Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


  1. #251
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    சருமத்திற்கு தேவையான பேஷியலின் வகைகள்

    பெண்கள் மணமாகி பிள்ளை பெற்றதும் உடலில் காட்டும் கவனத்தை குறைத்து விடுகின்றனர். இதனால் அழகும், பொலிவும் தொய்ந்து போகும் முகத்திற்கு பயிற்சி வேண்டாமா? இவ்வாறு முகத்திற்கு அளிக்கப்படும் பயிற்சியே பேஷியல் என்றழைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் 25 வயது முதல் பேஷியல் செய்து கொள்ள வேண்டும். சூரிய வெப்பத்தினாலும், தூசியினாலும் பாதிக்கப்படும் முகத்தின் சருமத்தை மாதமொருமுறை பேஷியல் செய்ய வேண்டியது அவசியம். முதலில் பேஷியல் செய்வதற்கு முன்பு என்னென்ன பேஷியலில் பல வகைகள் உள்ளன எந்த எந்த சருமத்தற்கு எந்த வகையான பேஷியல் செய்வது என தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பின்னர் மட்டுமே பேஷியல் செய்ய வேண்டும்.

    இதில் பல வகை உண்டு. இவை ஒவ்வொன்றிற்கும் விதவிதமான பலன்கள் உள்ளன. பழங்களை கொண்டு செய்யும் பேஷியல், உலர்ந்த பழங்களை கொண்டு செய்யும் பேஷியல், ஹெர்பல் பேஷியல், கால்வானிக் பேஷியல், பேர்ல் பேஷியல், கோல்டு பேஷியல், அரோமா பேஷியல் என பல வகை உண்டு.


    Sponsored Links

  2. #252
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கோல்டன்பேஷியல்

    இம்முறை பேஷியல் செய்வதால் சூரிய வெப்பத்தினால்சருமம் நிறும் மாறுவது, முகத்தில் ஏற்படும் கறுப்பு திட்டுகள், சுருக்கங்கள் நீக்கப்படும். இதில் முதலில் ஷாதானியம், முட்டை, பன்னீர், முதலிய கலவையை முகத்தில் 10 நிமிடம் தடவ வேண்டும். பிறது அதன் மேல் பால் தெளித்துமெதுவாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு கோல்ட்ஜெல் (அழகு சாதனங்கள்விற்கும் கடைகளில் கிடைக்கும்) தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு முகத்தினைதுடைத்து கோல்ட் பாக் தடவி கண்களை சுற்றி ஷாவீட் என்ற லோஷனை தடவ வேண்டும்.கண்களின் மேல் குளிர்ச்சியான பன்னீரை காட்டனில் நனைத்து வைக்க வேண்டும். பின்னர் 15 நிமிடம் கழித்து துடைத்துவிட்டு ஷா பேஸ் என்ற க்ரீம்தடவ வேண்டும். இதுவே கோல்டன் பேஷியல். இது நன்றாக மாநிலம் உள்ளவர்கள் செய்யவேண்டும்.




  3. #253
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பேர்ல்பேஷியல்

    மிகவும் கறுப்பான நிறம் உள்ளவர்களுக்கு இம்முறை நல்லபலன் தரும். இதற்கு கோல்டன் பேஷியல் அளவிற்குச் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை.பேர்ல் பேஷியல் கிட் என்று கேட்டால் கடைகளில் கிடைக்கும். அதில் நான்கு வகையாககிரீம்கள் உள்ளன. அம்முறைபடி செய்தால் முக பொலிவாக மாறும்.


  4. #254
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கால்வானிக்பேஷியல்

    உலர்ந்த சருமம்மற்றும் பருக்கள் அதிகம் உள்ளவர்களுக்கு இம்முறையில் பேஷியல் செய்வது நல்லது.மிஷினின் உதவியுடன் மசாஜ் செய்யப்படும் இம்முறையில் கறுப்புத்திட்டுகள் டபுள்ஸ்கின், தொங்கு கழுத்துச்சதை முதலியவை நீங்கும்.


  5. #255
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா?

    மஞ்சள் பூசிக் குளிக்கும் வழக்கம் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு இருந்து வருகிறது. மஞ்சள் தோலுக்கு ஆரோக்கியத்தையும் அழகையும் தருகிறது. இந்த காலத்து பெண்களில் பலர் மஞ்சள் பூசிக்குளிப்பதில்லை.
    ஆகையால் தான் அவர்களுக்கு மீசையும், தாடியும் வளர்கின்றன என்ற பலர் நினைக்கின்றனர். இது தவறு. மஞ்சள், முடியின் வளர்ச்சியை அடியோடு தடுப்பதில்லை.

    ஓரளவுக்குத் தான் தடை செய்கிறது. இதனால் தான் மஞ்சள் பூசிக் குளிக்கும் பெண்களிலும் பலருக்கு முகத்தில் முடி வளர்ந்திருப்பதை காணலாம்.
    மஞ்சள் பூசிக் கொண்டால் ஒரு சிறிது தடைபடுகிறது. பிறகு மஞ்சள் பூசுவதை விட்டு விட்டால் மீண்டும் முடி வளர தொடங்கி விடுகிறது.

    பெண்களின் உடலின் பெண் சுரப்பிகள் மிகுந்த அளவுக்கு வேலை செய்யாமல் ஆண் சுரப்பிகள் மிகுதியாக இயங்கினால் பெண்களுக்கு ஆணின் தண்மையும் ஆண்களைப் போலவே உடல் முழுவதிலும் முகத்திலும் முடி வளர்கிறது.
    இதை உணராமல் மஞ்சள் பூசிக் குளிக்காத பெண்களுக்கு மட்டும் முடி வளர்கிறது என்று எண்ணுவது அறியாமை! மஞ்சள் பூசிக் கொள்ளும் பெண்களுக்கு முடி இருந்தால் அது பளிச்சென்று தெரியாது என்று வேண்டுமானால் கொள்ளலாம்.


  6. #256
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    மூக்கில் வரும் கரும்புள்ளியை போக்க வழிகள்

    சருமத்தின் மென்மையைத் தடுக்கும் கரும்புள்ளி பிரச்சனையை தடுக்க சமையலறையிலேயே நிறைய பொருட்கள் உள்ளன.

    • தேனை லேசாக சூடேற்றி, அதில் சிறிது சர்க்கரை சேர்த்து, பின் அதனை மூக்கின் மேல் தடவி லேசாக மசாஜ் செய்து, முகத்தை கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கும்.

    • தக்காளியை அரைத்து, அதனை முகத்தில் தடவி ஊற வைத்து, பின் கழுவி துணியால் துடைத்தால், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, கரும்புள்ளிகளும் போய்விடும்.

    • அனைத்தையும் விட ஆவிப்பிடிப்பது தான் மிகவும் சிறப்பான வழி. அதிலும் சுடுநீரில் மூலிகைகளான லாவெண்டர், எலுமிச்சை தோல் மற்றும் புதினா இலைகள் ஆகியவற்றை சேர்த்து, ஆவிப்பிடித்து சுத்தமான துணியால் முகத்தை துடைத்தால், முகம் புத்துணர்ச்சியாக இருப்பதுடன், கரும்புள்ளிகளும் விரைவில் மறையும்.

    • சருமத்துளைகளின் அடைப்பால் ஏற்படும் கரும்புள்ளியை, எலுமிச்சை கொண்டு போக்கலாம். அதற்கு எலுமிச்சையை மூக்கின் மேல் தேய்த்தால், சருமத்துளைகளானது திறந்து, கரும்புள்ளிகள் வருவது தடுக்கப்படும்.

    • கருப்பு நிற காராமணியை பொடி செய்து, பின் அதில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, மூக்கின் மேல் தடவி ஊற வைத்து தேய்த்து கழுவ வேண்டும். இதனாலும் கரும்புள்ளிகளைப் போக்கலாம்


  7. #257
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கூந்தல் பராமரிப்பு

    1. வாரம் ஒரு முறை ஹாட் ஆயில் மசாஜ் செய்து கூந்தலை ஷாம்பூ போட்டு அலசவும். 2. ஹேர் டிரையரை கூந்தலின் வேர்கால்களில் படும்படி உபயோகிக்க கூடாது. வரண்ட கூந்தலுக்கு ஹேர் டிரையரை பயன்படுத்தவே கூடாது.

    3. தலைக்கு பயன்படுத்தும் சீப்பு, ப்ரஷ், டவல், ஹேர்பேண்ட் ஆகியவற்றை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.

    4. முடி குறைவாக இருந்தால் 1 டீஸ்பூன் விட்டமின் ‘இ’ எண்ணெயை முதல் நாள் இரவில் தலைமுடியில் தடவி அடுத்த நாள் அலசுங்கள்.

    5. எலுமிச்சம் சாற்றை ,முட்டையை,அகத்திக்கீரையை அல்லது பொன்னாங்கண்ணி கீரையை (அரைத்து) தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.

    6. வெந்தயப்பொடியை எண்ணெயில் சிறிதளவு விட்டு குழைத்து தலையில் தடவி ஊறவைத்துக் குளிக்கலாம்.

    7. தேன், வெள்ளரிக்காய், ஆப்பிள், அன்னாச்சிப்பழம் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளவும். முடி வளர புரோட்டீன்சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுவது அவசியம்.


  8. #258
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    குளிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

    1. காலை, மாலை இருவேலைகளும் குளிக்க ஏற்ற நேரங்கள். இடைப்பட்ட நேரங்கள் குளிப்பது நல்லதல்ல.

    2. உணவு உண்ட பின்னரும், நன்றாக வியர்த்திருக்கும் போதும் குளிக்கக்கூடாது.

    3. அஜீரணக்கோளாறு, கண் நோய், காய்ச்சல் ஆகிவற்றால் அவதிப்படும் நேரங்களில் குளிக்கக்கூடாது.

    4. எண்ணெய் தேய்த்து விட்டு சிறிதுநேரம் கழித்து பின்னர் குளிப்பது உடலுக்கு நல்லது. இவ்வாறு குளிப்பதுதான் உடல்நலத்தைத் தரும்.

    5. வாசனைப்பொடி, கடலைமாவு போன்றவற்றைத் தேய்த்து கழுவினால் அழுக்கும், எண்ணெய் பசையும் அகன்று போகும்.

    6. சோப்பு உபயோகிக்கும்போது கழுத்து, கழுத்தின் பின்புறம், காது, கால்களின் இடுக்குப்பகுதிகள் போன்ற அழுக்கு படியக்கூடிய பகுதிகள் சோப்பை ஒருமுறைக்கு இருமுறை அழுத்தி தேய்த்து குளிக்க வேண்டும்.

    7. சோப்பை அதிகமாக பயன்படுத்துவது உடலின் மேற்புறதோலுக்கு நல்லதல்ல. தோலில் இருக்கும் எண்ணெய்த்தன்மை மாறி வறண்டுவிடும்.

    8. குளிக்கும் நீரில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாற்றை பிழிந்து குளிக்கலாம். இது நல்ல புத்துணர்ச்சியைத் தரும்.


  9. #259
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    வறட்சிக்கு குட்பை கூறுங்கள்

    உங்கள் சருமம் வறண்டு இருந்தால், சருமத்தில் உள்ள இயற்கையான pH அளவை சமநிலையுடன் வைத்திருக்க உதவும் இந்த ஃபேஸ் பேக்கை முயற்சி செய்து பாருங்கள்.

    3 டீஸ்பூன் சந்தன எண்ணெய், 3 டீஸ்பூன் பால் பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் பன்னீரை கொண்டு மற்றும் வழுவழுப்பான பேஸ்ட்டை தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தின் மீது பூசி கொண்டு, அதை அப்படியே 15-20 நிமிடங்கள் வரை விட்டு விடுங்கள். பின் சாதாரண நீரை கொண்டு முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

    சந்தன எண்ணெயும் பாலும் உங்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து, தேவையான நீர்ச்சத்தை அளிக்கும். பன்னீர் ஒரு டோனராக செயல்படும். இந்த சிகிச்சையை தினமும் பின்பற்றினால், நீர்ச்சத்துடன் கூடிய மின்னும் சருமத்தை பெறுவீர்கள்.


  10. #260
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    வயதாவதை தடுக்கும் பேக்

    இந்த பேக்கை பயன்படுத்துவதால் திருமணம் முடியும் வரை மட்டும் தான் உங்கள் அழகு நீடிக்கும் என்றில்லை. அதையும் தாண்டி உங்கள் அழகு நீடிக்கும். அதிலுள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பி குணங்கள் உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.

    மேலும் சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, சுருக்கங்களை ஏற்படுத்தும் இயக்க உறுப்புகளின் உருவாக்கத்தை தடுக்கும். அதனால் சீக்கிரத்தில் வயதாவதை இது தடுக்கும். சந்தன பொடி மற்றும் முல்தானி மட்டியை இரண்டு டீஸ்பூன்கள் எடுத்துக் கொள்ளவும்.

    அதனுடன் சேர்த்து ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் பன்னீரை கலந்து கொள்ளவும். இதனை ஒரு மென்மையான பேஸ்ட்டாக உருவாக்குங்கள். இதனை உங்கள் முகத்தில் தடவி, காய வையுங்கள்.

    பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிடுங்கள். இந்த பேக்கை வாரம் இரு முறையாவது தடவினால் இளமையான சருமத்தை பெறலாம்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter