Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


  1. #211
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    5. ஓட்ஸ்பூச்சு

    தேவையான பொருட்கள் :

    2 tbsp
    ஓட்மீல்
    2 tbsp
    பன்னீர்
    1/2
    கப்பால்

    செய்முறை :

    பாலையும் ஓட்மீலையும் கலந்து மிதமான சூட்டில் பசைபோல் ஆனதும் பன்னீர் சேர்க்கவும். இளம் சூட்டிலேயே முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகம் கழுவவும்.

    இந்தப் பூச்சு வயோதிகத் தன்மையைக் குறைக்கும்.




    Sponsored Links

  2. #212
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    அழகுக்குஅழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்----அழகு குறிப்புகள்.,

    கோடை வெயிலினாலும், தூசுக்களினாலும்சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. கூந்தலும் மாசடைந்து வறண்டு விடுகிறது. சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள்தோன்றுவதோடு பொலிவு குறைந்து காணப்படும். இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம்சமைக்கப் பயன்படுத்தப்படும் அடுப்பங்கறை பொருட்களே போதுமானது. எலுமிச்சை, மஞ்சள், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்திமுகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம் என்கின்றனர் அழகியல்நிபுணர்கள்.



    jeyajenifa likes this.

  3. #213
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கடலைமாவுமஞ்சள் பேஸ்ட்

    தொன்று தொட்ட முதியோர் காலத்திலிருந்து பாரம்பரியப்பொருனாக பயன்படுத்தப்படும் பொருள் கடலைமாவு, மஞ்சள்தூள்.இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சருமஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகைமஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசிஅரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம்மென்மையாகும்.




  4. #214
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    வழுவழுப்புக்குகடலைமாவு பேஷியல்

    அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பதுகடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். இரண்டு ஸ்பூன் கடலைமாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில்நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால்பளிச் என்று இருக்கும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம்வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.



    Lakschellam likes this.

  5. #215
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    ரோஸ்வாட்டர் கடலைமாவு

    இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2ஸ்பூன்ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்துநிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சிதரும்.

    பருக்கள் நீங்க

    கடலை பருப்பு 1 டீஸ்பூன்.ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன்முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் "பேக்ஆகப் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ்வேண்டும்.பருக்கள் இருந்த படிப்படியாக மறைந்து போகும்.




  6. #216
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பிசுபிசுப்பானசருமத்திற்கு

    சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக இருந்தால்அதற்கு கடலைமாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போடுவது முகத்தை பொலிவாக்கும். ஒருகிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சைசாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். சில நிமிடங்கள் ஊறவைத்துவெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொழிவுபெறும்.

    டல் முகம் பொலிவாக

    தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சைசாறு சேர்த்து முகத்துக்கு "பேக்" போட்டு ஐந்து நிமிடம் கழித்துவெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம்ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.


  7. #217
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கரும்புள்ளிகள் மறைய சில டிப்ஸ்

    கற்றாழை
    கற்றாழையின் ஜெல்லை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி மசாஜ் செய்து கழுவினால், நாளடைவில் கரும்புள்ளிகள் வருவதை தவிர்க்கலாம்.
    வேப்பிலை
    வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் ஆவிப்பிடித்து, முகத்தை நல்ல சுத்தமான துணியால் துடைத்தால், கரும்புள்ளிகள் போய்விடும்.
    கடலை மாவு
    கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து, வேண்டுமெனில் அத்துடன் சிறிது தேனையும் சேர்த்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், இயற்கையாகவே கரும்புள்ளிகள் போய்விடும்.
    சந்தனம்

    சந்தனப் பொடியில், சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
    பட்டை
    பட்டையை பொடி செய்து, அதில் தேன் ஊற்றி கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் இரவு படுக்கும் போது தடவி, காலையில் எழுந்து கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.
    பாதாம்
    பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, முகத்தில் தடவி கையால் மென்மையாக மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் பாலை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, வெது வெதுப்பான நீரில் அலச வேண்டும்.
    டூத் பேஸ்ட்
    கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் டூத் பேஸ்ட் தடவி காய வைத்து, பின் மென்மையாக மசாஜ் செய்து, 5-10 நிமிடம் ஆவி பிடித்து, காட்டனால் தேய்த்து எடுத்து, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறுவ தோடு, சருமத்துளைகளும் மூடிக் கொள்ளும்.
    ஆலிவ் ஆயில்
    5-6 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் ஆவிப்பிடித்து, ஈரமான துணியால் தேய்த்தால், கரும்புள்ளிகள் எளிதில் நீங்கி விடும்.






  8. #218
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கண்ணில்கருவளையம் மறைய...

    *
    சிலபெண்களுக்கு கண்களைச் சுற்றிகருப்பு வளையம் இருக்கும். இதை நீக்க வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்துதூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளையம் இருந்த இடம்தெரியாமல் போய்விடும்.


  9. #219
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    உதடுஉலர்ந்து விட்டதா?

    *
    உதட்டில்வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும் இதற்கு காரணம்உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர்மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும். இரவில் வெண்ணையை சிறிதளவும்உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடுபழைய பொலிவுக்கு வந்து விடும்.




  10. #220
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    காது அழகைபராமரிப்பது எப்படி?

    *
    உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும், 15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாகதுடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம்மாயமாகிவிடும். முகத்திற்கு பூசும் பேஸ்- பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச்செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter