Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree65Likes

அழகுக் குறிப்புகள் - Beauty Tips!


Discussions on "அழகுக் குறிப்புகள் - Beauty Tips!" in "Beauty Tips" forum.


  1. #31
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கூந்தல் பராமரிப்பு குறிப்புகள்

    * வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

    * கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

    * வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

    * கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை தலையில் முடி வளர ஆரம்பிக்கும்..

    * கரிசலாங்கண்ணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் சேகரிக்கவும். இரண்டையும் தனித் தனியாக காயவைத்து பொடி செய்யவும். இவை இரண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை பழம் சாறு 1 டீஸ்பூன் சேர்த்து கலக்கவும்.

    இதை தலையில் தேய்த்து 10 நிமிடம் மிதமான வெயிலில் நிற்கவும். பின்னர் குளிக்கவும். வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்தால், இளநரை மறைந்து தலைமுடி கருகருவென ஜொலிக்கும்.


    Sponsored Links

  2. #32
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    உதடுகள் அழகாக...அழகு குறிப்புகள்.,

    பத்து கிராம் ரோஜா இதழ்களையும், பத்து கிராம் டீத்தூளையும், தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.

    இதை ஆற வைத்து, உதடுகளுக்கு ஒத்தடம் கொடுத்தால், கறுத்த உதடுகள் சிவந்து காணப்படும்.
    * பீட்ரூட் மற்றும் மாதுளம் பழத்தின் சாற்றை, முறையாக உதடுகளின் மேல் தடவி வர, உதடுகள் அழகாகும்.
    * தினமும், உதடுகளின் மேல், நெய் அல்லது வெண்ணெய் தடவி வந்தால், உதடு கள் வறண்டு போகாமல் இருக்கும்.
    * ஆலிவ் ஆயிலுடன், சிறிது தேனும், பன்னீரும் கலந்து தடவி வந்தால், சொர சொரப்பான உதடுகள் பொலிவு பெறும்.
    * கொத்தமல்லி சாற்றை, தினமும் இரவு படுக்க செல்வதற்கு முன், உதடுகளில் தடவி வந்தால், உதடுகள் லிப்ஸ்டிக் உதவியின்றி இயற்கை சிவப்பழகு பெறும்.
    * உதடுகளில் போட்ட லிப்ஸ்டிக்குடன் தூங்கச் செல்லக் கூடாது. முகத்தை நன்றாக கழுவிய பின்னரே, தூங்க செல்ல வேண்டும்.
    * உதடுகளை கடிப்பது மற்றும் நாக்கினால் ஈரப்படுத்திக் கொண்டே இருப்பது போன்ற பழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும்


  3. #33
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    சருமத்தை வெள்ளையாக்கும் மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்குகள்

    பண்டைய காலத்தில் இருந்தே, சருமத்தை பராமரிப்பதற்கு மஞ்சள் பயன்பட்டு வருகிறது. ஏனெனில் இத்தகைய மஞ்சளில் எண்ணற்ற அழகு நன்மைகள் நிறைந்துள்ளன.

    மேலும் இதில் ஆன்டி-செப்டிக் பொருள் அதிகம் நிறைந்திருப்பதால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுள் முக்கியமான முகப்பரு பிரச்சனையை எளிதில் போக்கலாம்.

    அதுமட்டுமின்றி, மஞ்சளைக் கொண்டு, கருமையான சரும நிறம் உள்ளவர்கள், தங்கள் நிறத்தை வெள்ளையாகவும் மாற்றலாம். அதிலும் இந்த கருமை நிற சருமமானது, வெப்பமண்டல நாடுகளில் உள்ள மக்களுக்குத் தான் அதிகம் இருக்கும். அந்த வெப்ப மண்டல நாடுகளில் ஒன்று தான் இந்தியா.

    இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள், தங்கள் நிறத்தை கூட்டுவதற்கு, பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். இருப்பினும் எந்த பலனும் கிடைக்காமல் இருக்கும்.

    ஆனால், மஞ்சள் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தால், எளிமையாக சரும நிறத்தை அதிகரிக்கலாம்.

    அதுவும் மஞ்சளைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், உடனே சருமம் பொலிவாவதை உணரலாம். அதனால் தான், இந்து மத திருமண சடங்குகளில், மஞ்சள் விழா என்ற ஒன்று திருமணத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படுகிறது.

    இவ்வாறு மஞ்சள் விழாவினை மேற்கொண்டால், திருமண நாளன்று மணப்பெண்ணின் முகம் நன்கு பொலிவோடு காணப்படும்.

    ஆனால் இந்த மஞ்சளை ஒருசில பொருட்களுடன் சேர்த்து சருமத்தை பராமரித்து வந்தால், சருமத்தின் கருமை நிறம் முற்றிலும் நீங்கி, சருமம் விரைவில் வெள்ளையாவதை உணரலாம்.

    அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், நிச்சயம் சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணமுடியும். சரி, இப்போது சருமத்தை வெள்ளையாக்கும் மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்குகளைப் பார்ப்போமா!!!


  4. #34
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் குழம்பு மஞ்சளை நன்கு அரைத்து, அதில் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், இந்த ஒரு முறையினாலே சருமத்தின் கருமையை போக்கலாம்.

    மஞ்சள் மற்றும் மில்க் க்ரீம் மஞ்சள் துளை, மில்க் க்ரீமுடன் சேர்த்து முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், விரைவில் சருமம் வெள்ளையாகும். ஏனெனில் இதில் உள்ள மில்க் க்ரீம் சருமத்தின் ஈரத்தன்மையை தக்க வைக்கவும், மஞ்சள் தூள் சருமத்தின் கருமை நிறத்தை போக்கும்


  5. #35
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    மஞ்சள் மற்றும் தேன் மஞ்சள் தூளை 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் மைதா சேர்த்து கலந்து, கெட்டியான பேஸ்ட் போல் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.

    மஞ்சள் மற்றும் சந்தனம் சருமத்தில் உள்ள பருக்கள் நீங்கி, சருமம் பளிச்சென்று காணப்பட வேண்டுமெனில், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பேஸ்ட், சிறிது சந்தனப் பொடி, 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு அடித்துக் கொண்டு, அந்த கலவையை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.


  6. #36
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு அடித்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் ரிலாக்ஸ் ஆவதுடன், சருமம் வெள்ளையாகவும் காணப்படும்.

    மஞ்சள் மற்றும் குங்குமப்பூ சருமம் வெள்ளையாவதற்கு குங்குமப்பூடன் மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பால் ஊற்றி நன்கு கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சரும கருமை நீங்கி, முகம் உடனே பொலிவுடன் காணப்படும்.


  7. #37
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    முகம் பட்டுப்போல் பொலிவடைய செய்யும் ஃபேஷியல்கள்

    குளிர் காலத்தில் வறண்டிருக்கும் சருமம் பட்டுபோல் மென்மையாகவும், அதீத பொலிவுடனும் இருக்க குறிப்பிடபட்டிருக்கும் எளிமையான புதுவகை ஃபேஷியல்களை பயன்படுத்துங்கள்.

    1. மஞ்சள் ஃபேஷியல்: மஞ்சள் தூள், சந்தனம், பால், பாதாம் எண்ணெய்,எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை ஒன்றாக கலந்து 20 நிமிடங்கள் முகத்தில் பூசி அகற்றினால் உங்கள் சருமம் அடைந்திருக்கும் அழகான மாற்றத்தை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.

    2 . தேன் ஃபேஷியல்: 1 ஸ்பூன் பால் பவுடர், 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் வைத்தால் வறண்ட சருமம் மிருதுவாக மாறும்

    3. ஓட்ஸ் ஃபேஷியல்: ஓட்ஸ், தயிர், தக்காளி பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் நிமிடத்தில் உங்களின் சரும நிறம் பொலிவடைந்திருப்பதை உணரலாம்.

    4. பாதாம் ஃபேஷியல்: பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து, தோலை நீக்கி அரைத்து கொள்ளுங்கள்.இதனுடன் சிறிது கடலை மாவு, பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, தொடர்ந்து 2 வாரங்களுக்கு முகத்தில் பூசி வந்தால், நீங்கள் பியூட்டி பார்லருக்கு போக வேண்டியதே இல்லை.


  8. #38
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்க

    ஒவ்வொருவரின் சருமத் தோலிலும், நுண் துளைகள் காணப்படும். இவை, உடலில் சேரும் கழிவுகள், தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை வெளியேற்ற உதவுகிறது.

    தோலில் காணப்படும் துளையில், கழிவுகள் சேர்ந்து அடைத்துக் கொள்ளும் போது, அவற்றில் தோலின் ஆரோக்கியம் கெடுதல், தொற்று ஏற்படுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    கண்ணுக்குத் தெரியாத வகையில் காணப்படும் தோலின் நுண் துளைகள், பருக்கள் மற்றும் கொப்புளங்கள் ஆகியவற்றால், கண்ணுக்குத் தெரியும் அளவிற்கு பெரிதாகி, அழகை கெடுக்கும் வகையில் காணப்படுகிறது. எண்ணெய் வகை சருமத்தினருக்கே, இப்பிரச்சினை ஏற்படுகிறது.

    முகத்தில் தோன்றும் பருக்களை கிள்ளுதல், முறையாக சுத்தம் செய்யாதது, தரம் குறைந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றாலும் இப்பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சில டிப்ஸ்கள் இதோ...

    * காய்கறிகள், பழங்கள் அல்லது மூலிகைகள் அடங்கிய 'பேஸ் பேக்'குகள் தோலில் விரிவடைந்த துளைகளை சரி செய்ய உதவுகிறது. நன்கு மசிக்கப்பட்ட தக்காளியுடன் சில துளி எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் தேய்த்து கழுவினால், சிறப்பான பலன் கிடைக்கும்.

    முதலில் தோலை சுத்தப்படுத்தும் விதிமுறைகளை கையாள வேண்டும். அதன் பின் 5 நிமிடங்கள் ஆவி பிடித்த பின், தோலில் விரிவடைந்த நுண் துளைகளை சரி செய்வதற்கான பராமரிப்புகளை மேற்கொள்ளலாம்.

    * வெள்ளரிச்சாறை முகத்தில் பூசி 5 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவலாம்.

    * ஆரஞ்சு தோல் பவுடர், ஓட்மீல் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, அதற்கு இரண்டு பங்கு தேன் மற்றும் ஒன்றரை பங்கு அளவிற்கு தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

    இந்த கலவையை முகத்தில் பூசி, 5 நிமிடங்கள் முதல் 7 நிமிடங்கள் வரை, வட்ட இயக்கத்தில் நன்கு தேய்த்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். (கண்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தவிர்க்க வேண்டும்).

    - மேலே சொன்ன முறைகளை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவடைவதை காணலாம்.


  9. #39
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    கரு வளையங்கள் நீங்க

    இரும்பு சத்து குறைகிற போது, பரம்பரை வழியால், போதிய அளவு தூக்கமின்மையால், அளவுக்கதிகமாக கண்களுக்கு வேலை கொடுப்பது, நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் டி.வி முன்னாடி உட்கார்ந்திருப்பது, போஷாக்கில்லாத ஆகாரம் சாப்பிடுவது போன்ற காரணங்களால் கண்களை சுற்றி கரு வளையம் வருகிறது.

    புகைப்பழக்கமும், குடிப்பழக்கமும் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை கண்டிப்பாக இருக்கும். சருமத்திற்குத் தேவையான வைட்டமின் சி-யை இந்தப் பழக்கங்கள் குறைப்பதால் அதன் விளைவாகக் கருவளையங்கள் தோன்றுகின்றன.

    கண் பார்வையில் கோளாறு உள்ளவர்களுக்குக் கூட சில சமயம் இதுமாதிரி கருவளையங்கள் ஏற்படலாம். எனவே கண் பார்வைக்கான சிகிச்சை சரியாக மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இந்தப் பிரச்னை குணமாக வாய்ப்புண்டு.

    தூங்கும் போது தலை கீழாகவும், கால்கள் மேலாகவும் இருக்கும்படி தூங்கினால் முகத்திற்கு இரத்த ஒட்டம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். இதன் விளைவாகவும் கரு வளையங்கள் குறையும். தலையணை இல்லாமல் தூங்கும் பழக்கமும் கருவளையங்களைக் குணமாக்குவதில் உதவும்.

    இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாகக் கண்களில் போடப்பட்ட மேக்கப்பை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் கருவளையங்கள் கண்டிப்பாக வரும். கண்களுக்கு உபயோகிக்கும் மேக்கப் சாதனங்கள் தரமானவையாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.

    இரும்புச் சத்தும், வைட்டமின்களும் அதிகமுள்ள உணவுகள் நிறைய சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். வெயிலில் வெளியே போகும் போது கண்களுக்கு குளிர் கண்ணாடிகள் அணிந்து செல்ல வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் கருவளையங்கள் வராமலிருக்க மிக முக்கியம்.


  10. #40
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: அழகுக் குறிப்புகள் - Beauty Tips!

    சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்

    தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

    முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

    பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

    நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

    கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

    தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

    இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

    இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

    முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

    மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

    ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

    பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

    தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.

    தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter