Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


 1. #231
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  * இரவுபடுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடிஎலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக்கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும்.பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்


  Sponsored Links

 2. #232
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  * அப்பிள்பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ளஎண்ணைப் பசை குறையும்.


 3. #233
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  * தோல்நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன்சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தைகழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்


 4. #234
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  மூக்குகண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்?
  *
  நன்குகாய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து முகத்திற்குபூசலாம் மேலும் பழங்களான ஃபேஸ் பாக் போடலாம்.வாழைப்பழத்தின் தோலின் உட்பகுதியைமுகம் முழுவதும் தேய்த்து காயவைத்து கழுவலாம். மேலும் எலுமிச்சை வெள்ளரிக்காய்போன்ற காயிலும் இதே முறையை பின்பற்றலாம்.
 5. #235
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  முகப்பொலிவிற்கு
  *
  உலர்ந்தரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம்பொலிவு பெறும்.
 6. #236
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  * முகத்தில் உள்ள முடிகளை அகற்ற முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து ஃபேஸ் பாக்
  போடலாம்


 7. #237
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  * ஆலீவ்எண்ணெயுடன் தேன் மெழுகும், பன்னீரும்கலந்து தடவி வந்தால் உதடுகள் சிவப்பாகவும் மென்மையாகவும் மாறும்.
 8. #238
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  *100கிராம் வறுத்த கசகசாவை வெந்நீரில் ஊறவிடவும். மறுநாள்பாலிலிட்டு அரைத்து, முகத்தில்"பேக்' போல போட்டுப் பாருங்கள். மங்கு மரு எல்லாமே சொல்லாமல்கொள்ளாமல் ஓடிவிடும்.


 9. #239
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  குளிர் காலத்தில் சருமத்தை பொலிவுடன் வைக்கும் சூப்பர் உணவுகள்!

  வறண்ட குளிர் காற்று, மிக குறைவான தட்பவெப்ப நிலை, குறைந்த ஈரப்பதம் மற்றும் வீட்டிற்குள் சூட்டை வரவழைக்க வழிவகைகள் - இவையாவும் போதாதா? எதற்கு என்று கேட்கிறீர்களா? உங்கள் சருமம், உதடு மற்றும் உடலின் மற்ற பாகங்களுக்கு தொந்தரவுகளை உண்டாக்க! குளிர் காலத்தில் சுகம் கிடைத்தாலும் அதே அளவிலான தொந்தரவுகளும் உண்டாகும்.

  அது நிலவுகிற குளிரை பொறுத்து அமையும். அதிக குளிர் என்றால் பாதிப்புகளும் அதிகமாகவே இருக்கும். இந்த பாதிப்புகளால் உங்கள் சருமம் வறண்டு போகும், பொடுகு தொல்லை உண்டாகும், சரும நிறம் மங்கி விடும், உதடுகள் வெடிப்புக்குள்ளாகும், அரிப்பு ஏற்பாடு மற்றும் சரும எரிச்சல் உண்டாகும்.

  இவைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் சரும பராமரிப்பில் சீரான முறையில் ஈடுபடுவது மட்டும் பத்தாது. மாறாக நீங்கள் உண்ணும் உணவிலும் கூட கவனம் தேவை. அப்படி கவனத்துடன் இருந்தால், ஆரோக்கியமான பொழிவுடன் கூடிய சருமத்தை குளிர் காலத்திலேயும் கூட பெறலாம். உங்கள் உணவு பழக்கம் உங்கள் சருமத்தை வறட்சி மற்றும் புறஊதா கதிர்களில் இருந்து காக்கும்.

  அது மட்டுமல்லாது சுருக்கங்களை குறைத்து, வயதாகும் சில அறிகுறிகளை குறைத்து, வழுவழுப்பான மற்றும் மின்னிடும் சருமத்தை மேம்படுத்தும். உங்கள் சருமத்தை குளிர் காலத்தில் கூட ஆரோக்கியத்துடனும், அழகுடனும், பொலிவுடனும் வைத்திருக்க உதவும் சில உணவுகள் உள்ளது. அப்படிப்பட்ட சில உணவுகளைப் பற்றி தான் நாம் பார்க்கபோகிறோம்.

  ஆலிவ் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் உங்கள் சருமத்திற்கு நல்லதாகும்; குறிப்பாக குளிர் காலத்தில் உங்கள் சருமம் வறண்டு போகும் போது. இதில் வைட்டமின் ஏ மற்றும் ஈ மற்றும் பல்வேறு இதர கனிமங்களும், இயற்கையான கொழுப்பமிலங்களும் வளமையாக உள்ளது. அதனால் சருமத்திற்கு நீர்ச்சத்து அளித்து, அதன் நெகிழ்வு தன்மை மற்றும் மேன்மைத் தன்மையை பராமரித்திடும்.

  சருமம் வயதாவதையும், தோற்றத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதையும் தடுத்து, இயக்க உறுப்புகளில் இருந்து ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் செய்யும். குளிப்பதற்கு முன்பு, வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணெய்யை முகம், கைகளின் பின்புறம், தோள்பட்டை மற்றும் முட்டிகளில் நன்றாக தடவிக் கொள்ளவும். சிறிது நேரத்திற்கு மென்மையாக மசாஜ் செய்யவும்.

  பின் வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். பின் சருமத்தை காய வைத்து பின்பு, மீதமுள்ள எண்ணெய்யை துடைத்து எடுக்கவும். உங்கள் சருமம் வியக்க வைக்கும் வகையில் மென்மையாகவும் வழுவழுப்பாகவும் மாறும். மேலும், எக்ஸ்ட்ரா-வெர்ஜின் ஆலிவ் எண்ணெய்யை சாலட் அலங்காரத்திற்கும், சமையலுக்கும் பயன்படுத்துங்கள்.

  பப்ளிமாஸ் பப்ளிமாஸில் வைட்டமின் சி உள்ளது. இந்த ஆன்டி-ஆக்சிடன்ட் உங்கள் சருமத்தை இயக்க உறுப்புகளில் இருந்து ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். மேலும் இதில் லைசோபீன் உள்ளதால், உங்கள் சருமத்தை மென்மையாகவும் வைத்திருக்கும். இதிலுள்ள பொட்டாசியம் சுருக்கங்களையும், வயதான தோற்றத்தையும் தடுக்கும்.

  மேலும் தீமையான புறஊதா கதிர்களில் இருந்தும் சருமத்தை பாதுகாக்கும். பப்ளிமாஸில் உள்ள அமினோ அமிலங்கள் உங்கள் சருமத்தை திடமாகவும், மென்மையாகவும் மாற்றும். கூடுதலாக இதிலுள்ள நரின்ஜின் என்ற தனித்துவமான ஃபைட்டோகெமிக்களால் ஈரலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும். இதனால் ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்.

  நற்பதமான பப்ளிமாஸ் ஜூசை குளிர் காலத்தின் போது சீரான முறையில் பருகிடவும் அல்லது பப்ளிமாஸை கொண்டு ஃபேஸ் பேக் செய்து அதனை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம். அதற்கு ˝ பப்ளிமாஸ் ஜூசை 1 டீஸ்பூன் தேன் மற்றும் ˝ கப் ஓட்ஸ் பொடியுடன் கலந்திடவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவுங்கள்.

  காய்ந்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க் வழுவழுப்பான அமைமுறையையும், இயற்கையான பொழிவையும் சருமத்திற்கு அளித்திடும்.


 10. #240
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

  கேரட் கேரட்களில் வைட்டமின் ஏ மற்றும் பிற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் வளமையாக உள்ளதால், அது உங்கள் சருமத்தை குளிர் காலத்திலும் கூட ஆரோக்கியமாகவும், பொழிவுடனும் வைத்திட உதவும். சுருக்கங்கள், நிறமூட்டல், சீரற்ற சரும நிறம் போன்ற வயதாகும் அறிகுறிகளை தடுக்கும். கூடுதலாக, கேரட்களில் பீட்டா-கரோட்டீன் மற்றும் லைகோபீன் போன்ற காரோட்டீனாய்டுகள் உள்ளதால், புறஊதா கதிர்களில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

  பொட்டாசியம் வளமையாக உள்ளதால், வறண்ட சரும பிரச்சனையையும் போக்கும். தினமும் கேரட் ஜூஸ் குடித்தால் சருமம் நீர்ச்சத்துடன் இருக்கும். கேரட்களை கொண்டு மாய்ஸ்சுரைசிங் ஃபேஸ் மாஸ்க்குகளை தயார் செய்யலாம். மசித்த கேரட் 2 டீஸ்பூன், தேன் 1 டீஸ்பூன், பால் க்ரீம் 1 டீஸ்பூன், சிறிதளவு ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை கலந்திடவும்.

  அதனை சுத்தமான முகத்தில் தடவுங்கள். 10-15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விட்டு, பின் குளிர்ந்த நீரில் முகத்தை அலசுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரம் சில முறை பயன்படுத்துங்கள். இதனால் மென்மையான, பளிச்சிடும், ஈர்பதத்துடனான சருமத்தை பெறுவீர்கள்.

  ப்ராக்கோலி உங்கள் சருமத்திற்கு மற்றொரு ஆரோக்கியமான காய்கறியாக விளங்குகிறது பச்சை பூக்கோசு. சருமத்தை மேம்படுத்த இதவும் வைட்டமின் ஏ மற்றும் சி, மற்றும் இயற்கையான ஈஸ்ட்ரோஜென்களை கொண்டுள்ள இது, உங்கள் சருமத்திற்கு மாயங்களை செய்திடும். சருமத்தை ஆரோக்கியமாக வைத்திட கொலாஜென் உற்பத்தியை ஊக்கவிக்கும் வைட்டமின் சி.

  அதே சமயம் சூரிய ஒளியால் சருமம் பாதிப்படைவதை தடுக்கவும், சரும அணுக்களின் சவ்வுகளை பாதுகாக்கவும் வைட்டமின் ஏ உதவுகிறது.

  கூடுதலாக, ப்ராக்கோலியில் உள்ள வைட்டமின் பி, குளிர் காலத்தில் ஏற்படும் வறண்ட, வெண்ணிற படைகளை கொண்ட சரும பிரச்சனைகளை நீக்க உதவும். ப்ராக்கோலியை சீரான முறையில் உட்கொண்டால் உங்கள் சருமத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்கும். அவித்த அல்லது வறுத்த ப்ராக்கோலியை உட்கொண்டால், அதிக பயன்களை பெறலாம்.

  கீரை ஆரோக்கியமான சருமம் என வந்து விட்டால், உங்களால் சீரை அளிக்கும் பயன்களை தவிர்க்க முடியாது. ஆரோக்கியமான சரும அணுக்களை பெறுவதற்கும், சருமத்தின் இயற்கையான வயதாகும் செயல்முறையை எதிர்த்து போராடவும் இந்த பச்சை காய்கறியில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் பயன்படுகிறது. கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. இந்த ஆன்டி-ஆக்சிடன்ட் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும். மேலும் சரும நிறத்தையும் மேம்படுத்தும்.

  மற்றொரு ஆன்டி-ஆக்சிடன்டான வைட்டமின் சி, சரும அணுக்களை சீர் செய்யவும் சருமத்தை அழகாக காட்டவும் உதவும். கீரையில் இரும்புச்சத்தும் வளமையாக உள்ளது. இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் உங்கள் சருமம் பொழிவிழந்து காணப்படும். கீரையில் உள்ள லுடீன் சூரிய பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் உதவும்.

  வறண்ட மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் சருமத்தை தடுக்க ˝ கிளாஸ் கீரையுடன் கொஞ்சம் எலுமிச்சை ஜூசை கலந்து குடிக்கவும். கீரையை சூப், சாலட் போன்ற பிற உணவுகளிலும் பயன்படுத்தலாம்.


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter