Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


  1. #171
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தொடர்ச்சி
    எண்ணெய் கட்டுப்பாடு வறண்ட சருமத்திற்கு மட்டும் சந்தனம் தீர்வை அளிப்பதில்லை. மாறாக எண்ணெய் சருமத்திற்கும் அது தீர்வை அளிக்கும். அதனால் உங்கள் சருமத்தில் இருந்து அதிகமாக சுரக்கும் எண்ணெய்யை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், உங்களுக்கு சந்தன ஃபேஸ் பேக் உள்ளது.

    பருக்கள் பிரச்சனை இனியில்லை பருக்களை குணப்படுத்த இந்து மிகச்சிறந்த தீர்வாகும். உங்களுக்கு தேவையானதெல்லாம் ஒரு டீஸ்பூன் சந்தனப்பொடி, ஒரு டீஸ்பூன் மஞ்சள் போடி மற்றும் மூன்று டீஸ்பூன் பன்னீர்.

    இதனை ஒன்றாக சேர்த்து கலந்து வழுவழுப்பான பேஸ்ட் ஒன்றை தயார் செய்து, அதனை முகத்தில் தடவிக் கொள்ளவும். தடவிய 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவி விடுங்கள்.

    உங்கள் முகத்தில் ஏற்கனவே இருக்கும் பருக்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் வருங்காலத்தில் வரும் பருக்களை தடுக்கவும் செய்யும் இந்த பேக். பருக்கள் இல்லாத அழகிய சருமத்தை பெற இந்த பேஸ்ட்டை தினமும் தடவுங்கள்.

    வெயிலால் கருப்பாவதை தடுக்கும் பாதி எலுமிச்சையிலிருந்து எடுக்கப்படும் சாறு மற்றும் நான்கு டீஸ்பூன் சந்தன பொடியை ஒன்றாக கலந்து பயன்படுத்தினால், வெயிலினால் சருமத்தின் நிறம் கருப்பாவதற்கு தீர்வு கிடைக்கும். இது உங்கள் சருமத்திற்கு இதமாக இருப்பதோடு மட்டுமல்லாது அதனை மென்மையாகவும் ஆக்கும்.

    சரும எரிச்சல் அல்லது அழற்சி உள்ள மணப்பெண்களுக்கு இது பரிந்துரைக்கப்பட மாட்டாது. அதற்கு காரணம் இந்த பேஸ்ட்டில் உள்ள எலுமிச்சை சாறு, உங்கள் பிரச்சனையை அதிகரிக்கவே செய்யும்
    contd..



    Sponsored Links

  2. #172
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தொடர்ச்சி
    வெண்மையாக தோன்ற... தங்களின் சரும வகை எப்படிப்பட்ட வகையாக இருந்தாலும் சரி, வெண்மையான சருமத்தை பெற ஆசைப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். வறண்ட சருமம் இருந்தால் சந்தன எண்ணெய்யை பயன்படுத்துங்கள். எண்ணெய் சருமத்தை கொண்டிருந்தால் சந்தன பொடியை பயன்படுத்துங்கள்.

    ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் சந்தன எண்ணெய்/பொடி, ஒரு டீஸ்பூன் மஞ்சள் மற்றும் பன்னீரை கொண்டு வழுவழுப்பான பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள்.

    இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி அது காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். 15-20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். பளிச்சிடும் மற்றும் வெண்மையான சருமத்தை பெற இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

    வயதாவதை தடுக்கும் பேக் இந்த பேக்கை பயன்படுத்துவதால் திருமணம் முடியும் வரை மட்டும் தான் உங்கள் அழகு நீடிக்கும் என்றில்லை. அதையும் தாண்டி உங்கள் அழகு நீடிக்கும். அதிலுள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பி குணங்கள் உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.

    மேலும் சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, சுருக்கங்களை ஏற்படுத்தும் இயக்க உறுப்புகளின் உருவாக்கத்தை தடுக்கும். அதனால் சீக்கிரத்தில் வயதாவதை இது தடுக்கும். சந்தன பொடி மற்றும் முல்தானி மட்டியை இரண்டு டீஸ்பூன்கள் எடுத்துக் கொள்ளவும்.

    அதனுடன் சேர்த்து ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் பன்னீரை கலந்து கொள்ளவும். இதனை ஒரு மென்மையான பேஸ்ட்டாக உருவாக்குங்கள். இதனை உங்கள் முகத்தில் தடவி, காய வையுங்கள்.

    பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிடுங்கள். இந்த பேக்கை வாரம் இரு முறையாவது தடவினால் இளமையான சருமத்தை பெறலாம்.


  3. #173
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    குளிர்கால அழகு ரகசியங்கள்

    முருகுசுந்தரம், தோல் மருத்துவர்
    குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவதேன்?
    சருமம் மற்றும் கூந்தலில் ‘இன்டெக்ரல் லிப்பிட் லேயர்’ (Integral lipid layer) என்ற ஒரு படிமம் இருக்கும். இந்தப் படிமம்தான் நீர்ச்சத்தைப் பாதுகாக்கிறது. குளிர்காலத்தில் இந்தப் படிமம் பாதிக்கப்படும். அதனால் தான் சருமப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
    உடையும் நகங்கள்
    சிலருக்கு குளிர்காலத்தில் நகங்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அடிக்கடி நகம் உடைவதற்கு, ஊட்டச்சத்து குறைபாடு தான் காரணமே தவிர, மாறும் சீசன் அல்ல. தூங்கும் முன் நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், வாஸ்லின் என இவற்றில் ஏதாவது ஒன்றை நகத்தில் பூசி விட்டு, மறுநாள் பிரஷை வைத்து சோப், பால் கழுவுவது பாதுகாப்பு.
    உதிரும் தலைமுடி
    பனிக்காலத்தின் ஆரம்பத்தில் சருமமும், இறுதியில் கூந்தலும் பாதிக்கப்படும். இந்தக் காலத்தில் 90 சதவிகித முடி வளர்ச்சியின் பருவத்தில் இருந்தால் 10 சதவிகித முடி உறங்கிக் கொண்டிருக்கும். இந்த சீசன் முடிந்து, உறங்கிக் கொண்டிருக்கும் முடியின் சதவிகிதம் 40-50 என உயரும்போது முடி அதிகமாகக் கொட்டும். அதிக கெமிக்கல்கள் கொண்ட ஷாம்பூவைத் தவிர்க்க வேண்டும். ரின்ஸ் ஆப் மற்றும் லீவ் ஆன் என கண்டிஷனரில் இரண்டு வகைகள் உண்டு. ரின்ஸ் ஆப் கண்டிஷனரை, கூந்தலில் தடவிய சில நிமிடங்களில் அலசி விடலாம். சிறிது ஈரப்பதம் இருக்கும்போது லீவ் ஆன் கண்டிஷனரைப் பூசி அப்படியே விட்டு விடுவது நல்லது.
    வறண்ட சருமம்
    சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் வயதானோர், மெனோபாஸ் அடைந்த பெண்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக சரும வறட்சி இருக்கும். சோப்புக்குப் பதிலாக ‘ஷவர் ஜெல்’ பயன்படுத்தலாம். குளித்தவுடன் உடலில் கொஞ்சம் ஈரம் இருக்கும்போதே, மாய்ஸ்சரைசிங் கிரீம் பூசிக்கொள்வது நல்லது. இதன் pH அளவு 5.5 இருக்கட்டும்.
    பஞ்சுப் பாதங்கள்
    சந்தனம், மஞ்சள், மருதாணியை அரைத்து, பாதங்களில் தடவிவர வெடிப்புகள் மறையும். தினமும் கிளசரின் தடவி, மறுநாள் காலை கழுவினால், ஒரே வாரத்தில் பாத வெடிப்புகள் மறைந்து விடும். இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயைப் பாதங்களில் தடவலாம்.
    contd..



  4. #174
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தொடர்ச்சி

    இயற்கை முறையில் பாதுகாப்பு
    குளிக்கும் நீரில் 3 துளிகள் எலுமிச்சைச் சாறு விட்டு குளிக்கலாம். குளித்தவுடன் வெண்ணெயோ, நல்லெண்ணெயோ, தேங்காய் எண்ணெயோ உடலில் தடவிக்கொள்ளலாம். இது உடலில் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும். இளஞ்சூடான பாலை முகத்தில் தினமும் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து, கரும்புள்ளிகளின் மேலும், துளசி, வேப்பிலை, மஞ்சள் கலந்து, பருக்களின் மீது தடவலாம்.
    உடலுக்குத் தேவையான 8 அமினோ அமிலங்கள் முட்டையில் இருப்பதால், தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். முடியில் தடவத் தேவை இல்லை.
    முட்டையைப் பச்சையாக சாப்பிட்டால், முடிஅதிகம் கொட்டத்தொடங்கும். இதனால்தான் பெரும்பாலான பாடி பில்டர்களுக்குத் தலையில் முடி இருப்பது இல்லை. பச்சை முட்டையில் அவிடின் இருப்பதால், பயோட்டினை அழித்துவிடும். வேகவைக்கும்போது அவிடின் அழிக்கப்படுவதால், பயோட்டின் பாதுகாக்கப்படும்.
    தீட்டப்பட்ட அரிசியைத் தவிர்த்து, கைக்குத்தல் அரிசி சாப்பிட்டால் முடி நன்றாக வளரும்.
    வைட்டமின் H நிறைந்த வேர்க்கடலை, ஈஸ்ட், கோதுமை, மீன், முட்டை, அவகேடோ, கேரட், பாதாம், வால்நட், காலிஃப்ளவர் தினமும் எடுத்துக்கொள்வது நல்லது.
    பளிச் கண்கள்
    ஊறவைத்த பாதாமை அரைத்து இளஞ்சூடான பாலில் கலந்து, முகம் முழுவதும் பூசலாம். சருமம் பளபளக்கும். கண்களைச் சுற்றி உள்ள கருவளையம் காணாமல் போகும்.
    சந்தனத்தூள், ஜாதிக்காய்தூள் இவற்றைப் பன்னீருடன் கலந்து, கண்ணைச் சுற்றிப் பூசலாம். கொத்தமல்லிச் சாறுடன் வெண்ணெய் கலந்து, கண்களைச் சுற்றி பூசிவர, ஒரே வாரத்தில் கருவளையம் ஓடிப்போகும்.
    அலைபாயும் கூந்தல்
    வேப்பிலை சேர்த்த நீரைக்கொண்டு கூந்தலை அலசலாம்.
    மிளகு எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் மூன்றையும் சம அளவு கலந்து, கூந்தலில் தடவி, சூடான நீரில் நனைத்துப் பிழிந்த துண்டை 15 நிமிடங்கள் வரை தலையில் சுற்றிவைத்து பிறகு அலசலாம். இதனால் கூந்தலுக்குப் பளபளப்பும் மென்மையும் கிடைக்கும்.
    சிகைக்காய், பச்சைப் பயறு மாவை சேர்த்து, சாதம் வடித்த கஞ்சியுடன் கலந்து, கூந்தலில் பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து அலசலாம். வாழைப்பழத்தை நன்றாக மசித்துக் கூந்தலில் பேக் போட்டு சிகைக்காய் போட்டு அலசலாம்.
    நீண்ட கூந்தலுக்கான ரகசியம்
    தேவையானவை : சீயக்காய் ஒரு கிலோ, செம்பருத்திப்பூ 50, பூலாங்கிழங்கு 100 கிராம், காயவைத்த எலுமிச்சைத் தோல் 25, காயவைத்த நெல்லிக்காய் 50, பாசிப்பருப்பு கால் கிலோ, மரிக்கொழுந்துக் குச்சிகள் 20, கரிசலாங்கண்ணி இலை 3 கப்.
    செய்முறை: இவற்றை வெயிலில் காய வைத்து மில்லில்கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்து, அரைத்த சீயக்காய்த்தூளை வெறும் தண்ணீரில் மட்டும் கலந்து தலைக்குத் தேய்த்து அலசுங்கள்.
    பலன்கள்: பூலான்கிழங்கு, ஷாம்பு தேய்ப்பதன் பலனைத்தரும், எலுமிச்சையால் பொடுகு நீங்கும்,
    பாசிப்பருப்பு, மரிக்கொழுந்து கூந்தல் வாசத்தை மேம்படுத்தும், கரிசலாங்கண்ணி முடியைக் கருப்பாக்கும். கூந்தல் கருகருவெனச் செழிப்பாகவும் வாசனையாகவும் இருக்கும்
    contd..



  5. #175
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தொடர்ச்சி

    நல்லெண்ணெய் உடல் சூட்டைக் குறைப்பதுடன் முடியின் பொலிவுக்கும் உதவும். இயற்கையான சாயத்திற்கும் குளிர்ச்சிக்கும் மருதாணி மிகவும் நல்லது. தலைக்குக் குளிக்கும் போது, உப்புத் தண்ணீர், சூடான தண்ணீர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
    கரிசலாங்கண்ணி இலை, நெல்லிக்காய், கறிவேப்பிலை மூன்றையும் அரைத்து ,வடைகளாகத் தட்டி, நிழலில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயைத் தினமும் தலையில் தடவிவந்தால், முடி உதிர்வது குறையும். கருமையாக வளரத் தொடங்கும்.
    வாரம் ஒரு முறை நெல்லிமுள்ளியை தயிரில் ஊறவைத்து அரைத்து, தலையில் பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து அலசலாம். இதனால் உடல் குளிர்ச்சியடைந்து மன அழுத்தம் நீங்கி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
    வசம்பை தீயில் சுட்டு, காய்ச்சிய எண்ணெயில்போட்டு, தடவிவந்தால் பேன், பொடுகு வராது.
    உடல் சூடு அதிகம் இருந்தால் முடி உதிர்வதுடன் வளர்ச்சியும் கடுமையாகப் பாதிக்கும். கூடவே, கண் எரிச்சலும், உடல் சோர்வும் இருக்கும்.
    பஞ்சகல்பம், உடல் சூட்டினைப் போக்கும். கடுக்காய், நெல்லிக்காய், வேப்பங்கொட்டை மூன்றையும் தலா 100 கிராம் எடுத்து, இதனுடன் வெள்ளை மிளகு, கஸ்தூரி மஞ்சள் தலா 10 கிராம் சேர்த்து, இரவே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் பால் சேர்த்து அரைத்து, அதைத் தலையில் போட்டு 10 நிமிடங்கள் ஊறவைத்து அலசலாம்.


  6. #176
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கருகரு கூந்தலுக்கு

    பலா இலை, செம்பருத்தி, நெல்லி முள்ளி, கறிவேப்பிலை நான்கையும் சம அளவு எடுத்து, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். இதை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சிவைத்துக்கொண்டு, தினமும் தேய்த்துவர, செம்பட்டை முடி கறுப்பாக மாறும்.
    கருநீலத் திராட்சையின் தோலை நீக்கி உலரவைத்து, பொடித்துக்கொள்ளவும். இதனுடன் வெந்தயத்தூள், கடலை மாவைக் கலந்து தலைக்கு தேய்த்துக் குளியுங்கள். தூசுகள் நீங்கி, கூந்தல் கருமையாக மாறும்.
    100 கிராம் ஆவாரம் பூ, வெந்தயம் 100 கிராம், பயத்தம் பருப்பு அரைக் கிலோ மூன்றையும் மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலையை அலசிவர, கருகருவெனக் கூந்தல் பிரகாசிக்கும்.
    பேரீச்சம்பழம் 100 கிராம் எடுத்து கொட்டையுடன் தட்டி, அதில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டு இறக்குங்கள். மறுநாள், ஊறிய பேரீச்சம்பழத்தை அரைத்து, சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணெயை சில சொட்டுகள் தலையில் தேய்த்து மசாஜ் செய்தால், கருமையாகக் கூந்தல் வளரும்.
    ஒரு கொத்துக் கறிவேப்பிலையை, அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து, புளித்த மோரில் ஊறவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை இந்த பேஸ்ட்டை தலையில் பேக் போட்டு பத்து நிமிடங்கள் கழித்து அலச, கூந்தல் கருகருவென மாறும்.
    சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் சம அளவு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து இந்த விழுதை பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். வாரம் ஒருமுறை இதுபோல செய்தால், வளர்ச்சி தூண்டப்பட்டு கருமையாக முடி வளரும்.
    contd..



  7. #177
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    முடிப் பிளவுகளை தடுக்கும் வழிகள்

    கூந்தலை டிரிம் செய்யுங்கள். கூந்தலின் அடிப்பகுதியான நுனி பிளவு படுவது சகஜம். ஆனால் முடிப்பிளவு இருந்தால், முடி வளர்வது பாதிக்கப் படும். ஆதலால் நான்கு மாதத்திற்கு ஒருமுறை டிரிம் செய்து கொள்வது அவசியம். லீவ் இன் (leave in) கண்டிஷனர் என்று சொல்லக் கூடிய கூந்தல்சீரத்தைத் தொடர்ந்து பயன்படுத் துகையில், பிளவுகள் ஏற்படாது.

    பப்பாளி மாஸ்க்

    மசித்த பப்பாளி பழத்துடன் 2 ஸ்பூன் யோகர்ட் கலந்து, தலை மற்றும் கூந்தலில் தடவி ஷவர் கேப்பை போட்டுக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து ஷாம்பூவால் அலசுங்கள்.
    வைட்டமின் இ மாத்திரைகள்வைட்டமின் இ எண்ணெய் நிறைந்த மாத்திரைகளை இளஞ்சூடான நீரில் போட்டு, அதை கரைத்து பிளவுகள் ஏற்பட்ட அடி முடியில் தடவிவர, பிளவுகள் வராது.
    எண்ணெய் கலவை மாஸ்க்பாதாம் மற்றும் தேங்காய் எண்ணெயை சமஅளவில் கலந்து, நுனிமுடியில் தடவிக்கொள்வதால் பிளவுகள் ஏற்படாது.


  8. #178
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பொடுகுத் தொல்லையை போக்க

    தேங்காய் எண்ணெயுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பின்னர் அதைக் கூந்தலில் தடவி அரை மணி நேரம் கழித்து பச்சைப் பயறு மாவுடன் சாதம் வடித்த நீர் கலந்து அலசிடுங்கள்.
    பாதாம் எண்ணெயுடன் நெல்லிகாய் சாற்றைக் கலந்து ஸ்கால்ப்பில் தடவலாம்.
    ஆலிவ் எண்ணெய், எலுமிச்சைச்சாறு, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து கூந்தலில் பூசி,15 நிமிடங்கள் வரை சூடான துண்டை போர்த்தி ஆன்டி டான்ட்ரஃப் (Anti dandruff) ஷாம்பூவால் அலசலாம்.
    கைப்பிடி அளவில் நெல்லிக்காய்களை ஊறவைத்து, அதனுடன் பால் கலந்து மையாக அரைத்து, கூந்தலில் பூசி அலசலாம்.
    பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தால், தலையில் கட்டிகள் தோன்றும். இதற்கு வெப்பாலை தைலம் தேய்த்துக் குளிக்கலாம். மேலும், அருகம்புல், அதிமதுரம் இரண்டையும் தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்துவந்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.


  9. #179
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    அழகுக் கூந்தலுக்கு தூயத் தேங்காய் எண்ணெய்

    எண்ணெய் தடவலாமா என்ற குழப்பம் பலருக்கு இருக்கும். எண்ணெய் தடவுவது நல்லது. ஆனால் அந்த எண்ணெய் கலப்படம் இல்லாததாக இருத்தல் அவசியம். தேங்காய்ப் பாலை எடுத்து அவற்றை அடுப்பில் கொதிக்கவிடவும். இறுதியில் கிடைக்கும் திரவமே தூயத் தேங்காய் எண்ணெய். இதைத் தடவிவர கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் சத்தாக மாறுகிறது. எண்ணெய் காய்ச்சும் போது, இறுதியில் தேங்கும் கசடை, தூக்கி எறியாமல் ஹேர் பேக்குடன் பயன்படுத்திக்கொள்ளலாம்


  10. #180
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    மென்மையானக் கூந்தலைப் பெற

    8 or 10 செம்பருத்தி இலைகளை 10 நிமிடங்கள் வரை தண்ணீரில் ஊறவைத்து அதைப் பசையாக மாற்றிக்கொள்ளவும். ஜெல் போல கூந்தல் முழுவதும் தடவிய பின், 1 மணி நேரம் கழித்து, கூந்தலை மிதமான ஷாம்பூவால் அலசவும். பளபளப்பான, மெண்மையான கூந்தலாக மாறியதைப் பார்க்கலாம்.
    பட்டுப் போன்ற கூந்தலுக்கு
    பழுத்த அவகேடோ பாதி, தேன் 2 ஸ்பூன், தயிர் ஒரு ஸ்பூன், முட்டை ஒன்று, வாழைப்பழம் பாதி, நெல்லிப் பொடி ஒன்று டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை கலந்து பேட்ஸ்டாக்கி கூந்தலில் பூசி, ஒரு மணி நேரம் கழித்து அலசுங்கள்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter