Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


  1. #191
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    முடி வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள்:

    வைட்டமின் (அ) பயோடின்: செல்களை உற்பத்தி செய்யும். செல்களைப் புதுபிக்கும். இதனால் கூந்தல் உதிர்வது தடுக்கப்படும்.
    உணவுகள்: முட்டை, ஈஸ்ட், காலி ஃப்ளவர், ராஸ்பெர்ரி, வாழை, வால்நட், பாதாம்.
    வைட்டமின் பி6: டெஸ்டோஸ்டீரான் செயல்பாட்டை சமன்படுத்தும். இதனால் ஏற்படும் தடைகளையும் மாற்றும் வல்லமை வைட்டமின் பி6க்கு உள்ளது.


    Sponsored Links
    jv_66 likes this.

  2. #192
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    உணவுகள்: ஃபோலிக் அமிலங்கள் நிறைந்த உணவுகள்.

    வைட்டமின் ஏ: கூந்தல் கருப்பாகவும், பளபளப்பாகவும் வளர உதவும். கூந்தலை வலுப்படுத்தி அடர்த்தியாக்கும்.
    உணவுகள்: உருளை, கேரட், ஈரல், முட்டை, பால், கீரைகள், உலர் அத்தி, மாம்பழம்.
    வைட்டமின் பி12: கூந்தல் உதிர்வதைத் தடுக்கும். உடலில் உள்ள இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும்.
    உணவுகள்: முட்டை, சீஸ், பால், யோகர்ட்.
    வைட்டமின் சி: முடி வளர்ச்சிக்கு உதவும். இளநரையைப் போக்கும். வறட்சியை நீக்கும்.
    உணவுகள்: எலுமிச்சை, கொய்யா, ஸ்டாரபெர்ரி.
    வைட்டமின் இ: ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் அனைத்துக் கூந்தல் பிரச்னைகளும் தீரும்.
    உணவுகள்: பாதாம், மீன், பால், வேர்க்கடலை, கீரைகள், சூரியகாந்தி விதைகள்

    jv_66 likes this.

  3. #193
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    ஹேர் டிப்ஸ்...

    பொடுகு, பேன் தொல்லை இருப்பவர்கள், தலைக்கு எண்ணெய் தேய்க்கும்போது, சற்று கவனமாக இருக்க வேண்டும். சரியான முறையில் தேய்க்கவில்லை எனில், எளிதில் முடி உடைந்துவிடக்கூடும்.
    தலைக்குக் குளித்ததும் துவட்டாமல் ஈரத் தலையுடன் இருப்பது முடிக்கான பாதிப்பை அதிகரிக்கும். துவட்டி, நன்றாகக் காயவைப்பதே முடிக்கான பாதுகாப்பு.
    இரவு படுக்கைக்குப் போகும்போது, எண்ணெய் தடவி, தலையை நன்றாக வாரி, சற்றே தளர்வாக பின்னல் போட்டுக்கொள்வது, முடி வளர்ச்சியை அதிகரிக்கச்செய்யும்.
    நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் கலந்து வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து மசாஜ்செய்யுங்கள். பிறகு சீயக்காய்போட்டு அலசினால், முடி நன்றாக வளரும்.
    தலையில் சீப்புப்போட்டு வாரும்போது, முன் நெற்றியில் படும்படி வாரக் கூடாது. இதனால், முன் நெற்றிப் பகுதியில் முடி உதிர்ந்து வழுக்கைக்கு வித்திடுவதுடன், பருக்கள் போல் பொரிப்பொரியாக வரவும் வாய்ப்புகள் அதிகம்.
    தலைமுடியை தூக்கி வாராதீர்கள். இதனால், முன் நெற்றி பகுதி பெரிதாகக்கூடும். தழைத்து வாருவது நல்லது.

    நன்றி டாக்டர் விகடன்

    Last edited by chan; 6th Jan 2015 at 07:40 PM.

  4. #194
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    அழகா இருங்க... அலர்ட்டா இருங்க!.

    டாக்டர் ஆர்.கீர்த்தனா
    இப்போது பெட்டிக்கடை முதல் மெகா மால் வரை அழகுப் பொருட்களின் அணிவகுப்புதான். நிறத்துக்கு சிகப்பழகு க்ரீம், பருவைப் போக்க ஆன்டிசெப்டிக் கிரீம், கரும்புள்ளி மறைய ஃபேஸ்பேக், முகம் கழுவ ஃபேஸ்வாஷ், வெயிலுக்கு சன்ஸ்கிரீன் என்று தலை முதல் கால் வரை பயன்படுத்த ஆயிரக்கணக்கில் அழகு சாதனப் பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று பலருக்கும் குழப்பம் வேறு. ஆனால், அத்தனையும் ரசாயனங்கள் கலந்தவை என்பதால், அழகோடு ஆபத்தும் சேர்ந்து வரும் என்பதுதான் நம்மை அச்சுறுத்தும் உண்மை.
    பெரும்பாலான அழகு சாதனப் பொருட்களில் சோடியம் லாரில் சல்பேட் Sodium Lauryl Sulfate (SLS)), தாலேட் (Phthalate), பாரபின் (Paraben) மற்றும் ட்ரைக்ளோஸின் போன்ற அபாயகரமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன' என்று எச்சரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த அக்குபங்க்சர், யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிபுணர் ஆர். கீர்த்தனா.
    அழகு சாதனப் பொருட்களில் உள்ள ரசாயனம் மெதுவாக நம் சருமத்தினுள் ஊடுருவி, உடலின் வெவ்வேறு உறுப்புக்களில் பிரச்னையை உண்டாக்கும். கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் பிரச்னை அல்லது ஹார்மோன் சமச்சீரற்ற தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும்.
    ஆனால், நாம் வேறு ஏதோ காரணங்களால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என நினைப்போம். இந்த வகை நச்சுக்களால், புற்றுநோய் வருவதற்கும்கூட வாய்ப்பு உள்ளது .
    டியோடரன்ட் மற்றும் சிந்தெடிக் ஷாம்பூகளில் வாசனைக்காகச் சேர்க்கப்படும் தாலேட்ஸ், நகப்பூச்சுக்களில் சேர்க்கப்படும் பென்ஸீன் போன்றவை புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடியவை. உதட்டுச் சாயத்தில் சேர்க்கப்படும் ரசாயனம், சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தும். சருமப் பராமரிப்புக்கான சாதனங்களில் கிருமிகள் அண்டாமல் இருக்க சேர்க்கப்படும் ட்ரைகுளோஸின், தைராய்டு சுரப்பியைப் பாதிக்கும். அழகுப் பொருட்கள் அதிக நாட்கள் கெடாமல் பாதுகாக்க, பாரபின் சேர்க்கப்படுகிறது. இது, நம் உடலில் அலர்ஜியை ஏற்படுத்தக்கூடியது.
    ஆன்ட்டி ஏஜிங் கிரீமைத் தடவும்போது, முகம் பொலிவாகத் தெரியும். ஆனால், கொஞ்ச நேரத்திலேயே முகத்தை வறண்டுபோகச் செய்துவிடும். கண்களில் போடும் மஸ்காராவினால் கண் எரிச்சல், கண் இமைகளின் முடி உதிர்தல் போன்றவையுடன், பாக்டீரியா தொற்றும் உண்டாக வாய்ப்பு உண்டு.
    பல் மஞ்சளாக இருந்தால், அதற்கு பாலீஷ் போடுவதை விட்டுவிட்டு, பெருங்குடலைச் சுத்தம் செய்தால் போதும். கல்லீரல் சரியில்லை எனில், உணவில் இருக்கும் எண்ணெயைச் செரிக்க முடியாமல், சருமத்தின் வழியாக எண்ணெய் வெளியேறும். முகத்தை ஃபேஸ்வாஷ் போட்டுக் கழுவுவதைவிட, கல்லீரலைச் சரிசெய்தால் போதும்.
    எண்ணெய் இல்லாத, சுலபமாகச் செரிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். மேலும், முகத்தில் கரும்புள்ளிகள், கருவளையம் தோன்றுவதற்கும் நீரின் அளவு குறைவதே காரணம். சருமம் ஈரத்தன்மையுடன் இருக்க, மாய்ஸ்ச்சரைசர் க்ரீம் பயன்படுத்துவதைவிட, அடிக்கடி முகத்தில் தண்ணீரைத் தெளித்துக் கொள்ளலாம். மன உளைச்சலால் முகத்தில் சுருக்கம் வரலாம். அதற்கு, க்ரீம்களைத் தடவாமல், நட்ஸ் எடுத்துக்கொள்ளுதல், யோகா, பிராணாயாமம் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
    இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலான நேரத்தில்தான், கல்லீரலும் பித்தப்பையும் நன்கு வேலை செய்து, உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும். சரியான நேரத்தில் தூங்குவது அழகுக்கு அத்தியாவசியத் தேவை. இளம் வெயில் நம் மேல் பட்டால், பாக்டீரியா தொற்று மற்றும் பூஞ்சைத் தொற்று போன்றவை வராமல் காக்கலாம். ஹார்மோன்கள் சமச்சீரின்மையால், பெண்களுக்கு முகத்தில் முடி முளைத்தல் போன்ற பிரச்னைகள் வரும். யோகப்பயிற்சிதான் இதற்கு சிறந்த தீர்வு. வேக்ஸிங், திரெடிங் தேவையே இல்லை.
    அடிக்கடி முகம் மலரச் சிரித்தால், முகத்தில் சீக்கிரம் சுருக்கங்கள் வராது. காஸ்மெட்டிக்ஸ் பொருட்கள்தான் அழகைக் கூட்டுகிறது என்பது பலரது அபிப்பிராயமாக இருக்கிறது. ஆனால், நம் உடல் ஆரோக்கியமாக இருந்தாலே போதும்... அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்கிற டாக்டர் கீர்த்தனா, செயற்கை அழகு சாதனப் பொருட்களுக்கான மாற்று அழகுப் பொருட்களையும் பட்டியல் இடுகிறார்.
    அப்புறம் என்ன, அழகா இருங்க... அலர்ட்டா இருங்க!
    contd..


    jv_66 likes this.

  5. #195
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தொடர்ச்சி

    மாற்று வழிகள்:

    ˜ க்ளென்ஸர்: வறண்ட சருமத்துக்கு, பயத்த மாவுடன் தயிர் கலந்து முகத்தில் தடவி, சிறிதுநேரம் கழித்துக் கழுவலாம். எண்ணெய்ப் பசையுள்ள சருமத்துக்கு, கடலைமாவும் தயிரும் சேர்த்து உபயோகிக்கலாம். பழக்கூழை முகத்தில் தடவி வைத்திருந்து கழுவுவதால், முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடலாம். எலுமிச்சைச் சாறும் தேன், கஸ்தூரி மஞ்சள் கலந்த கலவையும் சருமத்தை சுத்தப்படுத்தக்கூடியவை.
    ˜ டோனர்: குளிர்ந்த தண்ணீரே நல்ல டோனர். அடிக்கடி முகத்தில் தெளித்துக்கொள்ள வேண்டும். துவர்ப்புத்தன்மை உள்ள க்ரீன் டீ’ சாறில், தண்ணீர் கலந்து முகம் கழுவலாம். எண்ணெய்ப் பசை சருமத்துக்கு, ஃப்ரெஷ்ஷான வெள்ளரிக்காயைத் துருவி, தயிரில் போட்டுக் கலந்து முகத்தில் பேக் போட்டு வைத்திருந்து கழுவலாம்.
    ˜ ஃபவுண்டேஷன்: அரோரூட் மாவு, கொக்கோ பவுடர், லவங்க பவுடர் தலா கால் டீஸ்பூன் எடுத்துக் குழைத்து, முகத்தில் போட்டுக்கொள்ளலாம்.
    ˜ ரூஜ்: கன்னங்கள் சிவப்பாக, செம்பருத்திப் பூவைக் காயவைத்து அல்லது பீட்ரூட் துருவலைக் காய
    வைத்துப் பொடித்து, அதை லேசாகத் தடவலாம்.
    ˜ லிப்ஸ்டிக்: பீட்ரூட் துருவிக் காயவைத்துப் பொடித்து, வெண்ணெயுடன் குழைத்து உதடுகளில் பூசினால், இயற்கை உதட்டுச் சாயம் பளபளக்கும்.
    ˜ ஐ லைனர், ஐ ஷேடோ: ஸ்பைருலினா (பச்சை நிறம்), கரிசலாங்கண்ணிச் சாறு, தேங்காய் எண்ணெய் போன்றவை, கண்களின் மேலும், கீழும் அழகுசெய்யச் சிறந்தவை.
    ˜ சன்ஸ்கிரீன்: பாதாம் எண்ணெய், ராஸ்பெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி விதை எண்ணெய்களில் எஸ்.பி.எஃப் (Sun protecting factor) உள்ளது. இந்த எண்ணெய்கள் கடைகளில் கிடைக்கின்றன. வெயிலில் செல்வதற்கு முன்பு, சருமத்தில் லேசாகத் தடவிக் கொள்ளலாம். நல்ல பலன் கிடைக்கும்.
    ˜ பருக்களைப் போக்க: இரவில் படுக்கும்போது, கற்பூரத்தில் துளி பன்னீர் சேர்த்துக் குழைத்து, பருக்களில் தொட்டு வைத்து, காலையில் கழுவி விடலாம்.
    ˜ வெயிலால் ஏற்படும் கருமையைக் குறைக்க: தக்காளி அல்லது உருளைக்கிழங்கு சாறை முகத்தில் தடவி வைத்திருந்து, குளிர்ந்த நீரில் கழுவினால், கருமை நீங்கிவிடும். .
    contd..


    jv_66 likes this.

  6. #196
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தலைப்பு : அழகுசாதனப் பொருட்கள் பின்னே, ஆபத்து வரும் முன்னே!

    அகத்தின் அழகு முகத்தில்...
    பல், முடி: உடலில் நீர்த்தன்மை இல்லாததைக் காட்டும்.
    நகம், கண்கள்: கல்லீரல் ஆரோக்கியத்தைக் காட்டும்.
    சருமம், சரும முடி: நுரையீரல் ஆரோக்கியம்.
    உதடுகள்: மண்ணீரலின் ஆரோக்கியம்
    வாய், நாக்கு: இதயத்தின் நலனைக் காட்டும் உறுப்புகள்.

    நன்றி: விகடன்

    jv_66 likes this.

  7. #197
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தலைமுடி செழித்து வளர தக்காளி சூப்பர் மருந்து தெரியுமா?

    வீட்டிலேயே தினப்படி மேற்கொள்ளும் அழகு வழிமுறைகளும் உண்டு.
    * சின்னவயதில் முகத்தில் அடிக்கடி பரு வரும். காய்ந்த பருவை வேரோடு நீக்க, என் அத்தை ஒரு அருமையான ஐடியா சொன்னாங்க. முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு சுத்தமான துணியில் நனைத்து பருமீது பரப்புங்கள். முட்டை காய்ந்ததும் துணியை உரித்து எடுத்தால் பருவும் துணியோடு சேர்ந்து வந்துவிடும். கரும்புள்ளிகளையும் இந்த முறையில் நீக்கலாம்.
    *பாதங்கள் மென்மையா, பளபளப்பா ஜொலிக்க ஒரு வழி இருக்கு. ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்து, அதில் கல்உப்பை ஒரு கைப்பிடி போட்டு கரையுங்கள். அதில் கால்களை அரைமணி நேரம் அமிழ்த்தி வைத்துவிட்டு, பிறகு பியூமிஸ் கல் ( எல்லா ஃபேன்ஸி ஸ்டோர்களிலும் கிடைக்கும்) கொண்டு மென்மையாகத் தேய்த்தால் கால்களின் வெடிப்பு நீங்கி மென்மையாக ஒளிரும்.
    *தலைமுடி செழித்து வளர தக்காளி சூப்பர் மருந்து தெரியுமா? இரண்டு பெங்களூர் தக்காளியை ஜூஸ் அடித்து.. நோ..நோ! குடிக்கக்கூடாது. அப்படியே தலையில் பூசுங்கள். அரைமணி ஊறியதும் மைல்டு ஷாம்பூ போட்டு தலைமுடியை அலச வேண்டியதுதான். தக்காளியிலுள்ள அமிலம் நம் தலைமுடியின் காரத் தன்மை மற்றும் அமிலத்தன்மையை சரியான அளவு பாலன்ஸ் பண்ணுமாம். அதனால் முடி ஹெல்த்தியாகப் பளபளக்கும்.
    * காபி ரொம்பப் பிடிக்கும். அட... குடிக்க இல்லீங்க! தலைக்கு ஊற்றிக் குளிக்க. பால் சேர்க்காமல் கால் கப் ஸ்டிராங் காபி டிகாக்ஷனைத் தலையில் நல்லா தேய்த்து இருபது நிமிடம் ஊறிய பிறகு தலையை அலசுங்கள். அருமையான ஒரு கரும் பிரவுன் நிறத்தில் கூந்தல் ஜொலிக்கும். காபி டிகாக்ஷன் மாதிரியே தலைமுடிக்கு ஒரு அலாதியான பளபளப்பு தருவது டீ டிகாக்ஷன். தலைக்குக் குளிக்கும்போது கடைசி கப் தண்ணீரில் கொஞ்சம் டீ டிகாக்ஷன் கலந்து தலையில் ஊற்றுங்கள். அதன்பிறகு, வெறும் தண்ணீர் ஊற்றத் தேவையில்லை. தலைமுடிக்கு ஊட்டச்சத்தும் பளபளப்பும் கிடைக்க, முட்டையின் வெண்கருவை தலையில் பூசி ஊறி, சிறிது நேரத்துக்குப் பிறகு ஷாம்பு போட்டு அலசினாலும் கூந்தல் பளபளக்கும். முகத்தில் வாயோரம், கண்ணோரம் ஏற்படக்கூடிய சின்னச் சின்ன சுருக்கங்களைச் சரி பண்ண ஒரு இயற்கை வழி சொல்லட்டுமா? விதையில்லாத பச்சை திராட்சைப் பழங்களின் சாற்றை எடுத்து இந்தச் சுருக்கங்களின்மேல் பூசுங்கள். நாளாவட்டத்தில் சுருக்கம் காணாமலே போய், முகம் பளிச்சென ஆகும்


    Attached Thumbnails Attached Thumbnails அழகுக் குறிப்புகள் - Beauty Tips!-.jpg  
    jv_66 likes this.

  8. #198
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    ஹோம் ஃபேஷியல்

    ஹோம் ஃபேஷியல் (சமையலறையில் இருக்கு ஃபேஷியல் அயிட்டம்)
    (க்ளென்சிங் மில்கிற்கு பதிலாக)

    சிறிதளவு பால், கொஞ்சம் கோதுமை மாவு, கொஞ்சம் சர்க்கரை

    பேக் போடுவதற்கு

    முட்டையின் வெள்ளைக் கரு
    முல்தானி மட்டி சிறிதளவு (பன்னீரில் கரைத்துக்கொள்ள வேண்டும்)

    கஸ்தூரி மஞ்சள்
    தேன் - 1 ஸ்பூன்
    லெமன் ஜூஸ்

    அனைத்தையும் நன்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.பேஷியல் ஆரம்பிக்கும் முன் ப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.

    பேஷியல் செய்முறை :


    1) தலை முடியை நன்றாக வாரி உச்சியில் கொண்டையாக க்ளிப் செய்து விடுங்கள். முதலில் கழுத்து, முகத்தை நன்றாக சோப் போட்டு கழுவுங்கள்.

    2) முதலில் பாலை 2 விரல்களால் தொட்டு, அடுத்து கோதுமை மாவில் தொட்டு, பிறகு சீனியில் தொட வேண்டும். இதனை கழுத்து, முகத்தில் தடவ வேண்டும். ஒவ்வொரு முறையும் பால்,மாவு, சீனீயை இவ்வாறு தொட்டு கன்னங்களில் வட்ட வடிவமாகவும். மூக்கின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு விரல்களினால், மேலும், கீழுமாகவும், நெற்றியில் வட்ட வடிவமாகவும், தாடையில் அடிப்பகுதியை கீழ்ப்புறமாகவும், மேல் பகுதியை வட்ட வடிவமாகவும் தடவுங்கள். கழுத்தில் மேல் புறமாக தடவுங்கள்.

    3) இப்போது கண்ணங்களை வட்ட வடிவமாகவும், கண்களை சுற்றி வட்டமாகவும், மெதுவாகவும், தாடையை கீழிருந்து மேலாகவும், நெற்றியில் நடுவில் ஆரம்பித்து புருவம் முடியும் வரை கீழாகவும், மீண்டும் கன்னங்களை மேல் புறமாக நன்றாக அழுத்தமாகவும் , உதடுகளில் வட்ட வடிவில், உதடுகளின் ஓரங்களில் நீள்வட்டமாகவும் மசாஜ் செய்யுங்கள். கழுத்தில் எப்போதும் மேல் புறமாக செய்யுங்கள். மசாஜ் செய்யும் போதே முகத்தை செல்லமாக கிள்ளுவது போல செய்யுங்கள்.

    4) ஒரு பாத்திரத்தில் கொதிக்கின்ற தண்ணீர் எடுத்து அதில் முகத்தை காட்டி போர்வையால் நன்றாக மூடி ஆவி பிடியுங்கள். முகத்திலிருந்து தண்ணீர் வியர்வையாக வெளிவரும் வரை ஆவி பிடியுங்கள். பின்பு மூக்கின் ஓரங்களில் மெதுவாக அழுத்துங்கள். மூக்கின் நுனியில் இருக்கு பிளாக் ஹெட்ஸை ஒரு டிஷ்யூ கொண்டு துடைத்து விடுங்கள்.இவ்வாறே தாடையில் இருக்கும் அழுக்கையும் நீக்குங்கள்.

    5) பிரிட்ஜிலிருந்து பேக்கை எடுத்து கழுத்து, முகத்தில் போடவும். பேக் காயும்வரை வைத்திருந்து கழுவவும். பேக் போட்டு இருக்கும் போது அதிகம் பேசவோ, சிரிக்கவோ கூடாது, பேஷியல் செய்த பிறகு 8 மணி நேரம் முகத்திற்கு எதுவும் போடாதீர்கள்.

    செய்து பாருங்கள் ரொம்ப ஈஸி without side effect.

    jv_66 likes this.

  9. #199
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    நரைமுடிக்கு 'குட்-பை' சொல்ல 5 நல்ல இயற்கை வழிகள்!!

    நரைமுடி வருவதால் மக்கள் கவலைப்படுவது வழக்கம். ஆனால், மிகவும் அதிகமாகக் கவலைப்பட்டால் நம் தலையில் நரைமுடி தோன்றும் என்பதும் உண்மை தான். ஆணோ, பெண்ணோ... இளம் வயதில் நரை வந்துவிட்டால், அவர்கள் ரொம்பவே வருத்தப்படுவார்கள். நரைமுடி அவர்களுக்கு வயதான தோற்றத்தைக் கொடுப்பதால், அவர்கள் மிகவும் நொந்து போயிருப்பார்கள்.

    நரையை மறைப்பதற்கு மக்கள் டை அடிப்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. பவுடர் மற்றும் திரவ நிலைகளில் நிறைய கம்பெனிகள் டை தயாரித்து வருகின்றன. அது மட்டுமல்ல, தற்போது பலப்பல வண்ணங்களிலும் நமக்கு இந்த சாயம் கிடைக்கிறது. ஆனாலும் அத்தகைய சாயங்களில் அம்மோனியா உள்ளிட்ட பல ரசாயனங்கள் கலந்திருப்பதால், முடி மற்றும் சருமம் ஆகியவற்றின் ஆரோக்கியம் பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன. முடிகள் உதிரவும், சருமங்களில் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

    இதற்கு சரியான மாற்று வழி, ரசாயனங்கள் கலக்காத இயற்கையான முறையில் மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட சாயங்களை நாடுவதுதான். முடிந்தால், அவற்றை நாம் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். நரை முடிகளுக்கான சில இயற்கை தீர்வுகள் குறித்து பார்க்கலாம். ஏற்கனவே இவை நமக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் முயற்சித்திருக்கவே மாட்டோம். உடனே முயற்சி செய்து பாருங்கள்; பலன் நிச்சயம்!
    contd..


    jv_66 likes this.

  10. #200
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தொடர்ச்சி

    தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை

    தேங்காய்எண்ணெயுடன் சிறிது கறிவேப்பிலையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.பின் அதைக் குளிரச் செய்து, முடிகளில் நன்றாக மசாஜ் செய்து தேய்க்க வேண்டும். சுமார்அரைமணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பின்னர் மிதமான சுடுநீரில் ஷாம்பு கொண்டுகழுவினால், நல்ல பலன் கிடைக்கும். நரை முடியைமறைக்கும் திறன் கறிவேப்பிலையில் உள்ளது.

    நெல்லிக்காய்

    நெல்லிக்காயிலும்நரைமுடியை மறைக்கும் பண்பு காணப்படுகிறது. நெல்லிக்காயைச் சிறுசிறு துண்டுகளாகவெட்டி, நிழலில் நன்றாகக் காய வைக்கவும். பின், சுத்தமான தேங்காய் எண்ணெயில் அதைச் சிறிது நேரம் கொதிக்கவைத்து, பின்னர் அது குளிர்ந்ததும் தலையில் தடவவேண்டும். சிறிது நேரம் கழித்து, ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும். தினமும் காலையில்நெல்லிக்காய் ஊற வைத்த நீரில் தலைமுடியைக் கழுவி வருவதும் நல்லது.

    மோர், கறிவேப்பிலை

    கறிவேப்பிலைகலந்த மோரைத் தலைமுடியில் தேய்த்து, அரைமணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் தலையைமெதுவாக மசாஜ் செய்து, தண்ணீரில் கழுவினால் சில நாட்களிலேயே நரை ஓடிப் போகும்.

    நல்லெண்ணெய்மற்றும் கேரட் விதை எண்ணெய்

    நரை வராமல்தடுப்பதற்கு, சிறிது கேரட் விதை எண்ணெயுடன் 4 ஸ்பூன் நல்லெண்ணெயை சேர்த்து தலையில் மசாஜ் செய்து தேய்க்கவேண்டும். சிறிது நேரம் கழித்து, ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும்.

    எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய், நெல்லிக்காய்
    இந்த மூன்றும்கலந்த கலவையைத் தயாரித்து 3 நாட்களுக்கு ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். அந்தக் கலவையைதலைமுடியில் நன்றாக மசாஜ் செய்து, அரை மணிநேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். பின்னர், ஷாம்பு கொண்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் இதைசெய்து வந்தால் நரைமுடிக்கு 'குட்-பை' சொல்லிவிடலாம்.

    Last edited by chan; 7th Jan 2015 at 11:54 AM.
    jv_66 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter