Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


  1. #261
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பளிச் கண்கள்

    ஊறவைத்த பாதாமை அரைத்து இளஞ்சூடான பாலில் கலந்து, முகம் முழுவதும் பூசலாம். சருமம் பளபளக்கும். கண்களைச் சுற்றி உள்ள கருவளையம் காணாமல் போகும்.

    சந்தனத்தூள், ஜாதிக்காய்தூள் இவற்றைப் பன்னீருடன் கலந்து, கண்ணைச் சுற்றிப் பூசலாம். கொத்தமல்லிச் சாறுடன் வெண்ணெய் கலந்து, கண்களைச் சுற்றி பூசிவர, ஒரே வாரத்தில் கருவளையம் ஓடிப்போகும்.


    Sponsored Links

  2. #262
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பொடுகுத் தொல்லையை போக்க

    தேங்காய் எண்ணெயுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பின்னர் அதைக் கூந்தலில் தடவி அரை மணி நேரம் கழித்து பச்சைப் பயறு மாவுடன் சாதம் வடித்த நீர் கலந்து அலசிடுங்கள்.
    பாதாம் எண்ணெயுடன் நெல்லிகாய் சாற்றைக் கலந்து ஸ்கால்ப்பில் தடவலாம்.
    ஆலிவ் எண்ணெய், எலுமிச்சைச்சாறு, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து கூந்தலில் பூசி,15 நிமிடங்கள் வரை சூடான துண்டை போர்த்தி ஆன்டி டான்ட்ரஃப் (Anti dandruff) ஷாம்பூவால் அலசலாம்.
    கைப்பிடி அளவில் நெல்லிக்காய்களை ஊறவைத்து, அதனுடன் பால் கலந்து மையாக அரைத்து, கூந்தலில் பூசி அலசலாம்.
    பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தால், தலையில் கட்டிகள் தோன்றும். இதற்கு வெப்பாலை தைலம் தேய்த்துக் குளிக்கலாம். மேலும், அருகம்புல், அதிமதுரம் இரண்டையும் தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்துவந்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.


  3. #263
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    குளிர்காலத்தில் ஏன் கூந்தல் வறட்சியடைகிறது?

    வானிலை மாறி குளிர்த்தன்மை அதிகமாகும் போது கூந்தல் வறட்சியடைகிறது. கூந்தலை பாதுகாக்கக்கூடிய மாஸ்க்கைப் போட்டால் கூந்தல் குளிர்காலத்திலிருந்து காப்பாற்றப்படும். இழந்த பொலிவை திரும்பப் பெறும்.

    வறண்ட கூந்தல்
    சுற்றுச்சூழல் மாசுபடுதல், வீரியம் நிறைந்த கெமிக்கல்கள், உடல்நலக் குறைபாடுகள், டை பயன்படுத்துதல், கெமிக்கல் சிகிச்சைகள் மேற்கொள்ளுதல், நீச்சல் குளம் பயன்படுத்துதல், சூரியக் கதிர்களின் தாக்குதல், வெந்நீர் ஊற்றுதல், அதிகத் தாதுக்கள்கொண்ட மோசமான நீர் போன்றவற்றால், கூந்தல் வறட்சியாகும்

    2 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் உடன் 67 கறிவேப்பிலைகளைப் போட்டு சூடுசெய்யவும். இந்த எண்ணெய் ஆறிய பின் ஸ்கால்ப்பிலும், கூந்தலிலும் பூசி, 15 நிமிடங்கள் வரை இளஞ்சூடான துண்டை கூந்தலின் மேல் சுற்றிவைத்த பின்னர், கூந்தலை அலசலாம்.
    50 கிராம் வெந்தயத்தை இரவில் ஊறவைத்துவிட்டு மறுநாள் பசையாக அரைத்துக்கொள்ளவும் அதில் 4 ஸ்பூன் யோகர்ட், 5 துளிகள் ஆலிவ் எண்ணெய், 1 ஸ்பூன் தேன் கலந்து கூந்தலில் பூசி, 45 நிமிடங்கள் கழித்து, மிதமான ஷாம்பூவால் கூந்தலை அலசவும். வாரம் இருமுறை செய்யலாம்.

    குளிர்கால ஹேர் மாஸ்க்

    முழு முட்டையை உடைத்து அதை நன்கு அடித்து கூந்தல் முழுவதும் பூசி 40 நிமிடங்கள் கழித்து, கூந்தலை அலசவும். முட்டையில் புரதமும் கொழுப்பும் நிறைந்துள்ளதால், கூந்தலுக்குச் சிறந்த ஹேர் பேக்காக அமையும்
    ஒரு பவுளில் ஆப்பிள் சிடர் வினிகரை ஊற்றிக் கொள்ளுங்கள் ,பஞ்சால் வினிகரை தொட்டு ஸ்கால்பிலும் கூந்தலிலும் பூசி, பின் 510 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசுங்கள்.
    கேரட்1, அவகேடோபாதி, வெந்தயம் மற்றும் கற்றாழை ஊறவைத்தது, முட்டை 2, செலரி ஆகியவற்றை மையாகக் கலந்து கூந்தலில் பூசி 1 மணி நேரம் கழித்து அலசலாம்
    ஆலிவ் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், ஆமணக்கு எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், மூலிகை எண்ணெய் 1டேபிள் ஸ்பூன், நல்லெண்ணெய் 1டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை சூடு செய்து, ஸ்கால்ப்பில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். 100 முறை சீப்பால் வார வேண்டும்.


  4. #264
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக்கும் வழிகள்

    10 விரல்களின் நுனியால் மண்டையை மிதமான அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்திடுங்கள்.

    மசாஜ் செய்யும்போத, முன்னந்தலையிலிருந்து பின்னந்தலைவரை மசாஜ் செய்யவும்.

    ப்ளாஸ்டிக் சீப், நகங்கள் ஆகியவை ஸ்கால்ப்பை சேதப்படுத்தும்.
    மர சீப்பால் கூந்தலை அழுத்தி வார, ரத்த ஒட்டம் சீராகப் பாயும்

    டீ ட்ரீ எண்ணெயை (Tea Tree oil) ஸ்கால்ப்பில் பூசி மசாஜ் செய்யலாம்

    தலையணையின் உறை சாட்டின் (satin) துணி வகையாக இருக்கலாம். அதுபோல கூந்தலைப் போர்த்தும் ஸ்கார்ப் (Scarf) சாட்டினாக இருப்பது நல்லது. ஏனெனில் மற்ற துணி வகைகள் கூந்தலில் இருக்கும் ஈரத்தன்மையை உறிஞ்சிவிடும்.

    5 நிமிடங்களுக்கு மேல் கூந்தலை ஹீட்டரால் காயவைக்கக்கூடாது. அவசர அவசரமாக கூந்தலை வாரி, சிக்கு எடுக்கக் கூடாது

    ஸ்கால்ப் ஈரமாக இருக்கையில் கூந்தலை சீப்பால் வாருவது தவறு. முள்ளங்கி, சோயா பீன்ஸ், புரோகோலி, ஃப்ளாக்ஸ் விதைகள் ஆகியவற்றை தினமும் சாப்பிடலாம். ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்னைகள் வராது.


  5. #265
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    அழகு விஷயத்தில் பலரும் செய்யும் தவறுகள்...

    எல்லோருமே தங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். சிலருக்கு அதற்கான நல்ல ரசனை இருக்கும். நேரம் இருக்கும். ஆனால், சிலருக்கு நேரம் இருக்காது அல்லது எப்படி அழகு படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ரசனை இருக்காது. அவ்வளவுதான்.
    என்னதான் இருந்தாலும் தெரிந்தும், தெரியாமலும் அழகு விஷயத்தில் நாம் செய்யும் சில சின்ன சின்னத் தவறுகள் என்னவென்று தெரியுமா.
    வாருங்கள் பார்க்கலாம்..

    மேக்கப்பில் அலட்சியம்
    மேக்கப் போட்டுக் கொண்டு வெளியே செல்லும் போது அழகாக பளிச்சென்றுதான் இருப்போம். ஆனால் வீட்டுக்கு வந்ததும் அப்படியே பளிச்சென்று இருக்க வேண்டும் என நினைக்காமல் போட்ட மேக்கப்புகளை உடனடியாக கலைத்துவிட வேண்டும்.

    கண்டீஷனர் பயன்படுத்தும் போது,
    கண்டீஷனர் என்பது தலை முடியை சில்கியாக வைத்துக் கொள்ள உபயோகிக்கும் வழியாகும். ஷாம்பு போட்டி தலையை கழுவிய பிறகு கண்டீஷனர் போட வேண்டும். கண்டீஷனரை எக்காரணத்தைக் கொண்டும் தலையில் அதாவது தலையின் சருமப் பகுதியில் போடக் கூடாது. மேலும், கண்டீஷனர் போட்டு விட்டு பிறகு ஷாம்பு போட்டு குளிக்கவும் கூடவேக் கூடாது.

    பர்ஃப்யூம் போடுபவரா நீங்கள்...
    உடலில் வியர்வை நாற்றத்தை போக்கி எப்போதும் ஒரு வித வாசனையுடன் நம்மை வைத்துக் கொள்ள பர்ஃப்யூம் பயன்படுத்துகிறோம். ஆனால், பலரும் பர்ப்யூமை தோள்பட்டை இடுக்குகளில் போடுவார்கள். ஆனால் சிலருக்கு அது தெரியாமல் ஆடைகளில் பர்ஃப்யூம்களை தேய்த்துக் கொள்வார்கள். இதில் தோள்பட்டைக்கு இடுக்கில் பர்ஃப்யூம் போடுவதுதான் சிறந்தது. துணியில் போட்டால் அங்கு நிறம் மங்கும். பர்ஃப்யூம் வாசனையும் துணியின் வாசனையும் சேர்ந்து மோசமான வாசனைதான் வரும்.

    கழுத்து மீது ஏன் அலட்சியம்
    முகத்தை ஆயிரம் முறை கண்ணாடியில் பார்த்தாலும் அதில் ஒரு முறை கூட கழுத்தைப் பார்ப்பதில்லை. கழுத்து என்பதும் நமது முகத்தின் ஒரு பாகம் என்பதை அழகுக் கலைஞர்கள் அறிந்துள்ளனர். ஆனால் நாம் அறிய வேண்டியது மிகவும் முக்கியம். எந்த க்ரீமாக இருந்தாலும், சோப்பாக இருந்தாலும், பவுடர் முதல் ரோஸ் பவுடர் வரை முகத்துக்குப் போடும் எதையும் கழுத்துக்கும் போட்டு, முகத்தின் கலரும், கழுத்தின் கலரும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். முகத்துக்கு அதிகமாக மேக்கப் போட்டுவிட்டு கழுத்தை கருப்பாக விட்டுவிட்டால் அழகு எடுபடாமல் போய்விடும்.

    கண்களுக்கு தேவையில்லாதது
    மாஸ்சுரைசர் என்பது நமது சருமத்துக்கு மிகவும் அவசியமானது. வறட்சியான நிலையை போக்கி, சருமத்தை பொலிவுடனும், ஈரப் பதமாகவும் வைத்துக் கொள்ள மாய்ஸ்சுரைசர் பயன்படுகிறது. அதே சமயம், நமது கண்களைச் சுற்றி மாய்ஸ்சுரைசர் போடும் போது கண்கள் பொலிவிழந்துவிடும். எனவே, கண்களைச் சுற்றி மாய்ஸ்சுரைசர் போடுவதை தவிர்க்கலாம்.

    தேய்த்து தேய்த்துக் குளியல்
    பலரும் உடலை சுத்தப்படுத்துகிறேன் என்று சொல்லி உடலுக்கு அளவுக்கு அதிகமாக சோப்பைப் போட்டு தேய்த்து தேய்த்துக் குளிப்பார்கள். சிலர் குளியலறைக்குப் போனாலே அடுத்த பொழுது விடிந்து விடும் என்று கிண்டல் செய்வார்கள். அந்த அளவுக்கு குளிப்பதால் சருமத்துக்குத் தேவையான எண்ணெய், ஈரப் பதம் போன்றவையும் சோப்போடு சேர்ந்து போய்விடும் என்பதை நினைவில் கொண்டு அழுக்கு போகும் வகையில் மட்டும் குளித்துவிட்டு வாருங்கள்.
    சின்ன சின்ன விஷயங்களாக இருந்தாலும் இவை நமது அழகு விஷயத்தில் பெரிய பெரிய தவறுகளாக தெரிந்து விடும். எனவே கவனம் தேவை.


  6. #266
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    அழகு, கவர்ச்சியைப் பேண சில இயற்கையான ஆயுர்வேத அழகுக் குறிப்புகள்

    அழகாக, கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் உண்டு. பொது இடங்கள், அலுவலகங்கள் திருவிழாக்கள் போன்ற எல்லா இடங்களிலும், எல்லோரும் நமது அழகை ரசிக்க வேண்டும், நமது அழகு எல்லோர் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்றெல்லாம் நாம் எண்ணுவது உண்மையே.

    இதன் காரணமாக, குறிப்பாக இளம் பெண்கள் தம்மை அழகுப்படுத்தி கொள்ள, பல அழகுசாதனப் பொருட்களை வாங்குவதில் அதிக பணத்தை செலவு செய்வது வாடிக்கையாகிவிட்டது. இருந்த போதிலும், இவற்றைப் பயன்படுத்துவதால், அவர்கள் தங்களை முழுமையாக அழகுப்படுத்திக் கொள்கிறார்களா? என்பது சந்தேகத்திற்குரியது. ஆகவே, பெண்களுக்கான சில இயற்கையான ஆயுர்வேத அழகுக் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதை முயற்சித்து, இன்னும் அழகை கூட்டுங்கள்.

    தேனையும், இஞ்சியையும் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன், முகத்தில் தடவ வேண்டும். இது சருமத்திலுள்ள சுருக்கங்களை தடுப்பதற்கு மிகவும் சிறந்தது.

    இரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தி, சருமத்தை இறுகச் செய்வதற்கு ஆலிவ் ஆயில் மசாஜ் மிகவும் பயனுள்ளதாகும். அதற்கு தினமும் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள். ஆன்டி-க்ளாக் முறையில் மசாஜ் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    ஆப்பிளை மெல்லிய துண்டுகளாக வெட்டி, அவற்றை சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து, 10 நிமிடத்திற்குப் பின்னர் வெந்நீரில் கழுவ வேண்டும். இது சருமத்தின் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவும்.


  7. #267
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    குங்குமப்பூவை எப்படி பயன்படுத்தலாம்

    1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.

    2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.

    3. இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

    4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.


  8. #268
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    ஆரஞ்சுப் பழத் தோலை சுமார் ஒரு வாரம் வரை நீரில் ஊற வைத்து அந்த எசென்ஸை பிரிட்ஜில் வைத்து அதை தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் வியர்வை வாடையே வராது. தோலும் மென்மையாக மாறிவிடும்.
    பாதாம் பவுடர், ஆலிவ் எண்ணெய், வாழைப்பழம் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த பாலில் முகத்தை கழுவி தண்ணீரில் கழுவ வேண்டும். 10 நாட்கள் செய்தால் முகம் தனி அழகு பெறும்


  9. #269
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

    சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் தேன் கலந்து வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசினால் தோல் சொர சொரப்பு தானாகப் போகும்.

    தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கிமுகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்



  10. #270
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தேங்காய்ப் பாலுடன் ஒருடீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம்புத்துணர்ச்சி பெறும்.

    பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம்அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter