Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


  1. #21
    jana is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    chennai
    Posts
    75

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    very useful tips.


    Sponsored Links

  2. #22
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    பால் போன்ற நிறம் வேண்டுமா? அப்ப பால் ஃபேஸ் மாஸ்க் போடுங்க...

    சருமத்தை அழகாக்குவதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் ஃபேஸ் மாஸ்க். இந்த ஃபேஸ் மாஸ்க் போடுவதற்கு வீட்டிலேயே பல அழகுப் பொருட்கள் உள்ளன. அவ்வாறு ஃபேஸ் மாஸ்க்கில் பயன்படுத்தும் பொருட்களில் சில பொருட்கள் அனைத்து ஃபேஸ் மாஸ்க்கிலும் பயன்படுத்துமாறு பொதுவானதாக இருக்கும்.

    உதாரணமாக, தேன், பால், எலுமிச்சை சாறு மற்றம் தயிர் போன்றவை அனைத்து ஃபேஸ் மாஸ்க்கிலும் பயன்படுத்தக்கூடிய பொருட்களாகும். மேலும் இவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவிதமான நன்மைகள் அடங்கியிருப்பதால் தான், அதனை அனைத்து மாஸ்க்கிலும் பயன்படுத்துகிறோம். உதாரணமாக, எலுமிச்சை ஒரு சிறந்த ப்ளீச்சிங் பொருள்.

    இதனை பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முற்றிலும் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும். எனவே தான், இந்த பொருளை அனைத்து மாஸ்க்கிலும் பயன்படுத்துகிறோம்.

    அந்த வகையில் பாலில் லாக்டிக் ஆசிட் மற்றும் இயற்கை எண்ணெய் நிறைந்திருப்பதால், அதனை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, சரும வறட்சி நீங்கி, சருமம் பொலிவோடு பட்டுப் போன்று மின்னும்.

    மேலும் பால் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி, போதிய சத்துக்களை வழங்கி, வெயிலால் பாதிக்கப்பட்ட செல்களை புதுப்பித்து, இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும். குறிப்பாக, பாலைக் கொண்டு தினமும் சருமத்தைப் பராமரித்தால், பால் போன்ற நிறத்தைப் பெறலாம்.

    அதிலும் வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தைப் பராமரிக்க பால் ஒரு சிறந்த பொருள். இப்போது அந்த பாலைக் கொண்டு எப்படியெல்லாம் மாஸ்க் போட்டால், என்ன நன்மை கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.


  3. #23
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    குளிர்ந்த பால் வெளியே சென்று விட்டு, வீட்டிற்கு வந்ததும், பாலை பஞ்சில் நனைத்து, முகத்தைத் துடைத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, முகம் பொலிவோடும், வறட்சியின்றியும் இருக்கும்.

    பாதாம் உடனே முகம் பொலிவோடு காணப்பட வேண்டுமென்று நினைத்தால், பாதாமை அரைத்து, அதில் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

    கடலை மாவு பாலுடன் சேர்த்து செய்யப்படும் ஃபேக்கில் கடலை மாவு, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து போட்டால், சருமம் வெள்ளையாவதோடு, பருக்கள் வராமலும் தடுக்கலாம்.

    சந்தனப் பொடி முகப்பரு, கரும்புள்ளிகள், பிம்பிளால் வந்த தழும்புகள் போன்றவற்றை போக்க சிறந்த ஃபேஸ் பேக் என்றால், சந்தனப் பொடியில் பால் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவுவதே ஆகும்.


  4. #24
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    எலுமிச்சை எலுமிச்சை ஒரு ப்ளீச்சிங் பொருள் என்பதால், இதனை பால் மற்றும் தயிர் சேர்த்து ஃபேஸ் பேக் போட்டால், பருக்கள், பிம்பிள், பொலிவிழந்த சருமம் போன்ற பிரச்சனையைப் போக்கலாம்.

    வாழைப்பழம் வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டால், முகம் சுத்தமாகவும், பொலிவோடும் இருக்கும்.

    தயிர் பால் மற்றும் தயிர் சேர்த்து செய்வது சிறந்த பலனைத் தரும். அதிலும் இவற்றுடன் ஸ்ட்ராபெர்ரி சேர்த்து மாஸ்க் போட்டால், முக பளிச்சென்று மின்னும்.

    தக்காளி தக்காளியில் முதுமைத் தோற்றத்தை தடுக்கும் பொருள் அதிகம் உள்ளது. அத்தகைய தக்காளியை அரைத்து, அதனுடன் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, கழுவினால், முதுமைக் கோடுகளை தவிர்ப்பதோடு, வெள்ளையாகவும் மாறலாம்.


  5. #25
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கருவளையத்திற்கான எளிய வீட்டு சிகிச்சைகள்

    ஒருவருடைய அழகை பிரதிபலிப்பது கண்களே. எப்போதும் சரும நிறத்தை விட கண்களே ஒருவரின் அழகை அதிகரித்து காட்டும். பல காரணங்களுக்காக கண்களில் சுற்றி கருவளையமும் வீக்கமும் ஏற்படும்.

    அதில் ஹார்மோன் மாற்றங்கள், பலதரப்பட்ட அலர்ஜிகள், நஞ்சுக்கள், தூசிகள், தண்ணீர் தேங்குதல் போன்ற காரணங்களால் கண்கள் சோர்வாக ஆகலாம்.

    அதனால் முகமும் கலையிழந்து போகும். மேலும் நம்மில் பல பேர் தூக்கத்தை இழப்பதால் மற்றும் போதிய தூக்கம் இல்லாததால், கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும். தூக்கமே கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கும், வீக்கத்திற்கும் சிறந்த இயற்கை வைத்தியமாகும்.

    மேலும் கருவளையத்தை போக்க எளிய முறையில் சில இயற்கை வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

    கண்ணில் வரும் கருவளையங்களுக்கு ஒரு மிகச் சிறந்த மருந்தாக விளங்குவது வெள்ளரிக்காய்கள். வெள்ளரிக்காய்களில் உள்ள அதிகமான நீர்ச்சத்து கண்களை சுற்றியுள்ள கருவளையத்திற்குண எதிராக இயற்கை பாதுகாவலாக விளங்கும்.

    இது கண் கருவளையத்தை படிப்படியாக குறைத்து முகத்திற்குப் பொலிவைக் கொடுக்கும். அதிலும் ஓய்வெடுக்கும் வேளையில், தலையை பின்னால் நன்கு சாய்த்து, நல்ல தடிமனான வெள்ளரித் துண்டுக்களை எடுத்து, கண்களின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவும் இந்த துண்டுகள் வெப்பம் ஆகும் வரை கண்களின் மேலே அது இருக்கவும் வேண்டும்.

    குளிர்ந்த ஸ்ட்ராபெர்ரியில் அதிக அளவு ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி உள்ளதால், அவை கண்களின் கருவளையங்களை குணப்படுத்த பெரிதும் உதவும். இயற்கை பொருளான இந்த ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் வைக்க உதவும்.

    அதனால் தான் முகத்திற்கு தடவும் விலை உயர்ந்த பல க்ரீம்களில் இந்த ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி கலக்கப்பட்டிருக்கிறது. ஆகவே கண்களின் கருவளையம் நீங்கி, கண்கள் ஜொலிக்க செய்ய வேண்டியதெல்லாம், குளிர்ந்த பெரிய அளவிலான ஸ்ட்ராபெர்ரியின் தோல்களை நீக்கி, 3 மி.மீ தடிமானத்தில் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    பின் ஓய்வெடுக்கும் வேளையில், இந்த துண்டுகளை கண்களின் மேல் சில நிமிடம் வைத்து விட்டு, பிறகு முகத்தை கழுவுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக கருவளையம் மறைவதை காணலாம்.


  6. #26
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    தழும்புகள் மறைய இயற்கை வழிகள்

    உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம்.

    * எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.

    * தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் படிப்படியாக மங்கிவிடும்.

    * கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.

    * தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

    * ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் மறையும்.


  7. #27
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...

    பெர்ரிப் பழங்கள் சருமத்திற்கும், உடலுக்கும் மிகவும் நல்லது. மேலும் இந்த பழங்கள் சூப்பர் உணவுகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

    அதனால் தான் இது சருமத்திற்கு மிகவும் சிறந்ததாக உள்ளது. குறிப்பாக சருமத்தை பொலிவோடும், அழகாகவும் வைத்துக் கொள்ள, இத்தகைய பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக்குகள் போட்டால், நல்ல பலன் உடனே கிடைக்கும்.

    மேலும் இந்த பெர்ரிப் பழங்களைக் கொண்டு, முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், முதுமை தோற்றம், சரும சுருக்கம் வராமல் தடுப்பதோடு, பாதிப்படைந்த சரும செல்களை சரிசெய்யும். பெரும்பாலும் பெர்ரிப் பழங்களில் ஸ்ட்ராபெர்ரியை வைத்து தான் ஃபேஸ் பேக் போட்டிருப்போம்.

    ஆனால் வேறு சில பெர்ரிப் பழங்களைக் கொண்டும் முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.

    இப்போது பெர்ரிப்பழங்களைக் கொண்டு எப்படி ஃபேஸ் பேக் போடுவது என்று பார்ப்போம்.


  8. #28
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    ஸ்ட்ராபெர்ரி (Strawberry) ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை விட்டு, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.

    ராஸ்ப்பெர்ரி (Raspberry) சமமான அளவில் ஆலிவ் ஆயில் மற்றும் கிரேப் சீட் ஆயிலை எடுத்துக் கொண்டு, சிறிது அதில் ஓட்ஸை சேர்த்து, அரைத்த ராஸ்ப்பெர்ரியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சுருக்கங்கள் மறையும்.

    ப்ளூபெர்ரி (Blueberry) ப்ளூபெர்ரியை அரைத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், முகச் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.


  9. #29
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    மல்பெரி (Mulberry) வறட்சியான சருமம் இருந்தால், அதற்கு மல்பெரி ஃபேஸ் பேக் சிறந்த பலனைத் தரும். அதற்கு மல்பெர்ரியை பால் சேர்த்து அரைத்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் மென்மையாகவும் பொலிவுடனும் இருக்கும்.

    செர்ரி (Cherry) 5-6 செர்ரியை எடுத்து அரைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டு, 10 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் தோன்றும் முதுமைத் தோற்றத்தில் இருந்துவிடுபடலாம்.

    ப்ளாக்பெர்ரி (Blackberry) சருமத்திற்கு ஒரு இயற்கையான கிளின்சர் வேண்டுமெனில், ப்ளாக்பெர்ரி ஃபேஸ் பேக்கை ட்ரை செய்யலாம். இந்த ஃபேஸ் பேக்கிற்கு ப்ளாக்பெர்ரியை அரைத்து, அதில் சிறிது புளித்த தயிர் சேர்த்து கலந்து, மாஸ்க் போட்டல், முகம் பளிச்சென்று காணப்படும்.


  10. #30
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    அகாய் பெர்ரி (Acai Berry) அகாய் பெர்ரி பொடியை, மசித்த வாழைப்பழம், தயிர் மற்றும் ஓட்ஸ் உடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் அழகாக காணப்படும்.

    நெல்லிக்காய் (Gooseberry) நெல்லிக்காய் முடிக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நல்லது. அதற்கு நெல்லிக்காய் பொடியில், பப்பாளியை மசித்து சேர்த்து, சிறிது ரோஸ் வாட்டர் ஊற்றி கலந்து, சருமத்தில் தடவினால், முகத்தில் இருக்கும் முகப்பரு, வறட்சி மற்றும் அரிப்பு போன்றவை குணமாகும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter