Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


  1. #241
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    டார்க் சாக்லெட் டார்க் சாக்லெட், குறிப்பாக 70% கொக்கோ அடங்கியுள்ளவைகள், நம் சருமத்திற்கு நல்லதாக கருதப்படுகிறது. இதில் ஃப்ளேவோனால்கள் வளமையாக உள்ளது. அதனால் கடுமையான குளிர் காலத்திலும் கூட உங்கள் சருமத்தின் தோற்றம் நன்றாக இருக்கும். ஃப்ளேவோனால்கள் என்பது ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ஆகும்.

    இது உங்கள் சருமத்தை புறஊதா கதிர்கள் மற்றும் இயக்க உறுப்புகளில் இருந்து பாதுகாத்து, மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை அளிக்கும். மேலும் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்யும். வாரத்திற்கு 2-3 அவுன்ஸ் டார்க் சாக்லெட் சாப்பிட்டால் பொழிவுடன் கூடிய அழகிய சருமத்தை பெறுவீர்கள். பொழிவிழந்து காணப்படும் உங்கள் சருமத்தை பிரகாசமடையச் செய்ய, டார்க் சாக்லெட் மாஸ்க்கையும் பயன்படுத்தலாம். டார்க் சாக்லெட் பார் ஒன்று உருக்கவும்.

    அதனுடன் 1 டீஸ்பூன் பருப்பு மாவு, 1 டீஸ்பூன் பால் க்ரீம் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்திடவும். இதனை முகம் முழுவதும் பூசிக் கொள்ளுங்கள். அதை 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். இதனை வாரம் ஒரு முறை பயன்படுத்துங்கள்.


    Sponsored Links

  2. #242
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    முகத்தில் உரோமம் வளர்கிறதா ?

    பொதுவாக சில பெண்களுக்கு இருக்கும் பிரச்சினை முகத்தில் வளரும் தேவையற்ற உரோமங்கள் . அது அவர்களின் முக அழகை பெரிது பாதிக்கின்றது .

    தைரோய்ட் பிரச்சினை உள்ள பெண்களுக்கு பொதுவாக முகத்தில் தேவையற்ற உரோமம் வளர்வது அதிகமாகவே இருக்கும் . பரம்பரை பரம்பரையாகவும் இப் பிரச்சினை தொடரலாம் .இதனை தவிர்ப்பதற்கு சில முறைகள் :

    கடுகு எண்ணெயை பூசி 15 நிமிடத்தின் பின் பாசிப்பயறு மாவை கொண்டு அவ்விடத்தை நன்கு மசாஜ் செய்ய வேண்டும் . இவ்வாறு தொடர்ந்து 3மாதங்களுக்கு செய்து வர முடி வளர்வது குறைவடையும் .

    கஸ்தூரி மஞ்சள், வேப்பிலை, குப்பை மேனி இலை இவற்றை நன்கு பசை போல் அரைத்து கொண்டு அவ்விடத்தில் பக் செய்து கழுவி கொள்ள வேண்டும் .

    இம் முறைகளின் மூலம் முகத்தில் ஏற்படும் உரோமங்களை தவிர்த்து கொள்ளலாம்.

    இம் முறை மூலம் வளரும் உரோமங்களை தவிர்த்து கொள்ள முடியாவிட்டால் அது அவர்களின் தைரோய்ட் பிரச்சினையே மூல காரணமாகும் .இவர்கள் வைத்தியர்களின் ஆலோசனையுடன் லேசர் சிகிச்சையினை மேற்கொள்வதன் மூலம் முழுமையாக இப் பிரச்சினையில் இருந்து விடுபடலாம் .

    கண்டிப்பாக இச்சிகிச்சையை எந்த ஒரு அழகு நிலையத்திலும் செய்யாமல் வைத்தியரின் ஆலோசனையுடன் செய்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும் .


  3. #243
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    வறண்ட சருமத்தை இல்லாமல் செய்ய வேண்டுமா ?

    அதிகமான பெண்களுக்கு முகம் வறண்ட சருமமாக காணப்படும் . அதற்கு ஒரு சிறந்த வழியாக வாழைப்பழ மாஸ்க் உள்ளது .

    1 வாழைப்பழ மாஸ்க் செய்யும் முறை

    1 கனிந்த வாழைப்பழம்

    1 tsp தேன்

    1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்

    அனைத்து பொருட்களையும் கலந்து மென்மையாக பேஸ்ட் செய்யவும் . பின் அதனை முகத்தில் பூசி 10நிமிடங்கள் கழிந்து நீரில் கழுவவும் .

    2 ஓட்ஸ் மற்றும் பாதாம் பேஸ் மாஸ்க்

    5-6 பாதாம்

    2 தேக்கரண்டி ஓட்ஸ்

    2 தேக்கரண்டி தயிர்

    1 தேக்கரண்டி தேன்

    கொத்தமல்லி பாதாம் மற்றும் ஓட்ஸ் இவற்றை கலந்து தூளாக அரைத்து எடுக்கவும் .மேலும் அதில் தயிர் மற்றும் தேன் சேர்த்து பேஸ்டாக செய்து எடுக்கவும் . அவ் பேஸ்ட்டை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து நீரில் துவைக்கவும் .


  4. #244
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பால் பேஸ் மாஸ்க்

    1 தேக்கரண்டி பால்

    1 தேக்கரண்டி பாதாம் பேஸ்ட்

    1 தேக்கரண்டி கற்றாழை ஜெல்

    எண்ணெய் 2 சொட்டு

    1 டீஸ்பூன் தேன்

    நன்கு அனைத்து பொருட்களிலும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் விட்டு , சூடான தண்ணீரில் துவைக்கவும் . இது

    உலர்ந்த சருமத்திற்கு வீட்டில் தயாரிக்கும் எளிதான முறையாகும் .

    கொக்கோ மாஸ்க்

    1/2 டீஸ்பூன் கோக்கோ பவுடர்

    1/2 டீஸ்பூன் தேன்

    1 தேக்கரண்டி ஓட்ஸ் அல்லது கடலை

    தேங்காய் பால் 2 தேக்கரண்டி

    அனைத்தையும் கலந்து முகத்தில் பூசி சில நிமிடங்கள் கழித்து நீரில் கழுவவும் .


  5. #245
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பொடுகை ஒழிப்பதற்கு வேகமாகவும் சிறப்பாகவும் செயல்படும் 7 எளிய வீட்டு சிகிச்சைகள்!!

    ஒரு வருடத்தில் அதிகப்படியான நேரத்தில் வெயிலை சந்திக்கும் நம் நாட்டில் மழைக்காலமும் குளிர் காலமும் சொர்க்கத்தை போல் தெரியும். வெயிலில் வெந்து போகும் நமக்கு எப்பத்தான் மழைக்காலமும் குளிர் காலமும் வரும் என்ற ஏக்கம் ஏற்படும். அதுவும் குளிர் காலம் என்றால் கேட்கவே வேண்டாம். மார்கழி மாத குளிரில் போர்த்திக் கொண்டு தூங்குவது என்றாலே அலாதி சுகம் தான். அந்த சுகத்திற்காகவே மார்கழி மாதம் பிறப்பதற்கு வழி மேல் விழி வைத்து காத்திருப்போர்கள் பல.

    குளிர் காலமும் வந்து விட்டது. சுகம் என்று ஒன்று இருந்தால் அதனுடன் சேர்ந்து சில கஷ்டங்களும் இருக்க தானே செய்யும். ஆம், குளிர் காலத்தோடு சேர்த்து சில பிரச்சனைகளும் சேர்ந்த வரும். அது தான் உதடு வெடிப்புகள், வறண்ட சருமம், பொடுகு போன்ற சில இம்சைகள். சிலர் இந்த பிரச்சனைகளால் வருடம் முழுவதும் அவதிப்பட்டு வந்தாலும், குளிர் காலத்தில் இந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளது.

    அதுவும் குளிர் காலத்தில் உங்கள் தலைச்சருமம் வறண்டு போவதால் பொடுகு அதிகமாக தென்படும். இந்த பிரச்சனைகளால் நீங்களும் அவதிப்படுகிறீர்களா? வருத்தம் வேண்டாம். இதோ பொடுகு இல்லாத தலை முடியை சீக்கிரமாகப் பெற சில எளிய வீட்டு சிகிச்சைகளை உங்களுக்காக நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
    contd..



  6. #246
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தொடர்ச்சி

    வேம்பு வேம்பை கொண்டு வீட்டில் தயார் செய்யப்படும் பேக்கை வைத்து பொடுகு பிரச்சனைக்கு தீர்வு காணலாம். தேவையானது: Ľ கப் வேப்பிலைச் சாறு, தேங்காய் பால் மற்றும் பீட்ரூட் ஜூஸ் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்

    செய்முறை: அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து, தலைச்சருமத்தில் மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து மூலிகை ஷாம்புவை மற்றும் கண்டிஷனர் கொண்டு கழுவி விடவும். வாரம் ஒரு முறை இதை செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.

    வெந்தயம் வெந்தயமும் கூட பொடுகை குறைக்க உதவும். அதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் பூஞ்சை எதிர்ப்பி குணங்கள் இந்த பொடுகுகளை ஓடச் செய்யும். தேவையானது: 2 டீஸ்பூன் வெந்தயம் 1 கப் தண்ணீர் 1 அப் ஆப்பிள் சிடர் வினீகர்

    செய்முறை: முந்தைய நாள் இரவு வெந்தயத்தை ஊற வைக்கவும். மறுநாள் காலை அதனை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் ஆப்பிள் சிடர் வினீகர் சேர்த்து உங்கள் தலைச்சருமத்தில் தடவவும். அதை அப்படியே 30 நிமிடங்களுக்கு விட்டு விட்டு, பின் மிதமான ஷாம்புவை கொண்டு அலசவும். அரிப்பு மற்றும் வறண்ட தலைச்சருமத்தில் இருந்தும் இது நிவாரணத்தை அளிக்கும்.
    contd..



  7. #247
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தொடர்ச்சி

    ஆஸ்பிரின் இது இயற்கையான சிகிச்சை இல்லை தான் என்றாலும் கூட, பொடுகை வேகமாக நீக்கும் வழிகளில் இதுவும் ஒன்றாகும். ஆஸ்பிரினில் சாலிசிலேட்டுகள் என்ற பொருள் உள்ளது. இது பல ஷாம்புக்களில் அமில வடிவில் இருக்க கூடிய முக்கியமான பொருளாகும். தேவையானது: 2 ஆஸ்பிரின் மாத்திரைகள் ஷாம்பு

    செய்முறை: மாத்திரைகளை நசுக்கி பொடியாக்கவும். அதனுடன் சாதாரண ஷாம்புவை சேர்க்கவும். அது நுரை பொங்கும் வரை தலையில் தேய்க்கவும். அதனை அப்படியே 5 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். தலை முடியை கழுவவும். தலைச்சருமத்தில் ஆஸ்பிரின் இருப்பதை நீங்கள் உணர்ந்தால், சாதாரண ஷாம்புவை கொண்டு மீண்டும் முடியை அலசுங்கள்.

    பூந்திக் கொட்டை பழமை வாய்ந்த இந்திய சிகிச்சையான இது, கூந்தலை நீளமாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவும். பூந்திக் கொட்டைகளை பாரம்பரியமாகவே சீயக்காயுடன் சேர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பி குணங்கள் தலைச்சரும பிரச்சனைகளை நெருங்க விடாமல் பாதுகாக்கும். தேவையானது: 10-15 பூந்திக் கொட்டை 1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி அல்லது ஜூஸ் 2-3 கப் தண்ணீர்

    செய்முறை: பூந்திக் கொட்டைகளை முந்தைய நாள் இரவு தண்ணீரில் ஊற வையுங்கள். மறுநாள் காலை, அதனை அரைத்து, தண்ணீரில் கொதிக்க வையுங்கள். பின் வடிகட்டுங்கள். இப்போது அதனுடன் நெல்லிக்காய் ஜூஸ் அல்லது பொடியை கலந்து கொள்ளவும். வேண்டுமானால், கொஞ்சம் தண்ணீர் கலந்து பேஸ்ட் வடிவில் மாற்றிக் கொள்ளவும். 30 நிமிடங்களுக்கு தலைச்சருமத்தின் மீது தடவவும். பின் மிதமான ஷாம்புவைக் கொண்டு அலசவும்.
    contd..



  8. #248
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தொடர்ச்சி

    எலுமிச்சை இந்த சிட்ரஸ் பழத்தில் வைட்டமின் சி வளமையாக உள்ளது. மேலும் அமிலத்தன்மையுடன் விளங்குகிறது. இதனால் பொடுகை அண்ட விடாது. அதனை தலையில் பிழிந்திடலாம் அல்லது தலையில் வைத்து நன்றாக தேய்க்கலாம்.

    தேவையானது: 4 எலுமிச்சை பழ துண்டுகள் அல்லது ஜூஸ்

    செய்முறை: எலுமிச்சை துண்டுகளை உங்கள் தலைச்சருமத்தில் தடவி அதை அப்படியே 10-15 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். பின் சாதாரண தண்ணீரில் அலசுங்கள். நல்ல பலனை பெற இதனை வாரம் ஒரு முறை செய்யுங்கள்.

    சோத்துக் கற்றாழை ஜெல் பொடுகை கட்டுப்படுத்துவதில் கில்லாடியாக செயல்படுகிறது சோத்துக் கற்றாழை ஜெல். அதிலுள்ள பூஞ்சை எதிர்ப்பி குணங்கள் போக, சருமத்தை இதமாக வைக்கவும் அரிப்பை நிறுத்தவும் கூட இது உதவுகிறது.

    தேவையானது: 5 டீஸ்பூன் சோத்துக் கற்றாழை ஜெல்

    செய்முறை: சோத்துக் கற்றாழை செடியில் இருந்து ஜெல்லை நேரடியாக எடுக்கலாம் அல்லது கடைகளில் விற்கும் ஜெல்லை பயன்படுத்தலாம். அதனை உங்கள் தலைச்சருமத்தில் மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் அவரை அப்படியே விட்டு விடுங்கள். உங்கள் தலையில் எண்ணெய் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். சாதாரண தண்ணீர் அல்லது மிதமான ஷாம்புவை கொண்டு கழுவுங்கள். வறண்ட முடியை கொண்டவர்கள் ஒரு நாள் கழித்து கூட முடியை கழுவிக் கொள்ளலாம்.


  9. #249
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    * முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

    * ஒரேஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

    * முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.


  10. #250
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    வறண்ட சருமத்திற்கான பராமரிப்பு

    வறண்ட சருமத்திற்கு அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து தடவி வந்தால் வறட்சி நீங்குவதோடு இறந்த செல்களையும் நீங்கி முகம் பொலிவடையும். ஆலிவ் எண்ணெய்யுடன் முட்டையை கலந்து பூசி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சுருக்கங்கள் மறையும்.

    பாலேட்டில் நன்றாக அடித்த முட்டை 1, தேன் 1 ஸ்பூன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் தோல் வறட்சி நீங்கி சருமம் மென்மையாக மாறும்.

    2 தேக்கரண்டி அரைத்த தேங்காய், 1 தேக்கரண்டி தேன் இரண்டையும் கலந்து முகத்தில் நன்றாக பூசி 10 நிமிடம் கழித்து கழுவி வர எண்ணெய்ப் பசை சமநிலைப்படுத்துவதோடு, சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். பாலேட்டில் சில துளிகள் எலுமிச்சைப் பழச்சாற்றை கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழு�வினால் வறட்சி நீங்கி முகம் பளபளப்பாகும்.

    சூடாக்கிய செய்த ஆலிவ் எண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய்யில் வைட்டமின் ஈ மாத்திரை 2, வைட்டமின் ஏ மாத்திரை 1, வைட்டமின் டி மாத்திரை 1 ஆகியவற்றை சேர்த்து முகத்தில் தேய்த்து பின்னர் 15 நிமிடங்கள் கழித்து டவலால் வெந்நீர் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும். பின்னர் பஞ்சை கொண்டு துடைக்க வேண்டும். இந்த பேக் உலர்ந்த சருமத்தின் வறட்சியை நீக்குவதோடு சருமத்திற்கு நல்ல ஊட்டத்தைக் கொடுத்து பளபளப்பாக வைத்துக் கொள்ளும்.

    தலையின் வறட்டு தன்மையை போக்கி ஜொலி ஜொலிக்க வைக்கிறது. ஆரஞ்சு தோல் உலர்ந்த ஆரஞ்சு தோல், வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலைபருப்பு, பயத்தம்பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ளுங்கள். இந்த பவுடரை வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளியுங்கள் இப்படி செய்து வந்தால் முடி பளபளப்பாகவும் வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்கு தேய்த்து குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.

    கண்கள் பளிச்சிட

    கண்கள் பளிச் ஆக ஆரஞ்சு பழச்சாரை ப்ரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளை துணியில் கட்டி கண்ணுக்கு மேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர கண்கள் பளிச் ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter