164
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    சோர்ந்து காணப்படும் சருமத்தை பளிச்சென்று மாற்ற சில வழிகள்!!!

    உடலிலேயே அதிக அளவில் சுற்றுச்சூழலால் பாதிக்கப்படுவது சருமம் தான். இதனால் சருமத்தில் பிரச்சனைகள் அதிகம் ஏற்படுவதோடு, சருமம் பொலிவிழந்து சோர்வோடு காணப்படுகிறது. இதற்கு சுற்றுச்சூழல் மட்டுமின்றி, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம், டென்சன் போன்றவைகளும் முக்கிய பங்கினை வகிக்கிறது.

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்னும் பழமொழிக்கேற்ப, உடலினுள் எந்த ஒரு பிரச்சனை இருந்தாலும், அது அப்படியே சருமத்தில் பிரதிபலிக்கும். ஆகவே சருமத்தின் அழகை வெளிப்புறத்தில் மட்டுமின்றி, உட்புறத்திலும் பராமரிக்க வேண்டும்.

    இங்கு சோர்வடைந்து இருக்கும் சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள ஒருசில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவை என்னவென்று படித்து தெரிந்து, அதன்படி பின்பற்றினால் நிச்சயம் அழகாக ஜொலிக்கலாம்.

    தண்ணீர் சருமத்தின் அழகைப் பராமரிப்பதில் தண்ணீர் நிச்சயம் மிகவும் இன்றியமையாதது. அதிலும் தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீரை அவசியம் பருக வேண்டும். இதனால் செரிமான மண்டலம் சுத்தமாக இருப்பதுடன், உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும்.
    contd..



  5. #165
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தொடர்ச்சி
    தயிர் பால் பொருட்களில் ஒன்றான தயிரில் லாக்டிக் ஆசிட் என்னும் ப்ளீச்சிங் பொருள் இருப்பதால், அதனைப் பயன்படுத்தி சருமத்தைப் பராமரித்தாலும், சருமம் பளிச்சென்று இருக்கும். அதற்கு தயிரில் மஞ்சள் தூள் அல்லது தேன் சேர்த்து கலந்து, சருமத்திற்கு மாஸ்க் போட வேண்டும்.

    எலுமிச்சை எலுமிச்சையில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்மை இருப்பதோடு, வைட்டமின் சி சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. ஆனால் இதனை சருமத்தில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தக் கூடாது. வாரம் ஒருமுறை இதனைப் பயன்படுத்தினால் போதுமானது. அதற்கு எலுமிச்சை சாற்றில் தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
    contd..



  6. #166
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தொடர்ச்சி
    தேன் தேன் கூட அருமையான சரும பராமரிப்பு பொருள். அதிலும் இதனை சாதாரணமாக சருமத்திற்கு பயன்படுத்தலாம் அல்லது முகத்திற்கு ஃபேஸ் பேக் போடும் போது அத்துடன் சேர்த்துக் கொண்டும் பயன்படுத்தலாம்.

    ரோஸ் வாட்டர் ரோஸ் வாட்டர் நல்ல மணத்துடன் இருப்பதோடு, அவை சருமத்தின் ஈரப்பசையை அதிகரிப்பதோடு, pH அளவை சீராகவும் வைத்துக் கொள்ளும். மேலும் இது சருமத்தில் உள்ள சரும செல்களை வலுவாக்கி, சருமத்தில் முதுமைக் கோடுகள், சுருக்கங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

    ஓட்ஸ் ஓட்ஸ் கொண்டு சருமத்திற்கு மாஸ்க் போட்டால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, சருமத்தை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளும். மேலும் சருமத்தின் நிறத்தைம் அதிகிரிக்கும்.
    contd..



  7. #167
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தொடர்ச்சி
    கடலை மாவு கடலை மாவும் சரும அழகை அதிகரிக்கும்.. அதற்கு கடலை மாவை தயிருடன் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

    காபி காபி பொடியில், சிறிது சர்க்கரை டற்றும் எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை தேய்த்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் அழகாக காணப்படும்.

    சர்க்கரை ஸ்கரப் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க சர்க்கரை பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ஈரமான சருமத்தில் சர்க்கரையை வேஸ்லின் உடன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி தேய்த்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

    ஆரஞ்சு தோல் ஆரஞ்சு பழத்தின் தோல் கூட சருமத்தின் அழகைப் பராமரிக்க உதவும். அதற்கு ஆரஞ்சு பழத்தின் தோலை நன்கு உலர வைத்து, பொடி செய்து, அதில் சிறிது சர்க்கரை சேர்த்து சிறிது பால் ஊற்றி கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்ய வேண்டும்.

    கற்றாழை ஜெல் கற்றாழை ஜெல் கூட அற்புதமான சரும பராமரிப்பு பொருள். ஆகவே தினமும் கற்றாழை ஜெல்லைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து, பின் நன்கு 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.


  8. #168
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    முடி உதிர்தலுக்கு ரஷ்ய நாட்டின் ஒரு வீட்டு மருந்து மூலம் எளிய தீர்வு

    ஒருவரின் முகத்தை அழகாகக் காட்டும் மிகப்பெரிய பொறுப்பு தலையில் இருக்கும் முடிக்கு உள்ளது. முடியின் ஆரோக்கியத்துக்குத் தேவையான உணவு, பராமரிப்பு ஆகியவற்றில் கோட்டை விட்டு விடுவதால் முடி கொட்டும் பிரச்னை ஏற்படுகிறது. எண்ணெய் வகைகளை மட்டுமே மாற்றிக் கொண்டிருப்பதால் முடிப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாது
    தினமும் 50 முதல் 100 முடிகள் கொட்டுவது இயல்பான விஷயமே. முடி கொட்டும் பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன. சத்துக்குறைபாடான உணவு, அதிகப்படியாக கெமிக்கல் உள்ள ஷாம்புவை அடிக்கடி பயன்படுத்துதல் மற்றும் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு எண்ணெய் வகைகளை அடிக்கடி மாற்றுவதால் முடி கொட்டுவது அதிகரிக்கலாம். தலையில் பொடுகு ஏற்பட்டாலும் முடி கொட்டும். தலையின் தோல் பகுதியில் காணப்படும் வறட்சியின் காரணமாக முடி கொட்டலாம்.
    தலையின் தோல் படலத்தில் எண்ணெய் அதிகமாக சுரப்பதால் ஏற்படும் பிசுக்கினாலும் முடி கொட்டும். வியர்வை அதிகமாக சுரத்தல், தைராய்டு ஹார்மோன் குறைபாடு, பரம்பரைக் காரணங்களாலும் முடி கொட்டலாம். ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, மாதவிலக்கில் ஏற்படும் முறையற்ற சுழற்சி, ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது ஆகியவை கூட முடி கொட்டக் காரணமாக இருக்கலாம். ரத்த சோகை உள்ளவர்களுக்கும் முடி கொட்டும் பிரச்னை இருக்கும். தலைப்பகுதியில் சொரியாசிஸ் பிரச்னை இருந்தாலும் முடி கொட்டும். ஷாம்பு மற்றும் எண் ணெய்யை மாற்றுவதால் மட்டும் முடி கொட்டும் பிரச்னையை தீர்க்க முடியாது. முடிகொட்டுவதற்கு முன் சில அறிகுறிகள் ஏற்படும். முடி வலுவிழந்து மெல்லியதாக மாறும். முடியில் மெலனின் குறைபாட்டினால் முடியின் கருப்பு வண்ணம் குறைந்து சிவப்பு வண்ணம் அதிகரிக்கும். எப்போதும் வறட்சியாக காணப் படும். நுனிப்பகுதி வெடிக்கும். இதன் அடுத்த கட்டமாக முடி கொட்ட ஆரம்பிக்கும்.
    இதறக்கு ரஷ்யர்கள் உபயோகிக்கும் ஒரு சுலபமான பயனுள்ள மருந்து இதுதான்.
    1-தலையை வழக்கம் போல கழுவி, ஒரு டவலால் நன்றாக தேய்த்து உலர்த்த வேண்டும். எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு நன்றாக டவலால் தலையை தேய்க்கவும்.
    2- பின்பு சமையல் உப்பை முடிகளின் வேரில் படுமாறு தலையில் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அதற்க்கு பிறகு தலையை கழுவிக் கொள்ளவும்.
    3- இந்த முறையை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து இரண்டு மாதங்களுக்கு தவறாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
    4- இவ்வாறு செய்யும்போது முடி முன்பை விட அடர்த்தியாகவும், முடி உதிர்ந்த இடங்களில் புதிதாக முடிகள் முளைப்பதையும் காணலாம்.


  9. #169
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    மணப்பெண்ணாக போகும் அனைவரும் அழகை அதிகரிக்க சிறப்பான சில சந்தன ஃபேஸ்

    அழகான தோற்றத்தைப் பெறவும் சருமத்தை பளபளவென வைத்திடவும் பல விதமான ஃபேஸ் பேக்குகள் வந்து விட்டன. சந்தையிலும் வகை வகையாக ஏராளமான பொருட்கள் கிடைக்கிறது. ஆனால் அதில் பல்வேறு ஃபேஸ் பேக்குகளில் ரசாயன பொருட்கள் பல கலக்கப்பட்டுள்ளது.

    அதனால் இயற்கையான ஃபேஸ் பேக்குகளையும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ் பேக்குகளை நாம் அன்றாடம் பயன்படுத்தி வந்தாலும், அவை குறிப்பாக சில நிகழ்வுகளுக்கு கண்டிப்பாக தேவைப்படும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் திருமணம்.

    பிறகு என்ன அலங்காரம் இல்லாத மணப்பெண் இருக்க முடியுமா என்ன? மணப்பெண்ணாக போகும் பெண்கள் தினமும் விலை உயர்ந்த அழகு நிலையத்திற்கு செல்வது கஷ்டமான ஒன்று.

    ஆனால் அங்கே கிடைக்கும் அனைத்து பயன்களும் வீட்டிலேயே கிடைத்தால் மகிழ்ச்சி தானே! உங்களின் அனைத்து விதமான சரும பிரச்சனைகளுக்கும் சந்தனம் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

    பல்வேறு வழியில் பயன்படுத்தப்படும் சந்தனம் எண்ணெய் சுரப்பதை, சரும வறட்சியை, பருக்கள் தோன்றுவதை, கருவளையங்கள் உருவாவதை கட்டுப்படுத்த உதவும்.

    இதை விட வேறு என்ன வேண்டும்? மணப்பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஒன்றாக பளபளப்பான மின்னிடும் தோற்றத்தையும் கூட இது அளிக்கிறது. சரி, நீங்கள் முயற்சிக்க வேண்டிய சில சந்தன ஃபேஸ் பேக்குகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா?
    contd..



  10. #170
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தொடர்ச்சி
    வறட்சிக்கு குட்பை கூறுங்கள் உங்கள் சருமம் வறண்டு இருந்தால், சருமத்தில் உள்ள இயற்கையான pH அளவை சமநிலையுடன் வைத்திருக்க உதவும் இந்த ஃபேஸ் பேக்கை முயற்சி செய்து பாருங்கள்.

    3 டீஸ்பூன் சந்தன எண்ணெய், 3 டீஸ்பூன் பால் பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் பன்னீரை கொண்டு மற்றும் வழுவழுப்பான பேஸ்ட்டை தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தின் மீது பூசி கொண்டு, அதை அப்படியே 15-20 நிமிடங்கள் வரை விட்டு விடுங்கள். பின் சாதாரண நீரை கொண்டு முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

    சந்தன எண்ணெயும் பாலும் உங்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து, தேவையான நீர்ச்சத்தை அளிக்கும். பன்னீர் ஒரு டோனராக செயல்படும். இந்த சிகிச்சையை தினமும் பின்பற்றினால், நீர்ச்சத்துடன் கூடிய மின்னும் சருமத்தை பெறுவீர்கள்.

    கருவளையங்கள் மாயமாகி போகட்டும் கூடிய சீக்கிரத்தில் மணப்பெண்ணாக போகும் பெண்களுக்கு, திருமணம் நாள் நெருங்க நெருங்க கருவளையங்களை எண்ணி தூக்கமே போய் விடும்.

    சந்தனம் மற்றும் பன்னீரை கொண்டு செய்யப்படும் பேஸ்ட்டை கொண்டு இதனை வீட்டிலேயே குணப்படுத்தலாம். தூங்கச் செல்வதற்கு முன்பு, இதனை கண்களின் கீழ் தடவிக் கொள்ளுங்கள். காலையில் கழுவி விடுங்கள்.
    contd..


    nivetha.j likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter