Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


 1. #11
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  ஆரஞ்சு தோல்
  ஆரஞ்சுப் பழத்தோலில் அதிக அளவு தாவர ஊட்டச் சத்துகள் மற்றும் ஃப்ளேவனாய்டுகள் உள்ளன. தூசுகளால் ஏற்பட்ட பொலிவிழப்பை மீட்டுத் தரும். பருக்களால் உண்டான தழும்பும் மறைந்துவிடும். ஆரஞ்சுத் தோலினை சூரிய ஒளியில் காயவைத்து அரைத்து வைத்துக்கொள்ள«வண்டும். இந்தப் பொடியில் சந்தனம் கலந்து சிறிது தயிர் சேர்த்து, வாரம் ஒரு முறை முகத்தில் தடவி 10 நிமிடம் காயவைத்து கழுவிவர வேண்டும்.


  Sponsored Links
  sarayu_frnds and Geetha A like this.

 2. #12
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  சரும அழகிற்கு பழ பேஷியல்
  பெண்கள் தங்களை அழகு படுத்துவதில் அதிக கவனம் செலுத்துக்கின்றனர். அதற்கு கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட கிரீம்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த கிரீம்கள் நாளடைவில் சருமத்தை பாதிக்கும்.

  ஆனால் பழங்களால் முகத்திற்கு செய்யப்படும் பேஷியல் மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் சருமத்திற்கு எந்த விதமான பிரச்சனையும் வராது. அவை என்னவென்று பார்க்கலாம்....

  * கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. எனவே சருமத்தில் சுருக்கங்கள் அதிகம் இருந்தால், 1 முட்டையின் மஞ்சள் கருவுடன், 1 டேபிள் ஸ்பூன் கிவி சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள சுருக்கங்களுடன், அதிகப்படியான எண்ணெயும் நீங்கும்.

  * வாழைப்பழத்தில் ஜிங்க், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி மற்றும் ஈ போன்றவை நிறைந்துள்ளன.

  இத்தகைய வாழைப்பழத்தை மசித்து, அத்துடன், 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், முதுமைத் தோற்றமானது நீங்கி, இளமைத் தோற்றத்தைப் பெறலாம்.

  * பேஸ் மாஸ்க்குகள் அனைத்திலுமே தேன் சேர்க்கப்படும். ஏனெனில் தேனில் வைட்டமின் ஈ சத்து அதிகம் இருப்பதால் தான்.

  அதிலும் முதுமைத் தோற்றத்தைப் போக்குவதற்கு, 1 டேபிள் ஸ்பூன் தேன், 1/2 டீஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை மசாஜ் செய்து குளிர்ந்து நீரில் அலச வேண்டும்.

  இதனால் முகம் நன்கு மென்மையாகவும், இளமைத் தோற்றத்துடனும் இருக்கும்.

  * முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, முகம் பொலிவோடு மின்னும்.

  Geetha A likes this.

 3. #13
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  கருப்பா இருந்தாலும் கலையாக இருக்கணுமா

  கருப்பான சருமம் என்பது நம் ஊரைப் பொருத்தவரை இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் சிவந்த மேனி கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமைதான். கருப்பு என்பது வெறுக்கத்தக்க நிறமில்லை.

  இந்தியர்களின் உண்மை நிறமே கருப்புதான். கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.

  கருப்பான பெண்கள் களையாக மாற சில ஆலோசனைகளை பார்க்கலாம்......

  • சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம். இதனால் கருப்பான சருமம் களையாகும்.

  • ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்யவும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டும்.

  இதனால் முகம் நிச்சயம் பொலிவாகும். வெயிலில் டூ வீலரில் செல்கிற போது சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம். அதேபோல் கைகளுக்கு கிளவுஸ் அணிவது சருமத்தை பாதுகாக்கும்.

  • சூடான பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பது தான் பலன் தரும். இதனால் சரும நிறத்தில் பொலிவு கூடும்.

  அதேபோல் பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

  Geetha A likes this.

 4. #14
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  வேப்பம்பூ தரும் அழகு குறிப்புகள்

  • காய்ந்த வேப்பம் பூவில் உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் - அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

  • வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து பின்னர் குளித்து வந்தால், உடல் சிவப்பாக மாறும்.

  • நல்லெண்ணை வேப்பம்பூ கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்..

  • வேப்பிலை, புதினா, துளசி இலைகளை சமமாக எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும்..அதனுடன் ஒரு ஸ்பூன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி அரை மணிநேரம் கழித்து முகம் கழுவ முகம் பளபளக்கும்..

  • சிலருக்கு முன்பக்க முடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டிருக்கும். இதற்கு, ஒரு டேபிள்ஸ்பூன் முற்றிய மாம்பழ சதையுடன் வேப்பம்பூ சேர்த்து அரைத்த விழுது, விளக்கெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பயத்தமாவு, கடலை மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று, முன்புறம் முடி வளர ஆரம்பிக்கும்.

  • தினமும் குளிப்பதற்கு முன் ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ விழுது, அரை டீஸ்பூன் மாம்பழ சதை, அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து முகத்தில் பூசுங்கள். பருக்கள் மறைந்து விடும். இதிலுள்ள நல்லெண்ணெய், தோலின் பள பளப்பைக் கூட்டி, கூடுதல் மிருதுவாக்கும்.

  Geetha A likes this.

 5. #15
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  தேங்காய் எண்ணெய் சரும பராமரிப்பு

  இன்றைய நவீன உலகில் பலரும் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்ப்பதே இல்லை. தலை முடி ஒட்டிக் கொண்டு முகம் அழுது வழியும் என்பதே பலரும் முன்வைக்கும் காரணமாகும்.

  ஆனல், தேங்காய் எண்ணெயைப் போன்று உடலுக்கு நன்மை செய்யும் ஒரு பொருள் வேறு எதுவுமே இல்லை என்று கூறலாம். தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

  தலையின் தோல் பகுதியை வறண்டு விடாமல் தேங்காய் எண்ணெய் பாதுகாக்கும்.

  மேலும், குளிப்பதற்கு முன்பும் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் பூசிக் கொண்டு ஊறவிட்டுக் குளிக்கலாம். இது தோலுக்கு மிகவும் நல்லது.

  அதிகமாக மேக்-அப் போடும் பெண்கள், இரவில் முகத்தை சுத்தம் செய்துவிட்டு தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு படுக்கலாம். இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்

  Last edited by chan; 19th Oct 2014 at 11:56 AM.
  Geetha A likes this.

 6. #16
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  செம்பருத்தி தரும் கூந்தல் பராமரிப்பு

  செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறிவிடும். பளபளப்பு கூந்தலுக்கு ஷாம்பே கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக செம்பருத்தியை பயன்படுத்தலாம்.

  ஷாம்பை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் கூந்தல் பிரச்சனைகளை சரி செய்ய செம்பருத்தி பயன்படுகிறது. இதேபோல், 2 அல்லது 3 செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

  உடலும் நன்கு ஆரோக்கியம் பெறும். தலைமுடி அடர்ந்து, உறுதியாக, செழிப்பாக வளர்வதற்கு செம்பருத்தி பூ உதவுகிறது. கூந்தலைச் சுத்தப்படுத்த செம்பருத்தி இலையை நைசாக அரைத்து தலைக்குப் பூசி குளிக்கலாம். இவ்வாறு தேய்த்துக் குளிப்பதால் முடி சுத்தமாவதுடன் பட்டுப்போல பளபளக்கும்.

  சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.

  இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

  செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, கூந்தல் படிப்படியாக நன்கு வளர ஆரம்பிக்கும்.

  செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.

  Geetha A likes this.

 7. #17
  Geetha A's Avatar
  Geetha A is offline Registered User
  Blogger
  Citizen's of Penmai
  Real Name
  Anu
  Gender
  Female
  Join Date
  Aug 2011
  Location
  France
  Posts
  634
  Blog Entries
  39

  re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  Hey Chan

  How are u? So "BEAUTIFUL" Tips ma .... Thanks for sharing with us. Take care

  Regards
  Anu


  Don't limit your challenges, challenge your limits

  http://www.penmai.com/forums/india/4...tml#post460945

 8. #18
  reenu100's Avatar
  reenu100 is offline Friends's of Penmai
  Real Name
  ROJA
  Gender
  Female
  Join Date
  Aug 2014
  Location
  pondicherry
  Posts
  187

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  Very very nice and useful tips dear..........................thank you very much for sharing it.

  Always with love

  ROJA...........................

 9. #19
  saidevi's Avatar
  saidevi is offline Guru's of Penmai
  Real Name
  sarala devi
  Gender
  Female
  Join Date
  Mar 2014
  Location
  tn
  Posts
  5,086

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  Very Useful.Thank U.


 10. #20
  sarayu_frnds's Avatar
  sarayu_frnds is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  sakthi
  Gender
  Female
  Join Date
  Aug 2011
  Location
  Bodinayakanur
  Posts
  6,751

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  hai chan...

  very usefull tips.. thanks for sharing

  SARAYU

  " BETTER LIFE IS NOT BECAUSE OF LUCK, BUT
  BECAUSE OF HARD WORK..........."


  ON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......

  Sarayu's Stories

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter