Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


  1. #271
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தேங்காய் எண்ணெயுடன் சிறிதுநல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் கலந்து உடலில்நன்கு தேய்த்தால் தோல் மிருதுவாகும்

    சிறிது வெண்ணெய், பாதாம் பருப்பு ஒன்று, சிறிது எலுமிச்சை சாறு காலந்து நன்கு அரைக்கவும். இதைமுகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடம் ஊற விட வேண்டும். பின்னர் பஞ்சை பாலில்நனைத்து அதை முகத்தைச் சுற்றி தடவி, பின்னர் பன்னீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படித்தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இரத்த ஓட்டம் சீராகும்



    Sponsored Links

  2. #272
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    வெள்ளரிக்காயை இடித்து சாறு எடுத்து சிறிது பாலுடன் கலந்து பஞ்சால் நனைத்து முகத்தில் கீழிருந்து மேலாகத் தேய்த்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் போய் முகம் ஒளி பெறும்.

    கை முட்டிகளில் உள்ள கறுப்புநிறத்தைப் போக்க எலுமிச்சை சாறை தேய்த்து சோப்புப் போட்டுக் குளித்தால் நாளுக்குநாள் கறுப்பு நிறம் மாறி விடும்.


  3. #273
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    முகம் கழுவும் கிரீமை (பேஸ்வாஸ் கிரீம்-Face wash Cream) முகத்தில் நுரை வரும் அளவிற்கு தேய்த்து பிறகு ஒருதேக்கரண்டி சர்க்கரையை எடுத்து முகத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால்முகத்தில் உள்ள வெண் புள்ளிகள் (வொயிட் ஹெட்ஸ்), கரும் புள்ளிகள் (பிளாக் ஹெட்ஸ்) எல்லாம் நீங்கிவிடும். அதோடு முகத்தில் இருக்கும் நுண் துவாரங்களில் அடைத்திருக்கிற அழுக்கும்வெளியேறி முகம் புத்தொளி பெறும்.

    தலைக்கு ஹென்னா
    நெல்லிக்காய் பொடி, மருதாணி, டீ டிக்காஷன் அனைத்தையும் தண்ணீர் சேர்த்து கலந்து இரும்பு கடாயில் முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும். மறுநாள் இந்த கலவையோடு முட்டையின் வெள்ளைக்கரு, தயிர் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க வேண்டும். தயிர் கலப்பதினால் பொடுகு தொல்லை இல்லாமல் இருக்கும். ஹென்னா போடும் நாள் மட்டும் முடிக்கு ஷாம்பு போடாமல் வெறும் தண்ணீரில் அலசினால் தான் அதன் சாரம் தலையில் தங்கும்


  4. #274
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    எளிய அழகுக் குறிப்புகள்

    1. கருமை நிறம் மாற*

    பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

    2. முகம் மிருதுவாக*
    கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்


  5. #275
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    அழகை அள்ளித்தரும் குங்குமப்பூ

    சிகப்பழமைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும்.
    குங்குமப்பூவை எப்படி பயன்படுத்துவது:

    1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.

    2. குங்குமப் பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.

    3. இந்த கலவையை தினமும் பூசிவர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

    4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம்பெறும். நகச் சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.

    5. முகத்திற்கு வசிகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

    6 மேனியை சிவப்பாக மாற்ற இப்படி செஞ்சு பாருங்க:

    எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக்கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.

    குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

    சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு சிலையாக மாறுவது நிச்சயம்.


  6. #276
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கருகரு கூந்தல் வளர்ச்சிக்கு அருமருந்து கரிசலாங்கண்ணி.

    பழகிய பொருள்.. அழகிய முகம்! கருகரு கூந்தல் வளர்ச்சிக்கு அருமருந்து கரிசலாங்கண்ணி.

    பழகிய பொருள்.. அழகிய முகம்!
    கறுப்புதான் கரிசலாங்கண்ணிக்கு புடிச்ச கலரு!

    கருகரு கூந்தல் வளர்ச்சிக்கு கைகொடுக்கிற
    அருமருந்து கரிசலாங்கண்ணி.
    இது கேச பாதுகாப்புக்கும் கவசமாக விளங்குகிறது.

    கார்மேகக் கூந்தலில் உலா வர விரும்புகிறவர்களுக்கு கரிசலாங்கண்ணி சாறு தைலம், ஒரு வரப்பிரசாதம்!

    கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாறு - 3 கப், கீழா நெல்லி இலை சாறு - 1 கப், பொன்னாங்கண்ணி இலை சாறு - 1 கப், எலுமிச்சை சாறு - 1 கப்... இவற்றை 6 கப் நல்லெண் ணெயுடன் கலந்து அரை மணி நேரம் அடுப்பில் வையுங்கள்.

    ‘சடசட’வென்ற ஓசை அடங்கி, தைல பதத்தில் வந்ததும், காய வைத்த நெல்லிக்காய் பவுடர் - 10 கிராமை இதில் போடுங்கள். பிறகு, அடுப்பை அணைத்து விடுங்கள்.

    இந்தத் தைலத்தை தினமும் தலையில் தேய்த்து வர, முடி ‘கருகரு’வென்று வளரத் தொடங்கும்.

    பேன் மற்றும் பொடுகினால் அவதிப்படுகிறவர்களுக்கான ஸ்பெஷல் கரிசலாங்கண்ணி தைலம் இது.

    பச்சை கரிசலாங்கண்ணி இலை இடித்த சாறு - 2 கப், அருகம்புல் சாறு - 2 கப், தேங்காய் எண்ணெய் - 2 கப்... இவற்றுடன் 1 கப் தேங்காய்ப் பால் கலந்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு பண்ணுங்கள். நீர்ப் பதம் போய் தைல பதத்தில் வந்ததும் இறக்கி விடுங்கள்.

    தினமும் தலைக்கு எண்ணெய்க்கு பதிலாக இந்தத் தைலத்தைத் தேய்த்து வாருங்கள். இது பொடுகையும் பேனையும் ஓட ஓட விரட்டியடிப்பதால், தலை சூப்பர் சுத்தமாகிவிடும்.

    ‘என்னென்னவோ எண்ணெய் தேய்த்துப் பார்த்து விட்டேன். இந்த முடி கொட்டுவது மட்டும் நிற்க மாட்டேன் என்கிறதே’ என்று கவலைப் படுகிறவர்களை சந்தோஷப்படுத்து கிறது, இந்த கரிசலாங்கண்ணி எண்ணெய்...

    இரும்பு வாணலியை அடுப்பில் வையுங்கள். அது நன்றாகக் காய்ந்ததும் 1 கப் கரிசலாங்கண்ணி சாறை அதில் ஊற்றுங்கள். ஈரப்பதம் போய் ஓசை அடங்கியதும் அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது இதனுடன் 2 கப் தேங்காய் எண்ணெய், 10 கிராம் சுருள் பட்டை பொடி, 5 கிராம் காய்ந்த ரோஜா இதழ்களை சேருங்கள்.

    இந்த எண்ணெயை தினமும் தடவி வர, முடி கொட்டுவது நின்று நன்றாக வளரத் தொடங்கும். பள்ளி செல்லும் குழந்தைகள் எனில், தினமும் 2 துளி எண்ணெய் தடவினாலே போதும்.

    இளநரை வராமல் தடுக்கிற அற்புத சக்தி கரிசலாங் கண்ணியில் இருக்கிறது.

    கரிசலாங்கண்ணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் தனித்தனியே உலர்த்தி பொடி பண்ணிக் கொள்ளுங்கள். இது இரண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன், தயிர் - 1 டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள்.

    இதைத் தலைக்கு ‘பேக்’ ஆகப் போட்டு, 10 நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் 2 முறை இந்த ‘பேக்’ போட்டு குளித்து வந்தால், இளநரை பக்கத்திலேயே வராது.

    சிலருக்கு தலையில் ஆங்காங்கே வழுக்கை விழுந்து தோற்றம் பொலிவிழந்திருக்கும். வழுக்கையைப் போக்கி, கேசத்தை செழிப்பாக வளரச் செய்கிற மகத்துவம் கரிசலாங்கண்ணியின் தனித்துவம்!

    செம்பருத்தி பூ - 1 கப், கரிசலாங்கண்ணி இலை - 1 கப்... இரண்டையும் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வதக்குங்கள். இதை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி வடிகட்டுங்கள். இதனுடன் 3 கப் தேங்காய் எண்ணெய் கலந்து தண்ணீர்ப் பதம் போகும்வரை... அதாவது சுமார் 10 நாட்கள்... வெயிலில் வைத்து எடுங்கள்.

    இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வாருங்கள். செம்பருத்தி, வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கும். கரிசலாங்கண்ணி, வழுக்கை விழுந்த இடத்தில் முடியை வளரச் செய்யும்


  7. #277
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    1. வெள்ளரிக்காய்ச் சாறு இயற்கையான பிளீச் ஆகும். வெள்ளரிக் காய் உடலுக்குக் குளுமை மட்டுமல்லை, முகத்திற்கு ஒளி தரக்கூடியது. மாசுமருவற்ற பளபளப்பான முகத்தைப் பெறத் தினமும் முகத்தில் வெள்ளரிக்காய் சாற்றைத் தடவுங்கள்.

    2. 35 வயதிற்குப் பிறகு மாதம் ஒருமுறை ஃபேஷியல் செய்து வந்தால், முகத்தில் சுருக்கங்கள் தோன்றாமல், 50 வயதில் 30 வயதுப் பெண்மணிப்போல் தோற்றம் அளிப்பீர்கள்.

    3. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வாக்ஸிங் செய்வதால் முதலில் கை, கால்களில் உள்ள முடி குறைவாக வளரும். பின்பு நாளடைவில் வளர்வது நின்றுவிடும்.

    4. தினமும் அரை மணி நேரம் செய்யும் உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அத்தாட்சி.

    5. ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் நீர் அருந்தினால், உடல் உள்ளுறுப்புகள் சுத்தமாகும், சருமம் மினுமினுக்கும்.

    6. வேப்பமர இலைகளையும், புதினா இலைகளையும், துளசி இலைகளையும் கழுவி அரைத்து, முகத்தில் தடவினால் முகப்பரு மறையும்.

    7. கரிகசலாங்கண்ணி, கறிவேப்பிலை, மருதாணி, செம்பருத்தி ஆகியவற்றை அரைத்து, காயவைத்து, தேங்காய் எண்ணையுடன் காய்ச்சி, பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதை தலைமுடியில் தடவிவந்தால் தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

    8. உப்பு கலந்த நீரில் கால்களை 15 நிமிடம் நனையவைத்தால் கால்வலி குறையும். தளர்ச்சியான கால்கள் புத்துணர்ச்சி பெறும்.

    9. சிகைக்காய் அரைக்கும்போது, கொஞ்சம் பாசிப்பருப்பு, வெந்தயம், பூந்திக்கொட்டை, பச்சரிசி, காயவைத்த செம்பருத்தி இலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து உபயோகித்தால் தலைமுடி பளபளப்பாக இருக்கும்; கருமையாகவும் வளரும்.


  8. #278
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    குளிர்கால குறிப்புகள்!

    ரெகுலரா போட்டுக்குற மேக்கப்தான். ஆனா, இந்தப் பனிக்காலத்துல என் சருமம் ரொம்ப டிரை ஆகிடுதே!’னு கவலைப்படுறவங்களுக்கு, டிப்ஸ்…
    மேக்கப்புக்கு முன்…
    ”குளிர்காலத்துல முகம் கழுவ சோப்புக்கு பதில், மாய்ஸ்ச்சரைஸர் கலந்த மைல்டு சோப் அல்லது ஃபேஸ்வாஷ் பயன்படுத்தலாம்.

    மேக்கப் போடும்போது மட்டுமில்ல… மேக்கப் போடாம இருக்கும்போதும் முகம் கழுவியதும் மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை பண்ணினா, சருமம் ஈரப்பதத்தை இழக்காம எப்பவும் ஃப்ரெஷ்ஷா இருக்கும்.

    நார்மல் மற்றும் ஆயில் சருமம் உள்ள வங்க குளிர்காலத்துல லோஷன் வடிவ மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்தலாம். வறண்ட சருமம் உள்ளவங்க, குளிர்காலத்துல சருமம் இன்னும் வறண்டு போகாம இருக்க, க்ரீம் வடிவ மாய்ஸ்ச்ச ரைஸர் அப்ளை செய்ததுக்கு அப்புறம் தான், மேக்கப் போடணும்.

    ஃபேர்னஸ் க்ரீம் குளிர்காலத்துல சருமத்தை இன்னும் வறண்டு போகச் செய்யும். அதனால இதை பயன்படுத்துறதுக்கு முன்ன மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை செய்யலாம்.

    நாள் முழுக்க ஏ.சி அறையில இருக்கிற வங்க, கட்டாயம் மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை செய்ததுக்கு அப்புறம்தான் மேக்கப் போடணும். இல்லைனா சருமம் வறண்டு போறது மட்டுமில்லாம, முகத்தில் சுருக்கங்களும் தோன்றும்.

    மேக்கப் போடுவதற்கான டிப்ஸ்…
    குளிர்காலத்துல லோஷன் வடிவ ஃபவுண்டேஷனுக்கு பதில், க்ரீம் வடிவ ஃபவுண்டேஷன் பயன்படுத்தும்போது சரும வறட்சியைத் தவிர்க்கலாம்.

    இந்த சீஸனில் கன்சீலர் ஸ்டிக்குகள், தேங்காய் எண்ணெய் போல கெட்டிப்படும். அதனால அந்த ஸ்டிக்கை அப்படியே முகத்துல தேய்க்காம, கொஞ்சமா ஒரு ஸ்பூன்ல எடுத்து கை விரலால குழைத்து, கிரீம் பதத்துக்கு கொண்டுவந்து பயன்படுத்தலாம்.

    வெயில்காலத்துல காம்பாக்ட் பவுடர் அப்ளை செய்துட்டு, முகத்தைத் துடைக்கும்போது, அந்த இடத்தில் மட்டும் பவுடரோட திக்கான கோட்டிங் கலைஞ்சி, திட்டு திட்டா ஆகிடும். குளிர்காலத்துல காம்பாக்ட் அப்ளை பண்ணும் போது நாள் முழுக்க ஃப்ரெஷ்ஷாவே இருக்கலாம்.

    கன்னங்களில் அப்ளை செய்யும் பிளஷரை பொறுத்தவரை, கிரீம் மற்றும் பவுடர் என ரெண்டு வகையுமே இந்த சீஸனுக்கு ஒத்துப்போகும்.

    லிப்ஸ்டிக் போடறதுக்கு முன்ன, கண்டிப்பா லிப் பாம் அப்ளை பண்ணணும். இது உதடுகளை வறட்சி, வெடிப்புகள்ல இருந்து பாதுகாக்கும்!”


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter